Wednesday, 6 January 2010
குரு உச்சத்தில் உள்ளார்
புத்தாண்டு அன்று ராசி பலன் படித்தேன்,ஒரே நகைச்சுவையாய் இருந்தது.முதல் ராசியில் இருந்து கடைசி ராசி வரை படித்தேன். மகிழ்ச்சியான நாள் வீட்டில் விருந்தினர் வருவார்கள் ,பணம் நன்றாய் புழங்கும்,பலகாரம் சாப்பிடுவீர்கள் போன்ற நாலு ஐந்து கருத்துகள் எல்லா ராசி பலனுக்கும் வந்து கொண்டே இருந்தது.
புத்தாண்டு என்றாலே வீட்டில் விருந்தினர் வரத்தான் செய்வார்கள்.மாதம் ஒன்னாம் தேதி சம்பளம் நிறைய பேருக்கு முதல் நாள் இரவே வந்திருக்கும் அதனால் பண புழக்கம்.
எதோ ஒரு ராசியில் கொடுத்த கடன் திரும்பி வரும் என்று இருந்தது...????பண புழக்கம் இருந்தால் கடன் திரும்பி வரத்தானே செய்யும்.புத்தாண்டு அன்று குடுபத்துடன் மகிழ்ச்சியாய் தான் இருப்போம்.நெடுநாள் சந்திக்காத நண்பரை சந்திப்போம்.இந்த கருத்துக்கள் எல்லாம் ராசி பலனிலே வந்து கொண்டே இருந்தன.....!நீங்கள் உங்கள் ராசியை மட்டும் படித்தால் பத்தாது எல்லா ராசியையும் படியுங்கள் அப்பொழுது உண்மை புரியும்.
குஷ்வந்த் சிங்க் பத்திரிகையில் வேலை பார்த்தபோது .தினசரி ராசி பலன் போடுபவர் ஒரு வாரம் விடுப்பில் இருந்திருக்கிறார் மாத கடைசி அந்த வாரம் ராசி பலன் அனைத்தையும் குஷ்வந்த் சிங்க் எழுதினார். வாசகர்கள் அனைவரும் இந்த வாரம் மட்டுமே சரியாக துல்லியமாய் இருந்தது என்று பாராட்டினர்.எப்படி சாத்தியம் என்று குஷ்வந்திடம் கேட்டபோது.......மாத கடைசியில் பணம் இருக்காது .... அதனால் கையிருப்பு கரையும்,கடன் பிரச்சனை என்ற ஒன்று இரண்டு விடயங்களை எல்லாருக்கும் எழுதி இருக்கிறார் அது பெரிய வெற்றி பெற்றது.மக்களின் மூடநம்பிக்கை சந்தைகளாக ஆக்கப்படுகின்றன.....
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஆமாம் கார்த்திக், ராசிபலன் என்ற பெயரில் அடிக்கும் கூத்து இருக்கிறதே! சொல்ல முடியவில்லை.
பிரபாகர்.
all are truth... awareness only can change people's mind...
இதை எல்லாம் நம்புவது இல்லைங்க.........
இதுவரை போனவருட ராசிபலனில் எத்தனை பலிதததுன்னு,
யாராவது பழைய புத்தகம் எடுத்து படித்து பார்த்ததுண்டா ?
போன வருட ஆரம்பத்தில் பிரபல ஜோதிடர்கள் சொன்ன பலன்களை
இப்போது படித்து பாருங்கள். காமெடியாக இருக்கும்.
இதுவரை போனவருட ராசிபலனில் எத்தனை பலிதததுன்னு,
யாராவது பழைய புத்தகம் எடுத்து படித்து பார்த்ததுண்டா ?
போன வருட ஆரம்பத்தில் பிரபல ஜோதிடர்கள் சொன்ன பலன்களை
இப்போது படித்து பாருங்கள். காமெடியாக இருக்கும்.
//மக்களின் மூடநம்பிக்கை சந்தைகளாக ஆக்கப்படுகின்றன..... //
உண்மைதான் நண்பா...
சரியாய் சொனீங்க.. எல்லா டிவி சேனல்ளையும் காலைல 8 to 10 . KPJ
அதிஷ்ட கற்கள் , என் ஜோதிடம் கை ஜோதிடம் அது இதுன்னு போட்டு
தள்ளுறாங்க ....
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்...
Ithu oru nalla vishayame, nambikkai thaan vaazhkai. ellarukkum nallabadiya eluthi iruntha magilchiya unarvangale..... ithai ellam nambama irupathu nallathu aana oorukku thaane ubathesam seivom naama ellam.
Post a Comment