Monday 8 February 2010

24 வயது கிழவன் 70 வயது இளைஞர்


















"கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்" " எறும்பு ஊற மலை தேய்ந்தது" போன்ற பழமொழிகள் கேள்விப்பட்டது உண்டு அதை பார்த்தது உண்டா. மலைகளை தனி ஒரு ஆளாக சென்று உடைக்க முடியுமா செய்தான் ஒரு கிழவன் அவன் பெயர் தசரத் மான்ஜி. மலையை அவன் நோக்கத்திற்க்காகவும் இல்லை பணம் செய்யவும் உடைக்க வில்லை. மக்கள் பயன்பட வேண்டும் ஒரு சாலை வேண்டும் பயண நேரம் குறைய வேண்டும் என்பதற்காய் உடைத்தான். அவன் அதற்காய் செலவழித்த வருடங்கள் மொத்தம் இருபத்தி இரண்டு.

ரோட்டில் விபத்து என்றால் கூட திரும்பி பார்க்காமல் போகும் உலகத்தில். மக்கள் நடக்க
வேண்டும் என்பதற்காய் மலையை குடைந்து சாலை போட்டான் இந்த கிழவன். அவன் சாலை போட்டதை விட மக்களை நேசிக்கும் ஒருவனால் தான் இத்தகைய பெரிய விடயம் செய்ய முடியும்.

கயா மாவட்டம் பீகாரை சேர்ந்த மாவட்டம் அதில் கெலார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தசரத்.நிலமில்லாத விவசாய கூலி.முசாக்கர் என்னும் கடை நிலை ஜாதியை சேர்ந்தவர் தசரத். 1959 ஆம் ஆண்டு ஒரு நாள் கூலி வேலை செய்துகொண்டிருந்த தசரத் மான்ஜிக்கு தண்ணீர் கொண்டு வர சென்ற மனைவி மலையில் இருந்து இடறி விழுந்து படுகாயம் அடைந்தாள். மருத்துவமனை பக்கத்தில் இல்லாத கிராமம். மலையை சுற்றி செல்லும் வழியில் அவர் மனைவி இறந்து விட்டாள்.

ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்??? என்று யோசித்தார் மான்ஜி போடுகிறேன் வழி என்றார்.
அவர் மலையை உடைக்க போறேன் என்றவுடம் நகைச்சுவையாய் பார்த்தனர் எள்ளி நகையாடினர்.ஆனால் மான்ஜி கலங்கவில்லை. மலைகளுடன் பேசத் துவங்கினார், அவர் உறுதி மலை போல இருந்தது மலை மடு போல இருந்தது அவர் முன்பு. மனிதர்களிடம் பேசுவதில்லை சாப்பிட கூட மறந்தார் சில நேரம்.மலை அவர் சொல்ல சொல்ல கேட்க ஆரம்பித்தது.

25 அடி உயரம் 30 அடி அகலம் 360 அடி பாதை போட்டார் தனி ஒரு மனிதனாய் . இது தாஜ் மகாலை விட சிறந்த காதல் சின்னம் ஒவொவொரு அடியும் அவர் போட்டது . முதல் பத்து வருடம் பைத்தியம் என்று நினைத்தவர்கள் கொண்டாடினார்கள். பெண்கள் அவர் காதலை கண்டு மெய் சிலிர்த்து போய் பழங்கள் கொடுத்தனர். உளிகள் கொடுத்தனர் உணவுகள் கொடுத்தனர்.

அந்த மலையை குடைந்தது ஒரு மாபெரும் சிற்பம் . மான்ஜி உலகிலேயே அருமையான சிற்பி. ஆனால் மான்ஜி அதை வெறும் காதல் மட்டும் அல்ல என்று சொல்கிறார். காதலை விட அவர் மக்கள் மீது கொண்ட நேசம் ஒரு சாலையை பெற்று தந்தது. 22 கால அற்பணிப்பு 1981 அந்த சாலை முடிக்கப்பட்டது. 2007 அந்த இளைஞர் அமரர் ஆனார். 1981 முதல் 2007 வரை கூலி வேலை செய்தே காலத்தை ஓட்டினார். அவர் பெரிதாய் அங்கிஹாரம் எதிர்பார்கவில்லை. 24 வயதில் யோசித்தால் கிழவானான மான்ஜி 68 வயதில் இறக்கும் வரை உழைத்ததால் இளைஞர் ஆனார்

21 comments:

க.பாலாசி said...

உண்மையில் அவர் இளைஞர்தான் நண்பா... நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது....

