Saturday 9 January 2010

உதவி ஒளிப்பதிவு கலைஞர் ரஜினி கமல் SICA












சரத்குமார் ரஜினிகாந்த் கமலஹாசன் ஏதொ திரை பிரச்சனை அடித்தட்டு தொழிளாலருக்காக தான் கேட்பது போல பிம்பம் உருவாக்க பார்க்கிறார்கள்.அது உண்மைக்கு புறம்பானது ராதிகா தயாரிப்பாளர் என்பதால் தான் பிரச்சனை கேட்கப்பட்டது, அவர் தொழிலாளியாக இருந்தால் கலைஞரும் கேட்க மாட்டார் ரஜினி கமலும் குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள் யோகிதை என்னவென்று பார்ப்போம்,பெரிய ஆள் என்றால் எதிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை தோழர்கள் தொழிலில் இருக்கிறார்கள் அவர்களிடம் இருந்து வாய்மொழியாக கேட்டது.













தரமணியில் உள்ள M G R திரைப்படக்கல்லூரி இந்தியாவில் உள்ள சிறந்த ஒளிபதிவாளர்களை வளர்த்த இடம்.அசோக் குமார் ,P C ஸ்ரீராம்,ரத்னவேலு,ராஜீவ் மேனன்,R D ராஜசேகர், விஜய் மில்டன்,மணிகண்டன்,தங்கர் பச்சான் போன்றவர்கள் உருவாகிய இடம்.
அங்கே படித்து வரும் ஒரு ஒளிப்பதிவாளன் இந்திய அளவிலே பேசப்படுவான் என்பதே உண்மை. அங்கே படிக்கும் மாணவன் ஒரு கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் அதிகம். அவர்கள் மூன்று வருடம் படிப்பு முடித்து வந்தவுடன் அவர்களை SICA என்னும் அமைப்பில் உறுப்பினர் அட்டை எடுக்க வேண்டும்.

அது union , SOUTH INDIAN CINEMATOGRAPHER ASSOSIATION என்ற அமைப்பு. அது எடுக்க நாற்பது ஆயிரம் ரூபாய். அது எடுக்கவில்லை என்றால் உதவி ஒளிபதிவாளராக கூட ஆக முடியாது ஒரு ஏழை மாணவன் எப்படி பணம் கட்டுவான். அவன் வீட்டிலிருந்து சண்டை போட்டு சினிமாவிற்காக உழைத்திருப்பான்.வீட்டில் காசு வாங்க முடியாது,அவன் வீடு ஏழை வீடாக இருந்தால் இன்னும் கொடுமை. அவன் ரூம் வாடகை,சாப்பாடு செலவு இதற்கே
கஷ்டப்படுவான்,இது எல்லாம் தெரிந்தும் அவன் மிரட்டப்படுவான் அதுவே உண்மை."நீ யார்ட போய் வேலை செய்வேன்னு பார்த்திடுவோம்ட" என்று குரல் வரும்.

சரி அப்படியாவது SICA சரியாக இருக்கிறதா.ஒரு ஊழியனுக்கு சம்பளம் வாங்கி கூடத் தரவில்லை என்பதே உண்மை.,வேலை செய்வது எல்லாம் பெரிய படம் ஆனால் சம்பளம் ஏன் bata கூட ஐம்பது ரூபாய் மட்டுமே அதுவும் சூட் இருந்தால் தானே?ரஜினிகாந்த் வாய் கிழிய பேசுகிறாரே அவர் மகள் தயாரிப்பாளரை இருக்கும் படத்தில் கூட இதே பிரச்சனை. ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமென்றால் அதிகமாய் உழைப்பது உதவி இயக்குனர் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர்.அவர்களுக்கு சம்பளம் வெறும் ஐம்பது நூறு அதுவும் கிடைக்காது.

ஒரு கடைக்கோடி ஊழியன் பிரச்சனை என்றால் ரஜினியோ கலைங்கரோ வருவதில்லை இதுவே உண்மை. நூறு கோடியில் படம் எடுக்கும் தயாரிப்பாளனுக்கு வரிவிலக்கு ஆனால் கடை நிலை ஊழியன் உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும்.ஆனால் சம்பளம் மட்டும் கேட்க கூடாது.

என் நண்பர் அப்புறம் எதற்கு UNION என்று கேட்டதற்கு "உங்கள் கடைசி காலத்தில் ஏதாவது செய்யும்" என்று பதில் வந்துள்ளது. கடைசி காலத்தில் என் நண்பரோ ஒளிபதிவாளராக சம்பாதித்து இருப்பாரே.இப்பொழுது தானே உதவ UNION தேவை மாதம் ஏதோ சம்பளம் கொடுத்தால் போதுமே.













மாணவர்கள் உண்ணா விரதம் கூட இருந்தனர். அமைச்சர் பருதி மாணவர்களை சமாதனம் படுத்தினார்.ஆனால் காரியம் ஒன்றும் ஆகவில்லை, நடிகைகளுக்காக படம் எடுக்கும் கலைஞர் அவர் பிரச்சனை என்றால் முன்னால் நிற்கும் தலைவர் ஏன் இந்த பிரச்சனை
தெரியாதா?கமல் நடத்தும் ஒரு அமைப்பிற்கு மக்கள் வரிப்பணத்தை நன்கொடையாக கொடுத்த
கலைஞர் மாணவர்களுக்கு ஏன் இந்த சலுகை செய்யலாமே.ஏன் செய்யவில்லை ஒரு அரசியல் இருக்கிறது.

