Tuesday 3 August 2010

நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ????

என் பெயர் பெயாரா முக்கியம் , நான் மாவட்ட ஆட்சியாளர் இப்போ எதோ கௌரவமா இருக்கேன் , ஆனா நான் பிறந்தது ஆதி திராவிட வகுப்பு , சின்ன வயசில் இருந்து தீண்டாமை , நான் ஒரு பொண்ண காதலிச்சேன் , அந்த பொண்ணு வீட்ல எதிர்ப்பு அடிச்சு ஊர விட்டே துரத்திடாங்க . சரி IAS படிச்சேன் மாவட்ட ஆட்சியாளர் ஆனேன் , ஆனா கூட மேல் சாதி வீட்ல தண்ணி கொடுக்க யோசிப்பாங்க , இப்ப மதம் மாறினேன் , ஆனாலும் கேவலமா தான் பார்க்குறாங்க , அரசாங்கம் மதம் மாறினதால் IAS செல்லாதுன்னு சொல்லுது . மதம் மாறினா சமூகத்துல என் அந்தஸ்த்து உயர்ந்துச்சா . சில பிரபலங்கள் கேக்குறாங்க , ஜாதி இல்லாத மதங்கள்ல ஜாதி பாக்குறது தவறுன்னு , மத ரீதியா ஒதுக்கீடு கொடுக்கணும்னு . அப்படினா நாடார் ஜாதியில் இருந்து மதம் மாறினவனும், தேவரில் இருந்து மதம் மாறினவனும் , மீனவனை இருந்து மதம் மாறரவனும் ஒண்ணா ?????? எல்லாரும் கேக்கலாம் மதம் தான்
மாறியாச்சே அப்புறம் என்ன ஜாதின்னு ????? நான் ஜாதி பாக்கள சாமி ஆனா என்னைய கேவலமா தானே பாக்குறாங்க சரி தானே ????? அப்ப இட ஒதுக்கேடு வேணும்ல ????மதம் மாறிட்டேன் என்பதற்காய் நான் கேவலப்பட்டது இல்லாமல் போய்டுமா என்ன ?????இடஒதுக்கீடு தேவை ஆனா அது அனைத்து மதத்திலும் இருக்கும் தலித்துக்களுக்கு மட்டுமே .சரி மதத்தினால அந்தஸ்த்து உயர்ந்து இருக்குனு சொல்றாங்க , அது மட்டும் உண்மைனா நான் அன்னிக்கே மதம் மாறி காதலிய கை பிடுச்சு இருப்பேன்ல????

நடைமுறை என்ன , ஒரு தலித்த் மதம் மாறறாரு அதுக்காகவே சமூக அந்தஸ்த்து உதவுமா ??????அவர் BC அதற்காய் மற்ற BC அவரை சமமா நினைச்சு பொண்ணு தருவாங்களா ??? அதனால சமூக அந்தஸ்த்து உயருமா ?? இல்லைல , அதனால இடஒதுக்கீடு ஒரு அளவிற்கு வேணும்னா உபயோகப்படும் சமூக நீதி எல்லாம் அதுல இல்லை??? தர்க்காலிக தீர்வு நிரந்தர தீர்வு ஆகாது .


