Thursday 22 July 2010

அன்று போபால் இன்று ஸ்ரீகாகுளம் மற்றும் தண்டகாரண்யா இனையும் புள்ளி












நேற்று போபால் இன்று தண்டகாரண்யா நாளை நம் ஊராக கூட இருக்கலாம், என்று உலகமயமாக்கம் நாள் தோறும் ஏதாவது ஒரு விடயங்களை நடத்திக்கொண்டே இருக்கிறது.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோம்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக அங்கு பத்து ஆயிரம் ஏக்கர் நிலம் ையகப்படுத்தப்படுகிறது. இத்தனைக்கும் அது செழிப்பான நிலம் அந்த நிலங்களை தரிசு நிலங்கள் தான் என்கிறது அரசாங்கம் . மேலும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் அந்த அனல் மின் நிலையம் வருவதை எதிர்க்கிறார்கள் . இப்படி இருக்க அதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் பொழுது அங்கு இருக்கும் விவசாயமக்களும் மீனவ நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் . போலிஸ் அவர்களை சரமாரியாக சுட்டுள்ளனர் . சுட்டதில் நான்கு மீனவர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு பாட்டியை அடித்தே கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.













அதாவது இந்த உலகமயமாக்கம் மூன்றாம் உலகநாடுகளின் மக்களை கொன்று குவித்து ,பிணங்களை விற்பனை செய்து உயிர் வாழ்கிறது . தண்டகாரண்யாவில் நடக்கும் யுத்தத்திற்கு ஒரு உதாரணமே இந்த ஆந்திரா விடயம் . தண்டகாரண்யா, போபால் , மற்றும் ஆந்திராவில் நடக்கும் இவ்விடயங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி இருக்கிறது . இது எல்லாம் பின்னப்பட்டு இருக்கும் புள்ளி உலகமயமாக்கம் .மக்கள் உயிரோ மக்கள் நலனோ இங்கு முக்கியம் அல்ல . முதலாளிகள் ஏகபோகமாய் சுரண்டவேண்டும் . லட்சம் பேர் செத்தாலும் முதாலாளியும் அவன் குடும்பமும் அளவுக்கு மீறிய சொத்துக்களை சம்பாதித்து கொண்டே இருக்க வேண்டும் அவற்றை பாதுகாக்கவே போலிஸ் ராணுவம் அனைத்தும் .யார் சொன்னது இந்திய சுதந்திர நாடு என்று.

பின்குறிப்பு :
இந்த செய்தியை சுட்டிக்காட்டிய புலவன் புலிகேசிக்கு நன்றிகள் .பதிவுலகில் நானும் போபால் பற்றி எழுத சொன்னேன் யாரும் எழுதுவதை இல்லை . குத்து ,பதிவுலகத்தில் நான் எப்படி பட்டவன் என்ற தொடர்பதிவுகள் எழுதுகிறார்கள் . ஆனால் புலிகேசி போபால் விடயத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறான் சந்தோஷமாய் இருக்கிறது . இந்தவிடயத்தையும் சுட்டிக்காட்டியதும் புலிகேசி தான்

5 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன

புலவன் புலிகேசி said...

காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் இந்தியாவை விற்று விட்டுதான் மறுவேலை என்கிறது.

Anonymous said...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...ஈழத்தமிழன் அவ்வளவு பேர் செத்தானே எவன் நமக்காக அழுதான்...??காங்கிரஸ் இருக்கும் வரை சனி தான் நாட்டை ஆளும்.

Bala said...

வேறு யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

podang_maan said...

//வேறு யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்கிறீர்கள்? //

அதை ஏம்பா இவிங்க கிட்ட கேக்குறீங்க. உங்களுக்கு அக்கறையில்லையா? நீங்க சொல்லுங்க யார் வரனும்னு