Tuesday, 2 February 2010

மதுவிலக்கு டாஸ்மாக்கில் குடித்துக்கொண்டே

ஒரு கவிதை

மது விலக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தேன்....
ஏன் குடிக்கிறாய் என்று நண்பன் கேட்டான் ............
குடித்தால் தானே விலக்கி வைக்க முடியும்
என்று அவனுக்கு விளக்கி வைத்தேன்



















இடம் டாஸ்மாக் கடை :
"கத்தாழை கண்ணால குத்தாத" பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.......
"என்ன மாப்ள இன்னிக்கு இவ்வளவ் கூட்டம்" என்றான் சத்யா
" மது விலக்கு மாநாடாம் அந்த கட்சி கூட்டமாம்" என்றான் துரை.
"மது விலக்கு நா அது இல்லையே மாப்ள" சத்யா சிரித்தான்
" மது விலக்கு ஊருக்கு மாப்ள தமிழ் ஊருக்கு மாப்ள எல்லாமே ஊருக்கு" என்றான் துரை.....
இது இன்றைய நிலைமை ...இது உண்மையில் நடந்த சம்பவம்.பல்லாவரம் டாஸ்மாக்கில் நடந்த நிகழ்வு...
நடிகர்கள் படம் என்றால் புகை பிடிப்பதை காட்டக்கூடாது என்று சொல்லும் கட்சிக்கு சில வேண்டுகோள்.
















இன்றைய நிலைமையில் ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் நூற்றிற்கு எண்பது பேர் பீர் அடிக்கிறார்கள்.இதற்க்கு காரணம் என்ன சினிமா மட்டுமா ஏன் தெருவிற்கு தெரு பள்ளிகள் இருக்கிறதோ டாஸ்மாக் இருக்கிறதே ....ஏன் உங்கள் கட்சி டாஸ்மாக் உள்ளுக்குள் புகுந்து அனைவரையும் விரட்டி போராட்டம் செய்ய வேண்டியது தானே.ஏன் சென்னையில் பார் புப் இல்லையா அது மாணவனை கெடுக்காதா. அங்கே உள்ளே போய் டிஸ்கோதே தடுத்து நிறுத்த வேண்டியதுதானே.



















அமைச்சரவை கையில் இருந்த போது ஏன் புகை இலை கம்பனிகளை தடை செய்து இருக்கலாமே? ஏன் புகை பிடிப்பதை திரையில் எதிர்க்கும் கட்சி புகை பிடிப்பதை தடை செய்ய சட்டம் போட்டிருக்கலாமே. புகை பிடிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட்டிருக்கலாமே.










புகை இலை பொருட்களை தடை செய்து இருக்கலாமே "சைனி கைநி" "பாண் பராக் " "ஹன்ஸ் " என்று எக்கச்சக்கமாய் போதை பொருட்கள் அதை எல்லாம் ஏன் தடை செய்யவில்லை. ஏன் cigeratte இதை போல பெரிய கம்பனிகள் எல்லாம் முதலாளிகளா?
ஏன் தடை செய்யவில்லை .




















நடிகர்கள் பிம்பம் கொண்டவர்கள் அவர்கள் இந்த மாதிரி நடிப்பது தவறு தான் . ஆனால் நீங்கள் எதிர்ப்பதிலே உள்குத்து இருக்கிறது ஏன் நாடோடிகள் படத்திலிருந்து எல்லா படத்திலும் சரக்கு அடிப்பது காண்பிக்கபடுகிறது. வக்கிராமான காட்சிகள் இளம் பருவத்தினர்
பாதை மாறும் காட்சிகள் காட்டப்படுகிறது அதை எல்லாம் ஏன் எதிர்க்க வில்லை.

