Wednesday 24 February 2010
சச்சின் இரட்டை சதமும் ஜட்டி விளம்பரமும்
என் தம்பியிடம் இருந்து ஒரு குறுதகவல் " SACHIN HITS 200 BE PROUD TO BE A இந்தியன்" என்று ஒரு குறுந்தகவல் வந்தது .எனக்கு படிக்கும் போது கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது . எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க சச்சின் ஒரு கடவுள் அளவிற்கு பார்க்கபடுவது ஏன். நான் ஒரு காலத்தில் சச்சினின் தீவிரமான ரசிகன் , இந்த விளையாட்டு எல்லாமே அரசியல் என்று தெரிந்தவுடன் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். முன்பெல்லாம் இருக்கும் ஆர்வம் இப்பொழுது இருப்பதில்லை.
சரி அப்படி என்ன தான் அரசியல் விளாயாட்டு தானே என்று ஒரு சிலர் நினைக்கலாம். இந்த விளையாட்டில் கோடிக்கணக்கான பணம் புரண்டு கொண்டிருக்கிறது. இந்திய கோவிலில் சச்சின் ஒரு கடவுள். கடவுள் விளம்பரம் வரும் பொருட்கள் விற்பனை அதிகம். கடவுள் சொல்லி வாங்கமலா இருக்கப்போகிறார்கள். பெப்சி பூஸ்ட் விக்டர் ரீபோக் என்று சச்சின் வரும் விளம்பரங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.
இந்தியா கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிகம் மக்கள் தொகை உள்ள நாடு. அதுவும் கிரிக்கெட் எங்க ஊரு கிராமங்களில் கூட நல்ல ரீச். படம் பார்க்காமல் இருக்கும் பையன் இருப்பான் கிரிக்கெட் விளையாடாத பையன் இருப்பான என்பது சந்தேகமே. இது பெப்சி கோக் போன்ற முதலாளிகளுக்கு நன்றாய் தெரியும். இந்தியா வெற்றி பெற்றால் சச்சின் டோனி அடித்தால் விளம்பரங்கள் கூடும் என்பதே உண்மை. மக்களிடம் தங்கள் பொருட்களை கொண்டு போய் சேர்க்கலாம்.
முன்பொரு காலத்தில் எப்படி அழகி போட்டி இருந்ததோ , அப்படி கிரிக்கெட் ஆகி விட்டது என்றால் மிகை அல்ல .இந்தியாவை சேர்ந்தவருக்கு ஏன் உலக அழகி பட்டம் கொடுக்க வேண்டும் . பொருட்களை விற்பனை செய்யவே. இந்தியா போன்ற மூன்றாம் நாடுகள் வணிகத்திற்காகவே இருக்கின்றன.
இப்பொழுது எல்லாம் வெளியூர்களில் இந்தியா வெல்வதை பார்க்கலாம். முன்பெல்லாம் இந்தியா வெளியூரில் ஆடும் பொழுது ஆடுகளம் எகுரும் சச்சின் தவிர அனைத்து வீரர்களும் திணறுவார். இப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியா போனால் கூட அந்த அளவு எகுரவதில்லை இந்திய விளையாட வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட ஆடுகளங்கள் .ஒரு அளவு வெற்றி பெற்றுவிட்டால் வெளியூரில் ஜெயித்தார்கள் என்ற பேரு வேறு.
எதற்கு இந்த IPL இதுவும் பணம் சம்பாதிக்கவே. இப்பொழுதெல்லாம் படம் பார்ப்பது போல கிரிக்கெட் பார்க்கிறேன்.படத்தில் தோன்றுவது பிம்பமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது, அதை நாம் ரசிக்கிறோம் அதை போல ரசிக்கிறேன்.
இந்த கிரிக்கெட் விளையாட்டு ஒருவனை பித்தனாய் ஆக்குகிறது. டீ கடை முதல் ஆபீஸ் வரை இதே பேச்சு. பேசாதவர்கள் கூட ஸ்கோர் கேட்கிறார்கள். நாமெல்லாம் ஏன் பெரிய பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக்கொள்கிறோம்.நமக்கு கிரிக்கெட் தவிர எந்த பிரச்சனையையும் தெரிவதில்லை.
வெறும் கிரிக்கெட் மற்றும் கலைஞர் இலவசதொலைக்காட்சி நம் புத்தியை மழுங்கடித்துவிடும். ஈழ பிரச்சனை நடக்கும் போது அங்கே போய் சச்சின் அடித்தாலும் நாம் ரசிப்போம். இது உண்மையிலேயே நடந்தது. இலங்கை போர் நடந்த போது
இந்தியா விளையாட அழைக்கப்பட்டது ,இலங்கை பொருளாதரத்தை சரி செய்ய. பொருளாதாரம் வைத்து ஆயுதம் வாங்குவான் நம் குழந்தையை கொள்ளுவான் இந்த அரசியல் ஏன் நமக்கு புரியவில்லை.
