Wednesday 24 February 2010

சச்சின் பதிவும் பிரபாகரின் பின்னூட்டமும்

பிரச்சனைக்குரிய விஷயங்களை எழுதுவது பிரச்சனைக்காக மட்டுமே அன்றி பிரபலமாக அல்ல ,,,, உங்கள் குறுகிய பார்வை வருத்தம் அளிக்கிறது .............................!!!!!
இலக்கியம் என்பதே காலத்தை பிரதிபலிப்பது .....................உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காய் ரோட்டில் போகும் வரும் பெண்ணை கற்பழிக்க முடியுமா ...............!

சரி உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம் .................ஏன் விளம்பரத்திற்கு வருகிறார்கள் ......எத்தனை சூதாட்டம் .....................!

நீங்கள் சொன்ன positive விடயங்களை பார்த்து பார்த்து தான் நாம் தவறுகளை தட்டி கேட்கப்தில்லை ..........தட்டி கேட்டால் ஆதரவு தெரிவியுங்கள் .........................

முடிந்தால் கருத்துடன் மோதுங்கள் .................அது என்ன பிரபலமாய் ஆவதர்க்காய் எழுதுவது .................
எனக்கு புரியவில்லை ........சச்சின் பற்றி புகழ்ந்து எழுதினாலும் பிரபலம் ஆகலாம்....?????

அடுத்தவர்களுக்கு வாக்குகள் போட்டால் நமக்கு வாக்கு போடுவார்கள் ...பின்னூட்டம் இட்டால் பின்னூட்டம் போடுவார்கள் ...................அதனால் நான் யாருக்கும் வாக்கு அளிப்பதில்லை பின்னூட்டம் போடுவதில்லை .......
படிப்பவர்கள் படிக்கட்டும் ....................

தைரியம் இருந்தால் நீங்களும் எழுதுங்கள் ............ஏன் பிரச்னையை கண்டு பயப்பட வேண்டும் .ஐரோம் ஷர்மிளா பிரபலமானவரா................தசரத் மஞ்சித் பிரபலமானவரா............ ஏன் நான் நமீதா .................
நான் கேட்ட A R ரகுமான் இசை, சாப்பிட்ட சாப்பாடு பற்றி எழுதினால் அருமை என்பீர்களா


முடிந்தால் கருத்துக்களுடன் மோதுங்கள் ........உங்கள் கருத்து சரியாக இருந்தால் ஏற்று கொள்கிறேன் .........இங்கே பதிவுகளம் முதலில் வந்த போது சந்தோஷமாய் இருந்தது . நண்பன் அரவிந்த் நண்பன் பாலசி ,ஈரோடு கதிர் வால் பையன் வண்ணத்து பூச்சி கேபிள் சங்கர் அகல் விளக்கு பேனா மூடி .ரோஷ்விக் என்று நிறைய நண்பர்கள் இருந்தார்கள் .....................!

போக போக எனக்கு வெறுப்பு வந்து விட்டது. நாம் படித்து வாக்கு போட்டால் தான் மற்றவர் வாக்களிப்பார் .இங்கே எழுதுவதை விட நண்பர்களை சேர்ப்பது தான் நம்மை பிரபலமாக்கும். நீ வாக்கு அளிக்கிறாயா நான் வாக்களிப்பேன் எனக்கு பிடிக்க வில்லை என்றாலும். இது என்ன கொடுமை. நான் அப்படி எல்லாம் வாக்கு கேட்டு பிரபலமாக வில்லை. என்னை படிப்பவர்கள் படிக்கட்டும் என்று நான் படித்த சில விடயங்கள் பிடித்திருந்தாலும் வாக்கு செலுத்துவதில்லை.

எனக்கு தெரிந்து ஒரு சாதாரண பதிவு பன்னிரண்டு வாக்கு வாங்குகிறது ஐரோம் ஷர்மிளா பதிவு வாங்குவதில்லை. எனக்கு தெரியாதா சச்சின் சாதனை மன்னன், என்று எழுதினால் எனக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்.சினிமாவில் எப்படி விளம்பரம் தேவைப்படுகிறதோ அதை போல பதிவுலகத்திலும் விளம்பரம் தேவை படுகிறது. என்ன சொல்ல?????????????

