Sunday 30 May 2010

IIFA எதிர்க்கும் சீமான் ,செம்மொழி மாநாட்டிற்கு என்ன செய்ய போகிறார்















இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கூடாது என்று ,சமீபத்தில் "நாம் தமிழர்" இயக்கம் அமிதாப் வீட்டின் முன்பு போராட்டம் செய்தது .அது சல்மான் கான் வீட்டு முன்பாகவும் நடந்ததை கேள்விப்பட்டேன் . எப்படி ஒரு ஹிந்தி நடிகர்களுக்கு தமிழ் உணர்வு இருக்க வேண்டும் என்பது ஒரு கேள்வி ?????? "அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்டேன் " என்று சொல்லிவிட்டு ராகுல் காந்தியிடம் பதவிக்காக பேச்சு வார்த்தை நடத்திய நடிகரிடம் சீமான் அவர்கள் அடுத்த படத்திற்கு பேசிக்கொண்டிருக்கிறார். பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரவிய பொழுது ஆங்கில ஊடகங்கள் எவ்வளவு கொச்சையாய் செயல்ப்பட்டன . ஒரு தீவிரவாதி இறந்து விட்டார் , அதனால் இலங்கையே நிமதியாய் உள்ளது என்பது போன்று செய்திகளை பரப்பிக்கொண்டே இருந்தன .அப்படி இருக்க ஒரு ஹிந்தி நடிகரிடன் தமிழ் உணர்வுகளை எதிர்ப்பார்ப்பது எப்படி என்று புரியவில்லை ?????இது எல்லாம் தன் பக்கம் திசை திருப்பும் நாடகமாகவே நினைக்கிறேன் .

சரி எங்கு எல்லாம் காங்கிரஸ் நின்றதோ அந்த இடத்தில் எல்லாம் பிரச்சாரம் செய்தாரே , ஏன் தி மூ கா நின்ற இடங்களில் பிரசாரம் செய்ய வில்லை . தி மூ கா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறது , காங்கிரஸ் மக்களை கொல்ல ஆயுதம் அனுப்புகிறது , ஏன் சீமான் வடமாநிலத்தில் இருந்து தமிழ் உணர்வை எதிர்ப்பார்க்கிறார் , தமிழனிடம் அல்லவா இருக்க வேண்டும் . சரி IIFA இருக்கட்டும் இந்த ஆண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க போகிறதே அதற்க்கு என்ன செய்யப்போகிறார் சீமான் . ஒரு இனமே அழிந்து இருக்கிறது அதை கொண்டாட அந்த இனத்தில் இருந்தே மாநாடு அதற்க்கு சோனியா கூட தலைமை ஏற்கலாம் ????? இதை எல்லாம் எதிர்க்க மாட்டாரா . இந்த மாதிரி அமிதாப் வீடு முன்பு போராட்டம் நடத்துவதால் ஈழம் கிடைக்க போகிறதா ????? செய்தி வேண்டுமென்றால் வரும், பரப்பரப்பு மட்டுமே மிஞ்சும்.

கலைஞர் பெண் சிங்கம் என்னும் படத்திற்கு வசனம் எழுதுகிறார் . சரி அவர் பேரன்கள் சினிமாவிலே கால் ஊன்றுகிறார்கள் . அந்த படங்களை எல்லாம் எதிர்க்க முடியுமா
சீமானால் . இரண்டாவது அவர் சொல்வது போல் எல்லா தமிழர்களையும் இணைக்க முடியுமா , தமிழர்கள் வர்க்க ரீதியாய் பிரிந்து உள்ளனர் . எல்லா தமிழர்களையும் சேர்ப்பது என்பது எப்பொழுது முடியும் என்றால் ,வர்க்கங்களை கலைந்தால் மட்டுமே முடியும் . ஒரு தலித்துடன் தேவர் சேர்வார்களா , சரி ஒரு ஏழையும் ஒரு பணக்காரரும் தமிழன் என்ற ஒரே குடையில் எப்படி வருவார்கள் , உணர்ச்சி போங்க தமிழன் தமிழன் என்று பேசலாம் , முதலில் வர்க்கங்களை கலைக்க முயற்சி செய்ய வேண்டும் . இந்தியா தமிழனும் ஈழ தமிழனும் நண்பர்கள்

ஆனால் ஒரே வீட்டில் உள்ள சகோதரன் அல்ல . அப்படி சகோதரனாய் இருந்திருந்தால் இங்கே தமிழன் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் , இங்கே தமிழன் காங்கிரஸ்கட்சிக்கு வாக்கு அளித்திருக்க மாட்டான் . பௌதிக ரீதியாய் இருவரும் வேறு வேறு என்பதையே இது காட்டுகிறது . இரண்டாவது ஒரு போராட்டம் என்றால் அந்த மக்கள் ஒன்று கூடினால் மட்டுமே அது சாத்தியம். ஈழ போராட்டம் என்றால் ஈழ தமிழர்களை ஒன்று கூட்ட வேண்டும் , புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து ஈழ மண்ணிலே திரட்டி போராட வைக்க வேண்டும் .
மக்கள் புலம்பெயர்ந்து இருப்பார்கள் காசு தருவார்கள் அவர்களுக்காய் நாம் களத்தில் நிற்ப்போம் என்பது சரி அல்ல . பிரபாகரன் கூட இதை தான் செய்தார் , மக்களுடன் கலந்து போராட வேண்டுமே தவிர , மக்கள் எங்கேயோ இருந்து உதவி செய்வார்கள் அவர்களுக்காய் களத்தில் நிற்ப்பது சரி அல்ல . அதை தான் மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்கிறார்கள்.












