Tuesday, 16 February 2010

பசி - உலகின் பொது மொழி

பசி மனிதனின் ஆதார உணர்ச்சி.உணவை நோக்கியே மனிதனின் வளர்ச்சி இருந்தது. காட்டுக்குள் இருந்த பொழுது மிருகத்தை அடித்து சாப்பிட்டவன் , பின்பு தனது முதல் கண்டுபிடிப்பான நெருப்பு மூலம் உணவை செம்மை படுத்தினான். உழவு என்ற கண்டுபிடிப்பு கூட உணவு நோக்கியே.

ஆனால் இந்த உணவு எல்லாருக்கும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறி???? ஏன் உணவு அனைவருக்கும் கிடைக்க படுவதில்லை.ஒரு சிலருக்கு உணவுகள் கிடைக்க ஒரு சிலருக்கு உணவுகள் கிடைப்பதில்லை. குறிப்பாக ஐந்து நட்சத்திர ஹோடேலில் வேஸ்ட் செய்யப்படும்
உணவுகளில் தெரிவது பணத்திமிர். உலகிலேயே அருவருப்பான செயல் என்றால் உணவை பாதியிலேயே தூக்கி எறிவது என்பேன். உலகில் பாதிக்கு பாதி மக்கள் உணவு பஞ்சத்தில் இருக்கும் பொழுது பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்க்காக உணவுகளை தூக்கி போடலாமா???

ஐந்து நட்சத்திர ஹோடேலில் ஒரு உணவின் விலை பல ஆயிரங்களை தொடும். பப்பே சிஸ்டம் என்று கொழுத்து போய் உணவிலே விதவிதமாய் சாப்பிடுகின்றனர். பாதி உணவுகள் குப்பையில் போகின்றன. அதுவும் பார்ட்டி என்றால் நிறைய உணவுகள் மிச்சம் இருக்கும் அனைத்தும் குப்பை தொட்டிக்கே . ஒரு ஆய்வு சொல்கிறது உலகில் இரண்டு அல்லது மூன்று சதவிகித குடி தண்ணீர் அமெரிக்காவில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோடேல்களுக்கு பயன்படுத்த படுகிறதாம்.

தண்ணீருக்கு இப்படி என்றால் உணவிற்கு என்ன சொல்ல??? உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்றாலே தரமான உணவு தான் இருக்கும். மனிதம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. காசு இருப்பவன் சாப்பாடு வாங்கி கூட கொட்டலாம்
ஆனால் உணவில்லாதவனுக்கு தரக்கூடாது இது என்ன வன்முறை . இந்த பார்ட்டி கேளிக்கைகள் என்றாலே எனக்கு வாந்தி தான் வருகிறது . அடுத்தவனுக்கு உணவு இல்லாத பொழுது எப்படி குப்பையில் போடுகின்றனர் இந்த உணவுகளை .உணவுகளை குப்பையில் போடுபவன் குப்பை .ஐந்து நட்சத்திர ஹோடேலிலே சாப்பிடலாம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசலாம் ஆனால் குப்பை குப்பையே.

ஐந்து நட்சத்திர பாரிலே தண்ணி அடித்து இலக்கியம் பேசாதீர்கள் முடித்தால் எவனோ ஒருவனுக்கு ஒரு இருபது ரூபாயில் நான்கு இட்லி வாங்கி கொடுங்கள் . உணவுகளை வீணாக்காதீர்கள் அந்த உணவு ஒருவனுக்கு இருக்கட்டும் பகிர்ந்து உண்ணுங்கள். உணவு வியாபார பொருள் அல்ல ஐந்து நட்சத்திர ஹோடேல்களை தவிருங்கள் . என்னை உலுக்கிய மினஞ்சலில் இருந்த படங்கள். நான் சரியாக எழுதினேனா என்று எனக்கு தெரியாது , ஆனால் கலங்கித்தான் போனேன் .


என்ன பணத்திமிர்


ஐநூறு பேர் சாப்பிடலாம் வெறும் பத்து பேருக்கு உணவுகீழே கொட்டப்பட்ட உணவு


பால் வற்றி போன தாய்
அவள் பார்த்த பின்பு
என் கண்ணீர் வற்றவில்லை

மனித சடலங்கள் ஒரு
பக்கம் குப்பையாய் உணவில்லாமல்
இன்னொரு பக்கம் உணவு
குப்பையாய் .....
குப்பையாய் போய்விட்டான் மனிதன்

ஏய் குழந்தையே
உன் உணவை காசு கொடுத்து
வாங்கி கீழே கொட்டிவிட்டார்கள்
நாக்கை நீட்டாதே

இங்கு மானிட
கரி சாப்பிட கிடைக்கும்
மண்ணோடு மண்ணை மக்கி போய்விட்டேன்
என்னை தோண்டி எடுக்க வேண்டாம்
மானிடனை பார்த்தாலே அருவருப்பாய்
இருக்கிறது ....!

பசி அனைவருக்கும்
தெரிந்த மொழி .............................
பசி என்று ஒருவன் பேசினால்
உணவால் உணர்வால் பதில் அளிப்போம்

7 comments:

க.பாலாசி said...

என் உணவருந்தலில் கீழ்சிந்தும் சோற்றுப் பருக்கைக்காகவும் வருந்துகிறேன்...இத்தகைய நிலைகளையெண்ணி....

நல்ல இடுகை...

rasa said...

