Friday, 8 January 2010

கௌதம் மேனன் எது வன்முறை???






















கௌதம் மேனன் சமீபத்தில் சசிகுமார் மற்றும் அமீர் படங்களை விமர்சனம் செய்துள்ளார்.முதலில் அவர் படம் எப்படி இருக்கிறது.காக்க காக்க படத்தில்
encounter செய்வதை நியாயப்படுத்தி உள்ளார் சரி அடிமட்டத்தில் இருக்கும் அடிபோடி ரௌடிகளை கொலை செய்யலாம்.அதை வளர்த்துவிடும் அரசியல்வாதியை கொலை செய்வாரா அந்த அன்புச்செல்வம். இது எப்படி உள்ளது என்றால் ஒசாமாவை வளர்த்தது அமெரிக்கா, இப்பொழுது தீவிரவாதம் என்று சொல்கிறார்களே , வளர்க்கும்போது தெரியவில்லையா??????????

encounter முறையில் கொள்ளப்படும் ரௌடிகள் எல்லாம் பெரிய தலைவர்கள் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டவர்களே.சும்மா ஒரு ஐம்பது ருபாய் bullet வைத்து கொல்வாராம். பருத்திவீரன் சுப்ரமணியபுரம் படத்தை விட காக்க காக்க வன்முறையான படம். இது என்ன நியாயம் ஏவப்பட்ட அம்புகளை கொல்வாராம் அப்ப வில்.இது முதலாளிகளுக்கு சாதகமான கருத்து, அதாவது ரௌடிகள் மட்டும் கொலை செய்யப்படுவார்கள்,அவர்களை உபயோகிப்படுத்தி பல வேலைகள் சாதித்துக்கொண்ட பண முதலைகள் அரசியல்வாதிகள் உயிருடன் உலா வருவார்கள் .

அடிமட்டத்தில் ஒருவன் rape செய்துவிட்டான் அவனை கொலை செய்யலாம்.குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் N T திவாரி போன்ற பெரிய தலைகளை அன்புச்செல்வனால் கைவைக்க முடியுமா?????? பெரிய சாமியார்கள் பெண்கள் விடயத்தில் படு மோசம் அவர்களை கொல்ல முடியுமா என்ன அன்புச்செல்வனால்??????????? இதில் பல காவலர்கள் விரோதம் காரணமாக கூட ரௌடிகளை encounter முறையில் கொல்லலாமே????????ஏன் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் பெரிய தலைகள் rape பண்ண மாட்டார்களா ????? என்ன கௌதம் ????? மேல்மட்டத்திற்கு ஒரு நியாயம் ....கீழ் மட்டத்திற்கு ஒரு நியாயமா ?????????இது பெரிய வன்முறை கௌதம்.

சரி ரௌடிகளை சொன்னீர்கள் அவர்களை வளர்த்துவிட்ட அரசியல்வாதியை பற்றி காட்ட வில்லையே .......இது தான் படைப்பு நேர்மையா????இல்லை நீங்கள் திருடும் ஹாலிவுட் படங்களில் அரசியல்வாதி என்ற கதாப்பாத்திரம் காட்டப்படவில்லையா இதுவரை எதாவது ஒரு அரசியல் பிரமுகர் encounter முறையில் கொல்லப்பட்டு இருக்கிறாரா?????????அப்பொழுது அடிமட்டத்தில் இருக்கும் ஒருவனை தான் அன்புச் செல்வனால் கொல்ல முடியுமா....??????இது தான் உங்கள் அரசியல் பார்வையா ????????????இது கருத்துக்களில் வன்முறை கௌதம் அவர்களே .......!

சரி வேட்டையாடு விளையாடு படத்தில் தமிழ் பெயர் உடைய வில்லன் கமக்கொடுரங்கள் செய்வார்கள் .....ராகவன் என்ற மேட்டுக்குடி பெயர் கொண்ட கமல் அவர்களை வேட்டையாடுவார் ....!இது வன்முறை தானே ஏன் கமலுக்கும் நல்ல தமிழ் பெயர் வைத்திருக்கலாமே ????????இது வன்முறை தானே ......

"காக்க காக்க" முதலாளிகளை மட்டும் காக்க காக்க ...............
வன்முறையின் உச்சம்

7 comments:

பிரபாகர் said...

சினிமாவில் இருக்கிற எவருக்கும் வன்முறையை பற்றி பேச அருகதையில்லை. எதோ ஒரு விதத்தில் வன்முறைக்கு தூண்டுவதே அவர்கள் தாம்...

நினைத்தால் கொதிப்புதான் மிஞ்சும்.

சாடலுடன் கூடிய இடுகை.

பிரபாகர்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல கேட்டீங்க.....

ஸ்ரீராம். said...

ஏன் இத்தனை கேள்விக் குறிகள்? அதுவும் ஒவ்வொரு முறையும்?

இனியாள் said...

Ungalukku mattum epdi intha mathri news lam kidaichiruthu, goutham menanukku ithu avasiyam illatha vishayam thaan, vettaiyadu vilaiyadu vanmurai jaasthiyana padam thaan.

Yoganathan.N said...

//இதுவரை எதாவது ஒரு அரசியல் பிரமுகர் encounter முறையில் கொல்லப்பட்டு இருக்கிறாரா?????????//

இப்படி ஒரு scene வேட்டயாடு விளயாடு படத்தில் இருந்த்தாக ஞாபகம்...

To me, there's nothing wrong with Goutham's interview... Besides, he clearly said, he's open to anyone talk about his movies...
Commenting on collegue will improve their works, in my humble opinion...

வெண்ணிற இரவுகள்....! said...

//இப்படி ஒரு scene வேட்டயாடு விளயாடு படத்தில் இருந்த்தாக ஞாபகம்...
//
நண்பரே அது ராகவனின் மனைவி கொல்லப்படுவதால் கொல்வார் அது எப்படி சமூக அடிப்படையில் சரி ........ ஏன் அவர் காவலாளி தானே சட்டத்தில் முன் நிறுத்தலாமே...........
அவர் மனைவியை கொன்றால் உணர்ச்சிவசப்படலாமா அது encounter அல்ல ...அவர் மனைவியை கொன்றதால் கொன்றிருக்கிறார் அவ்வளவே சமூக பார்வை அல்ல

Narmada said...

சினிமாவின் வன்முறை சமூகக் கேடு....

அவர்கள் காட்டுவதால் சமூகம் கெடுகிறதா அல்லது கெட்டுப்போன சமூகத்தை எவர்கள் காட்டுகிறார்களா என்பதே புரியாத புதிர்.....

மக்கள் விழிப்புணர்வு மட்டுமே அவர்களை காப்பாற்றும்....