Tuesday 27 July 2010

விடுதலை போரின் வீர மரபு - வீர பாண்டிய கட்டபொம்மன் -1

விடுதலை போராட்டத்திற்கு என்ற மரபு உண்டு . ஏன் விடுதலை போராட்டத்தை பற்றி இப்பொழுது எழுத வேண்டும் என்ற கேள்விகள் இயல்பாய் எழலாம் ????? வணிகத்திற்காய் வந்த ஆங்கிலேயரின் காலனி நாடாய் ஆனது இந்தியா . இந்தியா என்பது வெறும் சந்தை , முதலாளித்துவம் பிரிட்டனில் உருவான காலத்தில் , அதிக
உற்பத்தி செய்த முதலாளித்தவத்தின் பொருட்களை விற்பனை செய்ய காலனி நாடுகள் தேவைப்பட்டன . உலகத்தில் உள்ள அனைத்து போர்களும் தேசியத்திற்காக என்று சொல்வதை விட, முதலாளிகளின் அதிக உற்பத்தியை விற்பனை செய்ய ஏதாவது ஒரு சந்தை தேவை அதன் அடிப்படையிலேயே இருந்தன என்பது புரியும் . அப்படி பிரிட்டனின் சந்தையை , ஆட்டு மந்தையாய் , காலனியை காலணியாய் இருந்தது இந்தியா ????? எப்படி ஆகிலேயன் கிழக்கு இந்திய கம்பெனி மூலமாய் வணிகம் செய்ய வந்து நாட்டை பிடித்தானோ , அதே சூழல் இன்று நிலவுகிறது . அன்று இந்தியா காலனிய நாடாய் இருந்தது , இன்று மறுகாலனிய நாடாய் இருக்கிறது அதாவது இன்றும் பெப்சி கோக் போன்ற முதலைகளும் , அம்பானி டாடா போன்றவர்களும் . வேதந்தா போன்ற நிறுவனங்களும் ஆட்சி புரிகின்றன என்பது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கலாம் . ஆனால் தண்டக்காரன்யா என்னும் இடம் வேதந்தா என்னும் முதலாளிக்கு போக வேண்டும் என்பதற்காய் பொது மக்கள் மீது ராணுவத்தை ஏவும் அரசு இது . அக்கால சூழலில் போராட சிலர் இருந்தனர் அவர்கள் வரலாறு மிகவும் வீரம் நிறைந்தது , அவர்கள் எல்லாம் மானம் உள்ளவர்கள்,சாவதை பற்றி கவலை இல்லாதவர்கள் , இன்று உள்ள மக்களோ மிகுந்த சுயநலம் கொண்டவராய் இருக்கும் வேளையில் , அவர்களுக்கு வரலாறை மீள் பதிவு செய்வதாக வேண்டியது இருக்கிறது .கட்டாயம் அந்த விடுதலை மாந்தர்களின் சிகப்பு ரத்தம் வணக்கத்திற்கு வீரத்திற்கும் உகந்தது .


முதலில் கட்டபொம்மன் பற்றி பார்ப்போம் . ஏன் முதலில் கட்டபொம்மனை பார்க்க வேண்டும் . தனி தனியாக அனைவரும் போராடி இருக்கலாம் ஆனால் முதல் முறையாக அனைத்து பாளையக்காரர்களையும் ஒருங்கிணைத்து போராடிய முதல் ஆள் கட்டபொம்மன் . ஆதாவது ஒன்று பட்டால் மட்டுமே உண்டு விடுதலை என்று தொலை நோக்கு பார்வை கொண்ட வீரன் கட்டபொம்மன் . கட்டபொம்மன் மீது அவனும் வரி கட்டி கொண்டு தான்
இருந்தான் எதோ ஒரு தடவை அவனால் வரி கட்ட முடியவில்லை அதனால் தூக்கில் போட்டார்கள் என்ற விமர்சனம் அவன் மீது உண்டு . அவனை விமர்சிக்கும் முன் அவன் உலகத்தில் சுவாசித்த கடை மூச்சு உலாவிய நாட்களை கொஞ்சம் திரும்பி பார்ப்போம் . ""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.''

