Sunday 9 May 2010

போபால் விஷ வாயு தாக்குதல்

யார் தீவிரவாதி - பகுதி ஒன்று
















நாம் கசாபை தீவிரவாதி என்கிறோம் சரி அவனால் பல பேர் இறந்திருக்கிறார்கள் அவன் தீவிரவாதி என்றே வைத்துக்கொள்வோம் இன்னும் எத்தனையோ தீவிரவாதிகள் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. மக்கள் ஊடகங்கள் என்ன சொல்கிறதோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறார்கள் அவர்களை சொல்லி குற்றம் இங்கு உள்ள ஊடகங்கள் சிந்திக்க விடாத வேலையே தொடர்ச்சியாய் செய்துகொண்டே இருக்கின்றன. இந்தியா என்னமோ ஜனநாயக நாடு போல ஊடகங்கள் மக்களுக்கு கட்டமைக்கின்றன. இந்தியாவை சேர்ந்த உளவு அமைப்பான ரா வை சேர்ந்தவர் சர்பஜத் சிங்க்,அவர் பாகிஸ்தானில் குண்டு வைத்ததற்காக கைது செய்யப்பட்ட தூக்கு தண்டனைகைதி. இதன் பெயர் தீவிரவாதம் இல்லையா?? இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காளதேசம் போன்ற நாடுகளில் மேலாதிக்கம் செய்கின்றது என்பதே உண்மை.














டிசம்பர் 2 இரவு 1984 போபாலின் துக்க தினம். MIC மெத்தில் ஐசோ சயனட் என்னும் விஷ வாயு கசிந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும்
அந்த விஷ வாயு தாக்குதலின் அதிர்வு போபாலை விடுவதாய் இல்லை. இன்னும் தண்ணீர் பாதிக்கப்பட்டு இருக்கிறது . அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாய் பிறக்கிறது . இதை செய்தது Union Carbide India Limited (UCIL ) என்னும் நிறுவனம். ஆனால் அரசாங்கம் அந்த மக்களை காப்பாற்றுவதை விட அவர்களை காப்பதிலே குறியாய் இருந்தது . அரசுகம்மியான நபர்கள்பாதிக்க பட்டதாய் கணக்கு காட்டியதன் உண்மை என்ன ???இன்னும் அதன் CEO warren anderson கைது செய்யப்படவில்லை. ஏன் நஷ்ட ஈடு கூட கொடுக்கப்படவில்லை.












இதில் ஒரு விஷமத் தனம் உள்ளது தெரிகிறதா . போபால் விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் செய்தது ஒரு பெரிய முதாலாளி வர்க்கம். 100 பேர் கொன்ற காசாப் தீவிரவாதி என்றால் ஆயிரக்கணக்கில் கொன்ற Warren Anderson இந்நேரம் தூக்கில் போட்டிருக்க வேண்டுமே ??? சரி இங்கு ஒரு முரண்பாட்டை காணலாம் , முதலாளிகள் உயிர் மலிவானதல்ல அதனால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தாலும் முதாலாளி காப்பாற்ற படுகிறார் காசாப் விடயத்தில் அவன் குறிவைத்தது தாஜ் ஒபேரா போன்ற முதலாளிகள் தாங்கும் இடம் அந்த உயிர் தான் மலிவானது இல்லையே அதனால் இந்த ஊடகங்கள் அதை கவர் செய்யும், மக்களும் அதை கிளிப்பிள்ளை போல நம்புவார்கள். சரி மும்பையை போபாலை விடுங்கள் சம காலத்தில் இருக்கும் விதர்பா விடயம் என்ன ஆயிற்று அங்கே தினம் தினம் விவாசாயி செத்துக்கொண்டிருக்கிறான் இந்த ஊடகம் அதை காட்டுவதாய் இல்லை. ஏன் பதிவர்கள் கூட IPL மற்றும் சுறா படத்திற்கு பேசும் பதிவர்கள் விதர்பா பற்றி பேசுவதில்லை, இதே ஊடகம் என்ன சொல்கிறதோ அதையே சொல்கின்றனர் என்பது வேதனையிலும் வேதனை. ஊடகம் தூக்கில் போட வேண்டுமென்றால் இவர்களும் அதையே வழி மொழிவார்கள் ,ஊடகங்கள் முதாலாளிக்கான ஊடகங்கள் இந்த பதிவுலகமும் அதையே பிரதிபலிக்கிறது.

கசாபை தூக்கில் போடவேண்டும் என்பவர்களுக்கு ஒரு கேள்வி நூற்று கணக்கில் மக்களை கொன்ற கசாபே தூக்கில் தொங்க வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் கொன்ற கொன்ற Warren Andersonஉயிரோடு இருக்கிறாரே என்ன செய்ய ????

