வீரத்திருமகன் படத்தை
போட்டு பதிவு செய்தேன் ..............
அந்த படம் யாரு உன் நண்பனா என்று
அலுவல் நண்பன் கேட்டான்................
இவர பார்த்த மாதிரி இல்லையே
என்று என் தம்பி சொன்னான்.............
"ஒபாமா tax தெரிந்து இருக்கிறது"
"சத்யமில் என்ன படம் ஓடுகிறது என்று தெரிந்து இருக்கிறது"
"உள்ளூரு ரஞ்சி ஸ்கோர் தெரிந்திருக்கிறது"
கருகி போன வீரனின் பெயர் தெரியவில்லை.
அந்த வீரத்திருமகன் பெயர் முத்துக்குமரன் ............
முத்துக்குமரனே நீ தெரிந்து கொள்ள ஷ்ராயவின் தொப்புளா
இல்லை அறுபது வயது கிழவன் ரஜினியுடன் ஆட்டம் போடும் அமிதாப்
மருமகளா ...
இல்லை நாட்டை காப்பாற்றும் தோனியா
முத்துக்குமரனே இங்கு உள்ள தமிழன் உன்னை மறக்கப்போவதில்லை
ஏன் என்றால் இவனுக்கு உன்னை தெரியவே தெரியாது ...!
5 comments:
//முத்துக்குமரனே இங்கு உள்ள தமிழன் உன்னை மறக்கப்போவதில்லை
ஏன் என்றால் இவனக்கு உன்னை தெரியவே தெரியாது ...! //
நச் வரிகள்...
முத்துக்குமரன் போல் கடந்த வருடம் நடந்த 26/11ல் உயிர் நீத்த பல அசகாய சூரர்களைப்போல், கார்கிலில் நமக்காக போர் தெரியாத பலர் தம் தம் குடும்பத்தாரை நிர்கதியாய் விட்டு நமக்காக் உயிர் நீத்த இன்னும் பல பேரை இவ்வுலகம் நினைவில் கொள்ளத்தான் இல்லை
நன்றி நண்பா
ஜேகே
//முத்துக்குமரனே இங்கு உள்ள தமிழன் உன்னை மறக்கப்போவதில்லை
ஏன் என்றால் இவனுக்கு உன்னை தெரியவே தெரியாது ...! //
மறுப்பதற்கில்லை...
//முத்துக்குமரனே இங்கு உள்ள தமிழன் உன்னை மறக்கப்போவதில்லை
ஏன் என்றால் இவனுக்கு உன்னை தெரியவே தெரியாது ...!///
தெரிந்திருக்க வேண்டிய அவசியம்? எனக்கு ஒன்றும் புரியவில்லை :(
தன் குடும்பம், தன்னை நம்பிய பெற்றோரை தவிக்க விட்டு போன ஒருவரை ஏன் நான் நியாபகத்தில் வைத்திருக்க வேண்டும்? இப்படி கவிதை எழுதி அனுதாப படவா?
ரௌத்திரம்.
Post a Comment