Thursday 28 January 2010
முத்துக்குமரனுக்கு வீர வணக்கம்
தூத்துக்குடியின்
என் மூத்தகுடி முத்துக்குமரனே,
உன் மரண வாக்குமூலத்தில் பிறந்தவன் நான்,
ஈழம் எரிந்து கொண்டிருந்தபோது
நீயும் எரிந்துகொண்டிருந்தாய் ....
அந்த தீயின் நீட்சியில் ஈழம்
எரிவதை பார்த்தோம் நாங்கள் ...!
நாங்கள் பதிவு போட்டுக்கொண்டிருந்த போது
நீ மரணவாக்குமுலத்தை பதிவு செய்தாய் ............!
வரலாறு சில மரணங்களை மட்டுமே நியாபகம் வைத்திருக்கும்
அதில் உன் மரணமும் உண்டு ..............!
ஈழம் ஜனனம் அடைய
நீ மரணம் அடைந்தாய் ...........!
ஒரே ஒரு வருத்தம் ....
நீ சொன்னது போல உன் பிணம்
வைத்து போராடி இருக்க வேண்டும் .....
அதை வைத்து போரடாக்கூட தைரியம் இல்லை
சந்தர்ப்பவாதிகளுக்கு ....................................!
நீ இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
என் அண்ணனே ...............!
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//நீ சொன்னது போல உன் பிணம்
வைத்து போராடி இருக்க வேண்டும் .....
அதை வைத்து போரடாக்கூட தைரியம் இல்லை
சந்தர்ப்பவாதிகளுக்கு //
வருத்தத்திற்குரிய நிகழ்வுதான்... இதில் குற்றவாளிகள் நாமும்தான்.
ஆம் நண்பா ..........குற்றவாளி கூண்டில் நாமும் இருக்கிறோம்
முத்துக்குமராரின் நினைவு நமது சமூக அக்கறையையும், செயலையும் முன்னேற்றுவதற்காகவாவது பயன்படட்டும்.
வருகைக்கு நன்றி வினவு
வீர வணக்கங்கள். வருத்தத்திற்குரிய நிகழ்வு. :-(
//நாங்கள் பதிவு போட்டுக்கொண்டிருந்த போது
நீ மரணவாக்குமுலத்தை பதிவு செய்தாய் ............!//
தமிழனுக்காக உயிர் கொடுத்த மாவீரனுக்கு என் வீர வணக்கங்கள்...
கவிதையில் அஞ்சலி மட்டுமல்லாமல், படிப்பவனுக்கு ஓங்கி கொடுக்க கையில் ஒரு சாட்டையும் வைத்திருக்கிறது. உங்களை போன்ற சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மிக குறைவு. விவேகானந்தர் கேட்ட அந்த ஐந்து இளைஞர்கள்லில் நீங்களும் ஒரு ஆள் என நினைக்கிறன். தொடருங்கள்....
உன் நண்பனாய் உன்னிடம் பழகியதர்க்காக பெருமைபடுகிறேன் ஒருபுறம்! மறுபுறம் வெட்கி தலை குனிகிறேன் உன் கனவுக்காக நாங்கள் போரடவில்லைஎன்று!!!!
உன் நண்பனாய் உன்னிடம் பழகியதர்க்காக பெருமைபடுகிறேன் ஒருபுறம்! மறுபுறம் வெட்கி தலை குனிகிறேன் உன் கனவுக்காக நாங்கள் போரடவில்லைஎன்று!!!!
நண்பரே முத்துக்குமரன் நண்பரா நீங்கள்
ஆமாம்
Post a Comment