Wednesday, 27 January 2010
அழகி,ஆட்டோகிராப்,ரெயின்போ காலனி,சேது
சினிமா:திரை விலகும் போது - பகுதி 2
"அழகி" "ஆட்டோகிராப்" "ரெயின்போ காலனி" போன்ற படங்களை பார்த்தால் நாம் என்ன செய்வோம்.திரைஅரங்கில் பாதிக்கு மேற்ப்பட்ட பேர் அழுது கொண்டிருப்பார்கள். நானும் இதை போன்ற மனதை உலுக்கும் படைப்புகளை ரசித்துக்கொண்டிருந்தேன். இந்த புத்தகம் அதை எல்லாம் எனக்கு சுக்குநூறாய் உடைத்தது. டேய் அது அற்பவாதமடா என்றது??? மனதை உலுக்கும் வேலையே பார்த்துவிட்டு அதன் மூலம் தன் கல்லா பெட்டி
நிரப்பிக்கொண்டிருக்கிறது இவ்வகை படங்கள்.
சரி காதல் என்றால் தூய உறவு தானே என்று சிலர் சொல்லலாம். எப்படி தூய உறவாக
ஆக முடியும் காதல்,அது பசி தூக்கம் போல விஞ்ஞான ரீதியில் பார்த்தால் ஒரு தேவை அவ்வளவே,ஒரு பெண்ணிடம் கிடைக்கவில்லை என்றால் வேறொரு இடத்தில கிடைக்கும். ஆனால் இந்த காதலை புனிதமாக்கி ரசிகனை மயக்கி அவனை நிலைகுலைய வைக்கும் வேலையே இத்திரைப்படங்கள் செய்கின்றன.
ரசிகனே மறந்து தன் வேலைகளை பார்த்துக்கொண்டிருப்பான் இப்படம் பார்த்தவுடன்
நேராக டாஸ்மாக் செல்வான். சரி இது வெறும் கலை படைப்பு தானே என்று எடுத்துக்கொள்ள முடியாது??? இந்த உணர்வு மனதில் விடம் போல் செல்லக்கூடியது,ஒரு மயக்கத்தை ஏற்படுத்த கூடியது . தண்ணி அடிப்பதற்கும் இம்மாதிரி படங்கள் பார்பதற்கும் பெரிய வித்யாசம் இல்லை.
சரி இது உணர்வு பூர்வமான விடயம் தானே என்று சிலர் வாதிடலாம். "அழகி" படம் பார்த்துவிட்டு என் நண்பன் அவனுடைய பழைய காதலியை மூன்று வருடம் தேடினான். இந்த அற்பவாததில் மூழ்கி போனதால் அவனால் முன்னேற முடியவில்லை. இந்த மாதிரி பழயதை நினைத்துக்கொண்டிருப்பதை இலக்கியம் என்று சொல்கிறார்கள்.ஒரு தனி
மனிதனின் துயர் மட்டும் எப்படி இலக்கியமாகும். இந்த அற்பாவாத்தில் ஈடுபடுபவர்களால் அவர்களுக்கும் உபயோகம் இல்லை சமூகத்திற்கும் உபயோகம் இல்லை.
அப்படி என்றால் காதல் என்றால் இல்லையா??? இருக்கிறது ஆனால் காதல் மட்டுமே இல்லை. அது பசி தூக்கம் போன்றது. அதற்குள்ளாகவே உழல்வது மன பிரமை போன்றது,கிட்டத்தட்ட பைத்தியம் போன்றது .ஏன் காதல் மட்டும் தான் உங்கள் மனதுகளை உலுக்குமா???? ஏன் இதே மனது இலங்கையில் குழந்தைகள் சாகும் போது மட்டை பந்து பார்த்துக்கொண்டிருந்தது. ஏன் காதல் படங்கள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன????