நம்மை சுற்றி பாசிடிவாக தான் நடக்கிறதா என்ன??????? எந்த பிரச்சனையையும் பற்றி கவலை இல்லை சச்சின் சதம் அடித்தால் போதும் என்பது பாசிடிவான விடயமா சொல்லுங்கள் பிரபாகர்........!!!!!!!!!!!! மயில் ராவணன் சொல்லி இருந்தார் ...தப்பான வார்த்தைகள் என்று ......சச்சின் விளம்பரங்கள் நடிக்காமல் இருப்பாரா?????????????????????சொல்லுங்கள் .....................

சரி யார் சொன்னது எல்லாரையும் மடையர்கள் என்று ...........................???????இதில் சச்சின் விளம்பரத்தை பற்றி தான் சொல்லி உள்ளேன்...............????? நீங்கள் கருத்துடன் மோதவே இல்லையே முடிந்தால் கருத்துடன் மோதுங்கள் .................. நீங்கள் சொல்வது தனி மனித தாக்குதல் கருத்துடன் மோதுங்கள் இல்லை கிரிக்கெட்டில் அரசியல் நடக்கவில்லை என்று சொல்லுங்கள் ....அதை விடுத்து சிறுபிள்ளை தனமாய் பிரபலமாக எழுதுகிறேன் இது எல்லாம் பேச்சே இல்லை.......நீங்கள் இட்ட பின்னூட்டம் பதிவிற்கு இருக்க வேண்டுமே தவிர எனக்கு இருக்க கூடாது . கருத்துடன் மோதாமல் இப்படி தனி மனித தாக்குதலில் நீங்கள் நான் சொல்வதை ஒத்துக்கொள்வதை போல் உள்ளது.....! இப்படி எழுது அப்படி எழுது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.


http://vennirairavugal.blogspot.com/2010/02/blog-post_24.html

13 comments:

புலவன் புலிகேசி said...

கருத்துடன் மோத நான் இட்டிருக்கும் பதிவு....பதில் சொல்லுமய்யா...

http://pulavanpulikesi.blogspot.com/2010/02/200.html

புலவன் புலிகேசி said...

கருத்துடன் மோத நான் இட்டிருக்கும் பதிவு....பதில் சொல்லுமய்யா...

http://pulavanpulikesi.blogspot.com/2010/02/200.html

Unknown said...

நண்பரே மூன்று கோடி கொடுத்தால் சச்சின் மட்டுமல்ல நீங்களும் நானும் கூடத்தான் ஜட்டி விளம்பரத்தில் நடிப்போம்.

இங்கே அது அல்ல பிரச்சனை. என்னவோ இப்படி விளம்பரங்களில் நடித்து சம்பாதிப்பதற்காகவே சச்சின் சாதனைகள் புரிவது போல நீங்கள் எழுதியதுதான் தவறான புரிதல்.

ஐரோம் சர்மிளாவைப் பற்றி உங்களுக்கு சமீபத்தில் தான் தெரியும். இதை நீங்களே உங்கள் நூறாவது பதிவில் சொல்லியிருந்தீர்கள். எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். அந்த ஐரோம் சர்மிளாவின் போராட்டத்துக்கு ஆதரவான கருத்துள்ள நான் சச்சினின் ரசிகனும்தான்.

ஐரோம் சர்மிளாவைப் பற்றி பரிதாபப்படும், கோபப்படும் நான் சச்சினின் சாதனைகளைப் பார்த்து கைத்தட்டவும் செய்கிறேன்.

உங்களின் நூறாவது பதிவில் ஐரோமைப் பற்றி நீங்கள் தவற விட்ட சில விசயங்களை நான் என் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். நீங்களும் உங்கள் பதிவை திருத்தியிருந்தீர்கள் (எடுத்துக் கொடுத்த எனக்கு ஒரு நன்றி கூட இல்லாமல்). ஐரோமுக்கு அவர் மாநிலத்தில் அமலுக்கு உள்ள ராணுவச் சட்டமும் அதன் பின் விளைவுகளும் தான் பிரச்சனை. மற்ற உலகப் பிரச்சனைகள் - குறிப்பாக உலக அடக்குமுறைகளைப் பற்றி - அவர் இடித்துரைத்ததில்லை. அதற்காக அவரை சுயநலவாதி என்று சொல்லிவிடலாமா? எண்டெர்டெயினர்களை எண்டெர்டெயினர்களாக மட்டும் பாருங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல சினிமா நடிகர்களுக்குக் கோவில் கட்டும் ரசிகர்களுக்கும் சேர்த்துத்தான்.

