Friday, 29 January 2010

மாஸ் ஹீரோ சிவா முதல்வர் கார்த்திக்























சத்தியமா இது வித்யாசமான பதிவு அல்ல

தமிழ் சினிமா என்ற படம் சினிமாவை பகடி செய்கிறது ஆம் நல்ல வரவேற்க வேண்டிய படம் தான். ஆனால் அதன் தயாரிப்பாளர் நினைத்தால் தான் படத்தில் உள் குத்து இருக்குமோ என்று தோன்றுகிறது. இன்று அஞ்சா நெஞ்சனின் பிறந்த நாள் மதுரையில் அஞ்சா நெஞ்சர் என்றால் யாரென்று தெரியும் . எனக்கு தெரிந்து மதுரை மக்கள் இரண்டு ருபாய் பஸ்சில் போய் பழக்க பட்டவர்கள் ஒரு ஐம்பது பைசா என்றாலே யோசிப்பார்கள், அவர்களிடம் குறைந்தது நீங்கள் பத்து ரூபாய் இருந்தால் தான் போக வேண்டுமென்று சொல்லாமல் எல்லா பேருந்தையும் சொகுசு பேருந்து ஆக்கியது முதல் சாதனை.

முன்னூறு குளிர் சாதன பேருந்துகள் வேறாம் அதில் குறைந்த கட்டணமே பதினைந்து ரூபாயாம். சரி மன்னர் அஞ்சா நெஞ்சர் என்ன செய்கிறார் மதுரையில் பாதி நேரம் மின்சாரம் கிடையாதாம் ஆனால் இவர் பிறந்தா நாளுக்கு மட்டும் ஊரெல்லாம் விளக்குகள். மதுரைக்குள் மன்னர் ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது . அவர் மகன் விளையாட வேண்டும் என்றால் மின்னொளியில் தான் விளையாடுவாராம், என்ன கொடுமை இது.

சரி தமிழ் படத்திற்கு வருவோம் சிவா எப்படி மாஸ் ஹீரோவாக பகடி செய்திருக்கிறாரோ அதை போல நானும் ஒரு அரசியல்வாதி ஆனால். முதலில் ரயில் ஏற வேண்டும் பின்பு தமிழ் நன்றாய் கற்க வேண்டும் . புரட்சிகர வசனம் எழுத வேண்டும் புரட்சி வசனத்தில் மட்டுமே. தமிழக முதல்வர் ஆகா வேண்டும். ஏன் சிவா மட்டும் தான் மாஸ் ஹீரோவா நானும் அரசியல்வாதி தாங்க ..........நானும் கூடிய சிக்கிரம் முதல்வர் ஆவேன் சிவா மாஸ் ஹீரோ ஆனது போல .முதல்வர் ஆகி என் மகன்களுக்கு தமிழகத்தை விற்க வேண்டும். அப்புறம் என் பேரன் எடுப்பான் தமிழ் படத்தை மட்டும் பகடி செய்து ஒரு தமிழ் படம் ???

பம்பாய் - சினிமா திரை விலகும் போது



















நான் சிறு வயதில் இருக்கும் போது என்னை பாதித்த "பாம்பே" என்ற படமும் ஒன்று. ஆனால் "சினிமா திரை விலகும் போது" புத்தகம் படித்ததில் இருந்து அந்த பிம்பம் நொறுங்கி போனது .போன பதிவில் ஒரு திரைப்பட உதவி இயக்குனர் "வேட்டைக்காரன்" "வீராசாமி" போன்ற படங்களை போல் அல்ல இவர்கள் எல்லாம் சிறந்த இயக்குனர் என்று சொன்னார். இருந்து விட்டு போகட்டும் . சிறந்த இயக்குனர்கள் தான் ஆனால் சமூக மதிப்பீடு என்ன.




















சரி அப்படி இந்த புத்தகம் பம்பாய் படத்தை பற்றி என்ன தான் சொல்கிறது. வரலாறை திரித்து சொல்கிறது இப்படம்.பம்பாய் கலவரத்தை ஆரம்பித்தது ஹிந்துக்களே ஆனால் கலவரம் ஆரம்பக்காட்சி முஸ்லிம் துடங்கி வைப்பது போல் இருந்தது .முஸ்லிம் கலவரம் செய்யும் பொழுது close up காட்சிகளும் ,ஹிந்துக்கள் கலவரம் செய்யும் போது wide காட்சிகளாய் தந்திரமாய் அமைக்க பட்ட காட்சி அமைப்பு.

சரி ஒரு பேரன் தாத்தாவுடன் வரும் பொழுது தாத்தா திரு நீறு அணிந்திருப்பார் அதை பேரன் அழிப்பான்.ஏன் என்றால் திருநீறு கூட ஒத்துக்கொள்ள முடியாத முஸ்லிம் என்று காட்டப்படுகிறது. ஆனால் இந்த ஹிந்து தாத்தாவோ வீடு எரியும் பொழுது குரான் என்ற புனித புத்தகத்தை காப்பாற்றுவார் ,ஏன் என்றால் ஹிந்து பெருந்தன்மை வாய்ந்தவனாம். என்ன மணி சார் டச்.

படத்தில் உச்ச கட்டம் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது, உண்மையான கலவரத்தில் ஹிந்துக்களே ஆரம்பித்ததால் பல் தாக்ரே வந்து நிறுத்தி வைப்பாராம், முஸ்லிம் தலைவர் இறந்த பிணங்களை பார்த்து வருத்த பாடுவாராம் இது வரலாறு . ஆனால்
படத்தில் தலை கீழாக காட்டப்பட்டுள்ளது ,முஸ்லிம் தலைவர் கலவரத்தை நிறுத்துவாராம்,தாக்ரே போன்ற தலைவர் வேடத்தில் வருபவர் மக்களுக்காய் வருந்துவாராம் என்ன கொடுமை?????

இந்த புத்தகம் இதை எல்லாம் துகில் உரிக்கிறது. இதை போலவே தான் ஹே ராம் படத்தையும் ஒரு கிழி கிழி என்று இந்த புத்தகம் கிழிக்கிறது. என்ன சொல்ல ஒரு படம் ஒரு காலத்தின் பதிவு, ஒன்று நமக்குளாகவே நமக்கு தெரியாமல் இந்த ஜாதி வெறி ,இந்த அற்பவாதம் எல்லாம் ஊறி இருக்கும். இவர்கள் சிறந்த இயக்குனர் தான் அதனால் தான் நமக்குள்ள இருக்கும் எண்ணத்தை உபயோக படுத்தி காசு ஆக்குகிறார்கள்.

நான் கூட அற்பவாதியாய் இருந்து இருக்கிறேன். பொக்கிஷம் படத்தை போற்றி பதிவு எழுதினேன். ஆனால்
என்ன உண்மை சமுதாயத்திற்கு பயன் படாத இலக்கியம் இலக்கியம் அல்ல. எழுத்து பிழையுடன் ஒரு கவிதை
எழுதினால் கூட சமூகத்திற்கு பயன்பட்டால் அது இலக்கியம் என்பேன்.

பாலா அவர்கள் சமீபத்தில் "கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் இல்லாதவருக்கு " என்று வீர வசனம் பேசினார். படத்தில் பூஜா ஒரு கிருத்துவ தேவலாயதிற்க்கு போவாள் . அதற்கு அடுத்த காட்சியில் மான பங்க படுத்த படுவாள்
பின்பு அறியாவான கடவுளிடம் வருவாள், படம் என்ன சொல்ல வருகிறது பாலா சார் . இப்படி எடுத்தால் தான் நேஷனல் அவார்ட் கிடைக்குமா என்ன??? உள்ளே ஆயிரம் அழுக்கை வைத்துக்கொண்டு " நான் கடவுள் " என்ற வீராப்பு வேறு.

இந்த புத்தகம் படிக்க வேண்டிய புத்தகம்.

Thursday, 28 January 2010

முத்துக்குமரனுக்கு வீர வணக்கம்






















தூத்துக்குடியின்
என் மூத்தகுடி முத்துக்குமரனே,
உன் மரண வாக்குமூலத்தில் பிறந்தவன் நான்,
ஈழம் எரிந்து கொண்டிருந்தபோது
நீயும் எரிந்துகொண்டிருந்தாய் ....
அந்த தீயின் நீட்சியில் ஈழம்
எரிவதை பார்த்தோம் நாங்கள் ...!
நாங்கள் பதிவு போட்டுக்கொண்டிருந்த போது
நீ மரணவாக்குமுலத்தை பதிவு செய்தாய் ............!
வரலாறு சில மரணங்களை மட்டுமே நியாபகம் வைத்திருக்கும்
அதில் உன் மரணமும் உண்டு ..............!
ஈழம் ஜனனம் அடைய
நீ மரணம் அடைந்தாய் ...........!
ஒரே ஒரு வருத்தம் ....
நீ சொன்னது போல உன் பிணம்
வைத்து போராடி இருக்க வேண்டும் .....
அதை வைத்து போரடாக்கூட தைரியம் இல்லை
சந்தர்ப்பவாதிகளுக்கு ....................................!
நீ இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
என் அண்ணனே ...............!

