Monday 15 February 2010
சுர்ரென்று ஒரு காதல்
"என்னங்க valentine டே எங்கயாவது போவோம்" என்று தன் செல் போனில் இருந்து குறுந்தகவல் அனுப்பினால் ஸ்னேஹா."வீட்ல யாரும் இல்லையே அப்ப கிளம்பி வரேன் ரெண்டு பேரும் ஊர் சுத்தொவோம்" என்றான் ராமன். வண்டி சீறி பாய்ந்தது besentnagar நோக்கி. பகல் நிலா சூரியனில் காய்ந்து கொண்டு சுடிதார் குடைக்குள் ஒளிந்து கொண்டனர். சுண்டல் விற்பவனுக்கு அன்று நல்ல லாபம். காதல் ஜோடிகள் ரோஜாக்களை விட முத்தங்களை பகிர்ந்து கொண்டனர். பச்சை நீல நிறங்கள் ஆடைகள் அதிகம் இருந்தன. கருப்பு சட்டை போட்ட பையன்கள் காதல் ஜோடிகளை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இருவரும் மதியம் கிளம்பி ஒரு அசைவ உணவகத்தில் சாப்பிட்டனர். A /C ஹோட்டல் இவளுக்கு குளிரியது . அவன் ஜாடை செய்தான் இவள் வெட்கத்தால் சிரித்தாள். இருவரும் ஒரு கிளப் சென்றனர் அதில் ராம் ஆண்டு உறுப்பினர் அதனால் அவனுக்கு எளிதாய் ரூம் கிடைத்தது. இருவரும் உள்ளுக்குள் சென்றனர் மணி இரண்டு அப்பொழுது .
கடிகாரம் ஐந்து மணியை காட்டியது ராமின் வண்டி அவளையும் ஏற்றி கொண்டு மாயாஜால் நோக்கி சென்றது. எல்லாம் காதல் ஜோடிகள் ஆறரை காட்சி இருவரும் உள்ளே சென்றனர். இருட்டு வேறு, திரை அரங்கில் மற்ற காதல் ஜோடி எப்படி காதல் செய்ததோ அப்படியே இவர்களும் காதல் செய்தனர். இடைவெளி வந்தது அனைத்து காதலர்களும் இடைவெளி விட்டு அமர்ந்தனர்.
ஸ்னேஹா பக்கத்தில் எங்கயோ பார்த்த முகமாய் இருக்கிறதே என்று ராமன் பார்த்தான் ஆம் அது அவன் மனைவி ஆம் இடைவெளி என்றாலே ட்விஸ்ட் இருக்க வேண்டுமே. அவள் யாருடன் வந்திருக்கிறாள் என்று பார்த்தால் இவன் நண்பானான சினேகாவின் கணவனுடன் வந்திருக்கிறாள். நான்கு பேருமே அதிர்ந்தனர்.
மறுநாள் காலை தினதந்தி நாளிதழில் தலைப்பு செய்தியில் இரண்டு பேர் வெட்டி கொலை இருவர் தற்கொலை என்ற செய்தியில் இவர்கள் நால்வரின் பெயர் வந்தது .
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கதை அருமை
கதை சூப்பர் டா. கள்ள காதலிலும்கூட ஜோடிகள் எவ்வளவு தடைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கிறது.
கதை சூப்பர் டா. கள்ள காதலிலும்கூட ஜோடிகள் எவ்வளவு தடைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கிறது.
எத்தனக்குடும்பங்கள் இதுபோல அழிந்ததோ தெரியவில்லை...ஆயினும் நிறைய இருக்கும்....
நல்ல கதை நண்பா....
எப்டிடா இப்படியெல்லாம் யோசனை வருது உனக்கு....
என்ன வில்லத்தனம்
Post a Comment