நீங்கள் உடனே என் பதிவில் கடவுள் என்று சச்சினை விளித்ததைச் சுட்டிக் காட்டலாம். ஆம், கிரிக்கெட் என்பது மதம் என்றால் அதன் கடவுள் சச்சின், கடவுள் மறுப்பு என்பது ஒரு மதமென்றால் அதன் கடவுள் பெரியார் என்பது போல..

இளந்தமிழன் said...

சூப்பர் டா..... கிரிக்கெட்டில் மட்டும் நாட்டுப்பற்றை காட்டும் முட்டாள்கள் இருக்கும் வரை
யாரும் இவர்களை ஏமாற்றலாம்....... இவன் இருநூறு ௦௦ அடித்தால் நாம் ஏன் இந்தியன் என்று பெருமை கொள்ள வேண்டும்...... லூசுப் பசங்கடா. நாட்டுக்காக விளையாடுகிறான் என்றால் காசு வாங்காமல் , விளம்பரத்தில் நடிக்காமல் சும்மா விளைய்டவேண்டியதுதனே...

கவலைப்படவும் , பெருமைப்பட்டு கொள்ளவும் நிறைய இருக்கு... அது கிரிகெட் இல்லை.

Bala said...

இபொழுது உங்கள் பிரச்சனை ஐரோம் ஷர்மிளாவை யாரும் கண்டுகொள்ள வில்லை என்பதா? இல்லை உங்களுக்கு ஒட்டு விழவில்லை என்பதா?

சச்சினை எல்லோரும் புகழ்வதன் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முக்கியமான ஒன்று அவர் தலைக்கனம் அற்றவர். அவர் சரியாக விளையாடா விட்டால் கூட ஒரு அலங்காரத்திர்க்காக அணியில் இடம் உண்டு. ஆனால் அவர் அதை விரும்ப வில்லை. இந்தியாவில் ஒழுங்காக வருமான வரி கட்டுபவர்களின் பட்டியலில் அவரும் உண்டு.

ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் ஒரு மான பிரச்சனை அதனால் அவர்கள் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று விட்டு கொடுக்க மாட்டார்கள். அப்படி எண்ணி இருந்தால் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் அவர்கள் ஒரு பதக்கம் கூட வென்றிருக்க முடியாது.

என் தாழ்மையான கருத்து. உண்மையே சொல்வதானாலும் நயமாக சொன்னால் தான் சென்றடையும். அதனால் கருத்துக்களை சொல்லும்போது கடுமையான சொற்களை தவிர்க்கலாமே...

வால்பையன் said...

//நண்பன் அரவிந்த் நண்பன் பாலசி ,ஈரோடு கதிர் வால் பையன் வண்ணத்து பூச்சி கேபிள் சங்கர் அகல் விளக்கு பேனா மூடி .ரோஷ்விக் என்று நிறைய நண்பர்கள் இருந்தார்கள்//

இருந்தார்கள் என்றால்....

இப்போ இல்லையா!?

வெண்ணிற இரவுகள்....! said...

இப்பொழுதும் நண்பர்களே ................கருத்துடன் நீங்கள் எங்கே மோதிநீர்கள் ......தனி மனித தாக்குதலுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை .........உங்களால் நிரூபிக்க முடியுமா............
சச்சின் தேசப்பற்று என்று எல்லாம் பிதர்த்ற்ற கூடாது ...................கிரிக்கெட் மட்டுமே தேசப்பற்றா ????????என்ன?????

நாம் ஈழத்தில் சண்டை நடந்த பொழுது அதே ஈழத்தில் நடந்த மேட்ச் பார்த்து இருக்கிறோம் ...!இதை மறுக்க முடியுமா ...............! ஆம் வாக்குகள் வாங்க வில்லை என்பது
ஐரோம் ஷர்மிலாவிர்க்கு ஏற்ப்பட்ட தோல்வி தான் ...............!

என்ன தேசப்பற்று .........சச்சினை திட்டும் பொழுது வரும் நீங்கள் .......ஏன் ஐரோம் ஷர்மிலாவிர்க்கு பின்னூட்டம் போடா வில்லை

பிரபாகர் said...

