Saturday 12 December 2009

சாருவிற்கு வாழ்த்துக்கள்

















நேற்று புத்தகம் வெளியீட்டு விழா,சாருவின் புத்தகங்கள்.

1. கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும் , அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பதிவு செய்கின்றன .

ரூ. 230/-



2. வாழ்வது எப்படி ?

வாழ்வின் எளிமையான, சுவாரசியமான சம்பவங்களை சாரு நிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன் , கனிமொழி , பீர்பால் , வேலிமுட்டி , ரஜினியின் டைனிங் டேபிள் என்று பல்வேறு பொருள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் வேவ்வேறு அனுபவங்களை வாசகனுக்குத் தருகின்றன .

ரூ. 50/-



3. கெட்ட வார்த்தை

சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.

ரூ. 150/-



4. மலாவி என்றொரு தேசம்

அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவுகூட ஆசிய , ஆப்பிரிக்க , லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாட்டு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சார தனிமையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவியிலிருந்து ஆனந்த் அண்ணாமலை எழுதிய கடிதங்களை சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு அதற்கு பதிலும் எழுதினார். அதன் தொகுப்பே இந்த நூல் .

விலை: ரூ.140/-




5 நரகத்திலிருந்து ஒரு குரல்


சாரு நிவேதிதா எழுதும் சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை அதன் அழகியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துபவை. சர்வதேச சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயற்சிக்கும் புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் சாரு, புதுமை என்ற பெயரில் உருவாக்கப்படும் பாசாங்குகளையும் படைபூக்கமற்ற வெற்று நகல்களையும் இக்கட்டுரைகளில் கடுமையாக நிராகரிக்கிறார். தமிழ் சினிமாவின் மொழியும் அடையாளமும் மெல்ல மாறிவரும் ஒரு காலகட்டத்தில் அந்த மாறுதலின் நுட்பங்களையும் சிக்கல்களையும் விமர்சன நோக்கில் இந்த நூல் பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.

விலை: ரூ.120/-


5.அருகில் வராதே

வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சுவாரசியமுமே அந்த வடிவத்தை உயிருள்ளதாக மாற்றுகிறது. சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இது. இவை வினா-விடைகள் என்தைவிட சாரு தனது வாசகர்ளுடன் தொடர்ந்து நடத்திவரும் நீண்ட உரையாடலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். முகமற்ற வாசகர் களின் கேள்விகளுக்கு சொல்லப்படும் பொதுவான பதில்களிலிருந்து மாறுபட்ட இந்த நூல் ஒரு அந்தரங்கமான தொனியை உருவாக்குகிறது.

விலை: ரூ.120/-



7 அதிகாரம் அமைதி சுதந்திரம்

சாரு நிவேதிதா சமகால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அரசியல் அறவுணர்வும் , தார்மீக நியதிகளும் தொடர்ந்து சீரழிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த நூல் நமது சமூக விழிப்புணர்விலிருந்து தீவிர எதிர்கொள்ளலை வேண்டி நிற்கின்றன .

விலை: ரூ.40/-




8. கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்

சாரு நிவேதிதாவின் இலக்கிய – தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து சுஜாதா வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்துபட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல; அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.

விலை: ரூ.115/-




9 ஒழுங்கின்மையின் வெறியாட்டம்

சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளை பேணாதவை. நிறுவப்படட மதிப்பீடுகள் மற்றும் அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது.

விலை: ரூ.85/-


10.ரெண்டாம் ஆட்டம்

பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ ரெண்டாம் ஆட்டம் ’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக நிகழ்ந்த சர்ச்சைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், அகஸ்தோ போவாலின் ’ கண்ணுக்குப் புலப்படாத தியேட்டர் ’ என்ற கட்டுரையின் தமிழாக்கமும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகள் இன்று நினைவுகூரப்படுவதன் காரணம் கலை இலக்கியப் பிரதிகளின் மீதான கண்காணிப்பும் ஒடுக்குமுறைகளும் முன் எப்போதையும்விட கடுமையாகி வருகின்றன என்பதாலேயே. அந்த வகையில் இந்த சர்ச்சையை முன்னிட்டு வைக்கப்படும் வாதங்கள் இன்றும் காலப்பொருத்தமுடையவை என்பதில் சந்தேகமில்லை

