Friday 8 January 2010
முதல்வன் படமும் திருட்டு சீடியும்
முதல்வன் படம் வந்திருந்த நேரம்,அது ஆட்சிக்கு எதிராக இருந்ததால்,அப்போதைய முதல்வரின் மகன் அஞ்சா நெஞ்சன் இப்பொழுதைய அமைச்சர் ஊர் மதுரை..........வீடு வீடாக படத்தின் CD இலவசமமாய் கொடுக்கப்பட்டது . இப்பொழுது ஏதொ திருட்டு CD சட்டம் போட்டாச்சாம்.குறைந்தது ஆறு மாதமாவது சிறையில் வைப்பார்களாம்,இந்த சட்டம் அஞ்சா நெஞ்சருக்கு ஒத்து வருமா என்ன?அப்பொழுது ரஜினி கமல் சரத் குரல் கொடுத்தார்களா? நீங்கள் அனைவரையும் ஆறு மாதம் உள்ளே போடுவது என்றால் மதுரை மொத்த நகரையே உள்ளே போட வேண்டுமே? அதை தயார் செய்தவர் அஞ்சா நெஞ்சன் தானே?அப்ப அவரை ஓ உங்கள் சட்டம் தயாரித்தவனை எதுவும் செய்யாதோ?
சரி சரத் சொல்கிறார் இது சினிமாவை நம்பி இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் என்று? இங்கே உதவி இயக்குனர்கள் மிகக்கேவலமாய் நடத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு உதயம் ஒழுங்காக கொடுக்கப்படுகிறதா என்ன? ஒரு நூறு ருபாய் கூட வாங்காமல் உழைப்பை மட்டும் உறிஞ்சும் தயாரிப்பாளர் எப்படி அனைத்து தொழிலாளர்காக பாடுபடுவார். எனக்கு தெரிந்த உதவி இயக்குனர் பெரிய படத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். பெரிய நட்சத்திரத்தின் படம்,போன வரம் ஊருக்கு போக என்னிடம் தான் 200 ருபாய் வாங்கிக்கொண்டு போனார்.பெரிய நடிகர் படம் அதற்கே இந்த நிலைமை சரத் அல்லது ரஜினிகாந்த் என்றாவது உங்கள் சினிமாவில் இருக்கும் தொழிலாளிக்காக நீங்கள் போராடியது உண்டா?
எனக்கு தெரிந்து உதவி இயக்குனர்கள்,உதவி ஒளிபதிவாளர்கள் வாடகை மற்றும் சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவது உண்மை அதற்கு ஒரு பெரிய நடிகரிடம் இருந்தும் குரல் இல்லை. நீங்கள் மட்டும் உதவி ஒளிபதிவாளர் உதவி இயக்குனர் உழைப்பை திருடலாமா என்ன?
சரி எனக்கு தெரிந்து நான் கேட்ட வரை சினிமா நட்சத்திரங்கள் பாதி சம்பளம் கருப்பாகவும் வாங்குகிறார்களாம் அது வரி ஏய்ப்பு இல்லையா என்ன?அது திருட்டு தானே.மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறதே. தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று கலைஞர் சொல்கிறார். 100 கோடியில் படம் எடுத்து தமிழில் மட்டும் பெயர் வைத்து வரி ஏய்ப்பு செய்கிறார்கள். ஏன் நூறு கோடி சம்பாதிப்பவன் வரி கட்டமுடியாதா என்ன? ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் தமிழில் தன் குழந்தைக்கு பெயர் வைத்தால் இலவச உணவு வாழ்நாள் முழுவதும் என்று சொல்ல முடியுமா என்ன?? சினிமா நடிகர்கள் அனைவரும் ஒழுங்காய் வரி செலுத்துகிறார்களா??
