Wednesday 20 January 2010
நான் நான் மட்டுமே
மனிதன் என்றான் ....
ஈராக் ஈழம் பிரச்சனை பற்றி
கவலை இல்லையா என்றேன் ??
நான் இந்தியன் மட்டுமே என்றான்
சரி கோத்ரா ரயில் விபத்து பற்றி,
குஜராத் கலவரம்,
பொருளாதாரம் என்றேன் .....
கிரிக்கெட் பார்ப்பதில் மட்டுமே நாம் இந்தியன் என்றேன்
உடனே நான் தமிழன் என்றான் .
காவிரி பிரச்சனை,முல்லைப் பெரியார் பிரச்சனை தெரியுமா .....
என்றேன்
எனக்கு எதற்கு நான் மதுரைக்காரன் என்றான் .....!
சரி பாப்பட்டி கீரிப்பட்டி பிரச்சனை என்ன வென்றேன் ........
தெரியாது என் இடம் திருநகர் என்றான் ...............!
சரி அங்கே தண்ணீர் வரவில்லையாமே என்றேன் .............
எங்கள் வீட்டில் போர் போடப்பட்டுள்ளது என்றான் .........!
சரி உன் வீட்டில் உன் தம்பிக்கு வேலை கிடைக்கவில்லை என்றேன்
நான் நான் மட்டுமே என்றான்...................!
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வரிகள் அனைத்தும் கோபக் கனைகளாக உள்ளது தோழரே...
கசப்பான உண்மை....,
இன்னிக்கு நாங்க தான் கிடைச்சோமா?
நியாயமான கோபம்...
நல்லா இருக்கு கவிதை.. மூஞ்சில அறையிற மாதிரி
அனைத்து வரிகளும் நிதர்சனம்
இதற்குப்பெயர்தானே சுயநலம் நண்பா...
மேலும் இரண்டு வரிகள் சேர்த்துக் கொள்...
இதற்கு பெயர் தான் சுயநலமா என்றேன்....
இல்லை "self satisfaction" என்றான்.............
இது தான் எங்கும் நடந்து கொண்டிருக்கும் கசப்பான உண்மை....
/// கிரிக்கெட் பார்ப்பதில் மட்டுமே நாம் இந்தியன் என்றேன் ///
பலகோடி பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். வேதனையான விஷயத்தை வேடிக்கையாய் சொல்லிவிட்டீர்கள். அருமை நண்பா..!
நண்பா... இந்த கவலையான விஷயத்தையும், கவிதை மாதிரி சொல்ல முடியுமா?? அருமை.
ரெண்டு கன்னத்துலயும் சப்பு சப்புன்னு அறையிரமாதிரி இருக்குது.
Post a Comment