Wednesday, 27 January 2010

அழகி,ஆட்டோகிராப்,ரெயின்போ காலனி,சேது



















சினிமா:திரை விலகும் போது - பகுதி 2
























"அழகி" "ஆட்டோகிராப்" "ரெயின்போ காலனி" போன்ற படங்களை பார்த்தால் நாம் என்ன செய்வோம்.திரைஅரங்கில் பாதிக்கு மேற்ப்பட்ட பேர் அழுது கொண்டிருப்பார்கள். நானும் இதை போன்ற மனதை உலுக்கும் படைப்புகளை ரசித்துக்கொண்டிருந்தேன். இந்த புத்தகம் அதை எல்லாம் எனக்கு சுக்குநூறாய் உடைத்தது. டேய் அது அற்பவாதமடா என்றது??? மனதை உலுக்கும் வேலையே பார்த்துவிட்டு அதன் மூலம் தன் கல்லா பெட்டி
நிரப்பிக்கொண்டிருக்கிறது இவ்வகை படங்கள்.

















சரி காதல் என்றால் தூய உறவு தானே என்று சிலர் சொல்லலாம். எப்படி தூய உறவாக
ஆக முடியும் காதல்,அது பசி தூக்கம் போல விஞ்ஞான ரீதியில் பார்த்தால் ஒரு தேவை அவ்வளவே,ஒரு பெண்ணிடம் கிடைக்கவில்லை என்றால் வேறொரு இடத்தில கிடைக்கும். ஆனால் இந்த காதலை புனிதமாக்கி ரசிகனை மயக்கி அவனை நிலைகுலைய வைக்கும் வேலையே இத்திரைப்படங்கள் செய்கின்றன.

ரசிகனே மறந்து தன் வேலைகளை பார்த்துக்கொண்டிருப்பான் இப்படம் பார்த்தவுடன்
நேராக டாஸ்மாக் செல்வான். சரி இது வெறும் கலை படைப்பு தானே என்று எடுத்துக்கொள்ள முடியாது??? இந்த உணர்வு மனதில் விடம் போல் செல்லக்கூடியது,ஒரு மயக்கத்தை ஏற்படுத்த கூடியது . தண்ணி அடிப்பதற்கும் இம்மாதிரி படங்கள் பார்பதற்கும் பெரிய வித்யாசம் இல்லை.

சரி இது உணர்வு பூர்வமான விடயம் தானே என்று சிலர் வாதிடலாம். "அழகி" படம் பார்த்துவிட்டு என் நண்பன் அவனுடைய பழைய காதலியை மூன்று வருடம் தேடினான். இந்த அற்பவாததில் மூழ்கி போனதால் அவனால் முன்னேற முடியவில்லை. இந்த மாதிரி பழயதை நினைத்துக்கொண்டிருப்பதை இலக்கியம் என்று சொல்கிறார்கள்.ஒரு தனி
மனிதனின் துயர் மட்டும் எப்படி இலக்கியமாகும். இந்த அற்பாவாத்தில் ஈடுபடுபவர்களால் அவர்களுக்கும் உபயோகம் இல்லை சமூகத்திற்கும் உபயோகம் இல்லை.

அப்படி என்றால் காதல் என்றால் இல்லையா??? இருக்கிறது ஆனால் காதல் மட்டுமே இல்லை. அது பசி தூக்கம் போன்றது. அதற்குள்ளாகவே உழல்வது மன பிரமை போன்றது,கிட்டத்தட்ட பைத்தியம் போன்றது .ஏன் காதல் மட்டும் தான் உங்கள் மனதுகளை உலுக்குமா???? ஏன் இதே மனது இலங்கையில் குழந்தைகள் சாகும் போது மட்டை பந்து பார்த்துக்கொண்டிருந்தது. ஏன் காதல் படங்கள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன????


















காதல் படம் வந்தாலும் ஏன் உலுக்கி எடுக்கும் படங்கள் மட்டும் வெற்றி பெறுகின்றன. அந்த படங்களை எல்லாம் பார்த்தால் காதலனும் காதலியும் சேர்ந்து இருக்க மாட்டார்கள். அவர்களை பிரிப்பதிலேயே தான் சுகம் உள்ளது. அதுவும் இந்த அற்பவாத விடத்தை பாலா , சேரன், செல்வராகவன் போன்றவர்கள் அழகாய் கொடுப்பார்கள். தேன் தடவி விடத்தை கொடுப்பார்கள். நாம் குடித்து விட்டு போதையில் இருப்போம். நம் அறிவு மங்கித்தான் போகும்.














இந்த கலை படைப்புகளால் சமூகத்திற்கு பயன் வேண்டாம், முடிந்தால் மனதை கெடுக்காமல் இருக்கலாமே??? சமூகத்திற்கு சமூகத்தை பற்றி யோசிக்க விடாதா அடுத்த சமூகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் வெறும் அழகி படம் பற்றி மட்டும் எழுதி இருந்தார்கள். ஆனால் அனைத்து படங்களும் இவ்வகையே சாரும்.

பழைய நியாபகங்களில் இருப்பவன் இறந்த காலத்தில் இருக்கிறான்,
அவன் பிணத்திற்கு சமம்.இந்த படங்கள் மன ரீதியாக வீழ்த்தி ஒருவனை சமாதி நிலைக்கு அழைத்து செல்கிறது ...ஏன் மன ரீதியாக நம்மை அடிமை படுத்தும் விடயத்தை கலை என்று கொண்டாடுகிறோம் .

மனிதன் சுயமுன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் இந்த மாதிரி கலைகள் ஒடுக்க பட வேண்டும். இலக்கியம் இலக்குடன் இருக்க வேண்டும், ஒரு கலை ரசனையை வைத்து தான் அந்த நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது.ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பு தேவையா????இல்லை அற்பவாதம் தேவையா????????முடிவு செய்யுங்கள்

பின்குறிப்பு :
இது வெறும் விமர்சனம் மட்டும் இல்லாமல் அற்பவாதம் என்றால் என்ன என்று நான் புரிந்து கொண்டது.இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.விமர்சனம் தொடரும்

Monday, 25 January 2010

சினிமா: திரை விலகும் போது - புத்தக விமர்சனம் பகுதி 1

















சமீபத்தில் "சினிமா: திரை விலகும் போது" என்ற புத்தகம் படித்தேன். நான் ஒரு பாமர ரசிகன், சினிமா என்றால் விறுவிறுப்பாய் போக வேண்டும்,ஊடகங்கள் சொல்வதை வைத்து பெரிய இயக்குனர் என்ற முடிவுக்கு வருவது போன்ற ரசனை தரத்தில் இருந்தேன். சினிமா விமர்சனம் என்றால் மதன் சுகாசினி,மற்றும் ஆனந்த விகடனில் ஐம்பது மார்க் இந்த அளவே எனக்கு தெரிந்து இருந்தது. என் ரசனை தரம் கேவலமாய் இருந்ததை கண்டு
வெட்கபடுகிறேன்.

நான் தூக்கி வைத்து கொண்டாடிய படங்களை அந்த புத்தகம் நாறு நாறாய் கிழிகின்றது.எல்லாமே அரசியல் பார்வை.என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள் சினிமா என்பது பொழுதுபோக்கு அதை ஏன் பெரிது படுத்துகிறாய் என்று. ஏக் துஜே கேலியே பார்த்து நூறு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது இது வரலாறு. நம் ரசனை எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் அரசியல் மாற்றமே.

ஏன் ரசனை மாற்றம் வேண்டும். ஒருவன் எந்த காட்சிக்கு கை தட்டுகிறான் என்பதை வைத்து அவன் ரசனை தரத்தை எடைபோடலாம். அவன் கலை ரசனை எப்படி இருக்கிறதோ அதை பொறுத்து தான் அவன் அரசியல் பார்வை இருக்கும் தேவை ஒரு அரசியல் பார்வை.அதை இந்த புத்தகம் நன்றாய் செய்து இருக்கிறது.

