Monday 3 May 2010

குட்டி தோழன்
















நண்பன் ஒருவன்
இருந்தான்.............!
மது அருந்திகொண்டே மார்க்ஸ் பற்றி
பேசுவான் .........!
குளிர்சாதன அறையில்
சில PDF படித்து விட்டு
சில பதிவுகள் போட்டு விட்டதாலேயே
தன்னை அறிவாளி என்று நினைப்பான் ...!
மே தினம் அன்று அவனை கூப்பிட்டேன்
"வெட்டி வேலை" என்றான் ...........
பரவாயில்லை வெட்டி வேலை பார்ப்போம்
என்றேன் ...........!!!!!
வந்தான் ...........................
கூட்டத்திலே ஓரமாய் நின்றுகொண்டிருந்தோம்
தோழர்கள் பறை விண்ணை முட்டியது
விசில் சத்தம் காதை பிளந்தது,
போலிஸ் அனைவரையும் வண்டியில் ஏற்றியது
ஒரு "குட்டி தோழன் " ஐந்து வயது இருக்கும்
வீரமாய் ஏறினான் ..............................!!!!!!!!
என் நண்பனிடம் சொன்னேன் .......................
நீ மார்சியத்தை எழுத்துக்களால் படித்தாய்
அந்த "குட்டி தோழன்" வாழ்ந்து கொண்டிருக்கிறான்
என்றேன் ....................!!!!
அவன் மூஞ்சியில் கலவரம்
"இதுனால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை" என்று
மீசையில் மண் ஒட்டாமல் போனான்

8 comments:

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ள வரிகள் .
அருமை .

சசிகுமார் said...

நிறைய பேர் இப்படி தான் இருக்கிறார்கள் நண்பரே, நல்ல கவிதையுடன் கூடிய சிறந்த கருத்து நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

rajeshkannan said...

மிகவும் அருமையான சவுக்கடி உங்கள் நண்பருக்கு.. மிக
அருமையான கருத்து கவிதை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான யதார்த்தமான வரிகள்

Madumitha said...

சிறுவர்கள் சினிமாவில்தான்
அதிகபிரசங்கிகளாய்
இருக்கிறார்கள் என்றால்
நிஜத்திலுமா?

Madumitha said...

அறியாமல்
செய்து விட்டார்
அவரை
மன்னியுங்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

இதை அதிகப்ரசங்கிதனம் என்று சொல்லும் உங்கள் மேட்டுக்குடி அல்லது நடுத்தர வர்க்கத்தை பற்றி என்ன சொல்ல ...........
அவர்கள் போராடினால் தான் வாழவே முடியும் .அது அவர்கள் ரத்தத்தில் இருக்கிறது .....அதிகப்ரசங்கித்தனம் என்று சொல்லி
கேவலப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன் ......................!!! அந்த குழந்தைகள் பிசா வேண்டுமென்று அடம் செய்யவில்லை ............
நடுத்தரவர்கதிர்க்கு உணவிற்கே வழி இல்லை என்றால் போராட்டத்தின் வலி தெரியும் ...சினிமாவில் இருக்கும் அதிகப்ரசங்கித்தனதுடன்
ஒப்பீடு மிகக்கேவலமாய் உள்ளது

Bala said...

நண்பரே எனக்கு ஒரு சந்தேகம். மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளைப்பற்றி சொல்லி வைத்தார் போல எந்த தோழரும் பேச மறுக்கிறீர்களே... அவர்கள் செயல்கள் எந்த வகையில் நியாயம்?
இதை மேட்டுக்குடி வர்க்கமாக நான் கேட்கவில்லை. சாதாரண சமையல்காரனின் மகனாக கேட்கிறேன்.