Tuesday, 15 December 2009

vodafone நாய்கள் ஆகிவிட்டோம்






















நான் airtel உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.அவர்கள் ஏதாவது குறுந்தகவல் அனுப்பிவிட்டு,பதினைந்து என்று கொள்ளை அடிகிறார்கள்.என்ன கொடுமை என்றால் என் நண்பனுக்கு சில நாள் முன்பு ஒரு குறுந்தகவல் 54321 அந்த மாதிரி ஏதொ எண்ணிலிருந்து "ஹாய் நான் சித்ரா" என்று ....அதற்கு பதினைந்து ரூபாய் எடுத்து விட்டனர் . என்ன மாமா வேலை பார்கின்றனவா இந்த நிறுவனங்கள். எல்லாமே காசு தானா.
அவசரமாய் customer care போன் செய்ய வேண்டுமென்றால், போன் செய்தவுடன் ....கிரிக்கெட் pack என்று ஒரு குரல் கேட்கிறது....அதற்கு பின்பு அவர்களுடைய ஏனைய விளம்பரங்கள் கேட்க வேண்டும்.......அப்புறம் தான் நீங்கள் பேச நினைக்கும் மனிதருடன் பேச முடியும்.

என்ன விளம்பரம் caller tune வையுங்கள் என்று முக்கியமான நேரத்தில் போன் செய்வார்கள் .அதுவும் நாம் ஒரு இழவு வீட்டில் வந்திருப்போம் அப்பொழுது??????சரி அந்த பாடலாவது ஒழுங்காய் இருக்கிறதா....press star to copy a song என்ன கொடுமை இந்த பண பேய்கள் உங்கள் உள்ளாடையை அவிழ்க்காமல் விடமாட்டார்கள்.

ஆசைகளை திணிக்க வேண்டியது, அழகான பெண்களுடன் தொடர்பு வேண்டுமா என்பது,
மாமா வேலைக்கும் இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை . நுகர்வு கலாச்சாரம் மிக கொடுமையாக உள்ளது. உங்களுக்கு போன் செய்து இதை பயன்படுத்துங்கள் அதை பயன்படுந்துகள் பிரஸ் 4 பிரஸ் 5 என்கிறான்.என் நண்பர்கள் மூவருக்கு அவர்கள் எதுவும் செய்யாமலேயே காசுகள் பிடுங்கப்பட்டன.மூவருமே வெகு நாள் கழித்து தான் அதை உணர்ந்தார்கள். நம்மிடம் அடிக்கடி balance check செய்யும் பழக்கம் இல்லை. அதனால் திடிரென்று ஒரு தகவல் வரும் ,நீங்கள் விளம்பரம் தானே என்று நினைப்பீர்கள் காசு
எடுத்து இருப்பார்கள்.

நான் ஒரு நாள் ஐம்பது ரூபாய்க்கு போட்டிருந்தேன்.எனக்கு இந்திய ஆஸ்திரேலியா ஆட்டம் நடக்கும் போது எத்தனை ரன்கள் என்ற குறுந்தகவல் வந்துகொண்டே இருந்தது . நான் அலுவலில் ஏதொ விளம்பரம் என்று விட்டு விட்டேன். அப்புறம் பார்த்தால் ஆறு ரூபாய் தான் balance இருந்தது. பாருங்கள் அவலத்தை...............இது எல்லாம் திருட்டு இல்லையா.அனைத்து போன்களும் அப்படியே என்று நம்புகிறேன் .......................
எதற்கெடுத்தாலும் விளம்பரம்......நாமெல்லாம் அந்த நிறுவனங்கள் பின் ஓடும் vodafone நாய்கள் ஆகிவிட்டோம்

பின் குறிப்பு :
கார்ல் மார்க்ஸ் சொன்னார்....மனிதனுக்காக பொருள் போய் பொருளுக்காக மனிதன் வந்து விட்டான் ....எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்

17 comments:

மேவி... said...

