Thursday 4 February 2010

நூறாவது பதிவு - ஐரோம் ஷர்மிளா

















இது என்னுடைய நூறாவது பதிவு. இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது . நான் இதை தன்னடக்கத்துடன் சொல்லவில்லை இதுவே உண்மை. நம் எல்லாருக்கும் நூறு படம் நடித்த ரஜினி விஜயகாந்த் போன்றவர்கள் தெரியும். நூறு ரன் அடிக்கும் சச்சின் என்றால் தெரியும்.பத்து வருடம் சாப்பிடாமல் கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்தவரை தெரியுமா. நமக்கு தெரிந்தது பத்தரை முதல் பன்னிரெண்டரை மணி வரை உண்ணாவிரதம் கண்ட தமிழினத் தலைவரை தெரியும்.

எனக்கு நேற்று ஒரு தோழர் மூலமாய் அவரை பற்றி தெரிந்தது. வெட்கமாய் இருந்தது நமக்கு அவரை பற்றி தெரியவில்லை .பதிவு போடும் நாம் செயலிலே என்ன செய்துவிட்டோம். நூறு பதிவுகளும் அந்த பெண் தோழருக்கு தூசுக்கு சமம்.

ஐரோம் சர்மிளா ஆம் அந்த தோழரின் பெயர். அவர்கள் பத்து வருடமாய் சாப்பிடமால் இருக்கிறாள். வெறும் திரவ உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். சர்மிளா ஒரு கவிஞர் மற்றும் செயல் வீரர். அப்படி எந்த கொள்கைக்காக அவர் இவ்வளவு நாள் சாபிடாமல் இருக்கிறாள். 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்.














இந்த சட்டத்தினால் அப்பாவி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பெண்கள் பாலியல் வல்லுறவுகள் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கபடுகின்றனர். ஆம் ஆண்டு பெண்கள் ARMY RAPE US என்று படத்துடன் ராணுவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர் பெண்கள் இதை நன்றாக பயன்படுத்தி மக்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றது ராணுவம். பல கொலைகள் செய்யப்பட்டன. நவம்பர் 2 2000 மணிப்பூர் மாலோம் என்னும் இடத்தில் பத்து குடிமக்களை இந்திய ராணுவம் கொலை செய்ததை கண்டித்து ஐரோம் சர்மிளா அவர்கள் உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்தார் இன்னும் அவர் சாப்பிடவில்லை திரவ உணவையே அருந்துகிறார்.














அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தண்ணீர் கூட உண்ணாமல் இருந்தார் . அவர் உடல் மோசமடையவே அன்றில் இருந்து மூக்கு வழியாக பிளாஸ்டிக் குழாய் கொண்டு திரவ உணவு செலுத்த படுகிறது. அரசாங்கம் அமைத்த ஜீவன் ரெட்டி கமிசன் கூட இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது.

சரி ஏன் இந்த சட்டம் போட்டது இந்தியா உண்மையிலேயே சுதந்திர நாடா. வட கிழக்கில் உள்ளவர்கள் ஏன் ஒதுக்க படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் கூட ஏன் பறிக்க படவேண்டும். ஏன் நம்முடைய ஆதிக்கத்தை காட்ட வேண்டும்.இப்படி கட்டி காத்து தான் வல்லரசு என்று காட்ட வேண்டுமா .அந்த மக்களுக்கு உண்மையிலேயே இந்தியாவில் இருக்க பிடித்து இருக்கிறதா. நாம் எல்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் அது உருவாக்க படுவது யாரால்????நம் அரசால்??? அந்த அரசை ஆதரித்து காசு வாங்கி வாக்கு செலுத்துகிறோம்?? அப்பொழுது நமக்கும் தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்கிறது தானே....???


நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுகிறோம் ஆனால் அதன் ஆணி வேர் அரசிடம் உள்ளது . ஏன் வடகிழக்கு மக்கள் கண்டுகொள்ள படவில்லை . நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுவது உண்மையிலேயே மணிரத்தனம் ரோஜா படம் போல அரை வேக்காட்டு தனம். நமக்கு உண்மையிலேயே தெரியுமா அந்த மக்களுக்கு இங்கே வாழத்தான் பிடிக்கிறது என்று????




















