Tuesday 23 February 2010

7G ரெயின்போ காலனி
















அனிதாவின் காதலுக்கு எதிர்ப்பு சொல்லி ஆறு மாதம் ஆகிறது. முதல் மூன்று நாள் சாப்பிடாமல் அடம் பிடித்தாள்.அப்புறம் பரவாயில்லை. இப்பொழுதெல்லாம் வீட்டில் கலகலப்பாய் இருக்கிறாள். ஆனால் மறுபடியும் அவள் செல் போன் நோண்டிக்கொண்டே இருப்பது அவள் அப்பனுக்கு சுத்தமாய் பிடிக்கத்தான் இல்லை. போர்வை மூடிக்கொண்டு இருப்பாள் நம்பர் அமுக்கும் சத்தம் மட்டும் அவருக்கு கேட்கும். குறுந்தகவல்கள் இரண்டு மணி வரை செல்லும். பெண் பெற்றவர் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பார்.

ஆம் ஆறு மாதம் முன்பு வரை கதிர் என்பவனை காதலித்தாள். அவன் பக்கத்துக்கு வீடு. இவள் 7g ரெயின்போ காலனியை சேர்ந்தவள். அவன் 7H . பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு அதனால் காதல் வளர்ந்தது. இது இவள் வீட்டிற்கு தெரிய அவன் வைத்திருந்த புகைப்படங்களை எல்லாம் இவர்கள் வீட்டில் பிடுங்கினார்கள். அவ்வளவு ஆழமாய் தான் இருந்தது இவர்கள் காதல்.

இருவரும் மொட்டை மாடியில் சந்தித்து கொண்டனர். சத்யம் மாயாஜால் சென்றனர். பீச் மணல் கால் தடம் சொன்னது இவர்கள் காதலர் என்று. ஒரு நாள் இவர்கள் இருவரையும் வெளியில் பார்த்த அப்பா கோவிக்க அன்றில் இருந்து இருவரும் பார்க்க கூடாது பேசக்கொடது என்று கட்டளை இட்டார். அப்பொழுதெல்லாம் நான் செத்துருவேன் அனிதா என்ற பாணியில் கதிர் மூஞ்சியை வைத்துக்கொள்வான். அவளும் நானும் சாகத் தான் போகிறேன் என்ற பாணியில் முகம் வைத்துக்கொள்வாள்.

ஆனால் அப்பா பேசக்கூடாது என்று சொன்னவுடன் மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தாள்.அப்புறம் நன்றாய் தான் இருந்தாள். இப்பொழுது மறுபடியும் சில நாட்களாய் குறுந்தகவல்கள். சரி பெண் அவ்வளவு ஆழமாய் காதல் செய்கிறாளா என்று அவர் தந்தை யோசித்தார். பையன் வீட்டில் பேசினார் ,பையன் வீட்டில் எப்பொழுதுமே பச்சை கொடி தான். இவள் தந்தை மனமிரங்கி பெண்ணிற்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டுமென்று பையன் வீட்டில் சம்மந்தம் பேசி விட்டார். பையன்னிர்க்கும் தெரியாது பெண்ணிற்கும் தெரியாது.

அனிதா வீட்டிற்கு வந்தாள். "உனக்கு கதிர் தான் மாப்பிள்ளை" என்று அப்பா சொன்னார் ............அதிர்ந்த அனிதா "அப்பா இப்ப கதிர காதலிக்கல ஷாம் அப்படின்னு ஆபீஸ் ல ஒருத்தன் இருக்கான்" என்று சொல்லிக்கொண்டிருந்த வேலையில் பெசென்ட் நகர் பீச்சில் " நீ இல்லாம இருக்க முடியாது " என்று அனிதாவிடம் சொன்ன அதே வசனத்தை அனிதா என்ற பெயரல்லாத யாரோ ஒரு பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்தான் கதிர்.

2 comments:

angel said...

m the reality is this

Narmada said...

excellent example for flirting