Saturday 17 July 2010

ராகுல்ஜி பொதுஉடைமை தான் என்ன


ராகுல்ஜி எழுதிய "பொதுஉடைமை தான் என்ன " என்ற புத்தகம் படித்தேன் . எளிய வாசகனுக்கு அறிவயல் பூர்வமான விளக்கங்கள் , இது ஒரு சிறந்த அறிமுக நூல் என்று சொல்வேன் . முதலாளித்துவம் எப்படி தோன்றுகிறது , நீராவியின் கண்டுபிடிப்பு எப்படி தொழில் மாயம் ஆக்குகிறது என்பதை தெளிவாய் எழுதி உள்ளார் . முதலாளித்துவ காலத்திற்கு முன் அதாவது நீராவி கண்டுபிடிக்கும் முன் , மனிதனின் சொத்துகளாய் சிறு பொருட்களே இருந்தன . அதாவது ஒரு தையல்காரன் சில உடமைகளை வைத்து இருப்பான் . சமூகத்திற்கு தேவையான உற்பத்தி மட்டும் நிலவியது . நீராவி கண்டுபிடித்ததில் இருந்து அறிவியல் வளர்கிறது . உற்பத்திகள் பெருகுகின்றன , உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் அதிக விலை உள்ளதால் முதலாளிகள் மட்டுமே வைத்து இருக்கிறார்கள் .அதே துறையில் சிறு தொழில் செய்வோர் அழிக்கப்படுக்கிறார்கள். இயந்திரங்கள் முதலாளிகள் வைத்துக்கொண்டதால் மட்டுமே உழைப்பு இல்லாமல் , லாபத்தை எடுத்துக்கொள்ளும் உரிமை அவனிடம் வருகிறது .

ஆரம்பத்தில் முதலாளித்துவம் அதிக உற்பத்தி செய்தது . அதாவது முதலில் அந்த உற்பத்தி இங்கிலாந்தில் ஏற்ப்பட்டதாம் அவர்கள் தன் காலனிய நாடுகளை சந்தையாக உபயோக படுத்தினார்கள் . ஆனால் மற்ற போட்டி நாடுகளும் தொழில் புரட்சி என்று வரும் பொழுது . சந்தைகளுக்கு போட்டி ஏற்ப்பட்டன . அப்படி நடந்தது தான் உலக யுத்தங்கள் என்று சொல்கிறார் ராகுல்ஜி . மேலும் யுத்தங்களின் போக்கு பிற்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை கணிக்கிறார். யுத்தங்கள் என்றாலே முதாலாளிகளுக்காய் நடத்தப்படுவது என்று சொல்கிறார் . இதை காஷ்மீரில் தொழில் செய்யும் தொழில் அதிபர்களுக்காய் , அந்த மக்களை வாட்டுவதுடன் பொருத்தி பார்க்க வேண்டும் . மேலும் தண்டகாரண்யாவில் வேதந்தா என்னும் நிறுவனதிற்க்காக பழங்குடி மக்களை அடித்து விரட்டும் உள்நாட்டுப்போரும்
இதனுடன் அடங்கும் . முதலாளிகள் இயந்திரங்களை வைத்துக்கொண்டு அதிக உற்பத்தி செய்கிறார்கள் , அவர்களுக்கு சந்தை வேண்டும் என்பதே குறிக்கோள் என்கிறார் . பொதுஉடைமை சமூகத்தில் திட்டமிட்ட உற்பத்தி இருக்கும் அதனால் அங்கு சண்டை இல்லை
யுத்தம் இல்லை என்கிறார் .

மேலும் பெண்களுக்கு முதலாளித்துவம் விடுதலை அளிப்பதை போல் எதற்கு , அவர்கள்
அதிகம் உற்பத்தி செய்ய பெண் உழைப்பு தேவை என்கிறார் , அதனால் பெண் விடுதலை என்று முதலாளித்துவம் சொல்கிறது என்கிறார் . மேலும் கடவுள் பற்றி சொல்லும் பொழுது " ஒன்றே கடவுள் "என்ற தத்துவமே முதலாளித்துவ கொள்கையில் தான் வருகிறது என்கிறார் . அது அதிக வெறியை தூண்டக்கூடியது . அது மக்களை சிந்திக்க விடாமல் இருக்க கூடியது , அது முதலாளித்துவதிற்கு சேவை செய்கிறது என்கிறார் .

இதற்க்கு எல்லாம் தீர்வு பொதுஉடமையே என்கிறார் . புத்தகம் எளிமையான தமிழில் உள்ளது .தமிழ் புத்தகாலயம் தமிழில் மொழி பெயர்த்து உள்ளது . இது உங்களுக்கு வரலாற்று ஆதாரத்துடன் பொதுஉடைமை பற்றி எளிய தமிழில் விளக்கும் நூல் .படிக்க வேண்டிய நூல் .கீழைக்காற்றில் கிடைக்கிறது

5 comments:

மேவி... said...

நல்ல பகிர்வு .நல்ல எழுதிருக்கீங்க . கூடவே உங்களது எண்ணங்களையும் சேர்த்து எழுதிருக்கலாமே ...

நீங்க ADAM SMITH எழுதின THE WEALTH OF NATIONS படிச்சு இருக்கீங்களா ???? (ரொம்ப DRY யாக தானிருக்கும்)


உலக பொருளாதாரமும், உலக அரசியலும் படித்தால் , இன்று இருக்கிற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

புலவன் புலிகேசி said...

நல்ல நூல் நண்பா. நன்றி...

தர்ஷன் said...

முதலாளித்துவ வளர்ச்சிக்கு நீராவி யந்திரத்தின் கண்பிடிப்போடு தொடர்ச்சியாக நிகழ்ந்த கைத்தொழில் புரட்சியும் ஒரு காரணம் எனினும் இவ்வாறான கண்டு பிடிப்புகள் முன்னும் நிகழ்ந்தன. இங்கிலாந்தினால் தனது காலனிகளில் வெளிவெளியாக கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தினால் போதிய மூலதனத் திரட்சி ஏற்பட்டதும் கோதுமைப் பயிரிடல் பிரதானமாய் இருந்து செம்மறியாட்டு வளர்ப்புக்கு மாறிய போது உழைப்பை விற்கக் கூடிய உழைப்பாளர் தொகை பெருகியதுமே முதலாளித்துவம் இங்கிலாந்தில் தோற்றம் பெற்று வளர உதவியது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் ஒரு காரணம் என்ற போதும் இவையே பிரதான காரணம் என நினைக்கிறேன்.

ரதியழகன் said...

நீங்க சொல்வது சரிதான்... நல்ல புத்தகம் பற்றி நல்ல விமர்சனம். ஆனால் நான் உங்களிடம் கேட்ட வெண்ணிற இரவுகள் புத்தகம் பற்றிய விவரம் கிடைத்தால் நன்றாக இருக்கும். இந்த புத்தகம் எனக்கு தமிழில் கிடைத்தால் நன்றாக இருக்கும். தயவுசெய்து உதவவும். இந்த புத்தகத்தை பல நாட்களாக நான் தேடி கொண்டு இருகிறேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

கீழைக்காற்று பதிப்பகத்தில் கிடைக்கிறது நண்பரே