இந்த புத்தகம் ஏன் படிக்க வேண்டும் , இதை படித்த பின்பு நீங்கள் ஒரு படத்திற்கு போனால் ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் எதில் மயங்குகிறான் பாமார ரசிகன் என்பதை உணர முடியும். இப்பொழுது எல்லாம் கல்லூரி மாணவன் ஒருவனை காதநாயகனாய் காட்ட வேண்டுமென்றால் கட்டாயம் அவன் காதலிக்க வேண்டும்,சரக்கு அடிக்க வேண்டும் அவன் சமூகத்துகாய் போராட மாட்டான்.அப்படி போராடினாலும் காட்சி அமைப்பில் அவன் ஜாதி சார்ந்த படிமம் இல்லை மதம் சார்ந்த படிமம் கட்டாயம் இருக்கும். இந்த அரசியல் A செனட்டர் மக்கள் என்று சொல்வார்களே அவர்களுக்கு கூட புரியாது இந்த புத்தகம் நமக்கு புரிய வைக்கிறது. நாம் தலையில் தூக்கி கொண்டாடிய படங்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்கிறது.

ஏன் புகழ் பெற்ற படங்கள் மட்டும் விமர்சனம் செய்கிறார்கள்,ஒரு விளம்பரத்துக்கா இல்லவே இல்லை.நிறைய மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட படங்கள், அதில் நம் ரசிகனுடைய ஒருமித்த கருத்து வெளிப்படும் ரசனை வெளிப்படும். மக்களை புரிந்து கொள்ள இந்த படத்தை ஏன் ரசிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வது ஒரு வழி. ஒரு கலை எப்படி இருக்கிறதோ அதை போலவே தான் நாடு இருக்கும் .கலை எதை பிரதிபலிக்கிறது வாழ்கையை.

இந்த புத்தகத்தில் புகழ் பெற்ற பம்பாய், ரோஜா, அஞ்சலி, அன்பே சிவம், ஹே ராம், அழகி, வீடு,காதல் கோட்டை காதலுக்கு மரியாதை என்று எதையும் விட்டு வைக்க வில்லை. இந்த புத்தகம் பொதுவாய் என்ன சொல்கிறது என்ற விமர்சனம் தொடரும்.

இந்த புத்தகம் கிடைக்கும் இடம்

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

பட்டிமன்றம் தேவையா இல்லையா??? என்று ஒரு பட்டிமன்றம்


















சின்ன வயதில் இருந்து தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி என்றால் பட்டிமன்றம் தான் பார்ப்பேன். அப்பொழுது எல்லாம் பட்டிமன்றம் பார்ப்பவர்கள் எல்லாருமே புத்திசாலிகள் மற்றவர்கள் எல்லாரும் முட்டாள் என்ற பிம்பம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.இந்த பட்டிமன்றங்கள் என்ன சாதித்து விட்டது. "அசத்த போவது யாரு" போன்ற நிகழ்ச்சிக்கும் பட்டிமன்றதிற்கும் எந்த வித்யாசமும் இல்லை என்ற தரத்திலே தான் உள்ளது.

ஆண்களா பெண்களா போன்ற தலைப்பை கேட்டு காது புளித்து விட்டது.
ஆண்களா பெண்களா என்றால் சாலமன் பாப்பையா, பழைய பாடலா புதிய பாடலா என்றால் லியோனி பட்டிமன்றம். இல்லை என்றால் சங்க இலக்கியத்திலே போவது.இதை தவிர சமூகத்தில் பிரச்சனைகளே இல்லையா என்ன???? " அரசு தொலைகாட்சி கொடுப்பது சாதகமா பாதகமா" போன்ற தலைப்புகள் ஏன் வைபதில்லை. ஏன் பெரிய பிரச்சனைகளை யாருமே பேசுவதில்லை. "கோகோ கோலா வருகை சுற்று சுழலை பாதிக்குமா இல்லையா" போன்ற
தலைப்புகள் ஏன் வைப்பதில்லை. இவர்களை பொறுத்த வரை இலக்கியம் காசு பார்க்கும் வேலை.

பட்டிமன்றத்திலும் சரி இலக்கியத்திலும் சரி ஏன் பெரிய பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதில்லை. ராஜா வருவார் அவர் சன் டிவியில் தோன்றுகிறார் அதனால் டிவி வைத்து கோலங்கள் இல்லை அதன் திரைப்படங்கள் வைத்து ஏதாவது பேசுவார் உடனே ஒரே கைதட்டு.இது மலிவான ரசனை தானே. இந்த தீபாவளி வரை இவர்கள் ஆண்களா பெண்களா தரத்தில் பட்டிமன்றம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டிமன்றத்தின் சமுதாய மதிப்பீடு என்ன ராஜா மற்றும் பாப்பயாவிற்கு சினிமா வாய்ப்பு.....சமுகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அது இலக்கியமே அல்ல. இல்லகில்லாத இலக்கியம் இலக்கியமாகாது.எள்ளல் இருக்கிறது துள்ளல் இருக்கிறது எழுச்சி இல்லை. இது தரம் என்ற பிம்பம் இருக்கிறது. சமூகத்தில் ஏதாவது மாற்றம் உண்டா இந்த பட்டிமன்றதால் .பாப்பையா மற்றும் ராஜா பொருளாதாரம் உயர்கிறது
அவ்வளவே.


தீர்ப்பு :

"ஐயா பட்டிமன்றத்தால நன்மையா தீமையானு கேட்டா.........பேசுறவங்களுக்கு நன்மை கேட்குறவங்களுக்கு தீமை நாளை சந்திப்போமா "

Sunday, 24 January 2010

ஒருவன் ஒருவன் முதலாளி






















எட்டு மணிக்கு தான்
வேலை முடிகிறது உழைப்பை
சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே
வீடு சேர்ந்தான் மணி ...........................!
"வேலைக்காரி இப்ப எல்லாம் ஒன்பது மணிக்கே வீட்டுக்கு போய்டரா" என்றாள்
மனைவி .................!
"சம்பளம் இந்த மாசம் வாங்குவாள அப்ப இருக்கு செய்தி ,இவளுக்கெல்லாம் வேலை கொடுத்தோம் பாரு "
என்றான் மணி .....

Friday, 22 January 2010

உலக அரசியலும் ராஜ தந்திரங்களும்


















"மன்னா கோவில்கள் எதற்கு" என்றான் அமைச்சர்
"மக்கள் துன்பம் என்றால் என்னிடம் கேட்க கூடாது....அவர்களுக்கு வடிகால் வேண்டும் .....
நாம் எத்தனை கொடுமை செய்தாலும் கடவுள் இருக்கிறான் பார்த்துக்கொண்டிருப்பான் என்று நினைத்து கேள்வி கேட்க மாட்டான்" என்றார் அரசர் ......................


"கடவுள் நம்பிக்கை இல்லாதவனை என்ன செய்வீர்கள்" என்றான் அமைச்சர்
"மது கடைகள் இருக்கிறது அதை திறப்பேன் கடவுளிடம் போகதவன் மதுவிடம் போவான்........அவனுக்கு ஒரு
வடிகால் மது குடித்து விட்டால் கோவம் குறைந்து விடும் " என்றார் அரசர் .........................


"சரி மதுவும் குடிக்க வில்லை என்றால்" என்றான் அமைச்சர் .......
"அதற்கு தான் காதல் போன்ற உணர்வை கலை இலக்கியம் போல மக்களிடம் தூவி விடுவேன் ,
காதலிலே விழுபவன் சமூக பார்வை மங்கும் தனக்காக வாழுவான் கேள்வி கேட்க மாட்டான்
காதல் மிக பெரிய போதை.......காதலி சொல்லிவிட்டால் எதுவும் பேச மாட்டான் காதலன்"
என்றார் அரசர் ........................



"சரி காதலி காதலன் இருவருக்குமே சமூக அக்கறை இருந்தால் " என்றார் அமைச்சர்
" அதற்க்கு தான் கலை வைத்து ,அம்மா பாசம் ,குடும்ப பாசம் தூவி விடுவேன்......................மது கடவுள் காதல் குடும்பம் என்று கலை வைத்து தூவி விடுவேன் மனிதன் அற்பவாதத்தில் ஊறிக்கிடப்பான் போராட மாட்டன்"
"இந்த ரசனை எல்லாம் எப்படி பரப்ப முடிகிறது" என்றார் அமைச்சர் .
"ஊடகங்களை கையில் வைத்துக்கொள்ள வேண்டும் ...............நீ பரப்புவதை தான் இலக்கியம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்............எவன் அற்பமான சிந்தனையை வளர்க்கிரானோ அவனுக்கு விருது கொடுத்து
சிறப்பிக்க வேண்டும்......" என்றார் அரசர்....................
"அப்படி சிறப்பிபதால் என்ன..." என்றான் அமைச்சர்
" ஊடகங்கள் இது தான் கலை என்று சொல்லி விட்டால் மக்கள் நம்புவார்கள்,எவனும் சிந்திக்க மாட்டான் ,,,,,
யாருமே துணி உடுத்தவில்லை என்றால் எல்லாருமே அதை தான் செய்வான், சிந்திப்பவன் பைத்தியமாய் சித்தரிக்க படுவான்" என்றார் அரசர்...................................






















