Sunday 21 February 2010
பாராட்டு விழாக்களும் போராட்டங்களும்
நம் தமிழகம் கண்ட முதல்வர்களில் எண்பது சதவிகிதம் கலைத்துறையை சேர்ந்தவர்கள். சினிமா நம் மக்களை எவ்வளவு தாக்கி உள்ளது என்பதற்கு இது சான்று. இது நம் மக்களின் சமான மனநிலையை பிரதிபலிக்கிறது.திரையில் நல்ல பிம்பம் என்றால் வெளியிளிலும் நல்லவன் என்ற பிம்பம் இருந்து கொண்டே இருக்கிறது.நன்றாய் தமிழ் தெரிந்திருந்தால் நீங்கள் மாபெரும் தலைவனாகலாம் இங்கே. சமீபத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது போல ஈழ பிரச்சனை ஹொகேனகல் பிரச்சனை காவிரி பிரச்சனை என்று திரை உலகம் திரண்டு வந்துகொண்டிருக்கிறது.
ஒரு மேடையில் சத்யராஜ் ரஜினிகாந்த் அவர்களை தரக்குறைவாய் பேசினார். கன்னட மாநிலத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக. அவரும் ஹொகேனக்கல் பிரச்சனை என்பதற்காய் வந்துள்ளார் மேடையில் அமர்ந்திருக்கிறார். சரி சத்யராஜ் சொல்வதற்கு வருவோம் சரி ரஜினிகாந்த் முதல்வரா , மாண்புமிகு முதல்வர் தமிழர் தானே அவரை கேட்கவேண்டுமா ரஜினியை கேட்கவேண்டுமா. இப்பொழுது அந்த பிரச்சனை என்ன ஆனது என்று ஊடகங்களில் சரியான செய்தி இல்லை. இதை தான் அஜித் அவர்கள் sensitive விஷயங்களை முதல்வரிடம் கேளுங்கள் என்று சொன்னதிலே என்ன தவறு.
சரி ஈழ பிரச்சனை போது நடிகர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பில் என்ன நடந்தது. ஈழத்துக்கான விடிவு ஏதாவது கிடைத்ததா, அந்த நிகழ்வு நடந்த பொழுது சன் தொலைகாட்சி சிம்பு நயன்தாரா பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்த காட்சிக்கு விளக்கு பிடித்தது. அது ஏதொ கலைநிகழ்ச்சி போல விளம்பரங்கள் வேறு. பாரதிராஜா கொதித்து போய் பேசுகிறார் நடிகர்களுக்கு உணர்வு வேண்டும் என்று உண்மை தான் உணர்வு வேண்டும் ஆனால் தன்னை அரசியல் ஆதாயத்திற்காக உபயோக படுத்தும் போது மானமுள்ள நடிகன் வர தேவை இல்லை.
இந்த மானமுள்ள பாரதிராஜா என்ன செய்கிறார் கலைஞர் தொலைக்காட்சியில் தெற்கத்தி பொண்ணு நாடகம் எடுக்கிறார். என்ன பாரதிராஜா ஈழ பிரச்சனைக்கு சங்கு ஊதியவர்களிடமே சரணாகதி அடைந்தார். அந்த சங்கு ஊதியவர்களே நல்லவர்கள் போல் வேடமிட்டு உணர்வுகளை காட்டுகிறோம் நீங்கள் வரவேண்டும் என்றால் எல்லாரும் வரவேண்டுமா என்ன????????
இவ்வளவு உணர்வுள்ளவர்கள் போராடுவதை விட முதல்வரிடம் கேட்கலாமே.இல்லை அன்னை சோனியாவிடம் கேட்கலாமே. எதிர்ப்பு காட்டுகிறேன் என்று கூறுவது. சன் தொலைக்காட்சியோ கலைஞர் தொலைக்காட்சியோ படம் பிடிப்பார்கள். விளம்பரம் வேறு போடுவார்கள் . என்ன கொடுமை உண்மையான போராட்டம் என்றால் ஆதரவு தரலாம் ஆனால் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் போராட்டத்திற்கு எதற்கு வரவேண்டும். என்னை பொறுத்த வரை அஜித் ஒரு மானமுள்ள நடிகன்.