இப்போ உங்களுக்கு உடம்பு சரி இல்ல டாக்டர்ட போறீங்க , தல வலி தானு வச்சுக்குவோம் , டாக்டர் ஒரு மருந்து தராரு , நாமளும் சாபிட்றோம் அது தலைவலியா நிக்க வைக்குது வயத்த வலி வருத்துன்னு வச்சுக்குவோம் , அந்த மருந்து நமக்கு சேரல ??? அதனால தலைவலி நின்னுடுச்சு அப்படின்னு அந்த மருந்த உபயோகபடுத்த முடியுமா ????? அப்ப டாக்டர் எப்படி இருக்கணும் அந்த மருந்து நமக்கு சேருமா இல்லையா , அந்த தலைவலி எங்கிருந்து தோணிச்சுன்னு ஆராய்ச்சி பண்ணி தான் மருந்து கொடுக்கணும்ல , அது தானே நிரந்தர தீர்வு . எந்த ஒரு பிரச்சனைக்குமே நிரந்தர தீர்வு தான் இருக்கணும் , இல்லேன்னா எப்பவுமே தலைவலி தான் . அப்படி பார்த்தா நிரந்தர தீர்வு எப்ப வரும்னா ???புரட்சி செய்யறதுல தான் வரும் . புரட்சினா உடனே துப்பாக்கி அது இதுன்னு நினைக்க வேணாம் , ஒரு மற்றம் வரணும் . அதாவது சொத்த வச்சுதான் கிராமங்கள்ல ஜாதி நிர்ணயிக்கபடுது அந்த சொத்துடமைய ஒழிக்கறது மூலமா தான் சாதியின் வேர்கள புடுங்கலாம் . அப்புறம் அகமண முறை ஒழிக்க படனும் , யாரும் யாரையும் கல்யாணம் செய்யலாம் , அப்படி பெற்றோகள் ஜாதிக்காரர்கள் தடுத்தால் அவர்களை உள்ளே வைக்க சட்டம் போடலாம் . இப்படி நிறையா இருக்கு , அது எல்லாம் விவாதத்தின் மூலமா பல கருத்துகள கேட்கலாம்.சரி முதலாளித்துவ உற்பத்தி முறை இருக்குனு சொல்றாங்க சில முற்ப்போக்காளர்கள், ஆனா பிற்ப்போக்கா தான் இருக்காங்க மக்கள்

சரி முற்ப்போக்கு சிந்தனையாளருக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? இப்ப நான் மதம் மாறிட்டேன் , அப்புறம் நாத்திகம் ஆகறேன் . நாத்திகனா இருக்கறேன் அதுக்காக எங்க அப்பா அம்மாவெல்லாம் பள்ளில படிக்க அனுமதிசாங்களா இல்லை அவங்க குடிக்கற க்ளாஸ் நாங்க குடிக்க முடியுமா , இன்னும் கிராமத்துல ரெட்டை கப் முறை இருக்குலா ???? நாத்திகனு சொன்னா எல்லா மக்களும் எனக்கு மரியாதையை தந்துட போறாங்களா ??? ஐயா நான் ஜாதி பாக்கல ஒக்காளி ஊருக்குள்ள அப்படி பாக்குரைங்க சரி தானே . நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? அப்ப மதம் இருந்தா தான் ஒதுக்கீடா ???? அப்ப மதத்தை கட்டிக்காக்குதா இப்ப உள்ள இடஒதுக்கீடு , இடஒதுக்கீடு மதத்தை ஜாதியை ஒழிக்கவேண்டுமே தவிர கட்டிக்காக்க கூடாது .

1 comment:

அழகிய நாட்கள் said...

//இடஒதுக்கீடு தேவை ஆனா அது அனைத்து மதத்திலும் இருக்கும் தலித்துக்களுக்கு மட்டுமே//. கிறித்தவ மற்றும் முஸ்லிம் மதத்தைத்தழுவிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை.தலித்துகள் சீக்கிய மற்றும் புத்த இட ஒதுக்கீடு கிடைக்கும். தவிரவும் இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் முன்னேறிய சாதியினருக்கு 31% பிற்படுத்தப்பட்டவருக்கு 30% மிகவும் பிடற்படுத்தப்பட்ட/சீர்மரபினருக்கு 20% தாழ்த்தப்பட்டவருக்கு 18% பழங்குடியினருக்கு 1%. நீங்கள் கேட்பது போல நாத்திகர்களுக்கென்று இட ஒதுக்கீடு கட்டாயமாகத்தேவை. பாராளுமன்றத்தில் கூட கடவுளின் பெயரால் அல்லது மனசாட்சியின் பெயரால்தான் உறுதி மொழி எடுத்துக்கொள்ளுகிறார்கள். மதம் சாராதவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு வழி வகை வேண்டும்.