
நேற்று இரவு ஆயிரத்தில் ஒருவன் படம் மறுபடியும் பார்த்துவிட்டு வந்தேன். திரை அரங்கிலே பல அரசியல் ஓடிக்கொண்டிருந்தது . முதல் பகுதி ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக திரையரங்கில் ஒலி ஒளி சரியாக இல்லை, ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதவாது முதல் பாதி கூட ரசிகன் நன்றாய் இருக்கு என்று வெளியே சொன்னால் படம் ஒரு அளவு ஓடிவிடும்,அதற்காய் இந்த அரசியல். இரண்டாவது பாதி ஒளி ஒலி சரியாக வந்தது.
படத்தில் என்ன கொடுமை என்றால் பார்த்திபன் சாவதை வெட்டி விட்டார்கள். அதாவது ஒரு தலைவன் மக்களை விட்டு ஓடுவது போல் இப்பொழுது படம் பார்ப்பவர்களுக்கு புரிவது போல படம் வெட்டப்பட்டு இருக்கிறது பார்பதற்க்கே வேதனையாய் இருந்தது. இந்தியா ஜனநாயக நாடாம்.........சொல்லிக்கிறாங்க பா ..........!
படம் முடிந்து வந்து கொண்டிருந்தோம்.ஒரு காவலாளி "ஏய் இங்க வா" என்றான் தெனவட்டாய்.........நாங்கள் படம் முடிந்து போகிறோம் என்றோம் . "சரி சரி போ போ" என்றான். பக்கத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கேட்கவில்லை. ஏன் கொலை செய்பவன்,திருடன் நடந்து தான் போக வேண்டுமா என்ன?????
அன்று ஒரு நாள் 3 IDIOTS படத்திற்கு காரில் சென்றோம் எங்களை ஒருவன் கேட்கவில்லை ஜனநாயகம் புரிகிறதா....திருடர்களே ஒரு கார் மட்டும் வாங்கி விட்டு என்ன வேணுமென்றாலும் திருடுங்கள்.
5 comments:
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றை வெட்டி இருக்கிறார்கள்...
அநேகமாக இந்த வெட்டெல்லாம் ஆபரேட்டர்களே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
கார், நடை வித்தியாசத்தை நானும் அனுபவித்து இருக்கிறேன்..
Kadaisi sambhavam vethanaikuriyathu thaan....
ஆப்பரேட்டர்கள் எடிட்டிங் கத்துகிட்டு இருக்காங்க போல...
நம்ம ஊரு காவல்துறையில சில நாயிங்க... இப்படித்தான் எல்லாரையும் மரியாதை இல்லாம கூபுடுவாணுக. திருடன் காலையும், அரசியல்வாதி காலையும் நக்கிப் பிழைப்பாணுக. த்தூ...
சின்ன பசங்க அப்புடித்தான் இருப்பானுங்க, நீங்க ஒரு டி வாங்கி கொடுத்தா போதும் மந்திரிய விட அதிக மரியாத கிடைக்கும்.. அவர்களெல்லாம் அதிகாரத்துடன் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர்கள்.. கவன்டமணி ஒரு படத்தில் கூட சொல்வாரே "அந்த முக்குல உக்காந்து பிச்சைஎடுக்க போவுது அதுக்கு லவுச பாரு, சவுண்ட் என்னமா குடுக்கு பாரு" னு அது இவர்களுக்க்காகத்ன்..
Post a Comment