11 comments:

பாலா said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஊடகங்களும் ஒரு பக்க சார்பையே கொண்டிருப்பதால் எது உண்மை என்று மக்களுக்கு தெரியாமலே போய் விடுகிறது. ஒரு சந்தேகம், கசாப்பை தூக்கில் போடலாம் என்கிறீர்களா? கூடாது என்கிறீர்களா?.

//IPL மற்றும் சுறா படத்திற்கு பேசும் பதிவர்கள் விதர்பா பற்றி பேசுவதில்லை
நானும் திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்டு கொண்டிருக்கிறேன். நீங்களும் கண்டு கொள்ளாதது போலவே இருக்கிறீர்கள். கொக்க கோலா, தாஜ் ஓட்டல் பற்றி பேசும் நீங்கள் மாவோயிஸ்டுகள் பற்றி ஒன்றும் பேசுவதில்லையே... விதர்பாவில் செத்தவர்கள் மட்டும் தான் மனிதர்களா? மேற்கு வங்கத்தில் இருப்பவர்கள் யார்? இல்லை தோழர்களுக்கு ஓட்டு போட்டதற்காக அவர்களுக்கு இந்த தண்டனையா?

வெண்ணிற இரவுகள்....! said...

மேற்கு வங்கத்தில் இருப்பவர்கள் போலி கம்யூனிஸ்ட் . மாவோயிஸ்ட் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லையே , சரி அங்கு வேடந்தா என்னும் நிறுவனம் மலையை சுரண்டப்பார்க்கிறது
அதை பற்றி தெரியுமா ???உங்களுக்கு .......................அவர்கள் செய்வது எல்லாமே சரி என்று சொல்லவில்லை . அவர்களை பற்றி அருந்ததிராய் கூட எழுதி உள்ளார் . அங்கே மக்கள் அடக்கப்படும் பொழுது அவர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள் . மக்கள் ஆதரவு அங்கு அவர்களுக்கு இருப்பது என்பதே உண்மை நண்பரே. சரி வேந்தாந்தா என்னும் நிறுவனத்திற்கு ஏன் மலையை தாரை வார்க்க வேண்டும் .........ஏன் வடகிழக்கு மக்கள் கண்டுக்கொள்ளபட்புவதில்லை ............அதற்க்கு பதில் சொல்லுங்கள் .நண்பரே........மேற்கு வங்கத்தில் இருக்கு போலி கம்யூனிஸ்ட் மேல் எனக்கு நம்பிக்கைஇல்லை

வெண்ணிற இரவுகள்....! said...

டோனி பற்றி பதிவு போடுகிறீர்கள் ரஜினிகாந்த் ரசிக்கிறீர்கள் இங்கே இருக்கும் வசதி வாய்புகள் வடகிழக்கில் இல்லை என்பதே உண்மை

பாலா said...

உங்கள் ரியாக்சனுக்கு நன்றி நண்பரே...
என் கேள்வி மேற்கு வங்க அரசு பற்றி அல்ல. மாவோயிஸ்டுகள் பற்றி.
உங்கள் பதிவுகளின் நோக்கம் என் போன்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில்தானே?
பின் ஏன் ஒரே விசயத்தில் தொங்கி கொண்டு இன்னொரு விஷயத்தை கண்டு கொள்ளாமல் விடுகிறீர்கள்? மேற்கு வங்கத்தில் இருப்பது போலி கம்யுனிஸ்டுகள் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும். நீங்கள் இவ்வளவு நாள் அவர்களுக்கும் ஆதரவாக பேசுவதாகத்தான் நான் நினைத்திருந்தேன். மாவோயிஸ்டுகளும் கம்யுனிஸ்டுகள்தான் என்று நினைக்கிறேன்.

நான் கம்யுனிஸ்ட் எதிர்ப்பாளன் அல்ல. ஒரு பிராந்திய மக்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்று எல்லோருக்கும் தெரிகிறது. உங்களையும் சேர்த்து. அங்கு ஆட்சி செய்வது போலி கம்யுனிஸ்ட்கள் என்றால், உண்மையான தோழர்கள் எங்கே? முதலில் அவர்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலி கம்யுனிஸ்டுகளை அல்லவா அவர்கள் ஒழிக்கவேண்டும். அதை விடுத்து வேறு பிரச்சனைகளை பற்றி பேசுவதும் ஒரு திசை திருப்பும் செயல்தானே.

//மேற்கு வங்கத்தில் இருக்கு போலி கம்யூனிஸ்ட் மேல் எனக்கு நம்பிக்கைஇல்லை
இப்படி சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும்.

பாலா said...

//டோனி பற்றி பதிவு போடுகிறீர்கள் ரஜினிகாந்த் ரசிக்கிறீர்கள்

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. டோனி பற்றி பதிவிடுவதும், ரஜினி பற்றி பேசுவதும் தவறு என்கிறீர்களா?

