Wednesday 10 February 2010

பெண் என்ன நுகர்பொருளா??
























இக்கட்டுரை இரும்பு நங்கை ஐரோம் ஷர்மிளா. என் அன்னை . என் உயிர் தங்கை . என் அக்காக்கள் என் தங்கைகள் என் தோழிகள் என் பாட்டிகள் குப்பம்மாள் மற்றும் ஜெயா அனைவருக்கும் சமர்ப்பணம்
நானும் என் அன்னை என்று தான் ஒய்வு எடுப்பாள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இருபத்தி ஐந்து வயதிலிருந்து அவள் வீட்டில் இருந்து
வந்தவள். பெண் என்ற ஒரே குற்றம் தான், பெண்ணாய் பிறந்து விட்டால் கட்டாயம் புருஷன் வீட்டில் தான் இருக்க வேண்டுமாம். என் அன்னை குடும்பம் தன் கணவர் குடும்பம் என்று தன் ஆசைகளை துறந்தவள் . நான் அடிக்கடி நினைப்பேன்
நாமெல்லாம் நன்றாய் எழுத வேண்டும் என்று நினைக்கிறோம் அம்மாவுக்கு என்று ஆசைகள் இருக்காதா என்று ??? பிறந்தவுடன் தந்தை, அப்புறம் என் தந்தை, அப்புறம் நான் . இப்பொழுது எங்கள் பாட்டியை என் அன்னை தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
என் பாட்டிக்கு நடக்க முடியாது, குழந்தையை போல பார்த்துக்கொண்டிருக்கிறாள். என்ன சொல்ல?? அவ்வளவு அற்பணிப்பு? என் அக்கா என் அம்மா ரோட்டில் போகும் எத்தனனயோ பெண்களை பார்த்திருக்கிறேன் என்ன கொடுமை.ஐம்பது சதவிகிதம் முன்னேறி விட்டனர் என்று பேச்சு வேறு என்ன கொடுமை ??? வேலை பார்க்கிறார்கள் அது மட்டுமே முன்னேற்றமா என்ன??

சரி சமீபத்தில் என் தம்பி படிக்கும் கல்லூரியில் campus interview வந்தது அந்த கல்லூரியில் சுமாராய் படிக்கும் பெண்கள் அழகாய் இருக்கும் பெண்களுக்கு வேலை கொடுக்கபட்டது. பெண் என்பவள் ஒரு அழகு பொருள் மட்டுமா இல்லை பெண் என்பவள் நுகர் பொருளா என்ன??? எந்த நோக்கில் வேலை கொடுக்க பட்டது . இது தான் முன்னேற்றமா என்ன??
பெண் என்பவள் ஒரு நுகர்வு பொருளாகவே பார்க்க படுகிறாள். இந்தியாவில் மட்டுமா?? உலக அளவிலும் இது தான் நிலைமை??

உலக அழகி போட்டிகள் ஏன் விமர்சையாக இருக்கின்றன . ஏன் ஆண் அழகன் போட்டி அந்த அளவு கண்டுகொள்ள படவில்லை??பெண் என்றால் நுகர் பொருள். அவள் நீச்சல் உடையில் வந்தால் உலகமே ரசிக்கிறது.மிஸ் மதுரை மிஸ் தேனீ முதல் மிஸ் வேர்ல்ட்
மிஸ் இந்தியா வரை அழகி போட்டிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதில் விஜய் மல்லையா வருடத்திற்கு ஒரு முறை ஒரு காலேண்டர் அடிப்பாராம் சில பேருக்கு மட்டுமே அந்த காலண்டராம் அதில் முழுவதுமாய் கவர்ச்சி படங்கள் அத்தனையும் பெண்கள்.

இந்த IPL குப்பையிலே ரசிகர்களை குஷிப்படுத்த பெண்கள் அரை நிர்வாணமாய் ஆடவிட படுகின்றனர் . இதை பார்த்த ஒரு பெருசு இந்தியா முன்னேறி விட்டது என்கிறார். பெண்கள் என்ன பீர் பாட்டில் போல நுகர்வு பொருளா??? இது எப்படி சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள??? சுதந்திரம் என்ற பெயரிலே பெண்கள் நுகர் பொருள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

குமுதம் புத்தகத்தில் நடு பக்கத்தில் எப்பொழுதுமே ஒரு கவர்ச்சி படம் இருக்கும்.அனைத்து பத்திரிகைகளிலும் இதே நிலைமை தான்."தீராத விளையாட்டு பிள்ளை" என்று படம் பெயர் வைக்கலாம் " தீராத விளையாட்டு பெண்" என்று பெயர் வைத்தால் வேற படம் என்று நினைத்துக்கொள்வார்கள் என்ன ஆண் ஆதிக்கமான மன நிலை???? ஒரு பத்திரிகைகள் கூட
பெண் கவர்ச்சி படம் இல்லாமல் வருவதில்லை.