இவ்வளவு பேசும் நீங்கள், எனது பின்னூட்டத்தை வைத்து ஒரு இடுகையையே போட்டு உங்களின் பரந்த மனதை காட்டியிருக்கிறீர்கள், சில விளக்கங்களோடு. எனக்கு தனி மடல் அனுப்பியிருக்கலாம் அல்லது அங்கேயே பதில் சொல்லியிருக்கலாம்.

முகிலன் சொன்னதுதான் எனது பதிலாய் இந்த இடுகைக்கு. விளம்பரத்தைப் போட்டு ஒரு சாதனை செய்த ஒரு நபரை கேவலப்படுத்துவதை பார்த்து அதற்கு மனதில் தோன்றுவதை பின்னூட்டமிடுவது தவறென்றால்... மன்னிக்கவும் இந்த விவாதத்திற்கு நான் வரவில்லை. அதே சமயம் ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல், எனது இடுகைகள் எனது டைரி போல், எனது எண்ணங்களின் வெளிப்பாடுதான். இது போன்ற விஷயங்களை எழுதுதல் எனக்கு ஏதுவான ஒன்றல்ல. என்னுடைய இன்னொரு வலைப்பூவில் சில விஷயங்களை பகிந்துகொள்கிறேன், எவரையும் பாதிக்காமல், குறிப்பாய் மற்றவர்களை புண்படுத்தாமல்.

எல்லோரையும் படிக்கவேண்டும் என்றோ, படித்து பின்னூட்டமிடவேண்டுமென்றோ, தொடர வேண்டுமென்றொ கட்டாயமில்லை. அது அவரவர் விருப்பம்.

மொத்தத்தில் நன்றி, விவாதத்திற்கு வரவில்லை, அதே சமயம் நான் சொன்ன கருத்துக்களில் தவறு இருப்பதாகவும் கருதவில்லை.

அன்பிற்கு நன்றி.

பிரபாகர்.

செல்வராஜா மதுரகன் said...

நான் ஈழத்திலிருந்து எழுதுகிறேன்.. நீங்கள் மேட்ச் பார்ப்பதை நிறுத்தினால் எப்படி எண்கள் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூற முடியுமா? பொருளாதார நெருக்கடி கொடுக்கலாம் என்று கூற வேண்டாம் நீங்கள் ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியால் ஒவ்வொரு தமிழ் குடிமகனும் முதலில் பாதிக்கப்படுவான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அடுத்து பிரச்சனை தீர்க்க இருக்கிற நடைமுறைகளை செய்யாமல் விட்டு விட்டு சும்மா கிரிக்கெட் போட்டிகளில் மட்டும்காட்டாதீர்கள் உங்கள் வாய் வீரத்தினை.
http://saaralhal.blogspot.com

என் நடை பாதையில்(ராம்) said...

//*போக போக எனக்கு வெறுப்பு வந்து விட்டது. நாம் படித்து வாக்கு போட்டால் தான் மற்றவர் வாக்களிப்பார் .இங்கே எழுதுவதை விட நண்பர்களை சேர்ப்பது தான் நம்மை பிரபலமாக்கும். நீ வாக்கு அளிக்கிறாயா நான் வாக்களிப்பேன்*//

இந்த கலாசாரம் எனக்கும் பிடிக்கவில்லை.... இதற்க்கு கலைஞரே தேவலை!

என் நடை பாதையில்(ராம்) said...

ஆனால் சச்சின் பற்றிய உங்கள் கருத்துக்கு எனக்கு உடன்பாடில்லை. மன்னிக்கவும்....

Anand said...

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டார் போல் எழுதி உள்ளீர்கள் ! அப்படி என்றல் எதுக்கு அசல் படத்திற்கு விமர்சனம் எழுதுறிங்க??? இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா ??? இதில் நானும் ஒரு களத்தில் சச்சின் ரசிகன் என்ற காமெடி பண்ணுரிங்க !!! நாட்டுல எத்தனையோ தவறுகள் நடக்கின்றன அதை எழுதுங்கள்

Anand said...

பிரபாகரனுக்கு பதில் எழுதுவதென்றால் தனியாக ஒரு மெயில் பண்ணிருக்கலாம் !! இப்புடி ப்ளாக் ல போட்டு சுய விளம்பரம் செய்ய வேண்டாம் !!!!!!!!!!! தைரியமிருந்தால் என் கருத்தையும் போடுங்கள் !!!