Saturday, 6 February 2010
அசல் - சுய விமர்சனம்
நான் சின்ன வயதில் இருந்தே சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறேன். நம் இந்திய இளைஞனின் வாழ்வில் சினிமா ஒரு அங்கமாய் இருக்கிறது. அன்று MGR சிவாஜி காலம் முதல் இன்று அஜித் விஜய் காலம் வரை. சினிமாவும் கிரிக்கெட்டும் நம் சமூகத்தில் ஒரு அங்கமாய் இருக்கிறது. நம் மக்கள் எவ்வளவு சினிமா பைத்தியம் என்பதற்கு நான் ஒரு உதாரணம்.
சமீபத்தில் 'அசல்' என்ற திரைப்படம் வந்தது. திரை அரங்கில் திருவிழா கூட்டம். இத்தனைக்கும் ஒரு விளம்பரம் இல்லை."வா டா " என்று கூவி கூவி விற்க நட்சத்திர சேனல் இல்லை . ஆனால் எங்கு இருந்து தான் இந்த ரசிகன் வருகிறான் என்று தெரியவில்லை . படம் வரும் முதல் நாள் வரை ஒரு போஸ்டர் இல்லை. ஆனால் திருவிழா கூட்டம் .
நானும் அஜித் படங்கள் என்றால் பத்து முறை பார்த்திருக்கிறேன் . ஆனால் இது சரியா, சமூகத்தில் எத்தனையோ பிரச்சனை இருக்கிறது??? அது எல்லாம் நம் கண்களுக்கு ஏன் தெரியவில்லை . ஐரோம் ஷர்மிளா தெரியாமல் அஜித் குமார் தெரிகிறாரே நமக்கு. சரி பதிவுலத்தில் வருவோம் அசல் வேட்டைக்காரன் என்றால் ஹிட் எகுருகிறது ஐரோம் ஷர்மிளா முத்துக்குமரன் என்றால் யாருமே வருவதில்லை. நம் பதிவுலகமும் குப்பை நாளிதழ் வார இதழ் போல போய் கொண்டிருக்கிறதா. ஏன் தமிளிஷ் போன்ற தளங்களில் வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவன் என்று தனியாய் ஒதுக்க வேண்டும் . ஏன் ஐரோம் ஷர்மிளாவுக்கு
ஒதுக்கலாமே.
நானும் அசல் பார்த்தேன் ரசிகன் ஒவ்வொரு முறையும் எழுந்து கைதட்டுகிறான். எங்கே சமூகம் போய்கொண்டிருக்கிறது.நடிகர்களால் சமூகத்திற்கு என்ன பயன். நான் விஜய் ரசிகர் என்று நினைக்க வேண்டாம் என் நண்பர்களுக்கு நான் தீவிர தல ரசிகன் என்று நன்றாய் தெரியும் .இருந்தாலும் நான் என்னை சுயவிமர்சனம் செய்துகொண்டேன். ஐரோம் ஷர்மிளா செய்யாததை என்ன அஜித் செய்து விட்டார். நல்ல நடிகர் மணல்ல மனிதர் அது மட்டுமே போதாது சமூக மதிப்பீடு என்ன???? ஒன்றும் இல்லை.....நாம் ஏன் கொடி பிடிக்க வேண்டும்..பொது பிரச்சனை என்றால் நாம் விவாதிக்கிரோமா??? அஜித்தா விஜயா என்று கல்லூரி முதல் அலுவல் வரை ஒரே விவாதம். சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.
நானும் அப்படி தான் இருந்தேன் ஐரோம் ஷர்மிளா என்ற வார்த்தை கேட்கும் முன். "எனக்கு அமைதியான வாழ்கை போதும்" என்கிறார் தல சரி அப்படி என்றால் " வம்பு வழக்கு வேண்டாம் ஆளை விடு" என்று அர்த்தம். வெறும் நல்ல மனிதர் வம்பு வழக்கிற்கு போக மாட்டார் என்பதே அவர் தவறுகளை கண்டு கொள்ள மாட்டார் என்பதாகும். சரி அது அவர் விருப்பம். ஆனால் ரசிகன் ஏன் காலத்தை விரயம் செய்கிறான் கால விரயம் பொருள் விரயம் எல்லாமே விரயம்.
தீபாவளி என்றால் படங்கள் பொங்கல் என்றால் படங்கள், ஒரே கேளிக்கைகள் கலைஞர் வேறு தொலைக்காட்சி தருகிறார் அதில் அவர் குடும்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போம். பிறகு ஒரே சினிமா. அப்புறம் கலைங்கருக்கு யாரவது பாராட்டு விழா நடத்துவார்கள் அதில் ரஜினி கமல் கட்டாயம் இருப்பார்கள் ஒருவர் அறிவு ஜீவி போல உளறுவார், ஒருவர் ஞாநி போல பேசுவார். என்ன நடக்கிறது இங்கே.