நாமெல்லாம் தவறுகள் செய்வதில் அளவுகள் வைத்துக்கொண்டிருக்கிறோம் தேவநாதன் பல பெண்களுடன் உறவு கொள்வது தவறு ஆனால் அதை செல் போன் மற்றும் கணினியில் பார்ப்பது தவறு இல்லை.இரண்டு செயலிலும் வக்கிரம் ஒன்றே??? பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை ஏற இறங்க பார்த்தால் தவறு இல்லை , ஆனால் இடித்தால் தப்பு. SJ சூரிய ஒரு படத்தில் சொல்வார் "அடுத்தவன் பொருள் இல்லையா கை வைக்க கூடாது...." பெண் என்ன பொருளா அவளுக்கென்று சுயமரியாதை இல்லையா என்ன???

சன் தொலைக்காட்சியை பார்த்தோமானால் பெண்கள் வாசகம் அணிந்த சட்டையை போட்டுக்கொண்டு வருவார்கள் .அப்படி வந்தால் தான் பாடல் இல்லை என்றாலும் அந்த நிகழ்ச்சி பார்க்கப்படும். இது அத்தனை தொலைக்காட்சிக்கும் பொருந்தும். அவள் என்ன பொருளா????? ஏன் அப்படி வருகிறாள் என்று கேட்கலாம்???? ஆனால் அது நுகர்பொருளாய் பார்க்க பட்டு பழக்கி வைத்து இருக்கிறோம்...வேசி மகனே என்று தான் ஒருவன் திட்ட படுவான் வேசன் மகன் என்ற கெட்ட வார்த்தையாவது இருக்கிறதா.

சின்ன வயதில் இருந்து நான் பெண்களுடன் அதிகம் பழகி உள்ளேன் என் அம்மா என் அக்காக்கள் என் தங்கைகள் என் தோழிகள், காதல் சொல்லாமல் விட்ட தோழிகள், காதலித்த காதலி எல்லாரையும் விட என் உயிர் தங்கை இவர்களிடம் பழகும் போது ஒவோவோருவரும் தனி இயல்பு தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஆனால் வாழ்கை ஏனோ அவர்களை சுருட்டி போட்டுக்கொண்டு விட்டது.


















"பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்"

இந்த குரலில் வள்ளுவர் சொல்லும் பொருளின் பெயர் பெண்மை . வள்ளுவர் காலம் முதல் பெண்கள் ஏன் பொருளாய் பார்க்கப்பட வேண்டும்.
அந்த பொருளுக்கு உயிர் இல்லையா என்ன????


பெண் விடுதலை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். எங்கள் ஊரில் கிராமத்தில் எத்தனையோ உழைக்கும் கிழவிகளை பார்த்திருக்கிறேன் கையில் கூடை வைத்துக்கொண்டு காலையிலேயே வியாபாரத்திற்கு செல்வார்கள் நல்ல புத்தி கூர்மை இருக்கும் இருந்தாலும் வாழ்க்கையை துலைத்து இருப்பார்கள் அவர்கள் கண் ஓரம் பார்த்தால் ஒரு
மெல்லிய சோகம் இருக்கும் . நாம் கவர்ச்சி பொருளாய் பார்க்கும் யாரோ கூட நம் அன்னையை போன்ற பெண் தானே????

5 comments:

ரோஸ்விக் said...

உமது இந்த பதிவை ஆதரித்து போற்ற இதுவரை நான் தகுதியற்றவன். எவரேனும் மாறட்டும்... நான் உட்பட. வாக்குகள் மட்டும் மானசீகமாய்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோதரா... மிக நியாயமான பதிவு. சரியான ஆதங்கம். ஆனால், என்ன... ஒரு 50 வருடத்திற்கு முன்னால் வந்து இருக்க வேண்டிய சிறந்த நேர்மையான பதிவு. ஏனென்றால், ஒரு 'தண்ணீர்தொட்டியில்' (கவனிக்கவும்) பெரும் அளவு தண்ணீரில் சிறிதளவு கழிவுஎண்ணெய் ஒட்டாமல் மிதக்கும்போது மேலாக 'ஸ்கிம்' பண்ணி எடுத்துவிடுவோம். (அது அந்தக்காலம்). ஆனால், அதுவே மிக அதிகாமாக தண்ணீரின் அளவைவிடவும் மிகைத்து விட்டால்... தொட்டியின் கீழே ஓர் சிறிய 'ட்ரைனை' திறந்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டு பாதுகாத்துவிட்டு ''கழிவுஎண்ணெய்தொட்டி'(?)(கவனித்தீர்களா?) எக்கேடும் கெட்டுப்போகட்டும்' என்று விட்டுவிட்டு ஒதுங்கி விடுவோம். (இது இந்தக்காலம்). அதுபோல, தற்போதைய பெண்கள் நிலை, அந்தக்கால பெண்கள் நிலை போல கிடையாது, சகோதரா....!

