Monday 24 May 2010

ரஜினிகாந்த் படங்களும் உற்பத்தி முறைகளும்















ரஜினிகாந்த் இன்றைய தேதியில் ஒரு சூப்பர் ஸ்டார் . அவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கின்றனர், திரைஅரங்கில் கூட்டம் கூட்டமாய் மக்கள் செல்கின்றனர் . இன்று வரும் இளம் நடிகருடன் போட்டி போடுவது அவரின் பலம் . தமிழகத்தில் பெருவாரியான ரசிகர்கள் ரஜினி ரசிகர்களே, ரஜினி படங்களை ஏன் ரசிக்கிறோம் என்பது மூலம் தமிழகத்தின் ரசனை முறை எப்படி உள்ளது என்பதை சொல்ல முடியும் . சில பேர் கேட்கலாம் ரசனை முறை எப்படி இருந்தால் என்ன என்று , படம் நன்றாய் இருக்கிறதா பார்த்தோமா கைதட்டினோமா என்று இருக்க வேண்டுமென்று ???? ஒரு நாடு கலையில் எப்படி இருக்கிறதோ அப்படியே அந்நாடு மற்ற விடயங்களில் இருக்கும் . கலையை எப்படி ரசிக்கிறோமோ அதைப்போலவே நம் அரசியல் பார்வையும் இருக்கும் . பெருவாரியான மக்கள் ரஜினி ரசிகர்கள்,அதனால் ரஜினி படங்களை ஆய்வு செய்வது ஓரளவு தமிழ் மக்களின் மனநிலையை ஆய்வு செய்வது போன்றது.

அபூர்வ ராகம் துடங்கி இன்றைய எந்திரன் வரை அதிர்வுகளையும் கரகோஷங்களையும் ஏற்படுத்தும் superstar. படம் துடங்கும் பொழுது S U P E R என்று தனி தனியாக போடும் பொழுதே அரங்கம் அதிர ஆரம்பிக்கும் . யார் இந்த சூப்பர் ஸ்டார் ஏன் இவ்வளவு ரசிகர்கள் .அவர் உச்சத்தில் இருந்த காலம் 90 முதல் 2005 வரை வைத்துக்கொள்ளலாம் .அவரை உச்சத்தில் வைத்த படம் பாட்ஷா, அதற்க்கு முன் எஜமான் மன்னன் உழைப்பாளி தளபதி அண்ணாமலை போன்ற படங்கள் பண்ணி இருந்தார் . எப்பொழுதுமே ஒரு கலைவடிவம் உற்பத்தி முறையை
சார்ந்தது . நம் இந்தியா பாதி நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறையையும் பாதி முதலாளித்துவ உற்பத்தி முறையையும் சார்ந்தது. நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறை என்பது பண்ணையார் விவசாயி உற்பத்தி முறை , முதாலளித்துவ உற்பத்தி முறை என்பது முதலாளி தொழிலாளி உற்பத்திமுறை . இந்த இரண்டும் சேர்ந்த கலவையாக ரஜினி படங்களில் பிரதிபலிக்கும்.

நிலப் பிரபுத்துவம் உற்பத்தி முறையில் ஒரு பண்ணையார் இருப்பார் , அவருக்கு கிராமத்தில் அதிக சொத்து இருக்கும் ,அவரை ஊரே வணங்கும். இந்த மாதிரி காட்சிகளை ரஜினி படங்களில் காணலாம் . உதாரணமாய் எஜமான் என்ற படத்தை எடுத்துக்கொள்வோம் "எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டு வச்சோம்" என்பது நிலப் பிரபுத்துவத்தின் அடிமை தனத்தை காட்டுகிறது . ஊருக்குள் பண்ணையார் சொன்னால் கேட்க்கும் பாமர மக்கள் அதை பிம்பத்தில் பார்க்கும் பொழுது விசில் அடிக்கிறார்கள் . ஏன் அவர் பிந்தைய படங்களான முத்து , அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களில் கூட காணலாம் . ரஜினிகாந்த் பெரிய வீட்டு பையனாய் இருப்பார்கள் , ஊரே வணங்கும் இந்த கலைவடிவம் நிலப் பிரபுத்துவத்தின் வடிவம் . உற்பத்திமுறை எப்படி இருக்கிறதோ அப்படி தான் கலையின் வடிவம் இருக்கும்.

நிலப் பிரபுத்துவமில் மக்கள் கிராமத்திலேயே ஒரு பண்ணையாரிடம் அடிமையாய் இருப்பார்கள் , இந்த கருத்தை சொல்வதை போல் ஒரு பாடல் முத்து படத்தில் "ஒருவன் ஒருவன் முதலாளி , உலகில் மற்றவன் தொழிலாளி" இது எந்தவிதமான கருத்தை சொல்கிறது . இந்த உற்பத்தி முறையில் மக்கள் ஒருவரிடம் அடிமையாய் இருக்கிறார்கள் , கிராமத்திலே கூலி விவசாயியாய் இருக்கிறார்கள் , இயல்பிலேயே பெண் அடிமைத்தனம் இருக்கிறது , ரஜினி படங்களில் இயல்பாய் பெண் அடிமைத்தனத்தை காணலாம் , நம்மை போன்ற ரசிகனும் அதே பின்புலத்தில் வருவதால் கை தட்டி மகிழ்கிறான் . " பொம்பள பொம்பளையா இருக்கணும் " " பொண்ணு வீட்ட விட்டுவெளில
போன கெட்டு போய்டுவா" என்று அனைத்து படங்களிலும் பெண்களுக்கு எதிரான ஒரு வசனமாவது வைத்து கை தட்டு வாங்குவார் சூப்பர் ஸ்டார் .