வெறும் விளம்பரதிற்க்காக மட்டுமே எதிர்க்காமல் சமூக அக்கறையோடு எதிர்க்கலாமே???????????பெரிய நடிகர் எதிர்ப்பை பதிவு செய்தால் ஒரு விளம்பரம் ..................கௌண்டமணி சொல்வது போல " என்ன டா விளம்பரம்" " டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும் எப்படி எப்படி type typaa முழிய மாத்துவானு எனக்கு தெரியும்"



பின் குறிப்பு:
நாம் என்றால் சமூக அக்கறை என்றால் ஓடி விடுகிறோம் அதற்கு உதாரணம் என் பதிவில் அரசியல் ஏற ஏற பின்னூட்டம் குறைத்து கொண்டே இருக்கிறது.
ரொம்ப சாதாரண பதிவுகளுக்கு அருமை நண்பரே என்று சொல்பவர்கள் வருவதில்லை. ஏன் பிரச்சனை வராத பிரச்சனைகளை மட்டும் எழுதி பிரபல பதிவர் ஆகலாம். காதல் கவிதை என்றால் பின்னூட்டம் போடுகிறீர்களே .....எனக்கு தெரிந்து முத்துக்குமரன் பதிவுகள் இரண்டுமே இரண்டாம் நாள் மூணாம் நாள் பிரபலம்
அடைந்தது ...........................தமிழ் படம் பற்றி எழுதி இருந்தேன் எனக்கு தெரியும் வாக்குகள் விழாது பிரபல படுத்த மாட்டார்கள் என்று. நாம் ஜனநாயக நாட்டிலா
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சினிமா விமர்சனங்கள் சினிமா பற்றி கிசு கிசு போன்ற தினதந்தி தர பதிவுகள் பிரபலமாய் இருக்கிறது. ஏன் தமிளிஷ் தளத்தில் கூட
வேட்டைக்காரனுக்கு தனியாய் ஓதிக்கினார்கள் . முத்துக்குமரன் அஞ்சலிக்கு தனியாய் ஒதுக்க வில்லை ..இப்படி தைரியமாய் கேட்டால் நான் ஒதுக்க படுவேன் என்று தெரியும்.............இருந்தாலும் கேட்பேன்..............................?????? இந்தியா ஜனநாயக நாடு தானே.......ஏன் "தமிழ் படம்" விமர்சனம் படிக்கும் அளவு கூட என்
முத்துக்குமரனை படிக்கவில்லை....என் கவிதை கவிதை போல் இல்லை எனக்கு தெரியும் ஆனால் முத்துக்குமரனை பற்றி அதற்க்கு மரியாதை தந்திருக்கலாம்

8 comments:

இனியாள் said...

நண்பரே ஏன் இவ்வளவு கசப்புணர்ச்சி, உங்கள் பதிவுகள் சில நாட்களாகவே எதாவது குறைகளை
சுட்டி காட்டுவதாகவே அமைந்திருக்கிறது, சமூகத்தை குறித்த உங்கள் அக்கறை பாராட்ட தகுந்ததே
எனினும் நீங்கள் சில விஷயங்களை மேலோட்டமாக மட்டுமே பார்ப்பது போல் ஒரு எண்ணம் ஏற்படுகிறது, உங்களிடம் ஆழ்ந்த யோசனைகுரிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன், பிரச்சனைகளை சொல்வதோடு அதை எப்படி அணுகி இருந்தால் அது வராமல் தடுக்கலாம் என்பதையும் நீங்கள் இணையுங்களேன், இது ஒரு யோசனை மட்டுமே, முத்துகுமார் பத்தின உங்கள் பதிவிற்கு கருத்து போடாமைக்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது,
என்னை பொறுத்த வரை எந்த ஒரு பிரச்சனைகுமே இறப்பு ஒரு தீர்வு இல்லை, இவர் இறந்ததால் மட்டும் இலங்கை பிரச்சனை முடிந்து விட்டதா, இவர் உயிரோடு இருந்து இன்னும் சில அகதிகளுக்க்காகவேனும் உழைதிருகலாமே இப்போது இறந்ததால் என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது, அவரை எனக்கு மதிக்க தோன்றவே இல்லை, அதை பாராட்டி உங்கள் பதிவு இருந்தது, என்னால் அதை வரவேற்க முடியவில்லை, என்னை போல் பலர் கருதி இருக்கலாம்.

ஸ்ரீராம். said...

