Thursday, 18 February 2010

என்கௌண்டர்

இங்கு கொலை செய்தவனுக்கு
தண்டனை இரண்டு...........
பணம் பின்புலம் என்றால் அமைச்சராகலாம் .....
இல்லை காவல் துறை துப்பாக்கிக்கு
இரையாகலாம் .....
இரட்டை குவளை முறை போல் ,
எல்லாமே இரண்டு .........!
யார் கொடுத்தது இவர்களுக்கு மரண
தண்டனை கொடுக்கும் உரிமையை ....
நாளிதழ் அடித்து நொறுக்க படலாம்
அமைச்சர் கொலை வழக்குகளில் ஈடு படலாம்
அமைச்சர் ஆகலாம் .......!
ஆளுனராய் இருந்தால் காம விளையாட்டில்
ஈடுபடலாம் ............!
சாமியாரை இருக்கலாம் கொலை செய்யலாம்
காமத்தில் ஊறலாம் ....!
அங்கு எல்லாம் என்கௌண்டர் இல்லை .....!
காசு வாங்கி கொலை செய்தால் ................
செய்தவனுக்கு மட்டும் என்கௌண்டர் ....!

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

//காசு வாங்கி கொலை செய்தால் ................
செய்தவனுக்கு மட்டும் என்கௌண்டர் ....! //

சரியாத்தான் படுது..