Friday, 29 January 2010

பம்பாய் - சினிமா திரை விலகும் போதுநான் சிறு வயதில் இருக்கும் போது என்னை பாதித்த "பாம்பே" என்ற படமும் ஒன்று. ஆனால் "சினிமா திரை விலகும் போது" புத்தகம் படித்ததில் இருந்து அந்த பிம்பம் நொறுங்கி போனது .போன பதிவில் ஒரு திரைப்பட உதவி இயக்குனர் "வேட்டைக்காரன்" "வீராசாமி" போன்ற படங்களை போல் அல்ல இவர்கள் எல்லாம் சிறந்த இயக்குனர் என்று சொன்னார். இருந்து விட்டு போகட்டும் . சிறந்த இயக்குனர்கள் தான் ஆனால் சமூக மதிப்பீடு என்ன.
சரி அப்படி இந்த புத்தகம் பம்பாய் படத்தை பற்றி என்ன தான் சொல்கிறது. வரலாறை திரித்து சொல்கிறது இப்படம்.பம்பாய் கலவரத்தை ஆரம்பித்தது ஹிந்துக்களே ஆனால் கலவரம் ஆரம்பக்காட்சி முஸ்லிம் துடங்கி வைப்பது போல் இருந்தது .முஸ்லிம் கலவரம் செய்யும் பொழுது close up காட்சிகளும் ,ஹிந்துக்கள் கலவரம் செய்யும் போது wide காட்சிகளாய் தந்திரமாய் அமைக்க பட்ட காட்சி அமைப்பு.

சரி ஒரு பேரன் தாத்தாவுடன் வரும் பொழுது தாத்தா திரு நீறு அணிந்திருப்பார் அதை பேரன் அழிப்பான்.ஏன் என்றால் திருநீறு கூட ஒத்துக்கொள்ள முடியாத முஸ்லிம் என்று காட்டப்படுகிறது. ஆனால் இந்த ஹிந்து தாத்தாவோ வீடு எரியும் பொழுது குரான் என்ற புனித புத்தகத்தை காப்பாற்றுவார் ,ஏன் என்றால் ஹிந்து பெருந்தன்மை வாய்ந்தவனாம். என்ன மணி சார் டச்.

படத்தில் உச்ச கட்டம் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது, உண்மையான கலவரத்தில் ஹிந்துக்களே ஆரம்பித்ததால் பல் தாக்ரே வந்து நிறுத்தி வைப்பாராம், முஸ்லிம் தலைவர் இறந்த பிணங்களை பார்த்து வருத்த பாடுவாராம் இது வரலாறு . ஆனால்
படத்தில் தலை கீழாக காட்டப்பட்டுள்ளது ,முஸ்லிம் தலைவர் கலவரத்தை நிறுத்துவாராம்,தாக்ரே போன்ற தலைவர் வேடத்தில் வருபவர் மக்களுக்காய் வருந்துவாராம் என்ன கொடுமை?????

இந்த புத்தகம் இதை எல்லாம் துகில் உரிக்கிறது. இதை போலவே தான் ஹே ராம் படத்தையும் ஒரு கிழி கிழி என்று இந்த புத்தகம் கிழிக்கிறது. என்ன சொல்ல ஒரு படம் ஒரு காலத்தின் பதிவு, ஒன்று நமக்குளாகவே நமக்கு தெரியாமல் இந்த ஜாதி வெறி ,இந்த அற்பவாதம் எல்லாம் ஊறி இருக்கும். இவர்கள் சிறந்த இயக்குனர் தான் அதனால் தான் நமக்குள்ள இருக்கும் எண்ணத்தை உபயோக படுத்தி காசு ஆக்குகிறார்கள்.

நான் கூட அற்பவாதியாய் இருந்து இருக்கிறேன். பொக்கிஷம் படத்தை போற்றி பதிவு எழுதினேன். ஆனால்
என்ன உண்மை சமுதாயத்திற்கு பயன் படாத இலக்கியம் இலக்கியம் அல்ல. எழுத்து பிழையுடன் ஒரு கவிதை
எழுதினால் கூட சமூகத்திற்கு பயன்பட்டால் அது இலக்கியம் என்பேன்.