நல்ல பகிர்வு....

sathishsangkavi.blogspot.com said...

//24 வயதில் யோசித்தால் கிழவானான மான்ஜி 68 வயதில் இறக்கும் வரை உழைத்ததால் இளைஞர் ஆனார்//

உண்மைதான்...

ஒரு வித்தியாசமான அறிமுகம்...

அகல்விளக்கு said...

நல்ல பகிர்வு நண்பா...

நினைத்துப் பாரக்கவே உடல் சிலிர்க்கிறது.....

நாம் என்ன சாதித்து விட்டோம் என்று தோன்றுகிறது....

இனியாள் said...

maha manitharai patriya nalla pathivu, pahirvirku nandri thozhar...

சிநேகிதன் அக்பர் said...

உண்மையான இளைஞர்.

நல்ல பகிர்வு.

rajeshkannan said...

மிகவும் அருமையான பதிவு. இன்றைய உலகில் சின்ன உதவி செய்தலே
அதை banner(politicians) அடித்து காட்டும் ஆட்கள் இருக்கையில் எந்த ஒரு
பலனையும் எதிர்ப்பாராமல் வாழ்ந்து முடித்த ஒரு தலை சிறந்த மனிதரை
எங்களுக்கு அறிமுக படுத்திய உங்களுக்கு என் நன்றி

ஸ்ரீராம். said...

மாமனிதர்.

கண்ணகி said...

அந்த மனிதருக்கு தலிவணங்குகிறேன். மனம் இருந்தால் மலையென்ன..மடுவென்ன....

Kumar said...

நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுக்கு மரணம் விரைவில் வந்து கட்டி அணைத்து கொள்கிறது.

puduvaisiva said...

நல்ல பதிவு

அவரின் மன திடத்திற்கு ஒரு வணக்கம்.

bloggMagic said...

where is the Love there is a Way..
manivannan

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அவரின் அளப்பரிய சமுதாதத்தொண்டை கே...வலம் ஊரான் பணத்தில் சொகுசு கண்ட ஒரு ஷாஜஹானுடன் ஒப்பிட்டத்தை மட்டும் தவிர்த்துவிட்டால்..., மற்றபடி தங்கள் பதிவு என்னுள் ஏதோ ஒரு தாக்கத்தினை ஏற்படுத்திவிட்டது. பெரியவர் தசரத் மான்ஜி அவர்களை என் வாழ்நாளில் மறக்க முடியாமல் செய்துவிட்டீர்கள். நன்றி சகோதரா...

Unknown said...

Very good information. Thanks for that

ரோஸ்விக் said...

தலை வணங்குகின்றேன். அந்த இளைஞன் போற்றப்படவேண்டியவன். பகிர்விற்கு நன்றி கார்த்தி.

சத்ரியன் said...

மனிதருள் மாணிக்கம்!

அவரின் புகைப்படத்தையும், உங்களின் இந்தக் கட்டுரைப் பதிவையும் நான் சேகரித்து வைத்திருக்கிறேன்.

கணினி தொடர்பற்ற நண்பர்களுக்கும் பிரதி எடுத்து படிக்கக் கொடுத்திருக்கிறேன்.

பகிர்விற்கு நன்றி நண்பா.

srdhrn said...

He is a super man. சரி ஒரு விடயம் ஜாதினு ஒரு மயிரும் இல்ல. அதெல்லாம் போட
தேவை இல்லை.ஜாதி அற்ற தமிழனை உருவாக்குவோம்.


இனியொரு விதி செய்வோம்

அன்புடன் நான் said...

மலை மண்ணானது...
மான்ஜி மனமே மலையானது!!

பகிர்வுக்கு மிக்க நன்றி!!
படிக்க சொன்ன சத்திரியனுக்கும் நன்றி!!

நட்புடன் ஜமால் said...

சுட்டி தந்த சத்ரியனுக்கு நன்றி
--------------

மனிதம் இன்னும் மறிக்கவில்லை ...

Muruganandan M.K. said...

மிக்க அருமையான பதிவு

குலவுசனப்பிரியன் said...

சுரேஷ் இந்தவாரம் சிறப்பாக தொடுத்துள்ள வலைச் சரத்திலிருந்து வந்தேன். மிகவும் பயனுள்ள பதிவு.

நன்றி.

சதங்கா (Sathanga) said...

மனதை நிறைக்கிறது தசரத் மான்ஜியின் பொதுநலன் குறித்த தனிமனிதச் செயல்.