ப‌டத்தில் உள்ளது பெரும்பாலும் அரேபிய ஷேக்குகளாகவே உள்ளனர். ஷேக்குகள் அப்படி உல்லாசமாக இருப்பது உண்மைதான். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். ஆனால் உலகில் பெரும்பான்மை கன்ஸ்யூமரிசம் என்ற நாகரீகத்தை நடுத்தரவர்க்கம் வரை கொண்டு வந்த அமெரிக்க நாட்டினர், ஐரோப்பிய மேட்டுக்குடி, சென்னை வாழ் ஐடி துறை டிஸ்கோத்தே செட்டுகள் பற்றி படம் இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

அதேநேரத்தில் பசி என்பது ஒரு நோயின் அறிகுறிதான். நோயின் வேர் அதாவது காரணம் எங்குள்ளது எனக் கண்டறிவதுதான் சரியானது. அதனைக் காணாமல் ஆப்பிரிக்க மக்களின் புகைப்படத்தை வெளியிடுவது சரியானது அல்ல எனக்கருதுகிறேன். அம்மக்களின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து அம்மக்களை வறுமையிலும் போரிலும் ஆழ்த்தி வரும் ஐரோப்பிய, அமெரிக்க எஜமானர்கள் பற்றி எழுதுவதுதான் சரியானது. பொதுவில் பசி என எழுதினால் அது அரசியலற்ற புரிதலுக்குத்தான் கொண்டு செல்லும்.

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் நண்பரே சரி தான் ஆனால் நான் அரசியல் பற்றி ஆராய வில்லை நண்பரே ..........
எனக்கொரு மின்னஞ்சல் வந்தது அதில் வெளியிட பட்ட படங்கள் என்னை உலுக்கியது
அதை அப்படியே போட்டேன் . அரசியல் தவறு இருந்தால் மன்னிக்கவும் . நான் சொல்ல வந்தது ஐந்து நட்சத்திர ஹோடேலில் வீணாக்கப்படும் உணவுகள் , அந்த மின் அஞ்சலில் இருந்த படங்களை போட்டேன். நீங்கள் சொல்வது போல் வேர் அமெரிக்க மற்று ஐரோப்பா
மற்றும் இந்திய தகவல் தொழில் நுட்ப துறை போன்ற இடங்களிலே இருக்கிறது ......................
உலக அரசியல் கேள்வி ஞானம் மட்டுமே உள்ளது ..........ஆனால் பாமர வாசகனுக்கு அரசியலை தாண்டி இந்த விடயம் கட்டாயம் புரியும் ...............

அதிகமாய் விடயத்துக்குள் நுழையும் போது பாமர வாசகன் படிப்பான என்பது சந்தேகமே ....
வினவு போன்ற தளங்களில் கூட சினிமா பற்றி எழுதும்போது மட்டுமே பின்னூட்டம் வருகிறது.

Sangkavi said...

படங்கள் அனைத்தும் பேச இயலாமல் செய்து விட்டது...

rasa said...

பின்னூட்டங்களுக்காக பதிவு எழுதுவது என்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை என முன்னர் படித்த்தாக ஞாபகம். மற்றபடி பாமர மனிதன் படிப்பதற்கு உதவ வேண்டும் எனத் தாங்கள் கருதுவது சரிதான். அதே நேரத்தில் பாமரனோ அல்லது தன்னை படித்தவன் என்று கருதிக் கொண்டிருப்பவனோ அவனுக்கு தேவை அறிவின் நீட்சி அல்ல, உண்மையின் தெளிவுதான் அவசியமாகிறது.

அதாவது காய்ச்சல் அடிக்கிறது என்பது ஒரு நோய் என்றுதான் பலரும் கருதுகிறோம். ஆனால் காய்ச்சலுக்கு காரணமான கிருமி எது எனக் கண்டுபிடித்துதான் மருத்துவர் மாத்திரை தருகிறார். சமூக மருத்துவமான அரசியலை சரியான முறையில் பிரயோகிக்க விரும்பும் அனைவரும் பிரச்சினைகளை மாத்திரம் கண்முன் சித்திரம் விரிப்பதில் எந்த பயனும் இல்லை. நோய் நாடி நோய் முதல் நாடி தானே நோயை தீர்க்க முடியும். உதாரணமாக பல ஆப்பிரிக்க நாடுகளில் பெட்ரோல் க்காக யுத்தங்களை நடத்தும் யுத்த பிரபுக்கள் அவர்களை பின்னின்று இயக்கும ஏகாதிபத்திய நாடுகள் (நைஜர், எத்தியோப்பியா போன்ற நாடுகள் எல்லாம் இயற்கைவளம் நிரம்பிய நாடுகள்தான் என்பது நம்மில் பலருஉம் அறியாத ஒன்று) என விளக்கினால்தான் உண்மையை மறைக்கும் பொய் என்ற திரையை விலக்கி பார்க்க உதவும். அதுதானே நியாயமானது. பாமரனின் அறியாத்தன்மையை மாற்றி அறியும்தன்மையாக மாற்றுவதுதானே நியாயவான்கள் செய்யக்கூடியது.

வெற்றி said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை..இந்த படங்கள் முன்பே கல்லூரியில் மல்டிமீடியா ப்ரசன்டேஷனுக்கு பயன்படுத்தியிருக்கிறேன்..ஆனால் இம்முறை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது..காரணம் உங்கள் கவிதைகளின் தாக்கம்..அருமை..

suvaiinbam said...

rasa சொல்லுவது முற்றிலும் உண்மை என்றே படுகிறது "நோயின் வேர் அதாவது காரணம் எங்குள்ளது எனக் கண்டறிவதுதான் சரியானது""நோய் நாடி நோய் முதல் நாடி தானே நோயை தீர்க்க முடியும்"நைஜர், எத்தியோப்பியா போன்ற நாடுகள் வரிசையில் இப்போது ஆப்கானிஸ்தானும் சேரப்போகிறது என்று நினைக்கிறன் "பெரும்புதையல்" ஒன்று அங்கு கிடைத்திருகிறது