Sunday 14 February 2010
நான் கடவுள்
சரவண பொய்கையில் நீராடி விட்டு நேற்று வசூலான காசை வைத்துக்கொண்டு சாப்பிட தயாரானார் காவி வேட்டி போட்டவர் . முதலில் டீ கடையில் டீ குடித்து தினத்தந்தி படித்தார். அப்படியே திருபரங்குன்றம் கோவில் அருகே வந்தார், ஒரு கடையில் பொங்கல் வடை சாப்பிட்டார் .அவர் வாடிக்கியாய் வருபவர் போல அங்கே இருந்த முருகன் அவரை நலம் விசாரித்தான்.
கோவிலுக்கு வெளியே அவர் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்தார். அன்று திருமண நாள் வேறு நிறைய இடங்களில் ஸ்பீக்கர் ஒலித்துக்கொண்டிருந்தது. ரஜினி பாடல்கள் அஜித் பாடல்கள் விஜய் பாடல்கள் இளையராஜா மோகன் ராமராஜன் பாடல்கள் கேப்டன் பாடல்கள் என்று மாறி மாறி ஒலித்தன. காவி உடை போட்டவர் தன் கல்யாண நாளை நினைத்து பார்த்தார் சிரிப்பு வந்தது, அவர் துபாய் சென்றதை நினைத்து பார்த்தார் . அவர் துபாய் சென்ற வேளையில் அவர் மனைவி கள்ளகாதலிலே ஈடுபட மனம் வெறுத்து போய்
ஆன்மீகத்திற்கு செல்வதாய் நினைத்துக்கொண்டு வந்தமர்ந்தவர்.
இப்பொழுது பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் பிச்சைக்காரன் என்று வெளியில் காட்டிக்கொள்ள கூச்சம் அதனால் காவி உடை. வேலை செய்யலாம் என்றால் வேலையில் மனது லயிக்க வில்லை . கலையில் இருந்து இரவு வரை கோவில் பிச்சை. இரவு சரவண பொய்கை மண்டபம் என்று தீர்மானம் செய்து நான்கு வருடங்கள் ஓடி விட்டது.
அமர்ந்த பின்பு சில நாட்களுக்கு பின்னர் தானும் மனைவியிடம் அன்பு செலுத்த வில்லை என்பதை உணர்ந்தார் மனது வலிக்கத்தான் செய்தது. ஆம் வலிக்கும் போதெல்லாம் கஞ்சா அடித்தார். எப்பொழுதும் வலித்தது. சரவண பொய்கை மலையை ஒட்டி இருந்தது அங்கே அமர்ந்து கொள்வார் குளிக்கும் பெண்களை பார்ப்பார் அவர் காமத்திற்கு வடிகாலாய் இருந்தது. சில நேரம் பொழுது போகவில்லை என்றால் லட்சுமி திரைஅரங்கில் படத்தை பார்ப்பார்.
அன்றும் காலை கோவிலுக்கு வெளியில் வந்து அமர்ந்தார். ஒரு ஹிந்திகாரான் நூறு ரூபாய் போட்டுவிட்டு ஆசி வாங்கிக்கொண்டான். ஏதோ இவரை பார்த்து கைடிடம் ஏதோ சொன்னான். கைட் இவரை பார்த்து
"நீங்க சிவன் போலவே இருக்கீங்களாம்" என்றார். மனதிற்குள் நினைத்துக்கொண்டார் கஞ்சா அடிச்சா சாமியாரா என்று நினைத்துக்கொண்டார்.
வாழவே வழி தெரியாதவன் வாழ்கை இழந்தவன் நம்பிக்கை இல்லாதவன் மனதிற்குள் உள்ளே போய் ஏதோ கடவுள் இருக்கிறது என்கிறான் என்று நினைத்துக்கொண்டார். புற உடல் இருக்கும் பொழுது எதற்கு அகம் நோக்கி போக வேண்டும் என்று விசாரணை செய்துகொண்டார். கடவுள் என்பது ஏதோ ஒரு பிடிப்பு கடவுள் இருக்கிறார் என்றால் நீ உயிருடன் இல்லை என்று நினைத்துக்கொண்டார்.எதுவுமே செய்யாதவனே கடவுள் என்று சொல்லிக்கொண்டிருப்பான் என்று நினைத்துக்கொண்டார்
ஏதோ உழைக்க வேண்டும் யாரையாவது கல்யாணம் செய்யவேண்டும் போல் இருந்தது. ஒரு டீ கடை ஆரம்பித்தார், பிச்சை எடுத்ததில் சேர்த்த பணத்தில். நன்றாய் ஓடியது .இப்பொழுது வயது அவருக்கு முப்பது தான். கல்யாணம் செய்ய பெண்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். டீ கடை முன் இருக்கும் பேருந்து நிறுத்ததிற்கு வரும் பெண் இப்பொழுது தான் அவரை பார்க்க துவங்கி உள்ளது. ஒலிபெருக்கியில் அவளுக்காகவே "இந்த காதல் சொல்ல நேரம் இல்லை" என்ற பாடலை அலற விட்டுருக்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இது கதையா? கட்டுரையா? அனுபவமா?
எதுவாக இருந்தாலும், நல்லாருக்கு
நேரில் பார்த்த, அல்லது கேட்ட ஒரு விஷயம் கதை வடிவில் கட்டுரை ஆகி உள்ளது...ரைட்?
இது உண்மைச்சம்பவமா நண்பா... எப்படியோ சொல்லவந்த விசயம் உறைக்கிறது...
எதுவா இருந்தாலும் மேட்டர் பக்கா....
உண்மைதான் கஞ்சா அடிச்சா சாமிதான்
ஒரு முழு வட்டமடித்து விட்டார் கதையில், சாமியாராய் ஆசீர்வதிக்க அமர்ந்து ஞானம் பெற்று மீண்டும் சம்சாரியாகும் முயற்சி, இப்பொழுதாவது நல்லபடியாக நடக்கவேண்டும் அவர்க்கு...
கஞ்சா அடிச்சா சாமி என்றால் தன்னையே மறந்தா சாமிதான் அல்லவா
ரசித்தேன் நன்றி
ஜேகே
Post a Comment