சரி இது எல்லாம் பொழுதுபோக்கு ஆரம்பிச்சுட்டான் டா என்று சொல்லலாம். இந்த கேளிக்கைகளால் உங்கள் சமூக கோபம் வடிந்துகொண்டிருக்கிறது . இந்த வேலையே சினிமா சீரியல் கடவுள் மற்றும் டாஸ்மாக் பார்த்துக்கொண்டிருக்கிறது.கலை உன் கோபத்தை தூண்ட வேண்டும், இந்த கலை உன் கோபத்தை நீர்த்து போக விடுகிறது. சரி ரசிகன் எதற்கு கை தட்டுகிறான் பாவனா குனிகிறாள் உள்ளே தெரிகிறது திரை அரங்கம் அதிர்கிறது . சமீரா ரெட்டி பாவனாவிடம் சொல்கிறாள் " உன் சைஸ் என் சைஸ் ஒண்ணா" என்று கேட்கிறாள் உடனே திரை அரங்கம் அதிர்கிறது. என்ன கொடுமை?
நாம் அனைத்தையும் நகைச்சுவையாகவே எடுத்து பழக்கப்பட்டுவிட்டோம். நமக்கு ஏன் கோபம் வருவதில்லை,நாம் எல்லாம் குறைக்காத நாய்கள் ஆகி விட்டோம். ஏன் நீர்த்து போகிறது எண்ணங்கள் "easia எடுத்துக்கோ" அப்படின்னு சொல்றாங்க "எதை".
குமுதம் ஆனந்த விகடன் எல்லாமே சினிமா........தொலைக்காட்சி என்றால் சினிமா.....முதல்வரை பார்க்க நீங்கள் திரைதுரையினறாய் இருக்க வேண்டும். ஏன் அவர்கள் மட்டுமா இருக்கிறார்கள் . இந்த பதிவு போட்ட பிறகு தமிளிஷ் போன்ற தளங்களில் புது படம் வந்தால் அதற்க்கு தனியாய் column ஒதுக்காமல் இருந்தால் அது என் பதிவினுடைய சின்ன வெற்றி .என்று ஒரு சினிமா நடிகர் சமூக பிரச்னையை விட அதிகமாய் தெரியப்படுகிராரோ அந்த சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது ஜாக்கிரதை.
பின்குறிப்பு:
நண்பர்களே நானும் உங்களை போல் தான் ஆனால் இப்பொழுது மாற முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் இது ஒரு வகையில் என் சுய விமர்சனம்.நம் குழந்தைகளுக்கு சமூக பிரச்சனை தெரியவில்லை ஆனால் நடிகரை தெரிந்து இருக்கிறது. ஏன் குழந்தைகளை விடுங்கள் நமக்கு எத்தனை பேருக்கு ஐரோம் ஷர்மிளா தெரியும். சமகால வரலாறு கூட தெரியாமல் இருக்கிறோம்.வரலாறு தெரியாத சமூகம் சிரழிந்து போகும் . நமக்கு தெரிகிற வரலாறு சினிமா மட்டுமே ?????
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல கேள்வி, வெகு ஜன ஊடகங்கள் தங்களது இருப்பிற்காக சினிமாவை மக்கள் மீது திணிக்கிறார்ககள் என்பதே எனது கருத்து
"நமக்கு தெரிகிற வரலாறு சினிமா மட்டுமே"
உண்மை தான். நம்மை ஆள்பவர்கள் நடத்தும் திட்டமிட்ட சதி இது.
தமிழர்களை சோம்பேறிகளாக சொகுசாக வைத்திருக்க சினிமாவை சரியான ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் சொன்னது போல இன்னமும் நடிகர்களுக்கு பாலாபிஷேகம் பீராபிஷேகம் போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
உங்கள் கோபத்தை கட்டுரைகளை விட கவிதைகளில் காட்டுங்கள், அவைகளை பதிவுலகில் முன்னேடுத்துச்செல்வோம்.
உங்களுடைய மாற்றம் வரவேற்க தகுந்த மாற்றம்.
ஆனால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருக்காது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் இந்த பதிவை எழுதி மூன்று நாட்கள் ஆகிறது ஆனால் ஒரே ஒரு பின்னூட்டம் மட்டுமே வந்துள்ளது.
நிறைய பின்தொடர்வோர்களை இழக்க தயாராகுங்கள்!!
வாழ்த்துகள். பதிவிற்கும்! மாற்றத்திற்கும்!!
பெரும்பாலான திரைப்படங்கள் ஒரு கனவு உலகத்தையே காட்டுகின்றன! அதில் கதாநாயகன் தீமைகளக்கு எதிராக போராடி வெல்கின்றான்! இப்படி பட்ட ஒரு செயல் இயல்பான வாழ்க்கையில் நடப்பதில்லை. அதனால் திரைப்படங்களை கண்டு மகிழிச்சி அடைகிறோம்! என்னை பொருத்தமட்டில் அதை ஒரு தேவையாகவே பார்கிறேன்.
சிந்திக்க வைக்கக் கூடிய பதிவு.
Post a Comment