""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்''.

— கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான். இதில் இருந்து அவன் வீரம் புரிந்து கொள்ள கூடியது .


மதுரையை நாயக்க மன்னர்கள் 16 ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினர் . பிற்காலத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன . பாளையக்காரர்களுக்கு சிற்றசனுக்கு உரிய அனைத்து உரிமைகளும் இருந்தன , வரி வாங்க வேண்டும் , படைகளை தேவைப்படும் பொழுது அனுப்ப வேண்டும் போன்ற பொறுப்புக்களும் இருந்தன . 18 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் வீழ்ச்சி அடைய , தங்களை வளர்த்துக்கொண்டார்கள் பாளையக்காரர்கள் . இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

பஞ்சங்கள் சூழ்ந்து இருந்த காலம் . விளைச்சல் இல்லை , இந்நிலையில் ஆற்காட்டு நவாப் முகலாயர்களால் நியமிக்கப்பட்டான் வரி வசூல் செய்ய . எதிர்த்தவர்களை அடக்க கம்பனியின் படைகள் உபயோகப்படுத்தப்பட்டன . கம்பனி வரி வசூல் செய்ததற்கு பணம் கொடுக்க முடியாத நவாப் , வரிவசூல் செய்வதை அவர்களிடமே ஒப்படைத்தான் . பாளையக்காரர்கள் வரி வசூல் செய்தாலும் மக்களிடம் தன்மையாக இருந்தனர் , ஆனால் கம்பெனி காராராக இருந்தது . கட்டபொம்மன் நினைத்து இருந்தால் மக்களிடம் கறாராக பேசி பணத்தை பிடுங்கி உயிர் வாழ்ந்து இருக்க முடியும் . ஆனால் அவன் அப்படி செய்யாமல் எதிர்த்து போரிட்டு தூக்கு கயிரை மாலையாய் அணிந்தான் .

கட்டபொம்மன் எப்படி ஆட்சிக்கு வந்தார் எப்படி போராடினார் என்ற வீரம் மிகுந்த வரலாறை நாளை பார்ப்போம் .
இந்தியா மறுகாலனியாய் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய மீள் ஆய்வு தேவை என்றே நினைக்கிறேன் .

இன்று படுகொலைகளை விபத்துக்களாய் பார்க்கும் நேரத்தில் , மூன்றாம் உலக நாடுகள் சேரிகளாய் முதலாளிகளால் ஆக்கப்படும் காலக்கட்டத்தில் .இந்தியா பணக்காரனின் சந்தை . இந்தியா முதலாளிகளுக்கு தன் பொருட்களை விற்பனை செய்யும் இடம் . இந்தியனின் உயிர் ஒரு ஆய்வு பொருள் , அதனாலேயே UNION CARBIDE போன்ற நிறுவனம் இந்தியாவின் உயிர்களை வைத்து வியபாரம் செய்தான் போபாலில் . இப்படி ஆதாரங்கள் பல பல , அப்படி பட்ட வேளையில் அன்று இந்தியா காலனி நாடானதும் , இப்பொழுது இருக்கும் சூழலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது . அன்று ஆர்காட் நவாப் இன்று
பா சிதம்பரம் . காலங்கள் மாறி இருக்கிறது காட்சிகள் மாற வில்லை , வரலாறு சுற்றி அதே இடத்திலேயே வருகிறது . வேண்டும் இன்னொரு விடுதலை . அப்படி பட்ட சூழலில் இக்கட்டுரைக்கான தேவைகள் அதிகரிக்கின்றன .

3 comments:

வால்பையன் said...

http://valpaiyan.blogspot.com/2008/05/blog-post_21.html

வரலாறு, புனைவால் புனையப்பட்ட புனைவு!

புலவன் புலிகேசி said...

நல்ல பதிவு..

பின்னோக்கி said...

சுவாரசியமான வரலாற்றுச் செய்திகள். தொடருங்கள், தொடர்கிறேன்.