மேலும் " கல்வியை நமக்கு சாதகமாய் பயன்படுத்த வேண்டும் நாம் சொல்வதே வரலாறு, கல்வியை வைத்து அடிமை சமூகத்தை உருவாக்கலாமே???" என்றார் அரசர் .................
"இதுவல்லவோ ராஜ தந்திரம்" என்றான் அமைச்சன் .............................................

Thursday, 21 January 2010

காதலும் கணக்குபாடமும்


உன்னைக் கூட்டி

துன்பம் கழிய

வேண்டுமென்று நினைத்தேன்

நீ கழிந்ததால்

துன்பம் கூடிப்போனது.

Wednesday, 20 January 2010

நான் நான் மட்டுமே















மனிதன் என்றான் ....
ஈராக் ஈழம் பிரச்சனை பற்றி
கவலை இல்லையா என்றேன் ??
நான் இந்தியன் மட்டுமே என்றான்
சரி கோத்ரா ரயில் விபத்து பற்றி,
குஜராத் கலவரம்,
பொருளாதாரம் என்றேன் .....
கிரிக்கெட் பார்ப்பதில் மட்டுமே நாம் இந்தியன் என்றேன்
உடனே நான் தமிழன் என்றான் .
காவிரி பிரச்சனை,முல்லைப் பெரியார் பிரச்சனை தெரியுமா .....
என்றேன்
எனக்கு எதற்கு நான் மதுரைக்காரன் என்றான் .....!
சரி பாப்பட்டி கீரிப்பட்டி பிரச்சனை என்ன வென்றேன் ........
தெரியாது என் இடம் திருநகர் என்றான் ...............!
சரி அங்கே தண்ணீர் வரவில்லையாமே என்றேன் .............
எங்கள் வீட்டில் போர் போடப்பட்டுள்ளது என்றான் .........!
சரி உன் வீட்டில் உன் தம்பிக்கு வேலை கிடைக்கவில்லை என்றேன்
நான் நான் மட்டுமே என்றான்...................!

Tuesday, 19 January 2010

3 இடியட்சும் ஆயிரத்தில் ஒருவனும்



















நேற்று இரவு ஆயிரத்தில் ஒருவன் படம் மறுபடியும் பார்த்துவிட்டு வந்தேன். திரை அரங்கிலே பல அரசியல் ஓடிக்கொண்டிருந்தது . முதல் பகுதி ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக திரையரங்கில் ஒலி ஒளி சரியாக இல்லை, ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதவாது முதல் பாதி கூட ரசிகன் நன்றாய் இருக்கு என்று வெளியே சொன்னால் படம் ஒரு அளவு ஓடிவிடும்,அதற்காய் இந்த அரசியல். இரண்டாவது பாதி ஒளி ஒலி சரியாக வந்தது.

படத்தில் என்ன கொடுமை என்றால் பார்த்திபன் சாவதை வெட்டி விட்டார்கள். அதாவது ஒரு தலைவன் மக்களை விட்டு ஓடுவது போல் இப்பொழுது படம் பார்ப்பவர்களுக்கு புரிவது போல படம் வெட்டப்பட்டு இருக்கிறது பார்பதற்க்கே வேதனையாய் இருந்தது. இந்தியா ஜனநாயக நாடாம்.........சொல்லிக்கிறாங்க பா ..........!

படம் முடிந்து வந்து கொண்டிருந்தோம்.ஒரு காவலாளி "ஏய் இங்க வா" என்றான் தெனவட்டாய்.........நாங்கள் படம் முடிந்து போகிறோம் என்றோம் . "சரி சரி போ போ" என்றான். பக்கத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கேட்கவில்லை. ஏன் கொலை செய்பவன்,திருடன் நடந்து தான் போக வேண்டுமா என்ன?????

அன்று ஒரு நாள் 3 IDIOTS படத்திற்கு காரில் சென்றோம் எங்களை ஒருவன் கேட்கவில்லை ஜனநாயகம் புரிகிறதா....திருடர்களே ஒரு கார் மட்டும் வாங்கி விட்டு என்ன வேணுமென்றாலும் திருடுங்கள்.

Monday, 18 January 2010

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் தான்















ஆயிரத்தில் ஒருவன் பற்றி பல விமர்சனம் வந்து கொண்டிருக்கின்றன. அனைவரும் சொல்வது இரண்டாவது பாதி சரி இல்லை என்று.என்னை பொறுத்தவரை இரண்டாவது பாதி ஒரு அற்புதம் என்றே சொல்வேன். ஆயிரத்தில் ஒருவன் உண்மையிலேயே சோழர் கதை பேசுகிறதா?????என்றால் அந்த கதை சாதாரண கதையே.......அப்படி தான் பாதி பேருக்கு புரிந்திருக்கிறது என்றே சொல்வேன்.....ஏன் நூற்றிற்கு எண்பது விழுக்காடு அந்த புரிதலே.................

பதிவர்கள் நிறைய படிப்பவர்கள் அவர்கள் வேண்டுமென்றால் படத்தை புரிந்திருக்கலாம், பொறியியல் படிக்கும் என் தம்பிக்கு நான் தான் கதையை விளக்கினேன்...........ஆயிரத்தில் ஒருவன் உண்மையிலேயே பேசுவது ஈழ பிரச்சனை............யாரோ ஒருவன் அல்லது ஒருத்தியின் சுயநலத்தால் ஒரு இனமே அழிக்கப்படுகிறதே அதை ஆணி தனமாய் சொன்ன படம் என்பேன்.

எப்படி ஆணிதனமாய் சொல்கிறது படம். சோழருக்கு புலிக்கொடி, ஈழம் மக்களுக்கும் புலிக்கொடி. அங்கே தமிழினத்தலைவன் இங்கே பார்த்திபன், ரீமா சென் .......நாம் அன்னை என்று சொல்கிறோமே அந்த தலைவி.புலிக்கொடி ஒன்று போதாதா விளக்க.

உண்மையில் இது களவாடப்பட்ட கதையா????இது மண்ணின் கதை,இது மண்ணின் புனைவு..............இந்த கதையை எந்த படத்திலிருந்து உருவ முடியும்.புலிகள் கம்மியான ஆயுதம் வைத்திருந்தாலும் அழகாய் சமாளிக்க கூடியவர்கள். ராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கும் போது.....மறுபடியும் அவர்களை சுற்றி வளைப்பார்களே அதில் அவர்கள் போர்த்தந்திரம் தெரிகிறது.

படத்தில் போர்க்காட்சியில் இவர்கள் கத்தியை வைத்து சண்டை போடுவார்கள் அவர்கள் துப்பாக்கி வைத்து சண்டை இடுவார்கள் .............! அது ஆயுதம் குறைந்த புலிகள் ஆயுதம் அதிகமாய் இருக்கும் இந்தியாவிடம் சண்டையிடுவது போல் இல்லையா...?????அவர்கள் தோற்றதே துரோகத்தினால் மட்டுமே எனக்கு நன்றாய் புரிந்தது புனைவு .........!
படத்தில் வியட்டனமில் காட்டப்படுவதே புலம் பெயர்ந்த தமிழர்களின் புனைவு

காட்சி அமைப்புகள் வேண்டுமானால் ஏதோ படங்களை நியாபக படுத்தலாம். இன்னொரு காட்சி ராணுவ வீரர்கள் கற்பழிப்பில் ஈடுபடுவது போல்,அந்த காட்சி நான் மூன்றாம் நாள் பார்த்தபோது நீக்கம்......! ஏன் இது தான் அரசியல் ..............ஏன் மணிரத்தினம் சங்கர் கமல் படம் வரும்பொழுது இந்தப்படத்தில் இருந்து திருடி உள்ளார் என்று யாரும் சொல்வதில்லை...................ஏன் அமீர் படம்,செல்வா படம் மட்டும் தான் தெரியுமா என்ன?????????????? இதில் ஏதோ அரசியல் சாயம் உள்ளதே........................எப்படியோ படம் அற்புதம் ..........இந்த படம் தோற்றால் என்ன செய்ய???????செல்வா போன்ற கலைஞன் தோற்க கூடாது. செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் தான்...