ஐரோம் சர்மிளா உனக்கு தலை வணங்குகிறேன். என்ன சொல்ல இளமையை அடக்கி பெண்டீருக்கு உள்ளான ஆசையை அடக்கி, நாவை அடக்கி, ஒரு சமூகத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறாய். நாமெல்லாம் பதிவுகள் போட்டுக்கொண்டு என்ன செய்துகொண்டிருக்கிறோம், ஏன் சிறு பிரச்சனை என்றால் கூட திரும்பி பார்க்காமல் வருகிறோம். ஐரோம் சர்மிளாவும் கவிஞர் நானும் கவிஞரே ஆனால் அதற்கு வித்யாசம் உண்டு. இலக்கிலாமல் இருப்பது இலக்கியாமா என்ன. நோபல் பரிசு கொடுக்க வேண்டாம்
அவரை தெரிந்தாவது வைத்திருக்கலாமே. ஐரோம் சர்மிளா உங்களால் என் நூறாவது பதிவு அர்த்தப்படுகிறது.

பின்குறிப்பு
நாம் நல்லது மட்டுமே செய்வோம் ஏன் கெட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பது கூட ஒருவித கெடுதலே. ஏன் நல்லது மட்டுமே செய்கிறோம் சுயநலம். ஏன் தவறுகளை தட்டி கேட்பதில்லை கேட்டால் நமக்கு ஏன் வம்பு ....."நல்லதை மட்டும் பாருங்கள்" என்கிறார்கள் நாம் அப்படி சொல்லித்தான் வளர்க்கபட்டுள்ளோம். " ஏன் சரியாக பாருங்கள்
என்று யாரும் சொல்வதில்லை" . "பாசிடிவாக பாருங்கள்" "கனவு காணுங்கள்" என்பதெல்லாம் "தவறை தட்டிக்கேட்கதே என்பதன் உள் அர்த்தமே". கண் முன்னே ஒரு கொலை நடக்கிறது "பாசிடிவாக பாருங்கள் " என்பது "உனக்கு எதற்கு வம்பு ஒதுங்கி போ என்பது " போல இல்லையா .

நம் இலக்கியங்களில் கூட நல்லவன் என்றால் நல்லது மட்டுமே தெரியும் என்று ஊட்டப்பட்டிருக்கிறது. ஏன் மகாபாரதத்தில் தர்மன் நல்லதையே பார்ப்பான் நாரதன் சொல்லும்போது எல்லாரும் நல்லவர்களாம்....துரியோதனன் எல்லாரும் கெட்டவர்கள் என்று
சொல்வான், உடனே அவன் கெட்டவனாம். உண்மையான கோபம் இருப்பவனால் மட்டுமே கேட்க முடியும். அன்று ஐரோம் ஷர்மிளா கெட்டதை பார்க்காமல் இருந்திருந்தால் இன்று ஒரு பிரபல எழுத்தாளரோ நோபல் பரிசு கூட வாங்கி இருப்பார். ஐரோம் ஷர்மிளா ஏன்
பாசிடிவாக பார்க்கவில்லை அவள் நம்மைப்போல சாக்கு சொல்லும் பெருச்சாளி அல்ல களப் போராளி.

24 comments:

சிவாஜி சங்கர் said...

*நூறு பதிவுகளும் அந்த பெண் தோழருக்கு தூசுக்கு சமம்.

இது தான் நிசம்..

*ஐரோம் சர்மிளா உங்களால் என் நூறாவது பதிவு அர்த்தப்படுகிறது.

இது தான் 100வது பதிவு..

ப்ரியங்களும் வணக்கங்களும்.. :)

சிவாஜி சங்கர் said...

*நூறு பதிவுகளும் அந்த பெண் தோழருக்கு தூசுக்கு சமம்.

இது தான் நிசம்..

*ஐரோம் சர்மிளா உங்களால் என் நூறாவது பதிவு அர்த்தப்படுகிறது.

இது தான் 100வது பதிவு..

ப்ரியங்களும் வணக்கங்களும்.. :)

Unknown said...

சிறு திருத்தம் கார்த்திக். அவர் திரவ உணவைக் கூட அருந்துவதில்லை. அரசாங்கம் வலுக்கட்டாயமாக அவருக்கு உணவைக் குழாய் மூலம் திணிக்கிறது. பல் கூட விளக்காமல் காட்டன் துணியால் பற்களைத் துடைத்துக் கொள்கிறார் (தண்ணீர் குடித்துவிட நேருமே என்பதற்காக)..