"ஆபாசத்துக்கும் கவர்ச்சிக்கும் எல்லை எனக்குத்தெரியும்" என சொல்லும் கதாநாயகி(எவ்வளவு ஆபாசமாய் நடித்தாலும் அதை கவர்ச்சி என்றே சொல்லுவாரல்லவா?)யைப்போன்றே, 'பெண்சுதந்திரத்துக்கும்' , 'பெண்சுரண்டல்'தனத்துக்கும் உள்ள எல்லை இன்றைய அனைத்து நவீன பெண்களுக்கும் நன்றாகவே தெரியும்.(?!?!)

முதலில் விபசாரிகளே நாட்டில் இல்லை எனும் நிலையை அந்த பெண்களே ஏற்படுத்தட்டும். பிறகு, ஆபாச நடிகைகள் அதாவது கவர்ச்சி நடிகைகளே இல்லை எனும் நிலையை அந்த பெண்களே ஏற்படுத்தட்டும். சாதாரண குடும்பப்பெண்களின் உடை ஆண்களைத்தூண்டும் வகையில் அமையாத நிலையை அந்த பெண்களே ஏற்படுத்தட்டும். பள்ளியில் சீருடையாக, ஆணுக்கு பேண்டும், பெண்ணுக்கு மினி ஸ்கர்ட்டும், டென்னிசில் ஆண்களுக்கு முழங்ககால் நீள கால்சட்டையும், பெண்களுக்கு ஜட்டி தெரியும் டைனி ஸ்கர்ட்டும், பெண்களுக்காகவே பீச் வாலிபாலும், மேலும் இதுபோல... விமானப்பணிப்பெண்கள், ஸ்டெனோ, நர்ஸ், ரிஷப்ஷனிஸ்ட், IPLசியர் கேர்ல்ஸ், ஸ்டார் ஹோட்டல் காபரே டான்சர்ஸ், நடுப்பக்க கவர்ச்சிப்படம், 'மல்லையா' காலண்டர் என எந்த ரூபத்திலும் தங்கள் பெண்மை சுரண்டப்படுவதை அனுமதிக்காது முதலில் அந்த பெண்களே அவற்றை பகிஷ்கரிக்கட்டும். இந்தநிலை ஏற்பட்டபின்னால், 'பெண்சுதந்திரம்' என்பதற்கும் 'பெண்மைசுரண்டல்' என்பதற்கும் உள்ள பெருத்த வித்தியாசத்தை பெண்கள் புரிந்து கொண்ட பிறகு, (அல்லது நாம் தெளிவாய் விளங்கிய பின்னர்) அவர்களுக்கு நாம் இதுபோல எந்த பதிவும் எழுதி விளக்கத்தேவையே இல்லை.

எனவே, இப்போது, நான் மேலே சொன்ன அனைத்தும் 'பெண்சுதந்திரம்' என்று போற்றப்படுகிறது...! அதை நாம் எதிர்க்கவே முடியாது...??? எதிர்த்தால் நாம் 'ஆணாதிக்கவாதிகள் '??? அப்படி ஒரு மூளைச்சலவை நம் நவீன பெண்களிடம் முதலாளித்துவத்தால் படு ஸ்டிராங்காய் செய்யப்பட்டுவிட்டது...!!! இவற்றை முதலில் எதிர்த்து தோலுரிப்போம். பெண்சுதந்திரம் என்றபெயரில் தஸ்லீமா நஸ் ரீன் கேட்ட 'கருப்பை சுதந்திரத்திற்கு'(!) ஆதரவு கொடுத்த ''பெண்மைசுரண்டல்வாதிகள்'' நிறைந்த இந்த இந்திய திருநாட்டில், நாம் அவற்றையெல்லாம் 'பெண்சுதந்திரம்' அல்ல 'பெண்மைசுரண்டல்' என்றால் நம்மை 'ஆணாதிக்கவாதி' என்றுதான் எல்லாரும் சேர்ந்து முத்திரை குத்துவார்கள். எனவே, தாங்கள் 'கோமாவிலிருந்து' விழித்து எழுந்து இன்றைய உலகுக்கு வாருங்கள் சகோதரா....

ஸ்ரீராம். said...

மிகவும் உணர்ச்சி வசப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் இதற்கெல்லாம் ஆண் மட்டும்தான் காரணமா? பெண்களின் பெருமை என்பது மறுக்கக் கூடியதல்ல..

வால்பையன் said...

வள்ளுவர் ஒரு ஆணாதிக்கவாதி, நிலபுரபுத்துவ சொம்புதூக்கின்னு சொன்னா எல்லா என்னௌ குடிகாரன்னு திட்டுறாங்க!

பத்தினி சொன்னா மழை பெய்யுமாம்!
ஏன், பத்தனன் சொன்னா மழை பெய்யும் என்று எழுத வேண்டியது தானே!

சுடுதண்ணி said...

மனதை உறுத்த வைக்கும் பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி :)..