Tuesday, 12 January 2010

பொங்கல் பண்டிகை மட்டும் கொண்டாட வேண்டுமாம்

















தண்ணீர் தனியாரிடம்,
விவசாய கவிதை யாரும் எழுதுவதில்லை,
கண்மாய்கள் கட்டிடம் ஆகின,
அரிசி விதைத்த இடத்தில், software company ......
இரண்டுமே சாப்பிட என்கிறான் கேட்டால் .....!
விவசாயம் நீ சாப்பிட .........
software உன்னை மற்றவன் சாப்பிட என்றேன் ...!
நமீதா எதை விவசாயம் செய்தார்
பொங்கல் என்று "சொல்லு மச்சான்னு" பேட்டி...!
எலிக்கறி சாபிட்டான் விவசாயி ..........
நீ Coke குடித்ததால்......!
விவசாயி இல்லையாம் ...........................
பொங்கல் பண்டிகை மட்டும் கொண்டாட வேண்டுமாம் ...........!

Monday, 11 January 2010

நீ நீயாய்





















அம்மா
அக்கா
உயிர்த்தங்கை
மனைவி
மகளாய் இருக்கும் பெண்ணே ....
என்று
நீ நீயாய்
இருக்க போகிறாய் ....!

Saturday, 9 January 2010

உதவி ஒளிப்பதிவு கலைஞர் ரஜினி கமல் SICA












சரத்குமார் ரஜினிகாந்த் கமலஹாசன் ஏதொ திரை பிரச்சனை அடித்தட்டு தொழிளாலருக்காக தான் கேட்பது போல பிம்பம் உருவாக்க பார்க்கிறார்கள்.அது உண்மைக்கு புறம்பானது ராதிகா தயாரிப்பாளர் என்பதால் தான் பிரச்சனை கேட்கப்பட்டது, அவர் தொழிலாளியாக இருந்தால் கலைஞரும் கேட்க மாட்டார் ரஜினி கமலும் குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள் யோகிதை என்னவென்று பார்ப்போம்,பெரிய ஆள் என்றால் எதிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை தோழர்கள் தொழிலில் இருக்கிறார்கள் அவர்களிடம் இருந்து வாய்மொழியாக கேட்டது.













தரமணியில் உள்ள M G R திரைப்படக்கல்லூரி இந்தியாவில் உள்ள சிறந்த ஒளிபதிவாளர்களை வளர்த்த இடம்.அசோக் குமார் ,P C ஸ்ரீராம்,ரத்னவேலு,ராஜீவ் மேனன்,R D ராஜசேகர், விஜய் மில்டன்,மணிகண்டன்,தங்கர் பச்சான் போன்றவர்கள் உருவாகிய இடம்.
அங்கே படித்து வரும் ஒரு ஒளிப்பதிவாளன் இந்திய அளவிலே பேசப்படுவான் என்பதே உண்மை. அங்கே படிக்கும் மாணவன் ஒரு கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் அதிகம். அவர்கள் மூன்று வருடம் படிப்பு முடித்து வந்தவுடன் அவர்களை SICA என்னும் அமைப்பில் உறுப்பினர் அட்டை எடுக்க வேண்டும்.

அது union , SOUTH INDIAN CINEMATOGRAPHER ASSOSIATION என்ற அமைப்பு. அது எடுக்க நாற்பது ஆயிரம் ரூபாய். அது எடுக்கவில்லை என்றால் உதவி ஒளிபதிவாளராக கூட ஆக முடியாது ஒரு ஏழை மாணவன் எப்படி பணம் கட்டுவான். அவன் வீட்டிலிருந்து சண்டை போட்டு சினிமாவிற்காக உழைத்திருப்பான்.வீட்டில் காசு வாங்க முடியாது,அவன் வீடு ஏழை வீடாக இருந்தால் இன்னும் கொடுமை. அவன் ரூம் வாடகை,சாப்பாடு செலவு இதற்கே
கஷ்டப்படுவான்,இது எல்லாம் தெரிந்தும் அவன் மிரட்டப்படுவான் அதுவே உண்மை."நீ யார்ட போய் வேலை செய்வேன்னு பார்த்திடுவோம்ட" என்று குரல் வரும்.

சரி அப்படியாவது SICA சரியாக இருக்கிறதா.ஒரு ஊழியனுக்கு சம்பளம் வாங்கி கூடத் தரவில்லை என்பதே உண்மை.,வேலை செய்வது எல்லாம் பெரிய படம் ஆனால் சம்பளம் ஏன் bata கூட ஐம்பது ரூபாய் மட்டுமே அதுவும் சூட் இருந்தால் தானே?ரஜினிகாந்த் வாய் கிழிய பேசுகிறாரே அவர் மகள் தயாரிப்பாளரை இருக்கும் படத்தில் கூட இதே பிரச்சனை. ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமென்றால் அதிகமாய் உழைப்பது உதவி இயக்குனர் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர்.அவர்களுக்கு சம்பளம் வெறும் ஐம்பது நூறு அதுவும் கிடைக்காது.

ஒரு கடைக்கோடி ஊழியன் பிரச்சனை என்றால் ரஜினியோ கலைங்கரோ வருவதில்லை இதுவே உண்மை. நூறு கோடியில் படம் எடுக்கும் தயாரிப்பாளனுக்கு வரிவிலக்கு ஆனால் கடை நிலை ஊழியன் உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும்.ஆனால் சம்பளம் மட்டும் கேட்க கூடாது.

என் நண்பர் அப்புறம் எதற்கு UNION என்று கேட்டதற்கு "உங்கள் கடைசி காலத்தில் ஏதாவது செய்யும்" என்று பதில் வந்துள்ளது. கடைசி காலத்தில் என் நண்பரோ ஒளிபதிவாளராக சம்பாதித்து இருப்பாரே.இப்பொழுது தானே உதவ UNION தேவை மாதம் ஏதோ சம்பளம் கொடுத்தால் போதுமே.













மாணவர்கள் உண்ணா விரதம் கூட இருந்தனர். அமைச்சர் பருதி மாணவர்களை சமாதனம் படுத்தினார்.ஆனால் காரியம் ஒன்றும் ஆகவில்லை, நடிகைகளுக்காக படம் எடுக்கும் கலைஞர் அவர் பிரச்சனை என்றால் முன்னால் நிற்கும் தலைவர் ஏன் இந்த பிரச்சனை
தெரியாதா?கமல் நடத்தும் ஒரு அமைப்பிற்கு மக்கள் வரிப்பணத்தை நன்கொடையாக கொடுத்த
கலைஞர் மாணவர்களுக்கு ஏன் இந்த சலுகை செய்யலாமே.ஏன் செய்யவில்லை ஒரு அரசியல் இருக்கிறது.

அரசு திரைப்பட கல்லூரிக்கு போட்டியாக ராஜீவ்மேனன் நடத்தும் திரைப்படக்கல்லூரி இருக்கிறது ஆறு மாதத்திற்கு இரண்டு லட்சம் கட்டணம் அதில் மேட்டுக்குடி பணக்காரன் மாணவனே படிப்பான்,அவனால் நாற்பது ஆயிரம் எளிதாய் கட்ட முடியும். மேட்டுக்குடி மாணவர்கள் மட்டும் படிக்க வேண்டும் அதனால் அதை எழுபத்தி ஐந்து ஆயிரமாய் உயர்தப்போகிரார்கலாம் ஏன் ஏழை மாணவன் படிக்கவே கூடாது படித்தாலும் ஒளிபதிவாளனாய் ஆகக்கூடாது. இது திரைப்படக்கல்லூரியையும் தனியார்மயமாய் உருவாக்க ஒத்திகை.பணம் இருப்பவனே படைப்பாளி....

படிப்பது என்றால் பிரசாத் லேப் அல்லது ராஜீவ் மேனன் போன்ற இடத்தில் தான் படிக்க வேண்டும். பணக்காரனே கலைஞன் ஆக வேண்டும். ரஜினி பொண்ணின் படம் சம்பள பாக்கி இருக்கிறது அது பிரச்சனை இல்லை. சரி கலைஞர் இடம் சொன்னார் அவருக்கு மீரா ஜாஸ்மின் ராதிகா பிரச்சனை பெரிதாய் இருக்கிறது.


