அரசாங்கம் பலவந்தமாக அவருக்கு உணவு கொடுப்பதன் மூலம் அவரை உயிருடன் வைத்திருக்கிறது. அவர் மரணமடைந்தால் அந்த மாநில மக்கள் வெகுண்டு எழுவதை அரசாங்கத்தால் தவிர்க்க முடியாது. ஆமாம், ஒரு மனிதன் இறந்த பின்னும் போராடாமல் அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்ல அவர்கள் என்ன தமிழர்களா?

Unknown said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்

? said...

http://manipurfreedom.org/call4action2009

pls see that also

துபாய் ராஜா said...

வாழ்த்துக்களும், வருத்தங்களும்.

GoodJob said...

நான் தமிழன் ...தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் ...இந்தியாவை என்
அண்டை நாடாகத்தான் இனி என்னால் பார்க்க முடியும் ..தமிழனுக்கு
இந்தியாவை விட அதிகமா துரோகம் செய்த நாடு வேறேதும் இருக்காது

வெண்ணிற இரவுகள்....! said...

சரி நாம் தமிழனாய் என்ன சாதித்து விட்டோம் ...நண்பா ..நாம் இந்தியானா தமிழன் என்பது
பிரச்சனை அல்ல ........நம் உளவியல் ரீதியாக நீர்த்து போய் உள்ளோம் ...............

GoodJob said...

ஒத்துக்கொள்கிறேன்....நாம் நம் உளவியல் ரீதியாக நீர்த்து போய் உள்ளோம்.... அதனை செய்தது யார்...?நாம் பிதற்றி கொண்டிருக்கும் இந்தியாதானே...?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

போராட்டம் என்றால் இதுவன்றோ போராட்டம்....!
//1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி...... ......சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்// -- இன்றுதான் இவ்விஷயம் எனக்கு தெரியும். என்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே மனம் குற்ற உணர்ச்சியால் குமைகிறது....
'உயிரே'-வில் மணிரத்னம் ஒளித்து மறைத்து மேலோட்டமாய் சொன்னது.... எனக்கு இதுவரை இதை தெரியப்படுத்தாத அனைத்து மீடியாக்களும் நயவஞ்சகர்களே...
அம்பலப்படுத்தியதற்கு நன்றி சகோதரா...
இன்றிலிருந்து உங்கள் பதிவுகளை வாசிப்பதை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை....

புலவன் புலிகேசி said...

//கெட்டவன் said...

நான் தமிழன் ...தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் ...இந்தியாவை என்
அண்டை நாடாகத்தான் இனி என்னால் பார்க்க முடியும் ..தமிழனுக்கு
இந்தியாவை விட அதிகமா துரோகம் செய்த நாடு வேறேதும் இருக்காது
//

நீ இந்தியனாவோ தமிழனாவோ இருக்க வேண்டாம். மனிதனய் இரு அது போதும். பிரித்து சிந்தித்து சிந்தித்து ஒரு தொலைநோக்கு பார்வையை கொள்ளாமல் அரைகுறையாய் நான் தமிழன் நான் இந்தியன்னு சொல்றதுல அர்த்தமே இல்ல..

புலவன் புலிகேசி said...

நல்ல பதிவு நண்பா..

GoodJob said...

பிரித்து சிந்திக்கவில்லை .. பாதிக்கபட்டவன் ....இன்னாரால்
பாதிக்கப்பட்டேன் என சுட்டி காட்டுகிறேன் ....
என்னை பாதிப்படைய செய்தவனை நாமே தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம் ...அந்த வேதனையை பகிர்ந்து உள்ளேன் ... மற்றபடி வாதம் செய்யா வரவில்லை ...புலவன் புலிகேசி - யின் ஆலோசனைக்கு நன்றி

Power system Engineer said...

As you mentioned that here after u will try to publish society based related issues. For that first of all stop showing your ad's that how many people are viewing, and which are all showing that u r website is viewed. then u can be shoot a question on society.........

Unknown said...