விலை: ரூ. 50/-


சில சொந்த காரணங்களால் போக முடியவில்லை.சளைக்காமல் பத்து புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் புத்தகம் எழுதி கொண்டே இருக்கிறார் அவர் புத்தகம் பற்றி
பேசாமல் அவரை எதிர்த்து கொண்டே இருக்கின்றனர் நேற்று என் வலைப்பூவை வேறு சாரு தன் வலைத்தளத்தில் ஏற்றி இருந்தார்.இது மிக பெரிய அங்கிகாரம்.சாரு வளர்த்து வளர்ந்தவர்கள் நிறைய பேர். இதை சாருவின் அடி ஆள் என்கிறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே.சாரு ஒரு கோமாளி என்பது அதை நீங்கள் படித்தால் நீங்கள் எவ்வளவு பெரிய கோமாளி???அதுவும் என் போன்ற ஜால்றவிற்கு ஏன் பின்னூட்டம் போடா வேண்டும்.....அப்பொழுது நீங்கள் ஜால்றவையே அங்கிகாரம் செய்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம். பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்.

நான் சாரு என்றால் படிப்பேன்.எனக்கு நிறைய மாற்று கருத்து உண்டு ,ஆனாலும் படிப்பேன். நீங்கள் சொல்வது எல்லாம் மாற்று கருத்தாய் தெரியவில்லை சாரு என்கிற தனிமனித எதிர்ப்பு தெரிகிறது நண்பர்களே.எதிர் கருத்து இருக்கலாம் ஆனால் ஒரு தனிமனித எதிர்ப்பு தவறு.சாருவிற்கு இளையராஜா பிடிக்கவில்லை என்றால் எனக்கு பிடிக்கும் அதற்காக எல்லாம் சாருவை வெறுக்க முடியாது. ஏன் சாரு மேல் ஒரு சிலருக்கு அவ்வளவு ஆத்திரம்.அவர் மனதில் தோன்றுவதை சொல்கிறார் அது பிடிக்கவில்லை.

சாருவினால் நான் உளவியல் ரீதியாக நிறைய கற்றுகொண்டிருகிறேன்.நான் மேம்பட்டு இருக்கிறேன்,அது எனக்கு தெரியும்.எனக்கு உலக இலக்கியம் தெரியாது,உலக இலக்கியம் என்றால் என்ன படிக்கும் மனிதன் மனது மேம்பட வேண்டும் .எனக்கு சாருவினால்
சில உளவியல் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.என் பார்வை விசாலம் அடைந்து உள்ளது.நான் உண்மையை சொல்கிறேன். சாருவின் அடி ஆள் என்றால் ஆயிரம் பேர் பாராட்டினால் அதை விட ஐந்து மடங்கு எதிர்ப்பு வரும் என்று எனக்கு தெரியும்.அதற்காக எல்லாம் பயந்தால் முடியுமா.நான் மிகத்தெளிவானவன் என்று சொல்ல மாட்டேன். உலகில் மிகத்தெளிவானவன் என்று யாரும் இல்லை.நீங்கள் சொல்லும் இலக்கியவாதி கூட குப்பையாய் இருக்கலாம் நீங்கள் தெளிவில்லாமல் இருக்கலாமே?????நான் மேம்படிருக்கிறேன் நான் பாரதி பார்த்தது இல்லை......

எனக்கும் சாரு மீது மாற்று கருத்துக்கள் உண்டு.நிறைய கேள்விகளும் உண்டு??? இளையராஜா ஏன் பிடிக்காது.அமீரை சொன்னவர் ஏன் மிஸ்கின் நந்தலாலாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் என்று கேள்விகள் எழும்.நான் அல்லக்கை இல்லை????நீங்கள் சொல்கிறீர்கள் நான் அப்படி தான் என்கிறேன். சாரு தவறாக எழுதியது என் கண்ணில் பட்டது என்றால் கேட்பேன்.......ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதாலேயே அல்லக்கை என்று சொல்ல கூடாது.

ஏன் அவர் எழுத்தை பற்றி விசாரிக்காமல் அவரை மட்டும் பற்றி கவலை படுகிறீர்கள் ......நான் அவரின் வாசகன்.....நீங்கள் நினைத்தால் அடி ஆள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்.

14 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே//
இதையேதான் நாங்க‌ளும் சொல்றோம் சாருவுக்கு இளையராஜா பிடிக்கவில்லை என்றால் எதுக்கு அவ‌ர் இசையை கேட்க‌னும் வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே

புலவன் புலிகேசி said...

//எனக்கும் சாரு மீது மாற்று கருத்துக்கள் உண்டு.நிறைய கேள்விகளும் உண்டு??? இளையராஜா ஏன் பிடிக்காது.அமீரை சொன்னவர் ஏன் மிஸ்கின் நந்தலாலாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் என்று கேள்விகள் எழும்.நான் அல்லக்கை இல்லை????நீங்கள் சொல்கிறீர்கள் நான் அப்படி தான் என்கிறேன். சாரு தவறாக எழுதியது என் கண்ணில் பட்டது என்றால் கேட்பேன்.......//

இது வரை கேட்டிருக்கிறீர்களா? பதில் கிடைத்திருக்கிறதா? சொல்லுங்கள்...