சரி உலக நாயகன் விடயத்திற்கு வருவோம்??மூன்று மாதம் முன்பு திரைக்கதை பற்றிய கலந்துரையாடலில் ராஜீவ் மேனன் மாணவர்களுக்கு அனுமதி வழங்க பட்டுருக்கிறது, ஆனால் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதாம் அதனால் அனுமதிக்கபடவில்லையாம் சொல்கிறார் உலக நாயகன் .......அதுவும் கோலிவுட் என்று சொல்லக்கூடாது என்று சொன்ன உலகநாயகன்....அப்பொழுது ஆங்கிலம் தெரிந்த உலக நாயகனும் மேட்டுக்குடி வர்க்கம்,பணக்காரன் முதலியவனே படம் செய்ய வேண்டும்...

இவற்றின் மொத்த சாரமாய் சரத் அவர் பிரச்சனை என்றதும் தொழிலாளர்கள் பிரச்சனை பற்றி பேசுகிறார் என்ன கொடுமை?ரஜினி சொல்வது போல RICH GET RICHER POOR GET அந்த வசனம் உங்களுக்கு பொருந்தாதா??? ஏன் கலைஞர் வரிவிலக்கு அளிக்கிறாரே கோடிகளில் புரள்பவனுக்கு வரிவிலக்கு அடிமட்ட ஊழியன் நாற்பது ஆயிரம் கட்ட வேண்டும் என்ன கொடுமை. கமல் அவர்கள் ஆங்கிலம் தெரிந்தவனுக்கே தனக்கு தெரிந்த சினிமாவை கற்றுக்கொடுப்பார்....கமல் உங்களை விட கிராமத்தில் இருந்து வருபவன் அழகான மண்ணை படம் பிடிக்கிறான் என்பதே உண்மை.........இவற்றின் மொத்த சாரம் கீழிருந்து ஒருவன் முன்னேற கூடாது,கலைஞர் அவர்களே முடிந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் .

ஏன் பணம் படைத்தவன் மட்டுமே கலைங்கனாக வேண்டும். கலைஞர் அவர்களே நீங்கள் பராசக்திக்கு வசனம் எழுதும் போது உங்களிடம் பணம் இருந்ததா என்ன????என்ன முதாலாளித்துவம். உங்களால் ஒரு கடை நிலை ஊழியனுக்கு சம்பளம் வாங்கித் தர முடியுமா

Friday, 8 January 2010

முதல்வன் படமும் திருட்டு சீடியும்



















முதல்வன் படம் வந்திருந்த நேரம்,அது ஆட்சிக்கு எதிராக இருந்ததால்,அப்போதைய முதல்வரின் மகன் அஞ்சா நெஞ்சன் இப்பொழுதைய அமைச்சர் ஊர் மதுரை..........வீடு வீடாக படத்தின் CD இலவசமமாய் கொடுக்கப்பட்டது . இப்பொழுது ஏதொ திருட்டு CD சட்டம் போட்டாச்சாம்.குறைந்தது ஆறு மாதமாவது சிறையில் வைப்பார்களாம்,இந்த சட்டம் அஞ்சா நெஞ்சருக்கு ஒத்து வருமா என்ன?அப்பொழுது ரஜினி கமல் சரத் குரல் கொடுத்தார்களா? நீங்கள் அனைவரையும் ஆறு மாதம் உள்ளே போடுவது என்றால் மதுரை மொத்த நகரையே உள்ளே போட வேண்டுமே? அதை தயார் செய்தவர் அஞ்சா நெஞ்சன் தானே?அப்ப அவரை ஓ உங்கள் சட்டம் தயாரித்தவனை எதுவும் செய்யாதோ?

சரி சரத் சொல்கிறார் இது சினிமாவை நம்பி இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் என்று? இங்கே உதவி இயக்குனர்கள் மிகக்கேவலமாய் நடத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு உதயம் ஒழுங்காக கொடுக்கப்படுகிறதா என்ன? ஒரு நூறு ருபாய் கூட வாங்காமல் உழைப்பை மட்டும் உறிஞ்சும் தயாரிப்பாளர் எப்படி அனைத்து தொழிலாளர்காக பாடுபடுவார். எனக்கு தெரிந்த உதவி இயக்குனர் பெரிய படத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். பெரிய நட்சத்திரத்தின் படம்,போன வரம் ஊருக்கு போக என்னிடம் தான் 200 ருபாய் வாங்கிக்கொண்டு போனார்.பெரிய நடிகர் படம் அதற்கே இந்த நிலைமை சரத் அல்லது ரஜினிகாந்த் என்றாவது உங்கள் சினிமாவில் இருக்கும் தொழிலாளிக்காக நீங்கள் போராடியது உண்டா?

எனக்கு தெரிந்து உதவி இயக்குனர்கள்,உதவி ஒளிபதிவாளர்கள் வாடகை மற்றும் சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவது உண்மை அதற்கு ஒரு பெரிய நடிகரிடம் இருந்தும் குரல் இல்லை. நீங்கள் மட்டும் உதவி ஒளிபதிவாளர் உதவி இயக்குனர் உழைப்பை திருடலாமா என்ன?

சரி எனக்கு தெரிந்து நான் கேட்ட வரை சினிமா நட்சத்திரங்கள் பாதி சம்பளம் கருப்பாகவும் வாங்குகிறார்களாம் அது வரி ஏய்ப்பு இல்லையா என்ன?அது திருட்டு தானே.மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறதே. தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று கலைஞர் சொல்கிறார். 100 கோடியில் படம் எடுத்து தமிழில் மட்டும் பெயர் வைத்து வரி ஏய்ப்பு செய்கிறார்கள். ஏன் நூறு கோடி சம்பாதிப்பவன் வரி கட்டமுடியாதா என்ன? ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் தமிழில் தன் குழந்தைக்கு பெயர் வைத்தால் இலவச உணவு வாழ்நாள் முழுவதும் என்று சொல்ல முடியுமா என்ன?? சினிமா நடிகர்கள் அனைவரும் ஒழுங்காய் வரி செலுத்துகிறார்களா??

சரி படம் எல்லாமே ஒவ்வொரு காட்சியும் உலக சினிமாவில் இருந்து திருடப்படுகிறது. கமல்,மணி சார் போன்றவர்கள் அதை தலைமை ஏற்று நடத்துகிறார்கள் அது திருட்டு தானே.சரி அந்த படம் எப்படி வாங்க படுகிறது எல்லா படமும் பர்மா பஜாரிலே தான் வாங்குகிறார்கள், உலக சினிமா பார்க்கும் அனைத்து CD பர்மா பஜாரிலே வருகிறது? முதலில் அந்த CD வாங்குவது தவறு அதிலிருந்து காட்சிகளை உருவுவது மிகத்தவறு. இந்த சட்டம் பெரிய இயக்குனரை கைது செய்யுமா என்ன?

திருட்டு CD எங்கு இருந்து போக முடியும் ஒன்று LAB ,இல்லை திரையரங்கு அவர்களை கைது செய்யுங்கள் முதலில்.திரையரங்கில் மாதம் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் உள்ளவனே படம் பார்க்க முடிகிறது.முப்பது ரூபாயில் குடும்பமே பார்க்கலாம் பாமரன் அதை தான் செய்வான்.

சரி சரத் அவர்களே ப்ளாக்கில் டிக்கெட் விற்க படுகிறதே,அது தடுத்து நிறுத்துங்கள்.ப்ளாக்கில் வரும் பணம் திரையரங்கு விநியோகம் செய்பவர் மற்றும் தயாரிப்பாளருக்கு பங்கு போகிறதாமே. ஓ அந்த பங்கு உங்களுக்கு வருவதால் தான் அதற்கு கேள்வி கேட்கவில்லையோ?டிக்கெட் விலை மற்றும் ப்ளாக் டிக்கெட் குறைந்தாலே திருட்டு CD குறையும். வெறும் பணக்காரன் மட்டுமே படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் தமிழ் திரையுலகை யாரும் காப்பாற்ற முடியாது.

ஏன் முதல்வர் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறதே? நீங்கள் பெண் சிங்கம் வசனம் எழுதுவது,ஒரு விபச்சார வழக்கிற்காக நடிகர்களுடன் பேசுவது?இப்படி முதல்வர் பதவியை கொச்சை படுத்துகிறீர்கள். உங்களை பார்த்தால் எனக்கு புலிக்கேசி மன்னன் நியாபகம் வருகிறான்.சரி எல்லாம் போகட்டும் மதுரையில் முதல்வன் படம் CD விற்கப்பட்டது அது ஒரு வரலாற்று நிகழ்வு. அந்த சட்டம் அந்த அஞ்சா நெஞ்சங்களுக்கும் முதலாளிகளுக்கும் பொருந்துமா இல்லை என்னை போன்ற பிள்ளை பூச்சிகளுக்கு மட்டுமா?

