Monday 18 January 2010

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் தான்















ஆயிரத்தில் ஒருவன் பற்றி பல விமர்சனம் வந்து கொண்டிருக்கின்றன. அனைவரும் சொல்வது இரண்டாவது பாதி சரி இல்லை என்று.என்னை பொறுத்தவரை இரண்டாவது பாதி ஒரு அற்புதம் என்றே சொல்வேன். ஆயிரத்தில் ஒருவன் உண்மையிலேயே சோழர் கதை பேசுகிறதா?????என்றால் அந்த கதை சாதாரண கதையே.......அப்படி தான் பாதி பேருக்கு புரிந்திருக்கிறது என்றே சொல்வேன்.....ஏன் நூற்றிற்கு எண்பது விழுக்காடு அந்த புரிதலே.................

பதிவர்கள் நிறைய படிப்பவர்கள் அவர்கள் வேண்டுமென்றால் படத்தை புரிந்திருக்கலாம், பொறியியல் படிக்கும் என் தம்பிக்கு நான் தான் கதையை விளக்கினேன்...........ஆயிரத்தில் ஒருவன் உண்மையிலேயே பேசுவது ஈழ பிரச்சனை............யாரோ ஒருவன் அல்லது ஒருத்தியின் சுயநலத்தால் ஒரு இனமே அழிக்கப்படுகிறதே அதை ஆணி தனமாய் சொன்ன படம் என்பேன்.

எப்படி ஆணிதனமாய் சொல்கிறது படம். சோழருக்கு புலிக்கொடி, ஈழம் மக்களுக்கும் புலிக்கொடி. அங்கே தமிழினத்தலைவன் இங்கே பார்த்திபன், ரீமா சென் .......நாம் அன்னை என்று சொல்கிறோமே அந்த தலைவி.புலிக்கொடி ஒன்று போதாதா விளக்க.

உண்மையில் இது களவாடப்பட்ட கதையா????இது மண்ணின் கதை,இது மண்ணின் புனைவு..............இந்த கதையை எந்த படத்திலிருந்து உருவ முடியும்.புலிகள் கம்மியான ஆயுதம் வைத்திருந்தாலும் அழகாய் சமாளிக்க கூடியவர்கள். ராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கும் போது.....மறுபடியும் அவர்களை சுற்றி வளைப்பார்களே அதில் அவர்கள் போர்த்தந்திரம் தெரிகிறது.

படத்தில் போர்க்காட்சியில் இவர்கள் கத்தியை வைத்து சண்டை போடுவார்கள் அவர்கள் துப்பாக்கி வைத்து சண்டை இடுவார்கள் .............! அது ஆயுதம் குறைந்த புலிகள் ஆயுதம் அதிகமாய் இருக்கும் இந்தியாவிடம் சண்டையிடுவது போல் இல்லையா...?????அவர்கள் தோற்றதே துரோகத்தினால் மட்டுமே எனக்கு நன்றாய் புரிந்தது புனைவு .........!
படத்தில் வியட்டனமில் காட்டப்படுவதே புலம் பெயர்ந்த தமிழர்களின் புனைவு

காட்சி அமைப்புகள் வேண்டுமானால் ஏதோ படங்களை நியாபக படுத்தலாம். இன்னொரு காட்சி ராணுவ வீரர்கள் கற்பழிப்பில் ஈடுபடுவது போல்,அந்த காட்சி நான் மூன்றாம் நாள் பார்த்தபோது நீக்கம்......! ஏன் இது தான் அரசியல் ..............ஏன் மணிரத்தினம் சங்கர் கமல் படம் வரும்பொழுது இந்தப்படத்தில் இருந்து திருடி உள்ளார் என்று யாரும் சொல்வதில்லை...................ஏன் அமீர் படம்,செல்வா படம் மட்டும் தான் தெரியுமா என்ன?????????????? இதில் ஏதோ அரசியல் சாயம் உள்ளதே........................எப்படியோ படம் அற்புதம் ..........இந்த படம் தோற்றால் என்ன செய்ய???????செல்வா போன்ற கலைஞன் தோற்க கூடாது. செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் தான்...

19 comments:

Cable சங்கர் said...

ungalai pattri naan ninaithathu sari:)

sathishsangkavi.blogspot.com said...

மற்ற நண்பர்கள் பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் நிறைய வித்தியசங்கள்....

உங்க விமர்ச்சனம் பிடிச்சிருக்கு...

Unknown said...

எனக்கு படம் பிடித்தே இருந்தது..., படத்தில் சில குறைகள் இருந்தாலும் ராணுவ நடவடிக்கைகளை துணிச்சலாக பதிவு செய்ததர்க்காகவே செல்வராகவனை பாராட்ட வேண்டும்..,

ராஷா said...

குறை சொல்லுவதற்காக படம் பார்க்கின்றதை விட ஒரு நல்ல படைப்பாளி என்ன சொல்ல வர்ரானு பாக்குரது நல்லதுனு நினைக்கின்றேன்.
உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு

sarvan said...

//இது மண்ணின் கதை,இது மண்ணின் புனைவு//
well said.. good review.

அஹோரி said...

சரியா சொனீங்க, நல்லா சொனீங்க.

க.பாலாசி said...

நல்லது நண்பரே....உங்க பார்வையும் சரிதான்.

அகல்விளக்கு said...

சரியான பார்வை நண்பா...

உங்கள் விமர்சனம் சரிதான்....

ஸ்ரீராம். said...

அப்படியா..புதிய செய்திதான்..எதுவும் படம் பார்த்தால்தான் தெரியும்..

துபாய் ராஜா said...

நடுநிலையான,அருமையான விமர்சனம்.

Anonymous said...

-- SELVARAGHAVAN'S PRESS MEET --

'படத்தில் லாஜிக்கே இல்லையே?' என்று கேட்டதற்கு, "ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள். அவதார் படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்.

Anonymous said...

எனக்கும் படம் பார்த்த போது இலங்கை + தமிழர்கள் நினைவுக்கு வந்தது, குறிப்பாக ராணுவ வீரர்கள் சோழா பெண்களை பலாத்காரம் செய்யமுற்படும் காட்சியின் போது. அந்த காட்சி இப்போ நீக்கி விட்டார்களா ? அட பாவிகளா !

mouli said...

You r little "Selvaragavan".really nice comments..

AmAlAn said...

நல்ல பதிவு, நல்ல படம்.

கந்தப்பு said...

நல்ல படம்

கந்தப்பு said...

நல்ல படம்

கந்தப்பு said...

நல்ல படம்

இனியாள் said...

Padathai patriya ungal vimarsanam puthiya konathil irunthathu, atharku nandri eninum ungalukku oru anbana vendukol, ungalukku pidithavargalai paarattungal yen matravargalai kurai koora vendum intha ungal nilaipattai matri kondaal ungalin sila karuthukkalil naan kaanum double standards illamal pohum.

GoodJob said...

எனக்கு இரண்டாம் பாகம் மிகவும் பிடித்திருக்கிறது.... சோழர் பேசிய தமிழில் பின்னூட்டம் போட முடியாவிட்டாலும் முடிந்தவரை...தமிழில்....