காதல் படம் வந்தாலும் ஏன் உலுக்கி எடுக்கும் படங்கள் மட்டும் வெற்றி பெறுகின்றன. அந்த படங்களை எல்லாம் பார்த்தால் காதலனும் காதலியும் சேர்ந்து இருக்க மாட்டார்கள். அவர்களை பிரிப்பதிலேயே தான் சுகம் உள்ளது. அதுவும் இந்த அற்பவாத விடத்தை பாலா , சேரன், செல்வராகவன் போன்றவர்கள் அழகாய் கொடுப்பார்கள். தேன் தடவி விடத்தை கொடுப்பார்கள். நாம் குடித்து விட்டு போதையில் இருப்போம். நம் அறிவு மங்கித்தான் போகும்.
இந்த கலை படைப்புகளால் சமூகத்திற்கு பயன் வேண்டாம், முடிந்தால் மனதை கெடுக்காமல் இருக்கலாமே??? சமூகத்திற்கு சமூகத்தை பற்றி யோசிக்க விடாதா அடுத்த சமூகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் வெறும் அழகி படம் பற்றி மட்டும் எழுதி இருந்தார்கள். ஆனால் அனைத்து படங்களும் இவ்வகையே சாரும்.
பழைய நியாபகங்களில் இருப்பவன் இறந்த காலத்தில் இருக்கிறான்,
அவன் பிணத்திற்கு சமம்.இந்த படங்கள் மன ரீதியாக வீழ்த்தி ஒருவனை சமாதி நிலைக்கு அழைத்து செல்கிறது ...ஏன் மன ரீதியாக நம்மை அடிமை படுத்தும் விடயத்தை கலை என்று கொண்டாடுகிறோம் .
மனிதன் சுயமுன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் இந்த மாதிரி கலைகள் ஒடுக்க பட வேண்டும். இலக்கியம் இலக்குடன் இருக்க வேண்டும், ஒரு கலை ரசனையை வைத்து தான் அந்த நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது.ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பு தேவையா????இல்லை அற்பவாதம் தேவையா????????முடிவு செய்யுங்கள்
பின்குறிப்பு :
இது வெறும் விமர்சனம் மட்டும் இல்லாமல் அற்பவாதம் என்றால் என்ன என்று நான் புரிந்து கொண்டது.இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.விமர்சனம் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அப்படின்னு பார்த்தா, எல்லாமே அற்பவாதம் தான். வேலை, பணம், மரியாதை, வசதிகள்....
திரை விமர்சனம் எழுதும் அதிமேதாவிகளின் கவனத்துக்கு
ஒரு காரியத்தை ரொம்ப சிரத்தையா செய்து வரும் நீங்கள், அந்த காரியம் நன்றாக முடியும் என்ற நம்பிக்கையில் தானே செய்கிறீர்கள்? அது போல தான் படம் எடுக்குறதும். வெறும் 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நீங்கள் இவ்வளவு யோசிக்கும் போது, படம் தயாரிப்பாளர் எவ்வளவு யோசிச்சிருப்பாரு? அப்போதைக்கு அவர் சரின்னு நினைக்கும் படத்துக்கு தான் பணம் கொடுப்பாரு அது சரியா தப்பான்னு அவர் தான் பீல் பண்ணனும் ஏன்ன்னா அது அவரு பணம்.
படம் பாத்து மக்களுக்கு புடிக்கலைன்னா அத மக்கள் சொல்லணும் அதவிட்டு நீங்க என்னமோ அவதாரம் எடுத்து வந்த மாதிரி விமர்சணம் எழுதுறது! தெரியாம தான் கேக்குறேன் மக்களோட கண்ணோட்டமும் உங்களோட கண்ணோட்டமும் ஒரே மாதிரியா இருக்கும்? ஒரு சப்ப கதையா கூட இருக்கட்டும் உனக்கு புடிக்காதது அடுத்தவனுக்கும் கண்டிப்பா புடிக்கும் சாமி! படம் பாக்க போறவனைக்கூட விமர்சணம்ங்குற பேர்றல உங்களோட கண்ணோட்டத்தை எழுதி போக விடாம பண்றது என்ன நியாயம் பாஸ்? அடுத்தவன் சோத்துல மண்ணவாரி போடுறது நமக்கு தான் கை வந்த கலையாச்சே! படம் விமர்சனம் பண்ணுறவனுங்க எல்லாம் சேந்து ஒரு படம் எடுங்க நல்லா ஓடுதான்னு பாப்போம் ?
உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போயி பாக்காதீங்க, அத விட்டுட்டு அடுத்தவனை பாக்காதன்னு சொல்ற மாதிரி ஏன் எழுதுறீங்க. நீங்க ஒரு படம் எடுத்து அது மொக்கையானா உங்களுக்கு என்ன மாதிரி பீலிங்ஸ் இருக்குமோ அது போல தான் தயாரிப்பாள்ரும். அவரும் மனுசன் தான்யா. எப்படி அவரு உங்க வியாபாரத்தில் தலையிடுவதில்லையோ அது போல நீங்களு அவருடைய வியாபாரத்தை விமர்சனம் செய்வது கூடாது.. ஒரு படம்ங்குறது உங்களுக்கு மட்டும் தான் 2 1/2 மணி நேர கேளிக்கை ஆணா இதுதான் பல பேருக்கு வாழக்கை. அடுத்தவனை எப்போதும் உங்க கண்ணோடத்தில பாக்காதீங்க பாஸ் ! அடுத்தவன் பொண்டாட்டி என்ன புடவை கட்டனும்னு எப்படி நீங்க சொல்ல உரிமை இல்லையோ அது போல தான் இதுவும்.
குறிப்பு : இது தமிழ்பட விமர்சனம் எழுதும் எல்லோருக்கும் பொருந்தும்..
இது எண்ணோட கருத்து மட்டும் தான்
நான் படம் விமர்சனம் எழுத வில்லை ................அந்த ரசனை அற்பமானது என்பதை எழுதுகிறேன் ...இது புத்தக விமர்சனம் தர்மா அவர்களே ............................நீங்கள் சம்பாதிக்க வேண்டுமேன்பதர்க்காய் எதையும் செய்வீர்களா என்ன??????? நான் செய்ய மாட்டேன் நண்பரே
படம் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கமே இப்பதிவு .....................
சரவணகுமரன் அவர்களே அற்பவாதம் என்பது மனிதனை முன்னேற விடமால் இருக்கும் சிந்தனை ...............இந்த காதல் படங்கள் எண்ணங்களை தூண்டி விட்டு போகின்றன .................அதுவே அற்பவாதம் ....இதனால் சமூகத்திற்கு என்ன பயன் இதன் சமூக மதீப்பீடு என்ன .......மனதை வீழ்த்தும் இம்மாதிரி படைப்புகள் தேவையா என்ன??
நண்பரே உங்கள் ஆதங்கத்தை நான் நன்கு அறிவேன்... நீங்கள் நினைப்பதை போல் எல்லோரும் சினிமாவின் தாக்கத்திற்கு ஆளாவதில்லை. அதெல்லாம் மிகவும் குறைவு.
நீங்கள் ஒரு வேட்டைக்காரன் , வீராசாமி போன்ற படங்களை சொல்லியிருந்தால் பரவாயில்லை... ஆனால் நீங்கள் சொன்ன நான்கு படத்தின் இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் புதிய ட்ரென்டை கொண்டுவந்தவர்கள்... அவர்கள் அடைந்த தாக்கத்தை பிரதிபலித்தார்கள்... அவ்வளவே...
உணர்வுகளைக் கட்டிப் போடுபவன் ஞானி.. அது சாதாரண மனிதர்களால் முடியாது. எனவே உணர்வுகள் இருக்கும் வரை இது போன்ற - உணர்வுகளை வெளிக்கொணரும் ஊடகங்கள் இருந்து கொண்டே இருக்கும். அம்மா கூட பாசத்தை (பாசம் என்ற உணர்வை) வெளிக்கொணரும் ஊடகம் தான். குழந்தைகள் நம் கடந்த காலத்தை வெளிக்கொணரும் ஊடகங்கள். இது போன்ற பல. எனவே, அடக்குவதேன்றால் அனைத்தையும் அடக்க வேண்டும். இது நல்ல உணர்வு, இது கெட்டது என்று நாமே உணர வேண்டும். ஆக கலைக்குள் இந்த சித்தாந்தத்தைப் பொருத்தாமல், கலையைக் கலையாக பார்க்கலாம். இறந்த காலத்தை ஏணிப்படிகளாக்கியே நாம் மேலேறி வந்திருக்கிறோம்.. ஊடகங்கள் என்பவை எப்போதும் ஏதோ ஒரு உணர்வை வெளிக்கொனர்பவை. உணர்வு இல்லாமல் எப்படி படம் எடுப்பது...?