கருத்துகளால் வார்த்தை இழப்பு, நேர இழப்பு ஏற்படலாம். நட்பு இழப்பு ஏற்படக் கூடாது. உங்கள் கருத்தைச் சொல்லும்போது வந்து படித்துப் போகலாம். ஒத்து வந்தால் பதிலும் சொல்லலாம். அது உங்கள் கருத்து. விமர்சனம் எழுதினீர்கள். பிறகு புத்தகம் படித்து கருத்தை மாற்றிக் கொண்டீர்கள். மாறுவது உலக இயல்பு. மாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம். இவற்றில் படிக்கும் வாசகனுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் படித்துப் போவதில் தவறில்லை. பிடிப்பதும், பிடிக்காததும் அவரவர் விருப்பம் விமர்சனம் உள்ளிட்ட ஓரிரண்டு விஷயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும் நீங்கள் சொல்லி சாரு புத்தகம் இரண்டு வாங்கினேன். (அந்த நிலையிலிருந்தும் நீங்கள் பின்னர் மாறி விட்டீர்கள்).

புலவன் புலிகேசி said...

//ஏன் நாடோடிகள் படத்திலிருந்து எல்லா படத்திலும் சரக்கு அடிப்பது காண்பிக்கபடுகிறது. வக்கிராமான காட்சிகள் இளம் பருவத்தினர்
பாதை மாறும் காட்சிகள் காட்டப்படுகிறது அதை எல்லாம் ஏன் எதிர்க்க வில்லை.//

நாடோடிகள் போன்ற சாதாரன நடிகர்களின் படம் வரும் போது ஒன்றும் பெரிய பாதிப்பு இருப்பதில்லை. ஆனால் ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் போது அது அவன் ரசிகர்களை பாதிக்கும். ரஜினியை பார்த்து சிகரெட்டிற்கு அடிமையானவர்கள் பலர் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசியல் கட்சிகள் விளம்பரத்திற்கு சொல்லியிருந்தாலும் நான் ச்மூகத்திற்கு சொல்கிறேன். அனைத்தும் எதிர்ப்புக்குரியதே. குறிப்பாக மாஸ் ஹீரோக்களின் செயல்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

புலவரே அதை நியாய படுத்தவில்லை அதை தவறு என்றும் சொல்லி இருக்கிறேன் ............
ஆனால் என் கேள்வி என்னவென்றால். ....................!!!! ஏன் மது கடைகளை தடை செய்யலாமே ...!!!!! ஏன் பப் இருக்கிறது ......................சிகரட்டை தடை செய்யலாமே

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனியாள் அவர்களின் கருத்தை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வழிமொழிகிறேன்...

இரண்டாவது, நடிகர்கள் படத்தில் எவ்வளவோ நல்லதை காட்டுகிறார்கள் ஆனால் அதை விடுத்து கெட்டத்தை மட்டும் எடுப்பேன் என்பது மடத்தனத்தில் உச்சக்கட்டமே ...

க.பாலாசி said...

நண்பா...பின்னூட்டமிடுபவர்கள் மட்டும்தான் படிப்பவர்கள் என்று கருதாதீர்கள். அது உண்மையல்ல. அதையும்தாண்டி வாசிப்பாளர்கள் உலகம் விரிந்துகிடக்கிறது.

உங்கள் இடுகை கருத்துள்ள இடுகை. மொத்தத்தில் சட்டமென்பது எளிவர்களுக்கு மட்டுமே என்ற நிலை நம்நாட்டிலும் மிகைந்துள்ளது.

Raja said...

இது என் முதல் வருகை. அறிமுகம் செய்த இனியாளுக்கு நன்றிகள் பல..
பதிவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர் என்று இந்த பதிவில் நன்றாக தெரிகிறது.
என்ன நோக்கம் என்றாலும் தற்கொலை தியாகம் ஆகாது என்பது என் தாழ்மையான கருத்து
ஏனய விடயங்கள் அருமை..

ரோஸ்விக் said...

மது, புகையிலை மட்டுமல்ல... பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பை கூட அவர்கள் தயாரிக்கும் கம்பெனி அளவில் தடுப்பதில்லை.

எல்லாம் அரசியல். :-)