வெண்ணிற இரவுகள்....! said...

சரி எல்லாருக்கும் தெரியும் என்பதெல்லாம் கட்டுக்கதை என் ரூம் நண்பர்கள் மற்றும்
எனக்கு தெரிந்தர்வர்களுக்கு விதர்பா என்றால் என்னவென்றே தெரியாது ........
நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தவன் அல்ல ..........communism பற்றி
பேசுபவர்கள் மற்றும் தோழர்கள் அல்ல உண்மையிலேயே களத்தில் இறங்குபவர்கள்
தான் தோழர்கள் ..............அது என்ன நீங்கள் நினைப்பது நானே சொல்கிறேனே அவர்கள்
poli enru ...........................

வெண்ணிற இரவுகள்....! said...

ரஜினி பற்றியோ டோனி பற்றி பேசுவது அவர் அவர் விருப்பம் ...........ஆனால் அந்த பகுதி மக்கள் பாதிக்க படும் பொழுது maavoist ஆகிறார்கள்
ஏன் அந்த பகுதியில் மட்டும் நீங்கள் சொல்கிற தீவிரவாதம் வளர்ந்து இருக்கிறது . மக்களுக்கு அடிப்படை தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை .
மக்களை ஒடுக்குகிராரர்கள் ..............உழைக்கும் மலை ஜாதி பெண்கள் கற்பழிக்க படுகிறார்கள் ராணுவத்தினரால் .........அங்கே நடப்பது தீவிரவாதம் அல்ல
உள் நாட்டு போர் .......இப்பொழுது வேதாந்த என்னும் நிறுவனதிர்க்காக மலைகள் விற்க்கபடுகிறது , வாழ்வாதாரம் பாதிக்க படுகிறது அப்பொழுது மக்கள் வெடிக்க தான் செய்வார்கள்
உரிமையை கேட்டால் தீவிரவாதியா ...........

சரி Warren ANDERSON கொள்ளப்படவேண்டும என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நண்பரே ??????????? முதலாளி என்றால் விட்டுவிடலாமா .....maavoistkal 76 போலீசாரை கொன்றது தீவிரதம் என்றால் அவன் ஆயிரக்கணக்கான பேரை கொன்று இருக்கிறானே .........???

வெண்ணிற இரவுகள்....! said...

சரி விதர்பா vivasaaya prachanai உங்களை பாதித்து இருந்தால் எப்படி
டோனி பற்றி எழுதுகிறீர்கள் , இதற்கும் அதற்கும் என்ன சமந்தம் என்று நீங்கள் கேட்கலாம்
விவசாயிக்கு எதிராக கோக் irukkiran pepsi irukkiraan அவன் விளம்பரத்தில் டோனி
நடிக்கிறார் என்றால் ...............???? அதை நாம் ஆதரிக்கிறோம் என்றால் என்ன அர்த்தம்
நீங்கள் சொல்வது போல் ஒடுக்கப்பட்ட மனிதருக்காய் யாரும் யோசிப்பது இல்லை
பலபேருக்கு இந்த மாதிரி விடயங்கள் தெரிவதில்லை தெரிந்தாலும் விலகுவார்கள்
என்பதே உண்மை நண்பா .

வெண்ணிற இரவுகள்....! said...

உங்கள் நோக்கம் நியாயமானது .........பதிவு படித்து உங்களை போல் சில பேர் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதும் உண்டு பாலா ???
நான் உங்களை தாக்க வேண்டும் என்று ரஜினி என்று சொல்லவில்லை . நாம் எல்லாம் வசதியாக இருக்கிறோம் , ஆனால் வடகிழக்கிலே நிலைமை வேறு
அதை உணரவைப்பதர்க்கே

பாலா said...

நானும் உங்களை கேலி செய்யவேண்டும் என்று கேள்வி கேட்பதில்லை . உங்கள் பதிவை படித்தவுடன் வரும் சந்தேகங்களையே கேட்கிறேன். மாவோயிஸ்டுகள் அப்பாவி கிராம மக்களை பயன் படுத்திக்கொள்கிறார்கள் என்பது தான் நான் அறிந்தது. நான் ஆண்டர்சன் நிரபராதி என்று சொல்ல வரவில்லை. கசாப்பை தூக்கில் போடுவது தவறா என்றுதான் கேட்டேன். சமூக நிலை மாற வேண்டும் என்றால் இளைய சமுதாயம் விழிப்படைய வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் மெட்டீரியலிஸ்டிக்காக மாறி விட்டனர். அவர்களிடம் உணர்ச்சி பூர்வமான வாதங்கள் எடுபடாது என்பதே என் கருத்து.

? said...

