Friday 11 December 2009

பொக்கிஷம் மற்றும் city of god ஏற்படுத்தும் ரசனை























போன பதிவு எழுதி இருந்தேன் அதற்கு கேபிள் சங்கர்,ஜெட்லி அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.அதற்காய் தனி பதிவு.முதலில் ஜெட்லி அவர்களே சினிமா பார்த்து யாரும் கெடுவதும் இல்லை திருந்துவதும் இல்லை என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு 'eek thuje keliye ' படம் தெரியுமா.அந்தப் படம் பார்த்து நூறு காதல் ஜோடிகள் இறந்து போனார்களாம். அதற்காக தான் பாலச்சந்தர் புன்னைகை மன்னன் என்னும் பதத்தை எடுத்தார்.சினிமா ஒரு ஆளுமை தலைவரே.ரஜினி பார்த்து புகைதவர்கள் அதிகம்,ரெட் படம் வந்த போது கல்லூரியில் அதே போல மொட்டை போட்டு குங்குமம் வைத்தவரை எனக்கு தெரியும்.

'சிகப்பு ரோஜாக்கள்' வந்த போது அதை போலவே ஒருவன் கொலை செய்து இருக்கிறான்,நீ ஏன் கொலை செய்த என்று கேட்டதற்கு சிகப்பு ரோஜாக்கள் பார்த்து கொலை செய்தேன் என்று சொல்லி இருக்கிறான் இது வரலாறு. முதல் படம் திரையிட்ட போது திரையிலே ஒரு ரயில் ஓடி இருக்கிறது அதை பார்த்து அனைவரும் ஓடி இருக்கின்றனர்,திரைப்படம் ஒரு ஆளுமை நண்பரே.

'அக்னி நட்சத்திரம்' பார்த்து பீர் சாப்பிட்ட பெண்கள் இருக்கிறார்கள்.எனக்கு தெரிந்த பெண் பீர் குடித்து மாட்டிக்கொண்டாள்என்ன என்று கண்டித்த போது முதல் நாள் படம் பார்த்திருக்கிறாள்,அதன் தாக்கம். இங்கே சினிமா கடவுளை போன்றது ,அது
ஏற்படுத்தும் தாக்கம் வலிமையானது.இங்கே ரஜினி அஜித் விஜய் போன்றவர்கள் கடவுள் பாமரனுக்கு.அவர்கள் எதை செய்தாலும் இங்கே அதே செய்யும் கூட்டம் உண்டு.

நீங்கள் இந்த செய்தி படித்தீர்களா என்று தெரியாது .சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு. ஒரு சிறுவன் அவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்டான். அதை மறைக்க நாய் வந்தால் மோப்பம் பிடிக்கும் என்று சிறுவர்களுக்கு பயம் அதனால் மிளகாய்பொடி தூவி இருக்கிறார்கள்....சொல்லித் தந்த படம் 'கில்லி'.இது உண்மை நண்பரே கொஞ்சம் நாள் முன்னாடி வந்த செய்தி. சிறுவர்களிடம் கொலை வெறியை ஏற்றி விடுவது சினிமா என்னும் ஊடகம். அடித்தால் தான் நாயகன் என்று இளமையிலேயே அவன் மனதில் விதைக்கபடுகிறது.நடை உடை பாவனை முதற்கொண்டு நாயகன் ஒரு சிறுவனை கவர்கிறான்.

