Monday, 25 January 2010

சினிமா: திரை விலகும் போது - புத்தக விமர்சனம் பகுதி 1

சமீபத்தில் "சினிமா: திரை விலகும் போது" என்ற புத்தகம் படித்தேன். நான் ஒரு பாமர ரசிகன், சினிமா என்றால் விறுவிறுப்பாய் போக வேண்டும்,ஊடகங்கள் சொல்வதை வைத்து பெரிய இயக்குனர் என்ற முடிவுக்கு வருவது போன்ற ரசனை தரத்தில் இருந்தேன். சினிமா விமர்சனம் என்றால் மதன் சுகாசினி,மற்றும் ஆனந்த விகடனில் ஐம்பது மார்க் இந்த அளவே எனக்கு தெரிந்து இருந்தது. என் ரசனை தரம் கேவலமாய் இருந்ததை கண்டு
வெட்கபடுகிறேன்.

நான் தூக்கி வைத்து கொண்டாடிய படங்களை அந்த புத்தகம் நாறு நாறாய் கிழிகின்றது.எல்லாமே அரசியல் பார்வை.என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள் சினிமா என்பது பொழுதுபோக்கு அதை ஏன் பெரிது படுத்துகிறாய் என்று. ஏக் துஜே கேலியே பார்த்து நூறு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது இது வரலாறு. நம் ரசனை எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் அரசியல் மாற்றமே.

ஏன் ரசனை மாற்றம் வேண்டும். ஒருவன் எந்த காட்சிக்கு கை தட்டுகிறான் என்பதை வைத்து அவன் ரசனை தரத்தை எடைபோடலாம். அவன் கலை ரசனை எப்படி இருக்கிறதோ அதை பொறுத்து தான் அவன் அரசியல் பார்வை இருக்கும் தேவை ஒரு அரசியல் பார்வை.அதை இந்த புத்தகம் நன்றாய் செய்து இருக்கிறது.

இந்த புத்தகம் ஏன் படிக்க வேண்டும் , இதை படித்த பின்பு நீங்கள் ஒரு படத்திற்கு போனால் ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் எதில் மயங்குகிறான் பாமார ரசிகன் என்பதை உணர முடியும். இப்பொழுது எல்லாம் கல்லூரி மாணவன் ஒருவனை காதநாயகனாய் காட்ட வேண்டுமென்றால் கட்டாயம் அவன் காதலிக்க வேண்டும்,சரக்கு அடிக்க வேண்டும் அவன் சமூகத்துகாய் போராட மாட்டான்.அப்படி போராடினாலும் காட்சி அமைப்பில் அவன் ஜாதி சார்ந்த படிமம் இல்லை மதம் சார்ந்த படிமம் கட்டாயம் இருக்கும். இந்த அரசியல் A செனட்டர் மக்கள் என்று சொல்வார்களே அவர்களுக்கு கூட புரியாது இந்த புத்தகம் நமக்கு புரிய வைக்கிறது. நாம் தலையில் தூக்கி கொண்டாடிய படங்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்கிறது.

ஏன் புகழ் பெற்ற படங்கள் மட்டும் விமர்சனம் செய்கிறார்கள்,ஒரு விளம்பரத்துக்கா இல்லவே இல்லை.நிறைய மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட படங்கள், அதில் நம் ரசிகனுடைய ஒருமித்த கருத்து வெளிப்படும் ரசனை வெளிப்படும். மக்களை புரிந்து கொள்ள இந்த படத்தை ஏன் ரசிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வது ஒரு வழி. ஒரு கலை எப்படி இருக்கிறதோ அதை போலவே தான் நாடு இருக்கும் .கலை எதை பிரதிபலிக்கிறது வாழ்கையை.

இந்த புத்தகத்தில் புகழ் பெற்ற பம்பாய், ரோஜா, அஞ்சலி, அன்பே சிவம், ஹே ராம், அழகி, வீடு,காதல் கோட்டை காதலுக்கு மரியாதை என்று எதையும் விட்டு வைக்க வில்லை. இந்த புத்தகம் பொதுவாய் என்ன சொல்கிறது என்ற விமர்சனம் தொடரும்.

இந்த புத்தகம் கிடைக்கும் இடம்

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

6 comments:

இனியாள் said...

பொதுவாய் ஒரு படத்தை பார்க்கும் போது நீங்கள் எதை எல்லாம் பார்ப்பீர்கள் ,
பின்னணி இசை, ஒளிபதிவு, எடிட்டிங், வசனம், திரைகதை, இயக்கம், நடிப்பு இதை எல்லாம் நன்றாக கவனித்து பார்த்தாலே போதுமே, ஒரு சாதாரண விஷயத்தை கூட ஏன் அரசியல் பார்வை பார்க்க வேண்டும், இது அந்த படைப்பிற்கு செய்ய கூடிய பெரிய துரோகம் என்றே எனக்கு படுகிறது. அரசியல் சார்ந்த அறிவு எல்லாருக்கும் இருந்து விடுவது இல்லை, மேலும் எல்லா படைப்பாளிகளும் அரசியல் பின்னணியினை சொல்ல படம் எடுப்பதில்லை, நம்முடைய அறிவு ஜீவிதனங்களை விட்டு விட்டு எதார்த்தமாக ஒரு படைப்பை பார்ப்பதில் எந்த குறையும் இல்லை, நீங்கள் சொல்லி இருக்கும் புத்தகம் புதிய கோணத்தில் சினிமாவை அணுகுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் எனினும் அதுவும் ஒருவரின் பார்வை மட்டுமே.

..:: Mãstän ::.. said...

really nice book, already read that, seems its 2 or 3 years old, Am I right?

வெண்ணிற இரவுகள்....! said...

நம் கலையை வெறும் அழகியாகலாக பார்க்காமல் ..........அறிவியல் பூர்வமாக பார்க்க பழக வேண்டும் ...
நம் சுற்றுசுழல் சீரழிய காரணமே நம் ரசனை தான் ..ஒவொவொரு படத்தையும் தீவிரமாய் படிக்க வேண்டும்
படம் நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் நண்பரே பழைய புத்தகமே

rajeshkannan said...

என்னை பொறுத்த வரை சினிமா ஒரு கானல் நீர்...

வினவு said...

சினிமா பற்றிய இந்த விழிப்புணர்வை நாம் தொடர்ந்து செய்யவேண்டும். புத்தகத்தை பொருத்தமாக அறிமுகம் செய்ததற்கு நன்றி.