@bala
மாவோயிஸ்டுகள் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற வாதம்தான் வேதாந்தாவிற்காக நீதிமன்றத்திலும் மக்கள்
மன்றத்திலும் ஆசராகும் வக்கீல்கள் பசிதம்பரமும் அருண் ஜேட்லியும் பேசும் வாதங்கள். (இது உங்களைப் போன்றவர்கள் வாயில் இருந்து வர வேண்டும் என்றுதான் பத்திரிகையிலும் டிவியிலும் தினசரி ஆபத்து ஆபத்து என அரசு கூவுகிறது). மாவோயிஸ்டுகள் மக்களை பயன்படுத்துகிறார்களா அல்லது உங்களது மொழியில் சொல்வது என்றால் விழிப்படைய வைத்து போராட வைக்கிறார்களா.
மக்களை பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் எதாவது சம்பாதிக்கிறார்களா... வேதாந்தாவும் பசியும் மலையை அதாவது நம் நாட்டின் இயற்கை வளத்தை ஏப்பமிட தேசபத்தி நக்சல் தீவிரவாதம் என்ற போர்வையில் வருவதை திரைகிழித்து காட்டினால் எத்தனை அறிவாளிகள் புரிந்து கொண்டு அதற்கு பேசுகிறார்கள் அருந்த்தி ராய் தவிர•

கசாப் 2008 இல் 200 பேரை கொன்றான். 1984 இல் ஆயிரக்கணக்கா ன ம‌க்கள் சாவு ஆண்டர்சனால் நிகழ்த்தப்பட்டது. கசாப்பிற்கு விசாரணை இந்திய நீதிமன்றத்தில் நடந்து தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டர்சனுக்கு இவ்வளவு ஆண்டுகளாகியும் விசாரணை கூட நடத்த முன்வர வக்கற்ற அரசு பற்றி என்ன நினைக்கிறீர்கள். மும்பையில் செத்தவனுக்கு சீக்கிரம் நீதி கிடைப்பதும், போபாலில் செத்தவனுக்கு தலைமுறை தாண்டியும் நீதி கிடைக்காமல் இருப்பது வெட்கமே இல்லாமல் தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசுவது அபத்தாமக உங்களுக்கு படவில்லையா... தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சம்ம் என்ற அரசியல் சாசன சட்டத்தின் வழிமொழிதலை மீறிய அரசு நிர்வாகம் பற்றி உங்களுக்கு கருத்து இல்லையா...

ஆண்டர்சனுக்கெல்லாம் அப்பன் ஒருத்தன் இருக்கிறான். 1968 இல் பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்திய விவசாயத்தை புதைகுழிக்குல் தள்ளி விவசாய தற்கொலைகளை துவக்கி வைத்தவன். அவன் வைத்த ஊர்க்கொள்ளியின் தொடர்ச்சிதான் இன்று புதிய பொருளாதார கொள்கை வந்த பிறகும் தொடர்கிறது. உரம் பூச்சிமருந்து என வெடிக்காத குண்டுகளில் இருந்து பிரிக்கப்பட்ட அமெரிக்க உரங்களை இந்திய மண்ணிற்கு தந்து புதிய ரக நெற்களை தருவதாக சொல்லி அவன் ஒழித்த தமிழக நெல் ரகம் கூட 1600 இருக்கும். தான் செய்த பசுமைப் பபுரட்சியால் தீங்குதான் என்று அவன் ஒத்துக் கொண்டும் இருக்கிறான். அவனுக்கு தண்டனை கிடையாதா..

மன்மோகன் சிங். பழைய உலக வங்கியின் ஊழியர். இன்றைய பாரத பிரதமர். அவர் 1991 இல் நிதி அமைச்சராக இருந்த போதுதான் அமெரிக்க உலக வங்கியின் ஆணைக்கிணங்க இந்த நாட்டின் தொழிற்துறையை தனியாருக்கும் உலக முதலாளிகளுக்கும் திறந்து விட்டு அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்க துவங்கினான். அதையேதான் பின்னர் வந்த எல்லா கட்சிகளும் செய்தனர் என்பது தனிக்கதை.

அதைத்தான் மேற்கு வங்கத்தில் போலிகளும் செய்கிறார்கள். சொந்த மக்களின் நலனை விடவும், சொந்த மண்ணின் வளத்தை விடவும் ஆண்டர்சனும், டாடாவும், சலீம் குழும்மும், என்ரானும் செழித்திருக்க வேண்டும் என விரும்பும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டிய கால கட்டம் இது. ஆனால் இவற்றை மக்களிடமிருந்து மறைக்கும் வேலையை ஊடகங்கள் செய்கின்றன• இணையம் மாற்று என நினைத்தால் கூட அவர்கள் எடுத்த வாந்தியை நக்கி மீண்டும் வாந்தியெடுக்க இணையம் முழுவதும் திடீர் அறிவாளிக்ள் தோன்றி விடுகிறார்கள்.