வெண்ணிற இரவுகள்....! said...

இதை நான் அவரிடமே கடிதத்தில் கேட்டு இருக்கிறேன் நண்பா ,,,,,
அவரும் பணிவாக பதில் கூறினார்............................!அது அவர் அவர் ரசனை ....
நீங்கள் அவரை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் ,படைப்புகளை விமர்சனம் செய்யலாமே.
இளையராஜாவை பொறுத்துவரை சாரு அவர் இசையை தான் விமர்சனம் செய்தார் அதை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும்....சாரு என்றாலே மைனஸ் வாக்குகள் தானா ......????
நீங்கள் படைப்புகளை படிக்காமல் அவரை விமர்சனம் செய்வது தவறு

க‌ரிச‌ல்கார‌ன் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
இளையராஜாவை பொறுத்துவரை சாரு அவர் இசையை தான் விமர்சனம் செய்தார் அதை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும் நீங்கள் படைப்புகளை படிக்காமல் அவரை விமர்சனம் செய்வது தவறு//

//பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்//

???????????????????????????????

ஸ்ரீராம். said...

இதுவரை சாரு புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு வரவில்லை. நீங்கள் மேலே கூறியுள்ள தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்க உத்தேசம். செய்தித் தாளில் புத்தக வெளியீட்டு விழா செய்தி படத்துடன் பார்த்தேன். புத்தகக் கண் காட்சியில்தான் வாங்க வேண்டும். முதலில் அவரப் படிக்கப் போகும் எனக்கு ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்யவும்.

வெண்ணிற இரவுகள்....! said...

நான் புத்தகக்கண்காட்சியில் வாங்கப் போகிறேன் பத்து புத்தகங்களும் வாங்குவேன்....
உங்களுக்கு எது நன்றாய் உள்ளது என்று சொல்கிறேன் ஸ்ரீராம் ....கட்டாயம் படியுங்கள்.........

வெண்ணிற இரவுகள்....! said...

'கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் ' நீங்கள் ஏன் இந்த புத்தகம் வாங்க கூடாது .....
இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள உதவும் ....கண்டிப்பாய் பல உலக இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகம் செய்து இருப்பார் சாரு.....ஸ்ரீராம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
இளையராஜாவை பொறுத்துவரை சாரு அவர் இசையை தான் விமர்சனம் செய்தார் அதை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும் நீங்கள் படைப்புகளை படிக்காமல் அவரை விமர்சனம் செய்வது தவறு//

//பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்//

க‌ரிச‌ல்கார‌ன் said...

இப்ப‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றிங்க‌ சாருவ‌ ப‌டிக்க‌னும்கிறிங்க‌ளா இல்ல‌ வேண்டாங்கிற‌ங்க‌ளா?
இல்ல‌ ப‌டிக்காம‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ண‌கூடாது அப்ப‌டீங்கிற‌ளா?
இல்ல‌ ப‌டிச்சாலும் விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ண‌கூடாது அப்ப‌டீங்கிற‌ளா?

வெண்ணிற இரவுகள்....! said...

கரிசல்காரன் நீங்கள் சாருவை விமர்சனம் செய்வதை விட படைப்புகளை செய்யலாமே ....

Ganesan said...

சாரு நிவேதிதாவின் 10 புத்தகங்களின் வெளியீடும், புகைப்படங்களும்

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

இனியாள் said...

சாருவின் புத்தகங்களை நீங்கள் அறிமுக படுத்தி இருப்பதோடு முடிந்திருந்தால் இந்த பதிவை மிக சிறந்த பதிவாய் கருதி இருப்பேன், உங்கள் எழுத்துக்களில் நல்ல முதிர்வு தெரிகிறது, தயவு செய்து இந்த மாதிரி சச்சரவுகளை பின்னூட்டத்தில் நிகழ்த்துங்கள், இதையும் உங்கள் தங்கை திவ்யா சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே.

leny said...

