Monday 22 February 2010
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்
"பாராட்டு விழா எனக்கு வேண்டாம்"
என்று அறிக்கை விட்டார் அரசன்.....!
மந்திரிகள் புரிந்து கொண்டு ...........
நாள் ஒரு துறைக்கு பாராட்டு விழா
நடந்தது ..........!
கொலை கூட செய்தார்
அரசன் .......!
"என்ன அழகாய் கொலை செய்கிறார்"
என்று கவியரங்கம்...........
பாராட்டு .....!
ஒரு கவிஞன்
பாராட்டினான் "நீ கொலை செய்து
எங்களை உயிர்பித்தாய்
என் உயிர் பித்தாய்" என்று
வார்த்தையில் விளையாடினான் ...!
வார்த்தையில் விளையாடிவிட்டு
எனக்கு பணம் வரவில்லை என்று
புலம்பிக்கொண்டு போனான்.........!
"நீ சாப்பிட்டதால் நாங்கள் பசியாறினோம்"
என்று சொன்னான் விவசாயத்துறை
அமைச்சர்....!
"உங்கள் வீடு ஒளிர்கிறது நாடு ஒளிர்கிறது"
என்று சொன்னான் மின்துறை அமைச்சர்....!
"உன் மகள் கவிதை எழுதுகிறாளா
சரி தமிழ் மாநாடு நடத்திவிடலாம் அரசரே" என்றான்
கலைத்துறை மந்திரி....!
கடைசியில் அரசன் சொன்னான்
"நாட்டிற்க்கு உண்டான அனைத்து சாலைகளும்
என் வீட்டிலிருந்தே தொடங்குகிறது,
என் மகளுக்காய் மகளிர் மாநாடு
என் பேரன் தலைமை தாங்க வேண்டுமே இளைஞர் மாநாடு,
ஒரு மகனுக்கு பாண்டிய நாடு,
இன்னொரு மகன் அடுத்த தலைவன் "
"நாடு நன்றாய் இருக்கிறது" என்றான்
மக்கள் அமைச்சர் முழித்தனர் .................!
"எனக்கு நாடு தான் வீடு வீடு தான் நாடு
என் வீடு நன்றாய் இருக்கிறது நாடு நன்றாய் உள்ளது ............
எனக்கு பாராட்டு விழா வேண்டாம் "
என்றான் ..........!"
கலைத்துறை உடனே ஏற்பாடு செய்தது
"வீடை நாடாய் கருதும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்று .......
கலைத்துறையின் ஒரு தலை கொதித்தது ......................
எதற்கு நான் வர வேண்டுமென்று
'தலை' துண்டிக்க ஆணையிடப்பட்டது ...........!
"தமிழ் உணர்வு என்றால் அரசனை பாராட்டுவது ,
அந்த உணர்வு இல்லை நீ தமிழன் இல்லை
என்று அந்த 'தலை' துண்டிக்க பட்டது
தண்டிக்க பட்டது .........!
நூறாம் அகவையில் தனக்கு
தானே சிலை வைத்தான் தானை
தலைவன் ............!
வரலாறு எழுதியது
"தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன் என்று"
கலைத்துறை அப்பொழுதும் பாராட்டு விழாவிற்கு
தயாரானது ............!
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
கலக்கீட்ட நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//"தமிழ் உணர்வு என்றால் அரசனை பாராட்டுவது ,
அந்த உணர்வு இல்லை நீ தமிழன் இல்லை
என்று அந்த 'தலை' துண்டிக்க பட்டது
தண்டிக்க பட்டது .........!//
சரியாகச் சொன்னாய் நண்பா.....
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்று பார்ப்போம்....
வீடாம்... வீடுதான் நாடாம்... க்கூம்...
அருமை நண்பரே!
கலையும் இலக்கியமும் காலத்தை பிரதிபலிக்க வேண்டும்.
இது தான் காலக்கண்ணாடி!!
சூப்பர். என்னதான் நாம அடிச்சிக்கிட்டாலும் ஒரு பிரயோசனமும் இல்லை ......
இனி பாராட்டுவிழாக்கள் என்றாலே எல்லோரும் கேலியாக பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டது தான் இந்தப் பாராட்டுவிழாக்களால் கிடைத்தப் பயன். அதுவரையில் மகிழ்ச்சியே......
தலைப்பு மிக பொருத்தம்... அந்தாளு இதுக்கெல்லாம் கவலைப்படப்போறதில்ல... பாப்போம்...