சரி படம் எல்லாமே ஒவ்வொரு காட்சியும் உலக சினிமாவில் இருந்து திருடப்படுகிறது. கமல்,மணி சார் போன்றவர்கள் அதை தலைமை ஏற்று நடத்துகிறார்கள் அது திருட்டு தானே.சரி அந்த படம் எப்படி வாங்க படுகிறது எல்லா படமும் பர்மா பஜாரிலே தான் வாங்குகிறார்கள், உலக சினிமா பார்க்கும் அனைத்து CD பர்மா பஜாரிலே வருகிறது? முதலில் அந்த CD வாங்குவது தவறு அதிலிருந்து காட்சிகளை உருவுவது மிகத்தவறு. இந்த சட்டம் பெரிய இயக்குனரை கைது செய்யுமா என்ன?
திருட்டு CD எங்கு இருந்து போக முடியும் ஒன்று LAB ,இல்லை திரையரங்கு அவர்களை கைது செய்யுங்கள் முதலில்.திரையரங்கில் மாதம் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் உள்ளவனே படம் பார்க்க முடிகிறது.முப்பது ரூபாயில் குடும்பமே பார்க்கலாம் பாமரன் அதை தான் செய்வான்.
சரி சரத் அவர்களே ப்ளாக்கில் டிக்கெட் விற்க படுகிறதே,அது தடுத்து நிறுத்துங்கள்.ப்ளாக்கில் வரும் பணம் திரையரங்கு விநியோகம் செய்பவர் மற்றும் தயாரிப்பாளருக்கு பங்கு போகிறதாமே. ஓ அந்த பங்கு உங்களுக்கு வருவதால் தான் அதற்கு கேள்வி கேட்கவில்லையோ?டிக்கெட் விலை மற்றும் ப்ளாக் டிக்கெட் குறைந்தாலே திருட்டு CD குறையும். வெறும் பணக்காரன் மட்டுமே படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் தமிழ் திரையுலகை யாரும் காப்பாற்ற முடியாது.
ஏன் முதல்வர் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறதே? நீங்கள் பெண் சிங்கம் வசனம் எழுதுவது,ஒரு விபச்சார வழக்கிற்காக நடிகர்களுடன் பேசுவது?இப்படி முதல்வர் பதவியை கொச்சை படுத்துகிறீர்கள். உங்களை பார்த்தால் எனக்கு புலிக்கேசி மன்னன் நியாபகம் வருகிறான்.சரி எல்லாம் போகட்டும் மதுரையில் முதல்வன் படம் CD விற்கப்பட்டது அது ஒரு வரலாற்று நிகழ்வு. அந்த சட்டம் அந்த அஞ்சா நெஞ்சங்களுக்கும் முதலாளிகளுக்கும் பொருந்துமா இல்லை என்னை போன்ற பிள்ளை பூச்சிகளுக்கு மட்டுமா?
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அவரவர்க்கு வாந்தியும், பேதியும் வந்தால்தான் தெரியும் என்பார்களே.. அது போலத்தான் இதுவும்..
இப்போது சங்கரே அந்த விஷயத்தைப் பற்றி பேச மாட்டார்.. பின்பு இவர்கள் எப்படி எடுப்பார்கள்?
இவர்கள் கேமிராவுக்கு முன்பு நடிப்பதை வெளியில் நடிப்பதுதான் அதிகம்..!
நியாயமான கேள்விக்கணைகள், நியாயமான கோபம் தம்பி...
பிரபாகர்.
****பொறி தட்டும் உண்மை *****
தமிழின் பெயரில் இந்த சரித்திர நாயகர்கள் நிகழ்த்திய `காலி`யன் வாலா பாக் நிகழ்வுகளின் திரித்து கட்டிய பதிவுகளுடைய திரைப்படங்கள் எடுக்க வைத்து அதற்க்கு 'புரட்சிப் படைப்பு விருதுகள்' வழங்கும் நாள் தூரத்தில் இல்லை
உபதேசம் எல்லாம் ஊருக்குதான்...
நீங்க வைத்திருக்கும் ஒவ்வொரு கேள்வியும் கேள்வியாக அல்லாமல்
மக்களின் விழிபுணர்வாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை.. மிக
மிக அருமை
Post a Comment