போங்கள் நீங்களும் உங்கள் இந்தியாவும்... பாக்கிஸ்தான் என்றால் எல்லா ஓட்டைகளாலும் கர்ஜ்ஜிப்பீர்கள் ஆனால் சீனா என்ன செய்தாலும் எல்லா ஓட்டைகளையும் பொத்திக்கொள்வீர்கள்... வலியவர் எளியவரை வதைப்பதா வல்லரசு என்பது.....

வெண்ணிற இரவுகள்....! said...

Hei engineer it is not advertisement man......i must know how many people are viewing by this i can able to analyse How i got reached to all people.........
it is just for analysis

தனி காட்டு ராஜா said...

Who is Ram?
Who is Ravana?
Our dirty mind is rama and ravana?
All Iditots are beleiving i am rama....then where is ravana...????

I do not know about myself...I am trying to fight for others....

வெண்ணிற இரவுகள்....! said...

I dont know about RAM did RAM stopped TSUNAMI ????
Did RAM solved EELAM problem????
CAN U SHOW RAM...........
Dont Compare RAM WITH IROM shamila
afterall RAM creats Communal fights that is all ......

GoodJob said...

ஆரியனை உயர்த்தியும் திராவிடனை தாழ்த்தியும் புனையபட்ட கதைதான் இராமாயணம்...இராமாயணத்தில் சொல்ல பட்டதெல்லாம்... 60 ஆயிரம் மனைவி திருமணம் செய்யலாம்,வைப்பாட்டி பேச்சைக் கேட்டு மகனை காட்டுடக்கு துரத்தலாம்,பெண்ணெ பார்க்காமல் மூக்கை அறுக்கலாம்,அடுத்தவன் மனைவிய தூக்கிட்டுபோகலாம், மறைந்து கொண்டு எதிரியை தாக்கி அழிக்கலாம்,கட்டிய மனைவியை சந்தேகபடலாம்,இது போன்ற வழக்கைக்கு மிக மிக அத்தியவாசியமான கருத்துக்கள் உள்ள கதைதான் இராமாயணம்.... முழுதாக சொல்ல பின்னூட்டம் போதது..ஒரு பதிவு போட வேண்டும்.

Unknown said...

இராவணன் வசித்ததாக கூறப்படும் ஈழம், சோழ அரசர்கள் ஆட்சி செய்த இடமே, அதாவது தமிழன்... ஆக இராமன் ஒரு ஆரிய அரசன், இராவணன் ஒரு தமிழ் அரசன்...ஆகவே இராமயணம் என்பது ஆரியருக்கும் அரக்கர்களான தமிழருக்கும் இடையேயான போர் என்பதே... நீங்கள் சுத்த தமிழராக இருந்தால் முதலில் இராமாயணத்தை குப்பையில் வீசுங்கள்..

த‌வ‌ளை said...

போராளி ’ஐரோம் சர்மிளா’ அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இவர் பற்றி எமக்கு அறியத்தந்த நண்பருக்கு நன்றி.

இங்கு ராமாயணம் பற்றி சில கருத்துக்கள் பறிமாறப்படுவதால், எனக்கு தெரிந்த சில கருத்துக்களைக் கூற விரும்புகிரேன்.

வால்மிகீ எழுதியது ராமாயணம் அல்ல. அது ராவணகாவியம்.
பின் நாட்களில் அது பலறால் பலவாறு திரிக்கப்பட்டு ராமாயணம் ஆகிவிட்டது.

உன்மையில் //இராமயணம் என்பது ஆரியருக்கும் ’அரக்கர்களான’ தமிழருக்கும் இடையேயான போர் என்பதே//

GoodJob said...

நன்றி GKRISH,வெண்ணிற இரவுகள்,Thananjeyan Kandeeban ,Sanjeevini சகோதரர்களே ....இனி வரும் காலங்களில் நம் சந்ததியர்கள் நிஜ வரலாறு படிக்கட்டும்

ரோஸ்விக் said...

//போராளி ’ஐரோம் சர்மிளா’ அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இவர் பற்றி எமக்கு அறியத்தந்த நண்பருக்கு நன்றி.//

வழிமொழிகிறேன். உமக்கு என் நன்றி நண்பரே.

Radhakrishnan said...

வாழ்த்துகள், மற்றும் ஐரோம் சார்மிளாவுக்கு வணக்கங்கள்.