பாலா அவர்கள் சமீபத்தில் "கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் இல்லாதவருக்கு " என்று வீர வசனம் பேசினார். படத்தில் பூஜா ஒரு கிருத்துவ தேவலாயதிற்க்கு போவாள் . அதற்கு அடுத்த காட்சியில் மான பங்க படுத்த படுவாள்
பின்பு அறியாவான கடவுளிடம் வருவாள், படம் என்ன சொல்ல வருகிறது பாலா சார் . இப்படி எடுத்தால் தான் நேஷனல் அவார்ட் கிடைக்குமா என்ன??? உள்ளே ஆயிரம் அழுக்கை வைத்துக்கொண்டு " நான் கடவுள் " என்ற வீராப்பு வேறு.

இந்த புத்தகம் படிக்க வேண்டிய புத்தகம்.

7 comments:

Sangkavi said...

படங்கள் அனைத்தும் அருமை...

முகிலன் said...

/Sangkavi said...
படங்கள் அனைத்தும் அருமை.//

இது உள்குத்தா இல்ல படிக்காம போடுற கமெண்டா?

க.பாலாசி said...

பம்பாய் எனக்கும் மிக பிடித்த படம்தான் நண்பா... நல்ல இடுகை...

Dinesh said...

நீங்க சொல்றாத பாத்த மொத்தமாவே எந்த படத்தயும் பாக்கதான்னு சொல்ற மாதிரி தான இருக்குது... ?

ஜெய் said...

// சரி ஒரு பேரன் தாத்தாவுடன் வரும் பொழுது தாத்தா திரு நீறு அணிந்திருப்பார் அதை பேரன் அழிப்பான்.ஏன் என்றால் திருநீறு கூட ஒத்துக்கொள்ள முடியாத முஸ்லிம் என்று காட்டப்படுகிறது. ஆனால் இந்த ஹிந்து தாத்தாவோ வீடு எரியும் பொழுது குரான் என்ற புனித புத்தகத்தை காப்பாற்றுவார் ,ஏன் என்றால் ஹிந்து பெருந்தன்மை வாய்ந்தவனாம். என்ன மணி சார் டச். //

அந்த முஸ்லிம் அப்பா, ஹிந்து அப்பாவை தன் சகோதரன் என கூறி காப்பாற்றுவது போன்ற காட்சி அடுத்த நிமிடமே வரும்.. அதை தவிர்த்து இருக்கிறீர்கள்.. ஏன்? நான் மணிரத்னத்துக்கோ, படத்துக்கோ ஆதரவளிக்கவில்லை.. உங்கள் பார்வையில் குறையிருக்கிறது என்று சொல்கிறேன்..

படம் பார்த்தவர்களில் உங்களைப்போல ஃபீல் செய்கிறவர்கள் 10 சத்வீதம் என எடுத்துக்கொண்டாலும், 90 சத்வீதம் மக்களுக்கு அது ஒரு ஹிந்து முஸ்லீம் இடையே சமாதானத்தை கொண்டுவர முயற்சிக்கும் படமாகவே தோன்றியது.. 90 சதவீத மக்களுக்கு அந்த விஷயத்தை மணி புரிய வைத்தார்.. நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்? நன்றாக எழுதுகிறீர்கள்.. நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே எழுதலாமே? ஏன் பகைமையையும், விஷத்தையும் எழுதுகிறீர்கள்?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பரே,
நலமா?சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்,உங்கள் கருத்துக்களை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்,பொக்கிஷம் என்னை பொறுத்த மட்டில் மிகச்சிறந்த படம்.அற்புதமான உழைப்பிருந்தும் பலன் கிடைக்காமல் போன படம்,பேரலல் சினிமா இயக்குனர்களில் இவரது பெயர் எங்காவது இருக்கா? என பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/Parallel_Cinema

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

ஷஙகர் போல தன்னை கமர்ஷியல் இயக்குனர் என அறிவித்துவிட்டு இவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.யார் கேட்கப்போறா?