Friday 29 January 2010
மாஸ் ஹீரோ சிவா முதல்வர் கார்த்திக்
சத்தியமா இது வித்யாசமான பதிவு அல்ல
தமிழ் சினிமா என்ற படம் சினிமாவை பகடி செய்கிறது ஆம் நல்ல வரவேற்க வேண்டிய படம் தான். ஆனால் அதன் தயாரிப்பாளர் நினைத்தால் தான் படத்தில் உள் குத்து இருக்குமோ என்று தோன்றுகிறது. இன்று அஞ்சா நெஞ்சனின் பிறந்த நாள் மதுரையில் அஞ்சா நெஞ்சர் என்றால் யாரென்று தெரியும் . எனக்கு தெரிந்து மதுரை மக்கள் இரண்டு ருபாய் பஸ்சில் போய் பழக்க பட்டவர்கள் ஒரு ஐம்பது பைசா என்றாலே யோசிப்பார்கள், அவர்களிடம் குறைந்தது நீங்கள் பத்து ரூபாய் இருந்தால் தான் போக வேண்டுமென்று சொல்லாமல் எல்லா பேருந்தையும் சொகுசு பேருந்து ஆக்கியது முதல் சாதனை.
முன்னூறு குளிர் சாதன பேருந்துகள் வேறாம் அதில் குறைந்த கட்டணமே பதினைந்து ரூபாயாம். சரி மன்னர் அஞ்சா நெஞ்சர் என்ன செய்கிறார் மதுரையில் பாதி நேரம் மின்சாரம் கிடையாதாம் ஆனால் இவர் பிறந்தா நாளுக்கு மட்டும் ஊரெல்லாம் விளக்குகள். மதுரைக்குள் மன்னர் ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது . அவர் மகன் விளையாட வேண்டும் என்றால் மின்னொளியில் தான் விளையாடுவாராம், என்ன கொடுமை இது.
சரி தமிழ் படத்திற்கு வருவோம் சிவா எப்படி மாஸ் ஹீரோவாக பகடி செய்திருக்கிறாரோ அதை போல நானும் ஒரு அரசியல்வாதி ஆனால். முதலில் ரயில் ஏற வேண்டும் பின்பு தமிழ் நன்றாய் கற்க வேண்டும் . புரட்சிகர வசனம் எழுத வேண்டும் புரட்சி வசனத்தில் மட்டுமே. தமிழக முதல்வர் ஆகா வேண்டும். ஏன் சிவா மட்டும் தான் மாஸ் ஹீரோவா நானும் அரசியல்வாதி தாங்க ..........நானும் கூடிய சிக்கிரம் முதல்வர் ஆவேன் சிவா மாஸ் ஹீரோ ஆனது போல .முதல்வர் ஆகி என் மகன்களுக்கு தமிழகத்தை விற்க வேண்டும். அப்புறம் என் பேரன் எடுப்பான் தமிழ் படத்தை மட்டும் பகடி செய்து ஒரு தமிழ் படம் ???
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//மதுரைக்குள் மன்னர் ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது . அவர் மகன் விளையாட வேண்டும் என்றால் மின்னொளியில் தான் விளையாடுவாராம், என்ன கொடுமை இது.//
இந்த கொடுமையெல்லாம் காலங்காலமா நடந்துகிட்டுதான் இருக்கு நண்பா... கேட்கத்தான் எந்த நாதியுமில்ல...
வித்யாசமான பதிவோ இல்லையோ...துணிச்சலானது.
Really appreciate your efforts in reflecting the reflections happening in Madurai. But who is going to tie the bell in cat's neck ???
Post a Comment