அடுத்து அண்ணன் கேபிள் சங்கர் அவர்களே,உங்களுக்கு திரைக்கதை பற்றி நான் சொல்லத் தேவை இல்லை. ஏன் வேகமாய் இருந்தால் தான் நல்ல திரைக்கதை என்று ஒத்துக்கொள்வீர்களா. பொக்கிஷம் படம் சிறிது அளவாவது கதையை மீறி சென்றதா. நீங்கள் கேட்கலாம் எல்லா கடிதத்தையும் படித்துக்காட்ட வேண்டுமா என்று. இப்பொழுதெல்லாம் போன் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது,காத்திருக்கும் தவிப்பு இல்லை. ஆனால் சேரன் சொன்ன காலத்தில் காத்திருக்கிறான் கடிதம் போய் சேர்ந்ததா என்று பார்க்கிறான்.தகவல் தொடர்பு இல்லை,அவன் கடிதம் எழுதுகிறானே அது தானே பொக்கிஷம் சங்கர். கடிதம் எழுதுவது தான் கதையே. அவன் கடிதம் கொண்டு சேர்க்க எவ்வளவு சிரம பட்டான்,என்பதில் தான் கதையின் உயிர் நாடி தலைவரே. கவிதை போல ஒரு படம்,கவிதை பிடிக்கவில்லை என்றால் நல்லா இல்லை என்று அர்த்தமா. இந்தக்கால காதலை இடையிடையே காண்பிப்பார்,இந்த காதலில் தினமும் பேசுவார்கள் ஆனால் ஆழம் இருக்காது.

காத்திருப்பது தான் காதல் ...அந்த காத்திருப்பு தான் திரைக்கதை.இந்த கதை இப்படி தான் இருக்கும் தலைவரே.அவன் எவ்வளவு ரசித்து எழுதினான் கடிதத்தை என்பதை அனைத்து வரிகளையும் காட்டுகிறார்,உணர்வுகளை காட்டுகிறார்.அவன் எழுதும் போது ஏற்படும் வலி, போஸ்ட் ஆபீசில் சீல் குத்தும் போது ஏற்படும் வலி ஒரு கவிதை .சினிமா தெரிந்த நீங்கள் போய் படம் திரைக்கதை நல்லா இல்லை என்று சொல்ல முடியாது. கவிதைகள் படிக்கும் போது மெதுவாகத் தான் படிக்க வேண்டும்.நீங்கள் திரைக்கதையில் வெற்றி பெற்ற படம் என்று சொல்லும் படங்களில் தேவை இல்லாத நகைச்சுவை காட்சி, சண்டைக் காட்சி இருக்கும்.பொக்கிஷம் படத்தில் அப்படி காட்சிகள் இருந்ததா......'கவிதைகள் மெதுவாக தான் படிக்க வேண்டும்' கேபிள் சங்கர் அவர்களே.

9 comments:

புலவன் புலிகேசி said...

நீங்கலள் சொல்வதைப் பார்த்தால் தொலைக்காட்சித் தொடர்கள் கூட சரி என்பீர்கள் போல..ஒரு மனிதன் சினிமாப் பார்க்க வருவானா இல்லை சீரியல் பார்க்க வருவானா...முந்தைய பதிவில் சொன்னதுதான்.."தயவு செய்து சேரன் நடிக்காமல் இயக்கம் மட்டும் செய்ய வேண்டும்..அவரிடம் அதிகப் படியான நடிப்புகள் வெளியேறி பார்ப்பவனுக்கு வெறுப்பைத் தருகிற்து"...

வெண்ணிற இரவுகள்....! said...

எந்தத் தொடரில் நல்ல உறவுகள் காட்டப்பட்டுள்ளன சொல்லுங்கள் .....
சேரன் படத்தில் எந்த படத்தில் கள்ள உறவுகள் காட்டப்பட்டுள்ளன....
சொல்லுங்கள்....???? உலக சினிமா பாருங்கள் அனைத்தும் மனித உறவுகள் சம்பந்த பட்டது .
கேவலமான நாடகங்களுடன் சேரனை ஒப்பிட வேண்டாம்
உலக படங்கள் அனைத்தும் மெதுவாக தான் போகும் புலிகேசி ......

தொடரையும் சேரன் படத்தையும் ஒப்பிடுகிறீர்கள் மிகத்தவறு

ஸ்ரீராம். said...

சினிமாவில் வருகிற தப்பான விஷயங்களை மட்டும் மக்கள் 'கப்'பெனப் பிடித்துக் கொள்கிறார்கள்...

புலவன் புலிகேசி said...

