Friday 9 July 2010

மூன்றாம் உலக நாடுகள் உயிர் மலிவானதா ?????????????
















உலக மயமாக்கம் மக்களை சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் உயிர் கூட சந்தை மதிப்பை வைத்து தான் , வாழ தகுதி இல்லாதவன் சாகலாம் என்று சொல்கிறது .முதலாளித்துவம் இயங்க வேண்டுமென்றாலே சந்தை தேவை , அவனுடைய அதிக உற்பத்தியை விற்பனை செய்ய , உலகமயமாதலே சந்தையை உருவாக்குகிறது .அவர்களின் முக்கியாமான சந்தை மூன்றாம் உலக நாடுகள் , அதாவது ஆசியா ஆப்ரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகள் .உயிர்கள் கூட முதலாளிகளுக்கு அற்ப்பமானதே என்று சொல்லாமல் பல இடங்களில் சொல்கிறது . உலக வங்கி தான் இந்த மூன்றாம் உலக நாடுகளை ஆள்கிறது , அவர்கள் சொன்னால் முதாலாளிகளுக்கு சந்தையை திறக்க வேண்டும். ஒரு உயிருக்கு கூட மரியாதையை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது . முதலாளித்துவத்தால் வேலை கிடைக்கிறதே என்று சிலர் பேசலாம் எப்படி பட்ட வேலைகள் என்பதை பார்ப்போம் , எப்படி மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் எப்படி அந்த உழைப்பு சுரண்டப்படுகிறது என்று பார்ப்போம்.








உதாரணமாய் கப்பல் உடைக்கும் தொழில் இது ஆப்ரிகா மற்றும் ஆசியா நாடுகளில் அதிகம் செய்யப்படுகிறது . இந்த கப்பல் உடைக்கும் தொழில் கல்லீரல் புற்று நோயை கொண்டு வரும் . கப்பல்களில் அதிக ASBESTOS ஷீட் இருக்கும் , அது தான் இந்த கல்லீரல் புற்று நோயை உருவாக்குவது . இதற்க்கு உண்டான மனித உழைப்பை முதாலாளி மூன்றாம் உலகநாடுகளில் மட்டும் வாங்குகிறான் . அதாவது இங்கே மனித உழைப்பு மலிவானது என்பதே பொருள் . சரி நம் பக்கத்தில் இருக்கும் தூத்துக்குடியில் உள்ள STERLITE ஆலையின் முக்கியமான தொழில் காப்பரில் இருந்து அதனுடன் கலக்கும் விடயங்களை பிரிப்பது , அது உடல் நலத்திற்கு மிக கேடு என்பது அறிந்ததே , அதை எதிர்த்து பலர் போராடினாலும் அது வீணாய் போனது .அந்த STERLITE ஆலை வேதந்தா நிறுவனத்தை சேர்ந்தது அவர்கள் அங்கே தண்டகாரண்யாவில் பூர்வகுடிகளை விரட்டும் வேலையை செய்கிறார்கள் .இது தான் நடக்கும் உலகமயமாக்களில் .


1992 ஆம் ஆண்டில் lawrence summers என்பவர் உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தார் .அவர் உலக வங்கியின் ஊழியர்க்களுக்கு வழிக்கட்டுவதர்க்காய் ஒரு கடிதம் எழுதினார் . அதில் மாசு உள்ள தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதே அதன் சாராம்சம் . அந்த கடிதத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் .

1 மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது மாசுக் கேட்டினால் நோய் மற்றும் மரணம் ஏற்படின் குறைந்த செலவே ஏற்ப்படும்

2 மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே ஏற்ப்பட்டுள்ளது . இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறந்தது .
ஏன் என்றால் அங்கு வீசும் காற்று los angels கற்றை விட சிறந்தது (திமிரை பார்த்தீர்களா )

3 ஏழைகள் ஏழைகள் தான் ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு சாத்தியம் இல்லை . ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணம் 200 சதவிகிதமாய் இருக்கும் போது மார்பு புற்றுநோய்க்கு ரசாயன நஞ்சு காரணம் என்று கவலைப்பட மாட்டார்கள் .