பக்கத்துக்கு வீட்டுக்காரன் செத்தாலும் நாம் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்போம். நம் புத்தி மழுங்கடிக்கப்பட்டு விட்டது. கிரிக்கெட் என்ற விளையாட்டில் தான் இந்திய உணர்வு இருக்கிறதா??? நாமெல்லாம் அரசியலை விளையாட்டாய் விளையாட்டை அரசியல் போல முக்கியத்துவம் வாய்ந்ததாய் பார்த்துக்கொண்டிருக்கிறோம் . இந்தியா உலக சந்தைக்கு கோயம்பேடு போல ஆகி கொண்டிருக்கிறது
சச்சின் ரெட்டை சதம் போட்டதால் ஒரு ஜட்டி விளம்பரம் கூட கிடைக்கும்,மற்றபடி வேறு ஒன்றும் பெரிதாய் மாற்றம் ஏற்படபோவதில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
தம்பி,
பிரச்சினைக்குரிய விஷயங்களை பேசியே பிரபலமாக நினைப்பது கவலையைத் தருகிறது. முதலில் பாசிடிவாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்காத ஒரு ஒருவிஷயம் எல்லோருக்கும் பிடிக்கக்கூடாது என நினைப்பதோ, உங்களுக்கு பிடித்த விஷயம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என நினைப்பதோ சரியில்லாத ஒன்று.
எல்லோரையும் மடையர்கள் என என்னும் மனப்பாங்கை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்.
பிரபாகர்.
//இந்த விளையாட்டு எல்லாமே அரசியல் என்று தெரிந்தவுடன் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.//
எதிலெல்லாம் அரசியல் உள்ளது என்று தெரியப்படுத்தினால் அதெல்லாத்தையும் விட்டு வெளியே
வந்துவிடுவீர்களா?
//இந்திய கோவிலில் சச்சின் ஒரு கடவுள்.//
தவறு. கிரிக்கெட் ஒரு மதமென்றால் சச்சின் அதன் கடவுள்.
// இந்திய விளையாட வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட ஆடுகளங்கள் //
என்ன ஒரு ஆராய்ச்சி. தோணுவதையெல்லாம் எழுத வேண்டியது.
//சச்சின் ரெட்டை சதம் போட்டதால் ஒரு ஜட்டி விளம்பரம் கூட கிடைக்கும்,மற்றபடி வேறு ஒன்றும் பெரிதாய் மாற்றம் ஏற்படபோவதில்லை. //
இது ரொம்ப தப்பான வார்த்தைகள். தொடர்ந்து கிறுக்குங்கள்.
Very good article.
we need such thinking for
this age.
என்ன மயில் ராவணன் யோசித்தால் சிந்தித்தால் தவறு என்று சொல்கிறீர்களே ...........................
தப்பு என்றால் வெளியே தான் வர வேண்டும் .......... ஏன் சச்சின் மூன்று கோடி கொடுத்தால்
ஜட்டி விளம்பரத்தில் வருவார் .......இல்லையா என்ன?????
நல்ல பதிவு.
விளையாடுவது அவரது தொழில்.
அதற்க்கு மேல் அவரிடம் எதுவும் எதிர்பார்ப்பது நம் மக்களின் முட்டாள்தனம்.
மதம் கடவுள் எல்லாம் தேவையில்லாத மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள்.
கிரிக்கெட் இப்போது பொழதுபோக்காக மாறிவிட்டது, இல்லை மாற்றப்பட்டு விட்டது.
நீங்கள் சொல்வது போல அதை ஒரு திரைப்படம் போல பார்ப்பது தான் நமக்கு நல்லது.
எனக்கு தெரிந்த வரை சச்சின் எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் அணியை வெற்றிப்பாதிக்கு வழிநடத்தியது இல்லை.
ஏனய வீரர்களுடன் ஒப்பிடும் போது இந்த விடயத்தில் இருபது வருட விளையாட்டு அனுபவத்தில் அவர் சாதித்தது சொற்பமே.
நம் மக்களுக்கு யாரையாவது வைத்து வணிகம் செய்ய வேண்டும்.
அதற்க்கு அவர்தான் சரியான ஆளாய் இருப்பார் என்றே தோன்றுகிறது.
இது ஒரு விதமான மசோகிஸ்ட் மனநிலையில் எழுதப்பட்ட பதிவாகவே தெரிகிறது மன்னியுங்கள்.
உங்கள் மூளை உங்கள் சிந்தனை.. எதுவாயினும் நன்று..நான் ரசித்தேன்.
hai this is true
its true
நல்ல இடுகை நண்பா... உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பதில் தவறில்லை.... தொடர்க...
அண்ணாச்சி...முதலாளி...சார்....மரியாதையா எவ்வளோ வார்த்தை வேணா கேட்டுக்கங்க... சச்சின் கடவுள் தான்...நாங்க எல்லாம் பூசாரிங்க தான்! ஆனா தலைவா இங்க சச்சினுக்கு தீபாரதனை காட்டறவன் முதக் கொண்டு தீவிர வாதியா இருப்பானே... சச்சின் கிரிக்கெட் மேட்சை கட் அடிச்சுட்டா விளம்பரத்துல நடிக்கப் போனாரு! 100க்கு மேல 100 அடிச்சுட்டு தானய்யா விளம்பரத்துல நடிக்கப் போனாரு! விட்டா இலங்கை பிரச்சினை தீரலை..காஷ்மீர் பிரச்சினை தீரலை..அதனால சச்சின் ரன்னே அடிக்கக் கூடாதும்பீங்க போலயே...
