Thursday, 18 February 2010

ஆணாதிக்கவாதிகளும் அவர்களை ரசிக்கும் கூட்டங்களும்


சமீபத்தில் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படம் பார்த்தேன் . மூன்று காதல் செய்வாராம் அதையும் நியாயப்படுத்துகிறார் கதாநாயகன். மூன்று பெண்களை பார்ப்பாராம் அதில் எது சிறந்தது என்று செலக்ட் செய்வாராம். ஒரு நாயகிக்கு தெரிந்து விட அவள் கேட்கும் போது "என்ன இருந்தாலும் நீ பொம்பள நான் ஆம்பள " என்ற வசனம் வேறு. "நீ டம்மி பிசு" என்ற வசனம் இதற்க்கு எல்லாம் திரையரங்கில் விசில் பறக்கிறது . அந்த படத்தில் ஒரு காட்சி உருப்படியாய் இல்லை பெண்கள் டம்மி பீஸ் என்று டம்மி பீஸ் விஷால் சொல்கிறார்.

விஷால் பேசிய வசனம் இங்கு முக்கியம் இல்லை. அப்படி வசனம் வரும் பொழுது ஆரவாரம் செய்கிறானே அவன் கட்டாயம் ஆணாதிக்க வாதி .அந்த ரசனை வெறும் கேடுகெட்ட ரசனை. இதை முதலில் தோற்றுவித்தவர் ரஜினிகாந்த் விஜயகாந்த். பணக்கார திமிர் பிடித்த பெண் இருப்பாள் அவளை அடக்குவார் ரஜினியோ விஜயகாந்தோ. இவர்கள் வீரம் எல்லாம் பெண்களிடம் தான். அஜித் பேசும் போது உணர்ச்சிவச பட்டு கை தட்டுவார் அப்புறம் படம் ஓட வேண்டுமே " அப்படி எல்லாம் யாரும் மிரட்டல" என்று காலில்
விழுவார். ஆனால் "just a MINUTE MADAM " என்று பஞ்ச் டயலாக் பேசுவார்.

இவர் பேசும் ஒரு வசனம் "தேடி செல்லும் காதல் காதல் இல்லை நண்பா, உண்மை காதல் என்பது தேடி வந்த காதலே" ........இதையே அந்த பெண்ணின் சார்பாய் எடுத்தோம் என்றால் அவளுக்கு அது தேடி போன காதல் தானே. அப்ப ரஜினி என்ன சொல்கிறார் பெண்ணாய் வரவேண்டும் ஆண் தேடி போக கூடாது இது ஒரு ஆணாதிக்கத்தின் உச்சம்.

சம்பந்தம் இல்லாமல் "நீ விரும்பிற பொண்ண விட உன்ன விரும்பிற பொண்ண காதலிச்சா வாழ்கை சந்தோசமா இருக்கும் என்பார்" . பெண் காதல் தனக்கு வேண்டும் அவளுக்கு தன் காதல் வேண்டாம்????பெண்களை அடக்குவது என்ற பாணியில் எடுக்க படும் படங்கள் மாபெரும் வெற்றி பெறுகின்றன." பெண் ஊரு சுத்தின கெட்டு போய்டுவா ஆம்பள வீட்ல இருந்த கெட்டு போய்டுவான்" என்ற வசனங்களை மட்டுமே பேசி சூப்பர் ஸ்டார் ஆனவர்.
சரி ரஜினியாவது படத்தில் திமிர் பிடித்த பெண்ணை அடக்கினார். விஷால் நான் ஆம்பள அப்படி தான் இருப்பேன் என்கிறார் என்ன சொல்ல???? படங்களில் பெண்களை திட்டினால் கை தட்டுகிறோம் நம் ரசனை கேடுக்கெட்ட ரசனை என்ன சொல்கிறது நாம் ஆணாதிக்கவாதி என்று. நாம் மாறினால் மட்டுமே நம் ரசனை மேம்படும்

6 comments:

இன்றைய கவிதை said...

அருமையான பதிவு இதி பலகாலமாய் தொடரும் ஒரு அவலம்

நம் உலகில் பிரசாரம் வேறு பயன்பாடு வேறு

உங்கள் கருத்துக்களை ஆதரிக்கிறேன்

நன்றி ஜேகே

Anonymous said...

There are a few fallacies and factual errors in your post.

1. It is not Rajnikanth but MGR who is the pioneer in the act of brow-beating women. You can watch his films like Kanavan, (story line and also songs) Mattukkaara velan (ஏபிசி தெரியுமா எடுத்துசொன்னா புரியுமா? பாடலும் கதை, Vivasaayi (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே பாடல்) Please remember in MGR films, the women fans welcomed his act of browbeating women. In Ranjni's too, it is the same.

2. What is to be expected from a marriage is different for both sexes, strictly speaking. If Vishal or Rajni or a male thinks that it is only with a woman who loves him that a happy married life is possible, then we cant find fault with their opinion. Similarly, if a woman thinks only with a man who loves her that a married happy life is possible, we cant find fault with that woman. Briefly, the expectations in a marriage are sex-specific.

3. Women getting insulted or getting straight-jacketed, is a male fantasy, from time immemorial. Present Tamil cinema culture is not an isolated case. All regional films show women as secondary to men. Please see some Punjabi films, Telugu and Marati films. You will know it.

4. Genrally speaking, Indian films - not only Bollywood, but also, in all regional films - are hero-centric. The male actors successfully build up a cult image through their films; and once they have done it, the people go to watch him, not the heroine performing. The films are not heroine-oriented. The producers and directors understand this; and therefore, we see heroines as the 'sidekicks' of heroes.

Your ambition of seeing heros actors playing sidekicks to heroines is realised only in a few films. K.R.Vijaya did it in some films like Vaayaadi, Mayor Meenaakshi etc. For doing that, the actress should have already amassed a cult following; or the producer and director should be confident that the films will become a box office hit. Viajay's films failed, so her such films stopped.

Simply put, the issue that you have raised, is deeper than what you think it is. It is bound up with intricate social factors and values.

Male actors should NOT be taken to task by you at all, as they have to play to the gallery. They are not here to uphold and propogate right values in man-woman relationship and reform society as you wish! It is not their business. They are here to earn money and live a life of luxury and comforts and popular with people! பணமும் புகழும் போதும். அதை அவர்கள் நாடுவ்தில் என்ன தவறு?

Anonymous said...

But I agree with your feelings.

குப்பன்.யாஹூ said...

nice post, as said, MGR films are wordst, always male sovenism. the worst song id IPPAIDTHAN IRUKKA VENDUM POMBALAI INDHA TAMILNATTILE..

i DO NOT KNOW HOW CENSRO BOARD ALLOW THIS.

கொற்றவை said...

very impressive one..:)

சி. கருணாகரசு said...

நல்ல கேள்வி..... அதே நாயகி மூன்று வாலிபர்களை காதலித்து...ஒருவனை தேர்வுசெய்தால்.....

என்னத்த சொல்ல!