Friday, 22 January 2010

உலக அரசியலும் ராஜ தந்திரங்களும்


















"மன்னா கோவில்கள் எதற்கு" என்றான் அமைச்சர்
"மக்கள் துன்பம் என்றால் என்னிடம் கேட்க கூடாது....அவர்களுக்கு வடிகால் வேண்டும் .....
நாம் எத்தனை கொடுமை செய்தாலும் கடவுள் இருக்கிறான் பார்த்துக்கொண்டிருப்பான் என்று நினைத்து கேள்வி கேட்க மாட்டான்" என்றார் அரசர் ......................


"கடவுள் நம்பிக்கை இல்லாதவனை என்ன செய்வீர்கள்" என்றான் அமைச்சர்
"மது கடைகள் இருக்கிறது அதை திறப்பேன் கடவுளிடம் போகதவன் மதுவிடம் போவான்........அவனுக்கு ஒரு
வடிகால் மது குடித்து விட்டால் கோவம் குறைந்து விடும் " என்றார் அரசர் .........................


"சரி மதுவும் குடிக்க வில்லை என்றால்" என்றான் அமைச்சர் .......
"அதற்கு தான் காதல் போன்ற உணர்வை கலை இலக்கியம் போல மக்களிடம் தூவி விடுவேன் ,
காதலிலே விழுபவன் சமூக பார்வை மங்கும் தனக்காக வாழுவான் கேள்வி கேட்க மாட்டான்
காதல் மிக பெரிய போதை.......காதலி சொல்லிவிட்டால் எதுவும் பேச மாட்டான் காதலன்"
என்றார் அரசர் ........................



"சரி காதலி காதலன் இருவருக்குமே சமூக அக்கறை இருந்தால் " என்றார் அமைச்சர்
" அதற்க்கு தான் கலை வைத்து ,அம்மா பாசம் ,குடும்ப பாசம் தூவி விடுவேன்......................மது கடவுள் காதல் குடும்பம் என்று கலை வைத்து தூவி விடுவேன் மனிதன் அற்பவாதத்தில் ஊறிக்கிடப்பான் போராட மாட்டன்"
"இந்த ரசனை எல்லாம் எப்படி பரப்ப முடிகிறது" என்றார் அமைச்சர் .
"ஊடகங்களை கையில் வைத்துக்கொள்ள வேண்டும் ...............நீ பரப்புவதை தான் இலக்கியம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்............எவன் அற்பமான சிந்தனையை வளர்க்கிரானோ அவனுக்கு விருது கொடுத்து
சிறப்பிக்க வேண்டும்......" என்றார் அரசர்....................
"அப்படி சிறப்பிபதால் என்ன..." என்றான் அமைச்சர்
" ஊடகங்கள் இது தான் கலை என்று சொல்லி விட்டால் மக்கள் நம்புவார்கள்,எவனும் சிந்திக்க மாட்டான் ,,,,,
யாருமே துணி உடுத்தவில்லை என்றால் எல்லாருமே அதை தான் செய்வான், சிந்திப்பவன் பைத்தியமாய் சித்தரிக்க படுவான்" என்றார் அரசர்...................................






















மேலும் " கல்வியை நமக்கு சாதகமாய் பயன்படுத்த வேண்டும் நாம் சொல்வதே வரலாறு, கல்வியை வைத்து அடிமை சமூகத்தை உருவாக்கலாமே???" என்றார் அரசர் .................
"இதுவல்லவோ ராஜ தந்திரம்" என்றான் அமைச்சன் .............................................

7 comments:

புலவன் புலிகேசி said...

ராஜ தந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறாய். க க க பொ...

நாடோடி said...

நடைமுறைகள் இப்படிதான் இருக்கின்றன....

க.பாலாசி said...

இன்றைய தமிழகம்...இதுதானே....தொடருங்கள் நண்பா...

சிறந்த இடுகை...

சாமக்கோடங்கி said...

ஏன்னா வில்லத்தனம்.. இப்பத்திய அரசனுகளுக்கு....
சூப்பரப்பு....

வேங்கை said...

Nice

chosenone said...

godness gracious!
belive it or not u've simply compressed a big practical area of current diplomacy.

ரோஸ்விக் said...

எனக்கு அரசன் யாருன்னு தெரிஞ்சுபோச்சு...

அந்த அரசனும் ஒரு வகையில காமடி பீசு தானோ??