95 பிறகு உலகமயமாக்கல் எல்லாம் கலைவடிவங்களில் தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன . மக்களுக்கு தனிமனித கதாநாயகன் தேவை படுகிறான். பொது மக்கள் பிரச்னையை பேசுபவன் தேவை படுகிறான் . உதிக்கிறார் பாட்ஷா கஷ்டப்படுபவருக்கு ஒரு அவதாரமாய் வருகிறார். அரசாங்கம் செய்யும் வேலையை தான் செய்து மக்களிடம் பேர் வாங்குகிறார் . மக்கள் போராடாமல் இருக்க வழி செயக்கிறார் , மக்கள் சார்பாய் இவர் இருக்கிறார் என்பதே முதலாளிகளுக்கு துணையாய் இருக்கிறது . எப்படி ???? ஒரு அரசிற்கு மக்கள் கேள்வி கேட்க்க கூடாது , மக்கள் எழுச்சி அடைய கூடாது , அதனால் பிரச்னையை தீர்த்து வைக்க அவதாரம் வரும் என்ற நம்பிக்கையும்
டான் பாட்ஷா வருவார் என்ற நம்பிக்கையும் இந்த கலை மூலம் விதைக்கப்படுகிறது. மக்களும் தன்னால் ஒரு விடயம் முடியவில்லையே தனிமனிதனாய் இருந்து ரஜின்காந்த் எவ்வளவு சாதிக்கிறார் என்பதை ரசிக்கின்றனர்.

2000 பிறகு முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருக்கிறது சமூகம் . முதலாளித்துவத்தால் மக்களுக்கு 12 மணிநேரம் மேல் வேலை சுரண்டப்படுவது , நகர்மயமாக்கல் எல்லாமே மிக இயல்பாய் நடக்கிறது , மக்கள் எந்திரன்களாய் இருக்கிறார்கள் அவர்களுக்கு மன அமைதி தேவை படுகிறது. அந்த நேரத்தில் தான் ஊரெங்கிலும் தியான வகுப்புகள் நடக்கின்றன . Corperate சாமியார்கள் நித்யானந்தா , ரவிசங்கர் போன்றவர்கள் உருவாகிறார்கள் .சாய்பாபா , ரமண மகரிஷி போன்றவர்களுக்கு பக்தர்கள் அதிகரிக்கிறார்கள் , ஏன் ???????Stress வேலை நேரம் மன அமைதி வேண்டும் . சம்பாதித்து கொண்டு A /C பார்களில் மாப்ள வாழ்க்கையல ஒன்னும் இல்ல டா என்று பலர் தத்துவம் பேசும் நேரம் . அந்த நேரத்தில் அந்த உற்பத்தி முறையின் கலைவடிவமாய் பாபா என்ற படத்தை வெளியிடுகிறார் ரஜினிகாந்த் . படம் முழுக்க ஆன்மிக கருத்துக்கள்.

கடைசியாய் வந்த சிவாஜியை பார்ப்போம். சிவாஜி இங்கு NGO போல செயல்படுகிறார் , NGO என்பது முதலாளித்துவத்துக்கும் அரசிற்கும் சாதகமாய் இருப்பது .மக்கள் இயல்பிலேயே எழுச்சி அடையும் பொழுது , அவர்களை எழ விடாமல் உங்களுக்காய் நான் தட்டிகேட்கிறேன் என்று உள்ளதை கெடுத்துவிட்டு போவது .
அப்படி எல்லாம் ஒரு தனிமனிதன் ஒரு விடயத்திற்கு தீர்வு சொல்ல முடியாது . மக்கள் இயல்பாய் எழுவதை இந்த NGO இயல்பாய் மட்டுப்படுத்துகிறது , ஒரு பிச்சைக்காரன் உழைக்க முற்படும் பொழுது அவனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து மேலும் பிச்சைக்காரன் ஆக்குகிறது . நீயெல்லாம் உழைக்க வேண்டாம் , உனக்கு நான் இருக்கிறேன் போரடதே , நான் போராடுகிறேன் என்று நீர்த்து போக செய்கிறது . அந்த NGO வேலையை சிவாஜி பார்க்கிறார் அந்த சமயத்தில் ஊரெங்கும் NGO . இப்படி ரஜினி படங்கள் உற்பத்தி முறையைபிரதிபலிக்கின்றன. இது ரஜினியை குறைசொல்வதாய் இல்லை , நம் உற்பத்தி முறை கேவலாமாய் இருக்கிறது சமூகம் கேவலாமாய் இருக்கும் பொழுது அந்த படைப்பும் அப்படியேஇருக்கும் .

ரஜினி என்பவர் உச்சம் என்பதால் இதை ஆய்விற்கு எடுத்துக்கொண்டேன். நம் உற்பத்தி முறை எப்படி இருக்கிறதோ அதை சார்ந்தே நம் கலை , மதம் , கருத்து அனைத்தும் இருக்கும்.

5 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

இது ரஜினிபடங்களுக்கு மட்டும் அல்ல எல்லபடங்களுக்கும் உலகில் உள்ள
எல்லா இலக்கியத்துக்கும் பொருந்தும்

ANANTH_S said...

It's reflect your analysis skills. Thank for sharing your opinion

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி !

Madumitha said...

ஒரு தொப்பியை
செய்து கொண்டு
எல்லாத் தலைக்கும்
மாட்டிவிடப் பார்க்காதீர்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

இல்லை இது தொப்பி அல்ல தலை , என்பதே உண்மை ........
தொப்பியை நான் மாட்டவில்லை தலை ஏற்க்கனவே இருக்கிறது