கௌதம் மேனன் எது வன்முறை???






















கௌதம் மேனன் சமீபத்தில் சசிகுமார் மற்றும் அமீர் படங்களை விமர்சனம் செய்துள்ளார்.முதலில் அவர் படம் எப்படி இருக்கிறது.காக்க காக்க படத்தில்
encounter செய்வதை நியாயப்படுத்தி உள்ளார் சரி அடிமட்டத்தில் இருக்கும் அடிபோடி ரௌடிகளை கொலை செய்யலாம்.அதை வளர்த்துவிடும் அரசியல்வாதியை கொலை செய்வாரா அந்த அன்புச்செல்வம். இது எப்படி உள்ளது என்றால் ஒசாமாவை வளர்த்தது அமெரிக்கா, இப்பொழுது தீவிரவாதம் என்று சொல்கிறார்களே , வளர்க்கும்போது தெரியவில்லையா??????????

encounter முறையில் கொள்ளப்படும் ரௌடிகள் எல்லாம் பெரிய தலைவர்கள் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டவர்களே.சும்மா ஒரு ஐம்பது ருபாய் bullet வைத்து கொல்வாராம். பருத்திவீரன் சுப்ரமணியபுரம் படத்தை விட காக்க காக்க வன்முறையான படம். இது என்ன நியாயம் ஏவப்பட்ட அம்புகளை கொல்வாராம் அப்ப வில்.இது முதலாளிகளுக்கு சாதகமான கருத்து, அதாவது ரௌடிகள் மட்டும் கொலை செய்யப்படுவார்கள்,அவர்களை உபயோகிப்படுத்தி பல வேலைகள் சாதித்துக்கொண்ட பண முதலைகள் அரசியல்வாதிகள் உயிருடன் உலா வருவார்கள் .

அடிமட்டத்தில் ஒருவன் rape செய்துவிட்டான் அவனை கொலை செய்யலாம்.குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் N T திவாரி போன்ற பெரிய தலைகளை அன்புச்செல்வனால் கைவைக்க முடியுமா?????? பெரிய சாமியார்கள் பெண்கள் விடயத்தில் படு மோசம் அவர்களை கொல்ல முடியுமா என்ன அன்புச்செல்வனால்??????????? இதில் பல காவலர்கள் விரோதம் காரணமாக கூட ரௌடிகளை encounter முறையில் கொல்லலாமே????????ஏன் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் பெரிய தலைகள் rape பண்ண மாட்டார்களா ????? என்ன கௌதம் ????? மேல்மட்டத்திற்கு ஒரு நியாயம் ....கீழ் மட்டத்திற்கு ஒரு நியாயமா ?????????இது பெரிய வன்முறை கௌதம்.

சரி ரௌடிகளை சொன்னீர்கள் அவர்களை வளர்த்துவிட்ட அரசியல்வாதியை பற்றி காட்ட வில்லையே .......இது தான் படைப்பு நேர்மையா????இல்லை நீங்கள் திருடும் ஹாலிவுட் படங்களில் அரசியல்வாதி என்ற கதாப்பாத்திரம் காட்டப்படவில்லையா இதுவரை எதாவது ஒரு அரசியல் பிரமுகர் encounter முறையில் கொல்லப்பட்டு இருக்கிறாரா?????????அப்பொழுது அடிமட்டத்தில் இருக்கும் ஒருவனை தான் அன்புச் செல்வனால் கொல்ல முடியுமா....??????இது தான் உங்கள் அரசியல் பார்வையா ????????????இது கருத்துக்களில் வன்முறை கௌதம் அவர்களே .......!

சரி வேட்டையாடு விளையாடு படத்தில் தமிழ் பெயர் உடைய வில்லன் கமக்கொடுரங்கள் செய்வார்கள் .....ராகவன் என்ற மேட்டுக்குடி பெயர் கொண்ட கமல் அவர்களை வேட்டையாடுவார் ....!இது வன்முறை தானே ஏன் கமலுக்கும் நல்ல தமிழ் பெயர் வைத்திருக்கலாமே ????????இது வன்முறை தானே ......

"காக்க காக்க" முதலாளிகளை மட்டும் காக்க காக்க ...............
வன்முறையின் உச்சம்

Wednesday, 6 January 2010

குரு உச்சத்தில் உள்ளார்













புத்தாண்டு அன்று ராசி பலன் படித்தேன்,ஒரே நகைச்சுவையாய் இருந்தது.முதல் ராசியில் இருந்து கடைசி ராசி வரை படித்தேன். மகிழ்ச்சியான நாள் வீட்டில் விருந்தினர் வருவார்கள் ,பணம் நன்றாய் புழங்கும்,பலகாரம் சாப்பிடுவீர்கள் போன்ற நாலு ஐந்து கருத்துகள் எல்லா ராசி பலனுக்கும் வந்து கொண்டே இருந்தது.

புத்தாண்டு என்றாலே வீட்டில் விருந்தினர் வரத்தான் செய்வார்கள்.மாதம் ஒன்னாம் தேதி சம்பளம் நிறைய பேருக்கு முதல் நாள் இரவே வந்திருக்கும் அதனால் பண புழக்கம்.
எதோ ஒரு ராசியில் கொடுத்த கடன் திரும்பி வரும் என்று இருந்தது...????பண புழக்கம் இருந்தால் கடன் திரும்பி வரத்தானே செய்யும்.புத்தாண்டு அன்று குடுபத்துடன் மகிழ்ச்சியாய் தான் இருப்போம்.நெடுநாள் சந்திக்காத நண்பரை சந்திப்போம்.இந்த கருத்துக்கள் எல்லாம் ராசி பலனிலே வந்து கொண்டே இருந்தன.....!நீங்கள் உங்கள் ராசியை மட்டும் படித்தால் பத்தாது எல்லா ராசியையும் படியுங்கள் அப்பொழுது உண்மை புரியும்.

குஷ்வந்த் சிங்க் பத்திரிகையில் வேலை பார்த்தபோது .தினசரி ராசி பலன் போடுபவர் ஒரு வாரம் விடுப்பில் இருந்திருக்கிறார் மாத கடைசி அந்த வாரம் ராசி பலன் அனைத்தையும் குஷ்வந்த் சிங்க் எழுதினார். வாசகர்கள் அனைவரும் இந்த வாரம் மட்டுமே சரியாக துல்லியமாய் இருந்தது என்று பாராட்டினர்.எப்படி சாத்தியம் என்று குஷ்வந்திடம் கேட்டபோது.......மாத கடைசியில் பணம் இருக்காது .... அதனால் கையிருப்பு கரையும்,கடன் பிரச்சனை என்ற ஒன்று இரண்டு விடயங்களை எல்லாருக்கும் எழுதி இருக்கிறார் அது பெரிய வெற்றி பெற்றது.மக்களின் மூடநம்பிக்கை சந்தைகளாக ஆக்கப்படுகின்றன.....

மிரட்டப்பட்ட பதிவர்

நண்பர் ராஜேஷ் தற்போது தான் எழுத ஆரம்பித்து உள்ளார் . ஒரே ஒரு அரசியல் பதிவு போட்டார்.அவருடன் பழகிய நண்பரே மிரட்டுகிறாராம்........!கலைஞரை பற்றி எழுதி இருந்தார்,அதற்கு மிரட்டலாம்.இப்போது உள்ள மின்சார விடயம் பற்றி எழுதி உள்ளார். அதற்கே மிரட்டல் என்ன சொல்ல.அவர் நண்பர் கலைஞர் அனுதாபி போல.....!அவர் நண்பர் அரசியல் புள்ளி வேறு

எங்கள் சொந்த ஊர் மதுரையில் மின்சாரம் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வெட்டப்படுகிறது.சென்னையை தவிர வேறு ஊர்களில் இதே நிலைமை தான். அதுவும் மதுரையில் அழகிரி மகன் விளையாடினால் மின்னொளி போட்டி
மக்களுக்கு என்றால் மின்சார பற்றாக்குறை என்ன சொல்ல???????????
கலைஞர் இதற்கெல்லாம் நிதி ஒதுக்காமல் கமலஹாசன் எதோ பண்ணுகிறாராம் அதற்க்கு நிதி ஒதுக்குகிறார். தமிழில் பெயர் வைத்தால் படங்களுக்கு வரி
விலக்கு என்ன கொடுமை????யார் வரிப் பணம்????? போன பதிவிலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ....கமலஹாசன் திருட்டு cd பற்றி சொல்லி இருந்தார் அது பயங்கர வாதமாம்.......!இவர் உன்னைப் போல் ஒருவனில் சொல்லி இருந்த கருத்து தான் பயங்கரவாதம்.....! அவர் ஜாதியை ஒரு சின்ன கதாபாத்திரத்தில் கூட சேர்த்து இருந்தார்...!IIT மாணவன் ஒரு உதாரணம்....! ஏன் இந்த commen man திரையரங்கில் புழங்கும் கருப்பு டிக்கெட் பற்றி கேட்க மாட்டாரா. ஏன் என்றால் படம் தயாரிப்பது முதலாளி அதற்க்கு குரல் கொடுக்கலாம்....! commen man படம் பார்ப்பவன் அவனிடம் பணம் பிடுங்க வேண்டும்
நல்ல கொள்கை...! எல்லாமே உழைப்பு தான் கமல் அவர்களே கருப்பு டிக்கெட் நீக்குங்கள் ??????நான் உங்கள் பின்னால் நிற்கிறேன்.............!