அஜித் முதல்வரிடம் கோரிக்கை தானே வைத்தார். அவர் சொன்னது Sensitive விசயங்களை
முதல்வரிடம் கேளுங்கள் என்று. இதில் என்ன தவறு, அவர் திரைத்துறையினரை கேவலப்படுத்தி விட்டார் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை??? ஏன் என்றால் அவர் தெளிவாய் சொல்லி இருக்கிறார் இந்த விழாவிற்கு நான் விருப்பபட்டு தான் வந்துள்ளேன், சென்சிடிவ் விஷயங்கள் அதாவது காவேரி பிரச்சனை போன்ற விஷயங்களை மட்டும் தானே சொன்னார். அந்த சென்சிடிவ் என்பதிலேயே அவர் சினிமா சம்மந்தமாய்
சொல்லவில்லை என்று தெரிகிறதே???
திருமாவளவன் தமிழ் உணர்வு என்று சொல்கிறார். ராஜபக்ஷே நகைச்சுவைக்கு அங்கே சிரித்து விட்டு வந்தார். MP பதிவி அதற்காய் சோனியாவிடம் மண்டியிடுகிறார் . இன்று ரஜினி அஜித்திற்கு தமிழ் உணர்வு இல்லை என்கிறார். தமிழ் பேசத் தெரிந்து தமிழ் நாட்டில் இருந்தால் மட்டும் தமிழன் இல்லை.
என்னை பொறுத்தவரை களத்தில் இறங்கினால் மட்டுமே போராட்டமே தவிர மேடையில் பேசுவது ஆ ஊ என்றால் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது என்றால் பிரச்சனை தீராது. முதல்வர் என்பதே மக்களுக்கு பணி செய்யத்தானே. என்று நடிகர்களை கேட்க்காமல் முதல்வரை கேட்க்கிரோமோ அன்று தான் நம் தமிழகம் முன்னேறிய சமூகம்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
என்னோட மனநிலையை அப்டியே சொல்லியிருக்கீங்க நண்பா...
//என்னை பொறுத்த வரை அஜித் ஒரு மானமுள்ள நடிகன்.
அஜித் முதல்வரிடம் கோரிக்கை தானே வைத்தார். அவர் சொன்னது Sensitive விசயங்களை
முதல்வரிடம் கேளுங்கள் என்று. இதில் என்ன தவறு, அவர் திரைத்துறையினரை கேவலப்படுத்தி விட்டார் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை??? ஏன் என்றால் அவர் தெளிவாய் சொல்லி இருக்கிறார் இந்த விழாவிற்கு நான் விருப்பபட்டு தான் வந்துள்ளேன், சென்சிடிவ் விஷயங்கள் அதாவது காவேரி பிரச்சனை போன்ற விஷயங்களை மட்டும் தானே சொன்னார். அந்த சென்சிடிவ் என்பதிலேயே அவர் சினிமா சம்மந்தமாய்
சொல்லவில்லை என்று தெரிகிறதே???//
இதையே தான் நானும் ஆரம்பத்திலிருந்து கூவிக்கொண்டு இருக்கேன். அஜித்தை ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க போலிருக்கே :(
எல்லா நெருக்கடியையும் கடந்து வருவார் என நம்புவோம். :)
என்ன நீங்க இந்த விசயத்தை எல்லாம் ரொம்ப சீரியஸாக பார்க்கிறீர்கள்.
தலைவனின் ஒரே அறிக்கையில் எல்லாம் சரி ஆகிடும் பாருங்கள்
நல்லா சொல்லியிருக்கீங்க..
புரிய வேண்டியவர்களுக்கு புரிஞ்சா நல்லா இருக்கும்
சிம்பு, நயன் தாரா படம் போட்டு இருக்காங்க..
அதுல சிம்பு மாலைமலர் பேப்பரை தலைகீழா வச்சு படிச்சுகிட்டு இருக்கார் பாருங்க...
அவர் பேப்பர் படிக்கல மெஸெஜ் பாக்குறாரு செல்லுல...?!
அருமை , நல்லா சொல்லியிருக்கீங்க
அஜித் வேணாஞ்சாமி ஆள விடு நான் ரேசுக்கே போறேன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டதா படிச்சேன் இங்க வெட்டவெளிச்சமா பேசினா இந்த கதி தான் ஓட வைப்பாங்க
சினிமால நடிக்கிற மாதிரி மேடையிலும் நடிச்சா தான் மக்களுக்கும் பிடிச்சிருக்கு அரசியில் தலையிடும் இருக்காது, இது தவறுதான் ஆனால் இது தான் நிதர்சனம்
நன்றி ஜேகே
Post a Comment