ஆமாங்க...... மார்க்கெட்டிங் என்பது ரொம்பவே கேவலமாக போய் கொண்டு இருக்கு......

demand creation ன்னு சொல்லுவாங்க ........வலு கட்டாயமாக ஒருவனிடத்தில் ஒரு பொருளுக்கான தேவையை உற்பத்தி பண்ணி காசு பிடிங்குவது ....

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் மேவி .....உண்மை தான் பொதுமக்கள் தான் விழிப்படைய வேண்டும் ....

அகல்விளக்கு said...

//கார்ல் மார்க்ஸ் சொன்னார்....மனிதனுக்காக பொருள் போய் பொருளுக்காக மனிதன் வந்து விட்டான் ....எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம் //

மிக உண்மை...

மார்கெட்டிங் மிக மிக கீழ்த்தரமாய் போய்க்கொண்டிருக்கிறது நண்பா...
டு நாட் டிஸ்டர்ப் என்று ஒரு ஆப்ஷனும், அவன் நம்மள டிஸ்டர்ப் பண்ணாததுக்கு மாசம் 15 ரூபாய் கொடுக்கணுமாம்...

ஹீம்.... என்னா மொள்ளமாரித்தனம்...

இன்றைய கவிதை said...

We need to be careful before getting into any packages with any of these tele companies!

There is no point in blaming them, my dear! Be careful!

-Keyaar

Unknown said...

ஏர் டெல்லில் coustemer carekku போன் பண்ணி ரொம்ப கோவமாக எதாவது கிராமத்து ஸ்லாங்கில் கோபமாக பேசுங்கள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள்...

புலவன் புலிகேசி said...

உங்கள் நண்பரை பயணாளர் நீதிமன்றத்தில் வழக்கு பதிய சொல்லுங்கள்..எல்லோரும் கோபப்பட்டு உதவி மையத்தை தொடர்பு கொள்வோம் அல்லது அப்படியே விட்டு விடுவோம். அதனால் தான் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

கலையரசன் said...

நல்லவேளை!! நாயை கல்லை கொண்டு அடிக்காம விட்டாங்களேன்னு, சந்தோஷப்படுங்க பாஸ்...

//மனிதனுக்காக பொருள் போய் பொருளுக்காக மனிதன் வந்து விட்டான் //
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ???

க.பாலாசி said...

எல்லா நிறுவனங்களும் இந்த ரகம்தான் நண்பா...என்ன கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்...அவ்வளவுதான்...

நல்ல பதிவு...

shortfilmindia.com said...

இதை சும்மா விடக்கூடாது கார்த்தி... நிச்சயம் போய் ஆபீஸில் கம்ப்ளெயிண்ட் செய்யுங்கள். இலலையென்றால் நுகர்வோர் கோர்டுக்கு போங்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் நம்மால் முடியாதுஎன்று நினைத்து கொண்டிருந்தால் நிச்சயம் மேலும், மேலும் ஏமாற்றவே செய்வார்கள்.

கேபிள் சங்கர்

ஸ்ரீராம். said...

நம்மை அறியாமலாவது ஒப்புதல் பொத்தானை அமுக்காமல் இதெல்லாம் நடக்காது பாஸ்...எனவே நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

கண்ணா.. said...

//ஏர் டெல்லில் coustemer carekku போன் பண்ணி ரொம்ப கோவமாக எதாவது கிராமத்து ஸ்லாங்கில் கோபமாக பேசுங்கள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள்...//

மைண்ட்ல வச்சுக்கறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

well said karthick...!

KASBABY said...

தீர்க்க தரிசனம்.......சரியானது.

இனியாள் said...

நிஜம் தான் தோழர், எனக்கும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஸ்ரீநி said...

அதுல கூட பாருங்க VODAFONE நாய் பய்யன் ( BOY - OLD AD ) ன்ன பின்னாடி மட்டும் போகுது
பொண்ணு ( GIRL NEW AD )ன்ன கூட மாட ஒத்தாசை பண்ணுது

வால்பையன் said...

நானும் ஏர்டெல் தான்!
தாவூ தீருது!

angel said...

hi
better try bsnl
i m using bsnl and i dont get any such ads xcept tht press * for this caller tune