Sunday 29 August 2010

இவண் இரண்டாம் பிரட்மன் சச்சின் ரசிகர் மன்றம் நேதாஜி நகர் புளியங்குளம் விளக்கு

"கிரிக்கெட் மதம் சச்சின் அதன் கடவுள் " என்பது மைதானங்களில் அடிக்கடி இருக்கும் வாசகம் . ஆம் இந்தியாவில் மின்சாரம் நுழையாத இடங்களில் கூட மட்டை பந்து நுழைந்துள்ளது . மதுரை மாநகரிலே ஒரு கிராமத்தில் சச்சின் 194 அடித்தபொழுது டிராவிட் declare செய்து விட்டார் , அப்பொழுது ஒரு சுவரொட்டி அதில் "கங்குலி கைக்கூலி திராவிடே பதவி விலகு " கீழே இவண் இரண்டாம் ப்ரட்மான் சச்சின் ரசிகர் மன்றம் புலியான்குலம்விலக்கு நேதாஜி நகர் . இப்படி தினசரி வாழ்வோடு தினசரிக்களுடன் கிரிக்கெட் மரபாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ஊருக்குள் விக்கி பந்து tournament நடக்கும் பொழுது கைலிகட்டிக்கொண்டு ஒற்றைக்காலில் pad மாட்டிக்கொண்டு விளையாடும் அளவிற்கு கிரிக்கெட் கிராமங்களை கூட தொட்டு உள்ளது .

இங்கு சென்னையில் கேட்கவே தேவை இல்லை கல்லி கிரிக்கெட் பிரசித்தம் . கலைஞர் முதல் புரட்சிக்கலைஞர் பிறந்த நாள் முதற்கொண்டு கல்லி கிரிக்கெட் tournament நடக்கும் . தெருவில் இருந்து பீச்சில் இருந்து மின்ராசா ரயில் போகும் பாதைகளில் எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் விளையாட்டு கொடி கட்டி பறக்கிறது . உலகக்கோப்பை பொழுது எல்லாம் கிரிக்கெட் ஒரு தேசியத்தை எழுப்பக்கூடிய செயலாய் இருக்கும் . தேனீர் கடை முன்பு நின்று கொண்டு கடைசி ஓவரை மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்துக்கொண்டு பார்ப்பான் ரசிகன் .

இன்று பாக்கிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் மாட்டியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது . கிரிக்கெட் என்பது மதரீதியான வெறி போல் மக்களிடம் இருக்கும் சூழலில் , கொடிக்கட்டி பறக்கும் விளையாட்டு கோடிகளில் புரளும் பொழுது இது தவிர்க்க இயலாதது . இப்பொழுது இந்திய அணிக்கு கோக் sponser செய்வது என்று வைத்துக்கொண்டால் , இந்தியா ஜெயித்தால் தான் அவன் பண்டத்தை விற்க முடியும் , அப்பொழுது எதிர் அணிகளை நாடுவது , பிட்ச் மாற்றுவது , போன்ற முக்கிய வேலைகலை நிறுவனமே பார்த்துக்கொள்ளும் . இப்படி விளையாட்டு என்பதை தாண்டி வணிக பொருளாய் இருக்கும் விளையாட்டு எப்படி விளையாட்டாய் இருக்க முடியும் . இந்தியா இலங்கையில் தோற்றவுடன் , ஒரு பையன்
அழுது கொண்டிருந்தான் , சின்ன வயதில் சச்சின் அவுட் ஆனவுடன் நான் அழுதது நியாபகம் வருகிறது . அன்று எனக்கு விதர்பா விவசாயப்படுகொலைகள் எல்லாம் தெரியாது , கிரிகெட் என்பது வணிகம் என்பது தெரியாது . இப்படி தெரியாமலேயே அடுத்த தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது . விளையாட்டிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து யார் ஜெய்க்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்கள் . ரசனையை பன்னாட்டு நிறுவனங்கள் பணமாக அறுவடை செய்கிறது . ஜெயிப்பது யார் என்று தெரியாது தோற்பது பாமர ரசிகன் .

2 comments:

Renga said...

communist கள் புலம்பல் புண்ணியமூர்த்திகள்... ஒன்றுக்கும் உதவாமல் (10 ரூபாய் கூட தானம் செய்யாமல்) ஊரில் நடக்கும் விசயத்திற்கு எல்லாம் புலம்பி கொண்டே இருப்பதே அவர்களின் வேலை...

நீங்கள் புது communist... so இதுதான் எதிர்பார்க்க முடியும்...

kaipulla said...

ஏப்பா ரெங்கா.... ஒண்ணுமே தெரியாமல் ஏமாறும் கட்சியில் இருப்பதைவிட புலம்பும் கட்சியில் இருப்பது
எவ்வளவோ மேல்....