//எந்தத் தொடரில் நல்ல உறவுகள் காட்டப்பட்டுள்ளன சொல்லுங்கள் .....
சேரன் படத்தில் எந்த படத்தில் கள்ள உறவுகள் காட்டப்பட்டுள்ளன....//

ஏன் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்தெல்லாம் பார்க்க வில்லையா நீங்கள்...அதில் கோபிகா மற்றும் பத்மப்ரியாவிடம் சேரன் என்ன சாமி கும்பிடுவாரா..திருமணத்திற்கு முன் அது மட்டும் சரியா?? இதில் கொச்சைப் படுத்த வில்லையா...

//தொடரையும் சேரன் படத்தையும் ஒப்பிடுகிறீர்கள் மிகத்தவறு//

இதில் தவறேதுமில்லை..இரண்டும் ஒறுதான்...

தமிழ் உதயம் said...

பொக்கிஷம் படத்திற்காக, பரிந்து பேசியதற்காக, உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள். சேரனின் தவறு என்னவென்றால் , தன் படத்தை பற்றி அவரே நிறைய பேசியது தான். ஸ்ரீதரில் இருந்து பாலச்சந்தர் வரை எல்லோரும் எத்தனையோ தோல்வி படங்கள் கொடுத்து இரூக்கிறார்கள். ஆனால் யாரும் இவர் அளவுக்கு பீல் பண்ணியதில்லை. இவராக ஏன் எதிர்பார்ப்பை வளர்த்து கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அந்தளவு ஓடியதே பெரிய விஷயம் தான். மேலும் ஒரு விஷயம. சேரன் இயக்குனராகி 13 வருஷமாகி விட்டது. நல்ல படங்கள் எடுத்து இவ்வளவு நாள் தாக்கு பிடித்ததே பெரிய விஷயம். இவரின் சம கால இயக்குனர்கள் யாரும் இன்று பீல்டிலேயே இல்லையே.

thiyaa said...

அருமை ,கலக்கல்
வழமைபோல சேரன் ஒரு சிறு கூட்டத்தை மட்டும் நம்பிப் படம் எடுத்திருக்கிறார்

ஜெட்லி... said...

சரி உங்க வழிக்கே வருவோம்,
அப்போ தொடர்ந்து வன்முறை இல்லாத(பொக்கிஷம்)
படங்கள் வந்தா தப்பு செய்றவங்க எல்லாம் திருந்தி விடுவார்களா??
அப்படினா அரசு ஜெயிலுக்கு பதில் மாசத்துக்கு நாலு நல்ல படங்கள் வெளியிடலாமே.....


இது ஒரு முடிவில்லாத விவாதம் நண்பரே...
உங்கள் கருத்தை என்னால் ஏற்க இயலாது..
நான் படத்தை படமாக பார்த்து விட்டு
வெளியே வருபவன்.....

எந்த ஒரு விஷயத்திலும் நல்லதும் இருக்கு கெட்டதும்
இருக்கு.அதில் சரியான ஒன்றை எடுப்பது அவரவர்
மனசை பொருத்து இருக்கிறது...

நன்றி கார்த்திக்...

கடைசியா ஒன்னு ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு
பீலிங்க்ஸ் ப்பா.....

சண்முகவேல் said...

இந்த படத்தை கிழி கிழி என்று கிழித்தவர் உங்கள் சாரு தான்!!!

Unknown said...

// உலக படங்கள் அனைத்தும் மெதுவாக தான் போகும் புலிகேசி ......//

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது... நான் உலகபடங்களில் மூழ்கி திளைத்தவன் இல்லை என்றாலும் நான் பார்த்த சிற்சில படங்களில் ஒரு வித சுவாரசியம் இருந்தது..., பொக்கிஷத்தில் அது இல்லை.., அப்புறம் எல்லா உலக திரைபடங்களிலும் நடிகர்கள் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளி படுத்தி இருப்பார்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..., சேரனின் நடிப்பு எப்படி இருந்தது????
நான் ஒன்னும் சேரனை வெறுப்பவன் அல்ல நல்லா படத்தை எதிர் பார்த்து ஏமாந்தவன்..,