ஈழம் பிரச்சனை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாம் , ஆனால் உணர வேண்டுமென்றால் அவர்கள் அங்கு இருந்திருந்தால் மட்டுமே அது முடியும். இங்கு மக்களை ஒன்று திரட்டுவதை விட , ஈழ மக்களை ஒன்று திரட்ட வேண்டும் , களத்திலே அவர்கள் முன்னாலே நிற்க வேண்டும் , பின்னால் வேண்டுமென்றால்
நம் தமிழர்கள் நிற்கலாம் . தமிழன் என்ற ஒற்றை கோட்டில் தமிழக தமிழர்களை திரட்ட முடியாது , ஜாதி பணம் போன்ற வேறுபாடுகள் இங்கு உள்ளது .சரி சல்மான் கான் ஷாருக் கான் அங்கு போவது இருக்கட்டும் . "கன்னத்தில் முத்தமிட்டால் " எடுத்த மணி சார் படம் " ராவணன்" படத்தை திரையிடுவாதாய் இருந்தார்கள் ,
கடைசியில் ஈழ மக்கள் எல்லா கண்டங்களிலும் இருக்கிறார்கள் படம் போகாது என்று தெரிந்த வுடன் , கைவிட்டு விட்டார்கள் . அவர்களை என்ன செய்ய போகிறீர்கள் .மணி சார் தமிழன் தானே . ஏன் எல்லா கேசட் கடைகளிலும் அவர்கள் பாடல்களே ஒலித்து கொண்டிருக்கிறது , மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள் ???? இந்த
சினிமா நடிகர்கள் எல்லாம் வெத்து வேட்டுக்கள் . இவர்களை எதிர்த்தால் ஒன்றும் ஆகாது . அரசியல் ரீதியாய் ஆக்கபூர்வமாய் செய்யப்பாருங்கள் .நீங்கள் செய்யும் போராட்டம் வெறும் பரபரப்புக்காக இல்லாமல் ஆக்கப்புர்வமாய் இருக்கட்டும் . கலைஞர் செம்மொழி மாநாட்டை எதிர்த்தால் நான்வரவேற்ப்பேன் ஈழ மக்களை ஒன்று திரட்டப்பாருங்கள் முடிந்தால் .

ஒரு மண்ணிற்கான போராட்டம் அந்த மண்ணிலேயே தான் துடங்க வேண்டுமே தவிர வேறு மண்ணில் அல்ல . ஈழ போராட்டத்தினை தமிழகத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை . தமிழகம் பின்னால் வேண்டும் என்றால் இருக்கலாம் ஆனால் மனரீதியாக கூட இருவரும் வேறு வேறு . அதனால் புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்று திரட்டி
ஈழத்தில் போராடுங்கள் இதுவே என் வேண்டுகோள்.

9 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

Dominic said...

aalamana karuththukkal !!!
mika thelivaakave ullathu ...

varavetkinrom

மதிபாலா said...

ஐ.ஐ.எப்.ஏவிற்கான யாதொரு எதிர்ப்புமே வட இந்தியர்களுக்கு நமது பிரச்சனையை கொண்டு செல்லும் முயற்சியாகவே பார்க்க வேண்டும்.

நன்றி

வெண்ணிற இரவுகள்....! said...

வட இந்தியர்களிடம் கொண்டு செல்வது இருக்கட்டும் . முதலில் தமிழக தமிழர்களிடையே கொண்டு சென்றோமா

ஏன் செம்மொழி மாநாடு முக்கியமா???அதற்க்கு ஏன் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை

rajeshkannan said...

கார்த்திக் மிகவும் அருமையான பதிவு.நீங்க சொல்றது சரி தமிழனுக்கே
தமிழனை பற்றி உணர்வில்லாத பொது அடுத்தவனுக்கு சொல்லி என்ன
பிரயோஜனம்.பக்கத்துக்கு வீட்ல சண்டை நடந்த வேடிக்கை பார்க்கிற காலம் இது

kathir said...

vimarsikiradha mattum vealaiya vachika veandam koanchamavudhu adharavu thanka pa

ANANTH_S said...

ஒரு மண்ணிற்கான போராட்டம் அந்த மண்ணிலேயே தான் துடங்க வேண்டுமே தவிர வேறு மண்ணில் அல்ல . ஈழ போராட்டத்தினை தமிழகத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை!

"அருமையான வரிகள்." "உண்மையான உணர்வுகள்".

தமிழன் said...

எல்லைகளும் சட்டமும் தான் நம்மை பிரித்து இருக்கின்றன, உணர்வுகள் அல்ல. சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் கடத்தப்பட்ட சீக்கியர்களுக்கு (பாகிஸ்தான் பிரஜைகள்) இந்தியா ஏன் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

தமிழன் said...

எல்லைகளும் சட்டமும் தான் நம்மை பிரித்து இருக்கின்றன, உணர்வுகள் அல்ல. சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் கடத்தப்பட்ட சீக்கியர்களுக்கு (பாகிஸ்தான் பிரஜைகள்) இந்தியா ஏன் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.