ரசித்தேன்
this poem very like to me
sempakam
very nice
sempakam
very nice
sempakam
very nice
sempakam
மிகவும் அருமையாக சொன்னீர்கள்... அருமையாக உள்ளது
பதிவுலக பட்டறிவாளர்களே!! உங்களுக்கு ஒரு அரசியல் விடுகதை
பதிலிடுங்கள் பின்னுட்டத்தில் ,எங்கள் தலமைக்குழாம் சார்பில் உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன்
களம் :தமிழரசியல் பிப்ரவரி 2010 வரை
கேள்வி :ஒன்று
கருவறுக்க காத்திருக்கும் பேய்காமன் யார் ?
௧.திருலங்கா
௨.நோண்டிய
௩.ச்சீனா
௪.ஒமேரிக்கா
கேள்வி :இரண்டு
அங்கே கடைசி கோவணத்துன்னடையும் ஆட்டையைப்போட துடிக்கும் நாட்டமை யாரார் ?
௧.திருலங்கா
௨.நொண்டியா
௩.டச்சீனா
௪.ஓமெரிக்கா
கேள்வி :மூன்று
வேலியில் போவதையெல்லாம் மடியில் விட்டுக்கொண்டு (வாரிசுகளுக்காக),தல கொதிக்க குருமாவை (விட்டு) கேட்பவன் யாரார் ?
௧.சாணக்கிய சொட்டையன்
௨.துணைபதி
௩.மொழகிரி
௪.கோமா.நாராயணன்
கேள்வி :நான்கு
வாங்கியதற்கு அதிகமாக கொதிக்கும் குருமா யார் ?
(சொட்டையன் சூத்திலே அடிச்சாலும் என்னை நல்லவேன்னு சொன்னான்டா ,ஊஉ ,,,,,, )
௧.தேறுமா
௨.டக்குவார் டங்கம்
௩.தன்னியரசு
௪.தல
ஒன்றுக்கு மேற்ப்பட்ட பதில்கள் பொருந்தி வருமாகில் அல்லது சீருக்கு பொருள் தெரியாவிட்டால்
நீங்கள் அரசு போட்டித்தேர்வு எழுத தகுதியற்றவர்
முற்றுணர்ந்த அறிஞர்களே நீங்கள் பின்னுட்டத்தில் பின்னி பெடலெடுக்கலாம் .
டிஸ்கி :உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன் !!
இந்தப்போட்டியில் வரும் சொல்லாடல் அனைத்தும் எமது கற்பனையே
யாரையும் துன்புறுத்த அல்ல !!!!!!!!!
/*"வீடை நாடாய் கருதும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்று .......
கலைத்துறையின் ஒரு தலை கொதித்தது ......................
எதற்கு நான் வர வேண்டுமென்று
'தலை' துண்டிக்க ஆணையிடப்பட்டது ...........!
"தமிழ் உணர்வு என்றால் அரசனை பாராட்டுவது ,
அந்த உணர்வு இல்லை நீ தமிழன் இல்லை
என்று அந்த 'தலை' துண்டிக்க பட்டது
தண்டிக்க பட்டது .........!
*/
மிக அருமை
கழக, கலக, கலைக் கண்மணிகளுக்கு பாராட்டு விழாக்கள் நடத்த ஏதோ என்னாலான தலைப்பு பரிந்துரைகள்.
வாரம் ஒருமுறை பாராட்டு விழாவிற்குத் தலைமையேற்கும் தலைவனுக்குப் பாராட்டு விழா!
காலையும் மாலையும் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை மேற்கொள்ளும் மரியாதைக்குப் பாராட்டு விழா!
யாருக்கு புரிய வேண்டுமே அவர்களுக்கு புரியுமா? கலக்கிட்டீங்க . அருமை. வாழ்த்துக்கள்.
பாராட்டு விழான்னா அவனவன் பின்னங்கால் பிடரில அடிக்க ஓட போறான். யாராவது அந்த ஆளுக்கு ஒரு கூட எலுமிச்சம் பழம் அனுப்புங்கப்பா. அப்பவாது பித்தம் தெளியுதா பார்ப்போம்.
manjal thundu known for his elfishness:he overflows cabara dancer:
who is the best of the worst?
cabara dancer r script writer?
ஹா ஹா
nice piece
thamaasu ! Thanaasu !
//சோழன் said... //
ha ha ... u r rocking !
ஹா ஹா!....
கலக்கிட்டீங்க! அருமை நண்பரே!
Post a Comment