ஆகவே திரை ஊடகங்களைப் பற்றிய இந்த பார்வையில் எனக்கு ஒருமித்த கருத்து எதுவும் இல்லை..
தொடர்ந்து எழுதுங்கள்..
நன்றி...
மன்னிக்கணும் நண்பா உங்களின் இந்த கருத்துகளில் இருந்து நான் முற்றிலும் வேறு படுகிறேன். மற்றும் உங்களின் கருத்தை மூர்க்கமாக எதிர்க்கிறேன்.
அழகி,ஆட்டோகிராப்,ரெயின்போ காலனி நீங்கள் உதாரனதிர்க்கு எடுத்துக்கொண்ட படங்கள் - ம்..ம்..ஹீம் முற்றிலும் தவறானது..,அழகி மற்றும் ஆட்டோக்ராப் நிச்சயமாக இதிகாச படங்கள்தான்.( ரெயின்போ காலனி என்னால் சொல்ல முடியாது).
நீங்கள் இது போன்ற படங்களை பார்த்து சிரழிந்து போகிறார்கள் என்று எழுதி இருக்கறீர்கள்..நிச்சயமாக இல்லை நண்பா...நிறைய விசயங்களை இந்த படம் எனக்கு கற்பித்த அனுபவங்களை நான் தொலை பேசியில் உங்களுக்கு விளக்குகிறேன்.
அதேமாதிரி "இயக்குனர் சேரன்" நீங்க ரொம்ப சாதரணமா சொல்லிடீங்க..அவரோட படம் பொற்காலம், பாரதி கண்ணம்மா, வெற்றி கொடிகட்டு, தேசிய கீதம், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, மாயா கண்ணாடி எல்லாமே பாத்து இருப்பீங்கன்னு நினைக்கிறன் இதை விட சமூக அக்கறை உள்ள ஒரு படத்தை யாராவது கொடுத்திர முடியுமா என்ன...அந்த உண்மையான சமூக அக்கறை உள்ள ஒரு இயக்குனரை நீங்கள் ரொம்ப தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள்.மேலும் ஆட்டோகிராப், அழகி படங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே மனிதனை அழகாக மாற்ற சரியான வழியில் மற்றும் வலியில் சொல்லப் பட்டவை.
நீங்கள் இதையே ரொம்ப வன்முறை கலந்த படங்களை பற்றி சொல்லி இருந்தால் நிச்சயமாக நூற்றுக்கு நூறு சரி. சமுதாய அக்கறை உள்ள படங்கள் வெளி வரவேண்டும் என்னும் உங்களின் நல்ல எண்ணத்திற்கு நான் எபோதும் தலை வணங்குகிறேன். (சினிமா:திரை விலகும் போது - நீங்கள் படிக்கும் புத்தகத்தில் உள்ள விஷத்தை தவறாக புரிந்து கொண்டு இருக்க வேண்டும் அல்லது நீங்கள் சரியாக புரிந்து இருந்தால் அந்த புத்தகம் உங்களுக்கு தவறான தகவலை வழங்கி கொண்டு இருக்கிறது என்று என்ன உறுதியாக சொல்ல முடியும்.
இத படிக்கும் போது நானும் நீயும் 7g ரெயின்போ காலனி படம் பார்த்துட்டு வரும் போது argue பண்ணினது தான் ஞாபகம் வருது. அன்னிக்கு நீ இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை சொல்லுதுன்னு சொன்ன நான் சொன்னேன் இல்ல இந்த படம் சமூகத்தை கெடுக்கும்னு சொன்னேன், இன்னிக்காவது என்னோட சிந்தனையோட ஒத்து போறியேன்னு சந்தோஷ படறேன்.
அழகி, ஆட்டோகிராஃப் - எதார்த்தம் போலத்தான் பட்டிச்சி.
ஆ.கி - சிநேகாவின் முடிவு தவிர
Post a Comment