Monday, 25 January 2010

பட்டிமன்றம் தேவையா இல்லையா??? என்று ஒரு பட்டிமன்றம்


















சின்ன வயதில் இருந்து தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி என்றால் பட்டிமன்றம் தான் பார்ப்பேன். அப்பொழுது எல்லாம் பட்டிமன்றம் பார்ப்பவர்கள் எல்லாருமே புத்திசாலிகள் மற்றவர்கள் எல்லாரும் முட்டாள் என்ற பிம்பம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.இந்த பட்டிமன்றங்கள் என்ன சாதித்து விட்டது. "அசத்த போவது யாரு" போன்ற நிகழ்ச்சிக்கும் பட்டிமன்றதிற்கும் எந்த வித்யாசமும் இல்லை என்ற தரத்திலே தான் உள்ளது.

ஆண்களா பெண்களா போன்ற தலைப்பை கேட்டு காது புளித்து விட்டது.
ஆண்களா பெண்களா என்றால் சாலமன் பாப்பையா, பழைய பாடலா புதிய பாடலா என்றால் லியோனி பட்டிமன்றம். இல்லை என்றால் சங்க இலக்கியத்திலே போவது.இதை தவிர சமூகத்தில் பிரச்சனைகளே இல்லையா என்ன???? " அரசு தொலைகாட்சி கொடுப்பது சாதகமா பாதகமா" போன்ற தலைப்புகள் ஏன் வைபதில்லை. ஏன் பெரிய பிரச்சனைகளை யாருமே பேசுவதில்லை. "கோகோ கோலா வருகை சுற்று சுழலை பாதிக்குமா இல்லையா" போன்ற
தலைப்புகள் ஏன் வைப்பதில்லை. இவர்களை பொறுத்த வரை இலக்கியம் காசு பார்க்கும் வேலை.

பட்டிமன்றத்திலும் சரி இலக்கியத்திலும் சரி ஏன் பெரிய பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதில்லை. ராஜா வருவார் அவர் சன் டிவியில் தோன்றுகிறார் அதனால் டிவி வைத்து கோலங்கள் இல்லை அதன் திரைப்படங்கள் வைத்து ஏதாவது பேசுவார் உடனே ஒரே கைதட்டு.இது மலிவான ரசனை தானே. இந்த தீபாவளி வரை இவர்கள் ஆண்களா பெண்களா தரத்தில் பட்டிமன்றம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டிமன்றத்தின் சமுதாய மதிப்பீடு என்ன ராஜா மற்றும் பாப்பயாவிற்கு சினிமா வாய்ப்பு.....சமுகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அது இலக்கியமே அல்ல. இல்லகில்லாத இலக்கியம் இலக்கியமாகாது.எள்ளல் இருக்கிறது துள்ளல் இருக்கிறது எழுச்சி இல்லை. இது தரம் என்ற பிம்பம் இருக்கிறது. சமூகத்தில் ஏதாவது மாற்றம் உண்டா இந்த பட்டிமன்றதால் .பாப்பையா மற்றும் ராஜா பொருளாதாரம் உயர்கிறது
அவ்வளவே.


தீர்ப்பு :

"ஐயா பட்டிமன்றத்தால நன்மையா தீமையானு கேட்டா.........பேசுறவங்களுக்கு நன்மை கேட்குறவங்களுக்கு தீமை நாளை சந்திப்போமா "

6 comments:

sathishsangkavi.blogspot.com said...

//"ஐயா பட்டிமன்றத்தால நன்மையா தீமையானு கேட்டா.........பேசுறவங்களுக்கு நன்மை கேட்குறவங்களுக்கு தீமை நாளை சந்திப்போமா " //

எப்படி உங்களாள மட்டும் இப்படி...

ஸ்ரீராம். said...

பயன் என்ன என்று தேடாமல், ராஜா, பாரதி பாஸ்கர், போன்றவர்கள் பேச்சின் சுவாரஸ்யத்துக்காகப் பார்க்கலாம்..

பாலா said...

இலகில்லாத இலக்கியம் இலக்கியமாகாது

வெண்ணிற இரவுகள்....! said...

//பயன் என்ன என்று தேடாமல், ராஜா, பாரதி பாஸ்கர், போன்றவர்கள் பேச்சின் சுவாரஸ்யத்துக்காகப் பார்க்கலாம்//


பயன் என்பதை தேட வேண்டும் நண்பா ,,,,,வெறும் சுவாரசியம் மட்டும் இலக்கு அல்ல .........
சுவாரசியத்தை மட்டும் தேடும் சமூகம் விளங்காமல் போகும் .......நம் சமூகம் இப்படி இருக்க இதுவும் ஒரு காரணம்

malar said...

பட்டிமன்றம் தேவை.... அனால் தேவை இல்லை...என்று சொல்லமுடியாது. ஒரு சில தகவல்கள்,
அவர்கள் பேச்சில் நமது கவலைகளை மறந்து சிரிப்பது.போன்ற நல்ல விசயங்கள் இருக்கிறது.

DR said...

சுவாரஸ்யத்தை மட்டும் தேடும் இன்றைய வாசர்களால் தான் பத்திரிகைகள் செய்திகளை திரித்து வெளியிடுகின்றன...
லாரி டமால் பாடி பனால்...