என் நண்பர் மிரட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடுகை ....
rajeshkannanforindia.blogspot.com

Tuesday, 5 January 2010

சிவாஜியும் black டிக்கட்டும்















திரு ரஜின்காந்த் அவர்களே திருட்டு vcd இருக்கட்டும். நீங்கள் கருப்பு பணம் பற்றி பேசிய சிவாஜி படம் முதல் ஐம்பது நாட்கள் housefull என்று போட்டு கருப்பில் தான் டிக்கெட் விற்பனை செய்தார்களே அது உங்களுக்கு தெரியாதா. ஏன் சினிமாகாரர்கள் மட்டும் தான் உழைக்கிறார்களா என்ன??????ஒரு பாமர ரசிகன் உங்களையே நம்பும் ரசிகன்,அவன் கூலி வேலை பார்க்கலாம், அவன் விவசாயம் செய்யலாம்,அவனுக்கு தினசரி வருமானமே நூறு ருபாய் இருக்கும் அவன் சென்னையில் முதற் காட்சி ஆயிரம் ருபாய் கொடுத்து பார்கிறான். முதல் ஐம்பது நாட்களுக்கு சென்னையில் டிக்கெட் நூறு ருபாய் குறையவில்லை தலைவா.....!நீங்கள் செய்வது திருட்டு தானே.......!

நீங்களே சொல்கிறீர்கள் அது ஜக்குபாய்.......ஒரு பிரெஞ்சு படம் என்று அது அந்த பிரெஞ்சு இயக்குனருக்கு தெரியுமா.?????அது திருட்டு இல்லையா.....ஏன் உங்கள் பக்கத்திலிருந்த சேரன்,கமல் ஆவேசமாய் பேசினார்கள்.அவர்கள் படங்களில் வரும் காட்சிகள் அத்தனையும் திருட்டே...இருவர் படத்தையும் எந்த எந்த காட்சிகள் எங்கு எங்கு எடுத்தார்கள் என்று பட்டியலிடலாம்.......! அந்த இயக்குனரிடம் இருந்து அனுமதி பெற்று தான் எடுத்தார்கள் என்று சொல்ல முடியுமா?????????????

பாமர ரசிகன் உங்கள் பிம்பங்களை தூக்கி கொண்டு அலைகிறான் ...............!!!!!!சரி எந்திரன் படம் ஓடும் திரையரங்கில் கருப்பில் டிக்கெட் விற்க கூடாது????அது முடியுமா உங்களால்.......................எந்த திரையரங்கில் இருந்து படம் திருட்டு VCD செய்ய படுகிறதோ அதை புறகணிக்க சொல்கிறீர்கள்.................தயாரிப்பாளர் என்றால் தான் குரல் கொடுப்பீர்களா ....உங்கள் பாமர ரசிகன் கருப்பில் டிக்கெட் வாங்குகிறான் அதை தடுக்கலாமே........!முதலாளிகளுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா.....! தலைவரே நாங்கள் பார்க்கவில்லை என்றால் உங்கள் கோமணம் உருவப்படும்...............! ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா ????????ரசிகன் மட்டும் நூற்றுக்கணக்கில் செலவழித்து படம் பார்க்க வேண்டும்....அது திருட்டு இல்லை ....?????

முதலாளிகளுக்கும் பண முதலைகளுக்கும் மட்டுமே குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ...?????
உங்களுக்காக உயிர் கொடுக்கும் ரசிகன் இருக்கும் வரை உங்களை அடித்து கொள்ள முடியாது தலைவா

Friday, 1 January 2010

3 idiots --- all is well
























நேற்று இரவு நண்பர்கள் அழைத்தார்கள் என்று 3 idiots படம் போயிருந்தேன். egaa திரை அரங்கில் டிக்கெட் கிடைக்கவில்லை,அதனால் woodlandsil பார்த்தேன்.படம் இந்திய கல்வி முறையை கிண்டல் செய்கிறது படம் .மனப்பாடம் பண்ணுவது,மனப்பாடம் பண்ணினால் தான் நிறைய மதிப்பெண் எடுக்க முடிகிறது.ஆசிரியர் ஆராய்ச்சி பண்ணும் மாணவனை விட மனப்பாடம் பண்ணும் மாணவனை விரும்புகிறார். அமீர் கான் கல்லூரியில் ஒரு மாணவன் ஆராய்ச்சி செய்கிறான், ஆசிரியர் அங்கீகாரம் கொடுக்காததால் தற்கொலை செய்து கொள்கிறான்.
silencer என்ற கதாபாத்திரம் மனப்பாடம் செய்து கொண்டே இருக்கிறான். ஆசிரியனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்மென்பதே இவன் குறிக்கோள். இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இது போன்ற silencer கட்டாயம் இருப்பான். ஆசிரியனிடம் அனைத்து சக மாணவர்களையும் போட்டு தருவான் .

மாதவனுக்கு புகைப்படம் எடுப்பது என்றால் ஆர்வம்,அவர் துறை அதுவென்று அமீர் கான் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் மருத்துவம் பொறியியல் துறை மட்டுமே மதிக்க படுகிறது. மற்ற துறைகள் மதிக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். காட்சி அமைப்பு ஒவ்வொன்றும் கவிதை போலவே இருக்கின்றன. மாதவன் அமிரை தவிர அவர் கூட வரும் இன்னொரு நடிகர் நன்றாய் நடிக்கிறார். பல இடங்களில் silencer மற்றும் இவர் கை தட்டு வாங்கிகிறார்கள். ஏற்கனவே மருத்துவத்துறையை தொட்ட இயக்குனர் இப்பொழுது கல்வி துறையை தொட்டு உள்ளார்.இன்னும் கிராமங்களில் மனப்பாட கல்வியே இருக்கிறது.புரிந்து யாரும் படிப்பதில்லை.machine என்பதற்கு அமீர் எளிமையாய் சொல்வார் ஆசிரியர் அவர் சரியாக சொல்ல வில்லை என்பார் சக மாணவன் definition மனப்பாடம் பண்ணி சொல்வான்,அவனை பாராட்டுவார் ஆசிரியர்...........

munnaibai படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் சொல்லித் தந்தவர் இந்த படத்தில் all is well என்னும் புது தத்துவம் சொல்கிறார்.......! அமீர் ஒரு பிரசவம் பார்ப்பார் குழைந்தை உயிருடன் இல்லை என்பது போல இருக்கும் .all is well என்று சொன்னவுடன் குழந்தை
கால் அசைப்பது ........munnabaai படத்தில் ரவி சார் என்ற கோமா நோயாளிக்கு செய்வதை போலவே இருந்தது.....!

இயக்குனர் மனித நேயம் உள்ளவர் என்று ஒவ்வொரு காட்சியும் சொல்கிறது. ஒரு இயக்குனர் என்பதை விட அவரை மனிதனாய் மதிக்க தோன்றுகிறது.நல்ல படங்களில் வில்லன் வருவதில்லை வில்லனின் குண நலன்கள் ஒரு ஈகோ கொண்ட ஆசிரியர் பழமைவாதி .......இது முன்னபாய் படத்தில் வரும் வில்லன் போன்ற கட்டமைப்பே.....வில்லன் கூட சக மனிதனே ..ஏன் தமிழில் உலக படம் பார்த்து படம் எடுக்கிறார்கள் ....படம் என்றால் ரத்தம் ஓட வேண்டுமா....வில்லன் என்றால் பஞ்ச் பேச வேண்டுமா என்ன?????????????

3 idiots பார்த்து வந்து all is well சொல்லத்தோன்றுகிறது .....மொத்தத்தில் film is well ........

3 members but they are not idiots