//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே//

திரு. தூங்கா இரவுகள் அவர்களுக்கு....
சாருவை பற்றி குமுதத்தில் ஒரு கருத்து வந்ததே - உடனே அவரும் அவரின் விசிறிகளும் எத்தனை எதிர்ப்பு காட்டினீர்கள். உங்களுக்கோ சருவுக்கோ குமுதத்தை பிடிக்கவில்லை என்றால் பின் ஏன் அதை படிக்கிறீர்கள். உங்களுக்கு இருக்கும் வேலையை பார்க்கலாமே...!
நான் சாருவை விமர்சிக்கவில்லை. அவரின் எழுத்துகளில் உள்ள அறியாமையை தான் விமர்சிக்கிறேன். அவரின் வலைதளத்தில் உள்ள "இந்திய விற்பனைக்கு" என்ற கட்டுரையை படியுங்கள். அதில் மென்பொருள் துறை சார்ந்தவர்களை அடிமை என்று குறிப்பிடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் நாங்கள் அமெரிக்கர்களுக்காக வேலை செய்கிறோமாம். அவரை பார்த்தல் நீங்கள் ஒன்று கேளுங்கள். அவர் இந்தியர்களுக்கு மட்டும் தான் எழுதுகிறாரா என்று...
பின் குறிப்பு: அக்கட்டுரை தொடர்பாக அவருக்கு பல இ.மெய்ல்கள் அனுப்பிவிட்டேன். பதில் இல்லை.

நந்தா said...

//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே.சாரு ஒரு கோமாளி என்பது அதை நீங்கள் படித்தால் நீங்கள் எவ்வளவு பெரிய கோமாளி???அதுவும் என் போன்ற ஜால்றவிற்கு ஏன் பின்னூட்டம் போடா வேண்டும்.....அப்பொழுது நீங்கள் ஜால்றவையே அங்கிகாரம் செய்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம். பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்.//

லாஜீக் இல்லாத கேள்விகள்.ஏன் இலக்கியத்திலிருந்த சமூகம் வரை சாரு யாரையும் கேள்விப்படுத்தவே இல்லையா? அவருக்கு பிடிக்க்லைன்னா கண்ணை மூடிக்கிட்டு போயிருக்க வேண்டியதுதானே. ஏன் அதை நொட்டை, இதை நொட்டைன்னு சொல்லிக்கிட்டிருக்காரு. இந்த கேள்வியை எப்போதாவது நீங்கள் சாருவைப் பார்த்து கேட்டிருக்கின்றீர்களா நண்பரே.

//கரிசல்காரன் நீங்கள் சாருவை விமர்சனம் செய்வதை விட படைப்புகளை செய்யலாமே ....//

விமர்சனம் செய்பவர்களின் மீதான இந்த கேள்விகள்தான் சாருவின் மீதான உங்களது ரசனையானது தலைவா என்று சொல்லி நடிகனுக்கு கட் அவுட் வைக்கும் பாமர ரசிகனின் ரசனையை ஒத்ததாய் தோன்ற வைக்கின்றது. முதலில் சாருவோட புத்தகங்களை படிக்காமலே விமர்சிக்கின்றார்கள் என்று பொதுப்படையாக எல்லா விமர்சகர்களைப் பற்றியும் தெரிந்தவர்களாய் சொன்னீர்கள். அடுத்து அதை பண்றதுக்கு பேசாம புத்தகங்களை எழுதுங்களேன்னு சொல்றீங்கஏன்ன சொல்ல வர்றீங்க சாருவை விமர்சிக்கணும்னா கூட குறைஞ்சது 4 புத்தகம் போட்டவங்க மட்டும்தான் விமர்சிக்கணும்னு சொல்ல வர்றீங்களா?

சாருவும் ஞாநி, ஜெமோவை விமர்சிக்கிற நேரத்தில ஒழுங்கா புத்தகங்களை எழுதி இருந்தால் இப்போ 10 புத்தகத்துக்கு பதிலா 20 புத்தகமே ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.

நீங்கள் சாருவின் அடி பொடி இல்லை என்றால் நீங்கள் ஏன் யாரோ சாருவை விமர்சித்தால் இவ்வளவு பொங்க வேண்டும். விமர்சனம் என்பது எவரொருவரின் அடிப்படை உரிமை. அதை தயவு செய்து சாருவுக்கு மட்டுமே என்று பட்டா போட்டுக் கொடுக்காதீர்கள். சாருவின் மீதான விமர்சனங்களில் நீங்கள் கேட்ட சில கேள்விகளைப் போல அடிப்படை லாஜீக் இல்லாத மொக்கையான, நானும் ரவுடிதான் டைப் விமர்சனங்களும் இருக்கின்றன. அதை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். அதை விட்டுட்டு ”அவரையே விமர்சனம் பண்ற அளவுக்கு ஆயாச்சா” என்ற ரீதியில் கேள்விகளை எழுப்பி சாரு என்ற எழுத்தாளனை கோபுரத்தின் மீது அமர்த்தாதீர்கள்.

http://blog.nandhaonline.com