சச்சின் 200 அடிக்கிறதுக்கும் ஜட்டி விளம்பரத்துல நடிக்கிறதுக்கும் நாட்டுல பிரச்சினை தீர்றதுக்கும் என்னய்யா சம்மந்தம்.? பல் இருக்கறவன் பட்டாணி சாப்பிடறான்!உங்களுக்கு ஏன் சார் எரியுது?
உங்கள் கருத்து தவறானது.
உங்களுக்கு பிடித்த விஷயம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என நினைப்பதோ சரியில்லாத ஒன்று. But ... ரசித்தேன்.
என்ன நண்பரே எடுத்த பிரச்சனைக்கெல்லாம் ஈழத்தமிழரை அதாவது எங்களை துணைக்கு அழைக்கும் உங்கள் வழக்கத்தை இங்கும் விட வில்லையோ...
http://saaralhal.blogspot.com
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அ
நண்பர்களே 30 வருடம் நம் கலையை
சினிமாவில் வளர்த் நம் இளையராஜா
அவர்களுக்கு ஒரு மத்திய அரசு விருது கூட வழங்கப்படவில்லை முந்தைய மாதம் வரை
ஆனால் சூதாட்டத்தில் முழு பணத்தை பெற்றுக்கொண்டு
அரசாங்கத்தில் இருந்து வரி விலக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு
ஏமாற்றும் இவர்களுக்கு பத்ம விருது தரவில்லை என்பதுதான் இவர்களுக்கு முக்கிய சங்கடமாம்
http://tamilan-kavithaikal.blogspot.com/
விவசாயிகள் தற்கொலைக்காக சச்சின் குரல் குடுக்க வேண்டும் என்கிற உங்களைப் போன்ற உலக அரசியல் ஞானம் உள்ளவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பார்த்தேன்..ம்ஹூம் நம் தலைமுறை தேறாது!
அழுகிறேன் என்றீர்கள்..அழாதீர்கள் என்றேன். தனி நபர் தாக்குதல் என்கிறீர்கள். விவசாயிகள் தற்கொலை செய்தது வருத்தமளிக்கிறது . அதற்கு காரணம் தவறான பொருளாதார கொள்கைகள் என்கிறேன் நான். நரசிம்மராவும் மன்மோகனும் செய்த தவறுக்கு ( தவறில்லாமல் இருக்கலாம்.இதுவே விவாதப் பொருள் தான் ) கிரிக்கெட் பிளேயரை நொந்து என்ன பயன்?
உங்கள் நோக்கம் விவசாயிகள் தற்கொலையை தடுப்பதா அல்லது அதை மீடியா சரியாக காட்டாமலிருப்பதா? விதர்பா தற்கொலைகளை பற்றி எழுதினேன் யாருமே ஓட்டுப் போடவில்லை என அழுதிருக்கிறீர்கள். நீங்கள் எடுத்த வாந்திக்கு ஓட்டு ஒரு கேடா? நீங்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி விவசாயப் படுகொலைகளை விவாதப் பொருளாக்கினால் யார் ஓட்டுப் போடுவார்கள்? நீங்கள் மறைமுகமாக விவசாயிகளை கேவலப்படுத்தியிருக்கிறீர்கள் அன்பரே.
இந்த விஷயம் தினசரிகளின் முதல் பக்கத்தில் வரவேண்டும் என்று போராடுங்கள் என்று சொல்கிறேன். ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் வரவில்லையே என கவலைப் படுகிறீர்கள்.
மற்றபடி..சச்சின் பெப்ஸீ விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தினால் , ஐ.பி.எல் போட்டிகள் நடப்பது நிறுத்தினால் விவசாயிகள் தற்கொலைகளை மீடியா கண்டுகொள்ளும் என்கிற அரசியல் ஞானம் புல்லரிக்க வைத்து விட்டது!
உலக அரசியலை மட்டும் அல்ல ..உள்ளூர் அரசியலை புரிந்து கொள்ளவும் காமன் சென்ஸ் வேண்டும் நண்பரே!
கட்டுரை யின் சென்ஸ் பற்றி உங்களது சென்ஸ் இன்மை புல்லரிக்க வைக்கிறதே அதற்கு என்ன செய்ய
சச்சின் இரட்டை சதமும் ஜட்டி விளம்பரமும்----ஜட்டி +photo+சச்சின் ரெட்டை சதம் போட்டதால் ஒரு ஜட்டி விளம்பரம் கூட கிடைக்கும்,மற்றபடி வேறு ஒன்றும் பெரிதாய் மாற்றம் ஏற்படபோவதில்லை=நல்ல,தெளிவான பதிவு
நீங்கள் எழுதிய கருத்து மிகவும் தவறானது சொந்தமாக ஒரு ப்ளாக் ஆரம்பித்தால் கண்டதையும் எழுதி விடுவிர்களா???
Post a Comment