(நன்றி புத்தகம் "உலகமயமாதல்" ரயாகரன் )


சரி போபாலில் நடந்ததே அது உலகமயமாக்கல் நல்லது முதலாளித்துவம் நல்லது என்று சொல்பவர்கள் செருப்பால் அடித்தது என்றே சொல்ல வேண்டும் . வாரேன் அன்டேர்சன் என்னும் கொலைகாரன் , பல ஆயிரம் உயிர்களை கொன்று விட்டு செல்கிறான் , ராஜீவ் காந்தி , அர்ஜுன் சிங்க் வழி அனுப்பி வைக்கிறார்கள் பாதுகாப்பாய் . இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு , அவர்கள் கொடுத்த நட்ட ஈடு தலைக்கு பத்தாயிரம் .அரசு அப்பொழுது இருந்தே முதாலாளிகளை காப்பற்றி வருகிறது என்று மேலும் ஒரே ஒரு நிகழ்ச்சியை சொன்னால் புரியும் .

போபால் விட வாயு விபத்து நடந்த பொழுது , இரண்டு மூன்று மருத்துவ மனைகள் சீல் வைக்கப்பட்டன , ஏன் தெரியுமா ????? அந்த விடத்திற்கு மருந்து போட்டோ எடுக்கும் பொழுது நெகடிவ் கழுவப்படுமே அந்த மருந்து , அதை அந்த மருத்துவமனைகள் injection மூலமாய் போட்டார்களாம் , அப்படி போட்டால் , அது கம்பெனிக்கு எதிரானா ஆதாரமாகும் , அதனால் மருந்தை தடை செய்தார்களாம் , மருத்துவமனையை சீல் வைத்தார்களாம் . அதவாது முதாலாளியின் உயிரே உயிர் மற்றெதெல்லாம் மயிர் என்று தானே அர்த்தம் . அதாவது முப்பதாயிரம் உயிர்களின் விலையை விட , அன்டேர்சன் என்னும் உயிர் முக்கியமானது . முதலாளித்துவம் சிறந்தது என்று சொல்கிறவர்களுக்கு செருப்பால் அடி .

மூன்றாம் உலக நாடுகள் வெறும் சந்தைகள் மட்டுமே இங்கே உயிரின் மதிப்பு மலிவானது . உயிர் கொன்று கூட பிணம் தினலாம் என்னும் கூட்டமே முதலாளித்துவத்தை ஆதரிக்கும் . இன்று நடுத்தர வர்க்கம் தன் மீது கல் எறியப்படவில்லை என்று ஒதுங்கி போகலாம். ஆனால் அங்கே மென் பொருளுக்கும் மற்ற வேலைகளும் இல்லை என்றால் இங்கே வந்து நாம் விவசாயம் கூட பார்க்க முடியாது , ஏன் என்றால் விவசாயம் பண்ண நிலம் இல்லை பண்ணவும் தெரிவதில்லை .அதனால் நடுத்தர மக்கள் மெத்தனமாய் இருக்க வேண்டாம் ???? இன்று போபால் நாளை சென்னை மதுரையாக கூட இருக்கலாம் . இன்று தண்டகாரண்யா , நாளை ஊட்டியாக கூட இருக்கலாம் . மனித உயிர்கள் மலிவானதா ????????????

போபால் விடயத்தின் பொழுது பிணங்களை எங்கே போடுவது என்று தெரியாமல் , நர்மதை நதியில் போட்டுள்ளனர் .எப்படி இந்தியாவில் இருக்கும் நடுத்தர வர்க்கம் அமைதியாய் இருக்கிறது என்று புரியவில்லை ???? உயிர்களுக்காக துடிக்கும் சின்ன விடயம் கூட இல்லை என்றால் எங்கே இருக்கிறான் மனிதன் .

7 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன

வெண்ணிற இரவுகள்....! said...

முதலாளித்துவம் சிறந்தது என்று சொல்பவர்களை விவாதத்திற்கு அழைக்கிறேன்

Madumitha said...

முதலாளித்துவம் சிறந்தது என்று
யாரும் சொல்ல முடியாது.
ஆனால் உலகில் நடக்கும் எல்லா விஷயங்களையும் முதலாளி,
தொழிலாளி என்ற கண்ணாடி
வழியாக பார்க்க வேண்டாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

வெண்ணிற இரவுகள்....! said...

முதலாளி எந்த விடயத்தில் இருக்கிறானோ அதை கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கலாமே . ரெண்டாவது முதலாளித்துவ உற்பத்தி முறையில் அப்படி
தானே பார்க்க முடியும்

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு .........வாழ்த்துகள்

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பர்களிடம் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன் விவாதங்களை ..........

Bala said...

மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லி விட்டீர்கள். முதல் இரண்டு உலக நாடுகள் என்றால் என்ன கொஞ்சம் சொல்ல முடியுமா?