Sunday 23 May 2010

பிறந்த நாள் சிறப்பு பதிவு

இன்று எனது பிறந்தநாள் , பதிவுலகத்திற்கு வந்து முதல் பிறந்த நாள் . பதிவுலகத்தில் வந்து என்ன சாதித்து விட்டேன் ????? வந்த புதிதில் கதை கவிதை என்றெல்லாம் எழுதுவேன் , நல்ல அங்கிகாரம் கிடைத்தது . அனைவருக்கும் பின்னூட்டம் போடுவேன் , ஆனால் பின்னூட்டம் போடுவது வாக்களிப்பது இங்கே அரசியல் என்று புரிய ஆரம்பிக்க , நண்பர்களின் பதிவுகளை படிக்கறேன் ஆனால் பின்னூட்டம் அல்லது வாக்களிப்பதில்லை. என் பிறந்த நாள் அன்று தான் என் காதலை சொன்னேன் . அது என்னனென்னமோ ஆனது. பிறந்ததிலிருந்து நிறைய தோல்விகளை சந்தித்து விட்டேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு வலி மட்டும் உள்ளது , மே தின பதிவு போட்டேன் , அது வரை நான் சொல்லவில்லை என்றாலும் நான் யாருக்கும் பின்னூட்டமே போடவில்லை என்றாலும் எனக்கு பதினைந்து முதல் இருபது வாக்கு வரும்
மக்களுக்காக போராடும் தோழர்களுக்கு ஆதரவாய் எழுதியவுடன் " அவனா நீ ????" என்ற தொனியில் யாரும் படிக்க வருவது இல்லை , எனக்கு தோல்வி ஒன்றும் புதிதல்ல , ஆனால் விவாதம் செய்யாமலேயே ஓடுவது தவறு , படியுங்கள் கருத்து இருந்தால் மோதலாம் , உங்கள் கருத்தோ என் கருத்தோ வெற்றி பெரும் ,ஆனால் விவாதம் செய்தே பல விடயங்களை மாற்றிக்கொள்ளலாம் . முன்பெல்லாம் சாமி கும்பிடுவேன் இப்பொழுது கும்பிடுவதில்லை , முன்பெல்லாம் அஜித் என்ற பிம்பம் வசீகர படுத்தும் , ஆனால் இப்பொழுதெல்லாம் அதனால் ஒரு பயனும் இல்லை , அஜித் என்னும் தனிமனிதர் சமூகத்திற்கு என்ன செய்தார் என்று தோழர் கேள்வி கேட்டார் ???? சரியாக தான் இருந்தாது , எந்த ஒரு தலைவனும் தனிமனித சாதனை வைத்து தலைவனாக கூடாது , சமூகத்திற்கு என்ன பயன் என்று யோசிக்க வேண்டும் . இரண்டு வருடம் முன்பு வரை சச்சின் ரசிகன் , எப்பொழுது கிரிக்கெட் வியாபாரம் என்று தெரிந்ததோ விட்டு வந்துள்ளேன் , எதிர்த்து பதிவு கூட போட்டேன் .

விவாதம் செய்வதால் நன்மைகள் அதிகம் , நான் விவாதம் செய்தே கற்றுகொண்டிருக்கிறேன் . முன்பெல்லாம் நான் சொன்னதே சரி என்பேன் ,விவாதம் செய்யாமல் சண்டை போடுவேன் . ஆனால் இப்பொழுது விவாதம் மட்டுமே செய்கிறேன் பொறுமையாய் பதில் சொல்கிறேன் .
தோழர்கள் ஆதரவாளர்கள் என்றவுடன் ஒதுக்குவது தவறு . இந்த பதிவு துறை நமக்கு நல்ல வாய்ப்பு . நம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம் .எல்லாராலும் சரியானா பார்வை பார்க்க முடியாது , விவாதம் செய்வது மூலம் நாம் சரியான பார்வைக்கு வருவோம் . IT துறையில் குரூப் discussion எதற்கு வைக்கிறார்கள்??????? நாம் விவாதம் செய்வோம் பரிமாறிக்கொள்வோம் .

"தோல்விகள் என்னை ஒன்றும் செய்யாது , என்னென்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல ஆயிரம் முறை தோற்றவன் "

17 comments:

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள்!!!எல்லா வளமும் கிடைக்கட்டும்!

அத்திரி said...

HAPPY FIRST BIRTH DAY

Ashok D said...

எல்லா வளமும் பெற்று வாழ்வில் சிறக்க வாழ்த்துகள் :)

பனித்துளி சங்கர் said...

///////"தோல்விகள் என்னை ஒன்றும் செய்யாது , என்னென்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல ஆயிரம் முறை தோற்றவன் " ////////


முதலில் உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை !

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு தோழருக்கு ...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
சாமி,சச்சின் ,அஜித் பற்றி நீங்கள் சொன்னவை எனக்கும் பொருந்தும் ...
உங்கள் விவாதங்கள் பதிவுலகெங்கும் பரவி பெருகட்டும் ...
மீண்டும் வாழ்த்துக்கள் தோழர் ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!:-)

Subankan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

தமிழ் அமுதன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Sri said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......

ஒரு விஷயம்: கவலை தான் நம்பல கண்டு கவலைப்படும் ஏன் கவலைப்பட மாட்டிக்கிறானே என்று .....

Bala said...

வாழ்த்துக்கள். உங்களை தொடர்ந்து படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்...

//நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல ஆயிரம் முறை தோற்றவன்

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி பாலா ....நன்றி தோழர்களே ................................................!!!!!!!
பாலா அது யாரரோ சொன்னது நான் சொன்னது இல்ல

கமலேஷ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழரே...
நிறைய தெளிவோ...பிறந்த நாளில் ஒரு புது மனிதன்..ம்ம் தொடருங்கள்...

நேசமித்ரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

(தாமதத்திற்கு வருந்துகிறேன்.)

வினோத் கெளதம் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Madumitha said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள்.
நிறைய விவாதம் செய்வோம்.