Saturday, 13 February 2010

விண்ணை தாண்டி வருவாயா














ஆதாம் ஏவாள் காதல் உலக இயக்கம், காதல் ஆதார புள்ளி............மார்க்ஸ் தெரியும் ,மார்க்ஸ் பின்னால் இருந்த ஜென்னி ஜென்னி காதல், மார்க்ஸ் மானுடத்தின் மேல் வைத்திருந்த காதல் மூலதனத்தை கொடுத்தது. கொடுங்கோலன் ஹிட்லரிடம் கூட, காதல் இருந்தது ஹிட்லர் தோல்வி என்று தெரிந்தவுடன் காதலியை கொலை செய்தானாம், தன் காதலியின் சடலம் யாருக்கும் கிடைக்க கூடாது என்பதிலே குறியாய் இருந்தானாம். ஏன் கிடைத்தால் ஹிட்லர் காதலி என்றே நாசம் பண்ணி விடுவர் அந்த கொடுன்கோலனுக்கும் காதல் இருந்தது. காதல் ஒரு அழகிய கவிதை. கவிதை என்பது பொய்யின் வடிவம், அதைப்போல காதல் பொய் என்றாலும் அழகாய் தான் இருக்கிறது.


காதல் அழகாய் தான் இருந்தது எனக்கும் அற்பவாதமாய் மாறாத வரை. காதலி இருக்கும் தெரு மிகவும் விசித்ரமானது பல கிலோமீட்டர்கள் ஒரே தெருவில் நடந்து இருக்கிறேன், காதலியை பார்க்க முடிய வில்லை என்றாலும் அவள் வீடு பார்க்கும் போது மனசு சிறகடித்து பறக்கிறது. நடந்து கொண்டே பறக்க வேண்டுமா காதலியின் வீடு முன்பி நடங்கள் .
ஒரு சந்து திரும்பும் போது காதலியின் வீடு இருக்கும் அது எனக்கு திருப்பத்தை ஏற்படுத்திய திருப்பம்.

காதலிக்கும் போது கேட்கும் காதல் பாடல்கள் மிக அழகானது. சாதாரண வரிகள் கூட மிக கவிதையாய் தெரியும். அப்பொழுதெல்லாம் சச்சின் படத்தில் வரும் கண்மூடி திறக்கும் போது பாடல் கேட்பேன் .............................................
அதில் ஒரு வரி வரும் " தெரு முனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்றிருந்தேன் தேவதையை காணும் போது திருநாள் என்கின்றேன்" என்ற பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் ..................................என்ற வரிகள்
மிகவும் பிடிக்கும் ஏன் பிடிக்கும் தெரு முனை என்ற வார்த்தை மிகவும் பிடித்தது .

"நினைத்து நினைத்து பார்த்தேன் " பாடல் பிடிக்கும் . சேரன் படங்கள் மிகவும் பிடிக்கும் ........குறிப்பாக " சேது" படத்தில் வரும் " நினைச்சு நினச்சு" பாடல் பிடிக்கும் ..........செல்வராகவன் படம் என்றால் மிகவும் பிடிக்கும். "காதல்" படம் பிடிக்கும் அதில் சந்த்யா பரத்தை "தடியா" என்று சொல்வது போல என் காதலியும் சொல்லீருக்கிறாள். "தொட்டு தொட்டு என்னை" பாடல் என்னை தொட்டு விட்டு போகும் ..................அற்பவாததில் ஊறி கிடந்த நாட்கள் ..........
ஊர் பிரச்சனை தெரியாது. சிலபேருக்கு அந்த உலகத்தில் தெரு உள்ளது எனக்கு மட்டும் அந்த தெருவிலே உலகம் இருந்தது .

காதல் உயிர் குடிக்க கூடியது .நீங்கள் பழயதை நினைத்து பார்த்தால் இறந்து விட்டீர்கள் என்று அர்த்தம் . அற்பவாததிலே மூழ்க வேண்டாம் . காதலியின் தெருவை விட்டு வெளியே வாருங்கள் ........ தெரு உலகம் அல்ல உலகமே தெரு. இப்பொழுது காதல் வெறும் ஜாதி பார்த்து மதம் பார்த்து ஆண் வேலை பார்த்து வருகிறது . இந்த காதலை விட விடலை பருவ காதல் ஒரு அளவிற்கு நெருக்கமாய் உள்ளது இயற்கையாய் ஏற்படும் ஈர்ப்பு . என்னை பொறுத்த வரை முதல் காதலை தவிர வரும் காதல்கள் கூட்டணி ஆட்சி போன்று . இவனுக்கு நல்ல வேலை இருக்கிறதா நல்லவனா இவள் நமக்கு ஒத்து வருவாளா என்று பார்க்கும் காதல் பக்குவபட்ட காதல் என்கின்றனர். பக்குவம் என்றாலே அது காதல் இல்லை நம் வாழ்க்கைக்கு ஒத்து வருவாள் என்பது நம் வாழ்க்கைக்கு ஒத்து வரும் என்று வேலை தேடுவோம் அதை போன்றது .

சரி காதலியுங்கள் ஆனால் அற்பவாதி ஆகா வேண்டாம் காதலி இல்லை என்றாலும் உலகம் இயங்கும் . நாம் சேதுவாக மாற வேண்டாம் மார்க்ஸ் போல இருப்போம். லைலா போல ஆகா வேண்டாம் ஐரோம் ஷர்மிளா போல இருப்போம் .ஷாஜஹானாய் இருக்க வேண்டாம் தசரத் மஞ்சித் போல இருப்போம்.காதலி பார்க்கவில்லை என்றால் என்ன உலகத்தை அன்பால் ஜெயிப்போம் மார்க்ஸ் போல காதலி கண் தெரியாத இடத்தில் இருந்து காதலிக்க ஆரம்பித்து இருப்பாள் . "அடியே கொல்லுதே" என்ற வாரணம் ஆயிரம் பாடல் கிடார் சத்தத்துடன் கேட்கிறது . தாமரையின் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது .காதலியை பிரிந்தால் என்ன நீங்களும் அவரும் ஒரே வானத்து அடியில் தான் இருகிறீர்கள் . வான் அளவு உயருங்கள் உன் காதலி உங்களை
கீழ் இருந்து பார்த்து ரசிப்பாள் அவ்வளவு தானே. விண்ணை தாண்டி வளருங்கள் அவள் விண்ணை தாண்டி வர தான் செய்வாள்

1 comment:

ஸ்ரீராம். said...

காதல் நினைவுகள்.