அரசு திரைப்பட கல்லூரிக்கு போட்டியாக ராஜீவ்மேனன் நடத்தும் திரைப்படக்கல்லூரி இருக்கிறது ஆறு மாதத்திற்கு இரண்டு லட்சம் கட்டணம் அதில் மேட்டுக்குடி பணக்காரன் மாணவனே படிப்பான்,அவனால் நாற்பது ஆயிரம் எளிதாய் கட்ட முடியும். மேட்டுக்குடி மாணவர்கள் மட்டும் படிக்க வேண்டும் அதனால் அதை எழுபத்தி ஐந்து ஆயிரமாய் உயர்தப்போகிரார்கலாம் ஏன் ஏழை மாணவன் படிக்கவே கூடாது படித்தாலும் ஒளிபதிவாளனாய் ஆகக்கூடாது. இது திரைப்படக்கல்லூரியையும் தனியார்மயமாய் உருவாக்க ஒத்திகை.பணம் இருப்பவனே படைப்பாளி....

படிப்பது என்றால் பிரசாத் லேப் அல்லது ராஜீவ் மேனன் போன்ற இடத்தில் தான் படிக்க வேண்டும். பணக்காரனே கலைஞன் ஆக வேண்டும். ரஜினி பொண்ணின் படம் சம்பள பாக்கி இருக்கிறது அது பிரச்சனை இல்லை. சரி கலைஞர் இடம் சொன்னார் அவருக்கு மீரா ஜாஸ்மின் ராதிகா பிரச்சனை பெரிதாய் இருக்கிறது.


















சரி உலக நாயகன் விடயத்திற்கு வருவோம்??மூன்று மாதம் முன்பு திரைக்கதை பற்றிய கலந்துரையாடலில் ராஜீவ் மேனன் மாணவர்களுக்கு அனுமதி வழங்க பட்டுருக்கிறது, ஆனால் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதாம் அதனால் அனுமதிக்கபடவில்லையாம் சொல்கிறார் உலக நாயகன் .......அதுவும் கோலிவுட் என்று சொல்லக்கூடாது என்று சொன்ன உலகநாயகன்....அப்பொழுது ஆங்கிலம் தெரிந்த உலக நாயகனும் மேட்டுக்குடி வர்க்கம்,பணக்காரன் முதலியவனே படம் செய்ய வேண்டும்...

இவற்றின் மொத்த சாரமாய் சரத் அவர் பிரச்சனை என்றதும் தொழிலாளர்கள் பிரச்சனை பற்றி பேசுகிறார் என்ன கொடுமை?ரஜினி சொல்வது போல RICH GET RICHER POOR GET அந்த வசனம் உங்களுக்கு பொருந்தாதா??? ஏன் கலைஞர் வரிவிலக்கு அளிக்கிறாரே கோடிகளில் புரள்பவனுக்கு வரிவிலக்கு அடிமட்ட ஊழியன் நாற்பது ஆயிரம் கட்ட வேண்டும் என்ன கொடுமை. கமல் அவர்கள் ஆங்கிலம் தெரிந்தவனுக்கே தனக்கு தெரிந்த சினிமாவை கற்றுக்கொடுப்பார்....கமல் உங்களை விட கிராமத்தில் இருந்து வருபவன் அழகான மண்ணை படம் பிடிக்கிறான் என்பதே உண்மை.........இவற்றின் மொத்த சாரம் கீழிருந்து ஒருவன் முன்னேற கூடாது,கலைஞர் அவர்களே முடிந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் .

ஏன் பணம் படைத்தவன் மட்டுமே கலைங்கனாக வேண்டும். கலைஞர் அவர்களே நீங்கள் பராசக்திக்கு வசனம் எழுதும் போது உங்களிடம் பணம் இருந்ததா என்ன????என்ன முதாலாளித்துவம். உங்களால் ஒரு கடை நிலை ஊழியனுக்கு சம்பளம் வாங்கித் தர முடியுமா

5 comments:

மீன்துள்ளியான் said...

அட மைக் கிடச்ச வேற மாதிரி பேசுற கூட்டம் தானே நம்ம மக்கள் .

​செல்​லையா முத்துசாமி said...

உறுப்பினராகாத ஏழை உதவி ஒளிப்பதிவாளர்களை நாய்பிடிக்க வந்தமாதிரி படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே வந்து தேடுவார்கள் இந்த தென்னிந்திய ஒளிப்பதிவு சங்கத்தினர்.

இதுவரை ஒளிப்பதிவு சார்ந்த வழிகாட்டி நூல் ஒன்றைக் கூட தமிழில் கொண்டுவராத இந்த சங்கம் தமிழகத்தில் இருப்பது என்ன மயித்துக்காம்.

பெரும் ஒலிப்பதிவுப் புடிங்கிகள் என்று சொல்லப்படும் எவனுக்காவது இந்த அக்கறை உண்டா?

Jackiesekar said...

ரொம்ப நியாயமான கோபம்.. மிக அழகான கட்டுரை...

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் என் நண்பர்கள் சொல்லிருக்கிறார்கள் .........அவர்கள் மிரட்ட படுகிறார்கள் .........அனைவரும் ஏழை மாணவர்கள் வேறு.....!

maro cinema said...

நியாயமான கேள்விகள்.............. இதை வலை பகுதியல் சொல்லி பிரயோஜனமில்லை!!!!!!!!!!!!!!!!! அந்த பணத்திமிர் பிதவர்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்....................... அதற்குண்டான வழியை செய்யோம் வாருங்கள் ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;